அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- அ.இளஞாயிறு
- பிரிவு: சுற்றுச்சூழல்
இன்றைக்கு விவசாயம் திட்டமிடப்பட்டு மைய மாநில அரசுகளால் அழிக்கப்படுகிறது
1. தொடர்வண்டி இருவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள்
2. நாடெங்கும் நான்குவழி ஆறுவழி சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள்
3.அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அன்னியன் விரும்பும் நீர் வசதி கொண்ட விவசாய நிலங்களை கையகப்படுத்திக் கொடுத்தல்
4.தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காக கையகப்படுத்திய நீர் வசதி கொண்ட நிலங்கள்
5.மேற்கூறிய காரணங்களுக்காக அழிக்கப்பட்ட ஏரிகள் குளங்கள் சிற்றாறுகள்
6.மேற்கூறிய காரணங்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் வெட்டப்பட்ட இலட்சக்கணக்கான மரங்கள்
7. மழைக்குறைவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக அரசு உதவாமல் போனதால் வாழ்க்கைக்காக வேண்டி வந்தவிலைக்கு நிலங்களை விற்றுவிட்டு நகரம் நோக்கி இடம் பெயர்ந்த நிலைக்கு தீர்வு காணாமல் அரசுகள் கண்ணை மூடிக்கொண்ட நிலை
8.காய்ந்துபோன நிலங்களை வாங்கி வீட்டு மனைகளாக விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஊக்கப்படுத்தி வங்கி கடன்கள்
9.உலகமயமாக்கல் என்றபேரில் மேல்நாட்டு மலட்டு விதைகளை விவசாயிகளுக்கு பரிந்துரைத்து இருக்கும் விவசாய நிலங்களை மலடாக்கியது
10.உள்நாட்டு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தோல் பனியன் மற்றும் சில தொழில்களால் நாசமாகும் நதிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல் அந்த தொழில்களையே ஊக்கப்படுத்துதல்.
11.சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்துதல் என்ற பேரில் காடுகளை அழித்தல் அதனால் காட்டுமிருகங்கள் தங்கள் உணவு தேவைக்காக விவசாய நிலங்களை நாசப்படுத்தல்.
போன்ற பல காரணங்கள் விவசாயம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்க தற்போது தமிழக அரசு சத்தமில்லாமல் சட்டமன்ற விவாதம் இல்லாமல் கொண்டு வந்திருக்கும் கருப்புச் சட்டம். தற்போது சில எதிர்ப்புகளால் செயல்படுத்தப்படாமல் இருக்கும் இச் சட்டம் எப்போது வேண்டுமானாலும் நடைமுறைக்கு வரலாம்.
அதுதான் மரபுசார் இயற்கை வேளாண்முறையை ஒரு விவசாயி மற்ற விவசாயிகளுக்கோ அல்லது அது சம்பந்தமாக எல்லா விவசாயிகளும் கூடியோ பேசுவது தவறு. அப்படிச் செய்தால் ரூபாய் 5000 முதல் கூடுதல் தொகை தண்டமாக வசூலிக்கப்படும் அல்லது பல ஆண்டுகள் சிறை தண்டனை கூட உண்டு.
அந்தந்த நாட்டு மக்களின் உணவுத் தேவையை அந்தந்த பகுதி இயற்கை விவசாயத்தால் பூர்த்தி செய்தால்தான் அப்பகுதி மக்கள் நோயின்றியும் நோய் வந்தால் கூட அந்தந்த பகுதியில் விளையும் மூலிகைகளைக் கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும். இயற்கை விவசாயத்துக்கு அப்பால் வெள்ளையர்களின் தேவைக்காக நமது உணவு முறைகள் மாற்றப்பட்டதால் நாம் இயற்கை மருத்துவத்தை விட்டுவிட்டு விலை கூடிய ஆங்கில மருத்துவத்துக்கு ஆளானோம்.
முற்றிலுமாக நமது மரபுசார் இயற்கை வேளாண்மையிலிருந்து நாம் வெளியேற்றப்படுவதை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் வாழ்வின் பல துறைகளிலும் நாம் பாதிக்கப்படுவோம்
- அ.இளஞாயிறு
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
பூமியின் காற்று மண்டலத்தில் பசுமை வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால் புவிவெப்பமடைகிறது என்பதுதான் மனிதகுலத்தின் இன்றைய தலைகாய்ந்த பிரச்சினை. சிக்கல் மனிதனுக்கு மட்டுமல்ல, நீரில் வாழும் மீனின் தலைக்குள்ளும் அதே பிரச்சினை வேர்விட்டு முளைத்திருக்கிறது என்பதுதான் இன்றைய கண்டுபிடிப்பு. ஸ்க்ரிப்ஸ் கடலியல் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் செக்லே என்பவர் இது பற்றிய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார்.
காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது கடல் நீர் அதனை ஏற்றுக்கொள்கிறது. இதனால் கடல் நீரில் அமிலத்தன்மை கூடிப்போகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள கடல்நீரில் வாழும் மீனின் உடற்கூறு மாற்றமடைந்து வருகிறது. மீன்களின் எலும்பு வளர்ச்சியில் இந்த மாற்றம் காணத் தொடங்கியிருப்பதுதான் இன்றைய புதிய சிக்கல்.
otoliths என்பவை மீன்களின் செவி எலும்புகள். இவை வெங்காயம் போன்று பல அடுக்குகளைக் கொண்டவை. இந்த அடுக்குகளைக்கொண்டு மீனின் வயதைக் கணக்கிடலாம். மேலும் இந்த otoliths உதவியால்தான் மீன் தன்னுடைய உடலை புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நிலை நிறுத்திக்கொண்டு நீந்துகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள கடல்நீரில் வாழும் young white seabass இன மீன்களுடைய otoliths அளவிற்கு அதிகமாக பெருத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மீன்களுக்கு நீந்துவதில் பிரச்சினை தொடங்க வாய்ப்பிருக்கிறது. சங்கிலித் தொடர்போன்ற புதிய சிக்கல்களும் எழக்கூடும். இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
ஏற்கனவே கடல் நீரில் அமிலத்தன்மை கூடிப்போனதால் பவளப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்டன. எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருள்களை வரைமுறையின்றி மனிதன் எரிக்கத்தொடங்கியதால் அவனுடைய வாழ்வும் எரிந்துபோகும் காலம் வெகுதொலைவில் இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/06/090625141450.htm
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
காற்று மண்டலத்தில் இருக்கும் பசுமைக்குடில் வாயுக்களில் (green house gases) கார்பன் டை ஆக்சைடும் ஒன்று என்று பார்த்தோம் இல்லையா? கார்பன் டை ஆக்சைடு பூமி வெப்பமடைய காரணமாக இருக்கிறது என்பதால் அதைத் தீமை செய்யும் வாயு என்று தீர்மானித்துவிட முடியுமா?
தாவரங்கள் தங்களுடைய உணவிற்காக யாரிடமும் போய் கையேந்துவதில்லை. சூரியஒளி, பச்சையம், கார்பன் டை ஆக்சைடு, நீர் இவற்றின் உதவியால் தங்களுக்குத் தேவையான உணவை தாங்களாகவே தயாரித்துக்கொள்ளும் ஆற்றல் தாவரங்களுக்கு இருக்கிறது. இதைத்தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம். ஒளிச்சேர்க்கையின்போது காற்று மண்டல கார்பன், தாவரங்களில் தங்கிவிடுகிறது. தாவரங்களை எரிக்கும்போது கரி என்னும் கார்பன் மீளவும் நமக்குக் கிடைப்பது இப்படித்தான்.
காற்றுமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது, ஒளிச்சேர்க்கையின் அளவு அதிகரித்து தாவரங்களின் வளர்ச்சி வேகமும் அதிகரிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது தாவரங்கள் அழியும் வேகத்தை விட வளரும் வேகம் அதிகமாம். வட அமெரிக்காவிலும், கனடாவிலும் செல்போன் கோபுரங்களையும், விமான நிலைய கோபுரங்களையும் பயன்படுத்தி வெவ்வேறு இடங்களில் காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடின் அளவைக் கண்டறிந்தனர். எங்கெல்லாம் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகமாக இருந்ததோ அங்கெல்லாம் தாவரங்களின் வளர்ச்சியும் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் நாம் மகிழ்ச்சியடைந்து விடக்கூடாது. தாவரங்கள் சாப்பிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவைக் காட்டிலும் அதிகமான அளவிற்கு கார்பன் டை ஆக்சைடை காற்றுமண்டலத்திற்குள் நாம் திணிக்கிறோம் என்பதும், இதன் காரணமாக புவி வெப்பம் அதிகரித்திருக்கிறது என்பதும் நமக்கு நினைவில் இருக்கவேண்டும்.
இன்னும் படிக்க...
http://www.sciencedaily.com/videos/2007/0603-can_carbon_dioxide_be_a_good_thing.htm
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்

குளிர் நாடுகளில் தாவரங்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படுவதால் கண்ணாடி வீட்டிற்குள் (green house) செடிகளை வளர்க்கிறார்கள். கண்ணாடி வெப்பத்தை எளிதில் கடத்துவது இல்லை. கண்ணாடி வீட்டிற்குள் புகுந்த வெப்பம் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் கண்ணாடி வீட்டிற்குள் எப்போதும் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.
நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை வைத்திருக்கிறது. பூமி அதிகமாக சூடாகிவிடாமலும், அதிகமாக குளிர்ச்சியடைந்து விடாமலும் சம நிலையை இந்த காற்று மண்டலம்தான் ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலுக்கு சட்டை எப்படியோ அதைப்போல பூமிக்கு காற்று மண்டலம்தான் சட்டையாக இருக்கிறது. காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் ஆகிய வாயுக்களும் இருக்கின்றன. இந்த வாயுக்கள் கண்ணாடியைப்போல செயல்படுவதால் பசுமைக்குடில் வாயுக்கள் (greenhouse gases) என்று பெயர் வைத்திருக்கிறோம்.
சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தை மண், நீர், உயிரிகள் இவையெல்லாம் உறிஞ்சிக் கொள்கின்றன. உறிஞ்சிக்கொண்டவை போக மீதமுள்ள வெப்பம் பசுமைக்குடில் வாயுக்களால் வான்வெளிக்கே திருப்பிவிடப்படுகிறது. வான்வெளியில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அளவு அதிகரிக்கும்போது, பூமிப்பரப்பை நோக்கி திருப்பப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் பூமி இயல்பைவிட அதிகமாக வெப்பமடைகிறது. புவிவெப்பமடைவது இன்றைய உலகத்தின் தலையாய பிரச்சினையாகிப் போனது இப்படித்தான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், காற்று மண்டலத்திற்குள் தொழிற்சாலைப் புகை, வாகனக் புகை மூலம் மனிதகுலம் துப்பும் பசுமைக்குடில் வாயுக்களை குறைக்க வேண்டும்.
இன்னும் அறிந்து கொள்ள: http://www.epa.gov/climatechange/kids/version2.html
- மு.குருமூர்த்தி
- பற்றி எரிகிறது பூமி
- முல்லை பெரியாறு அணை - ஓர் பார்வை
- பாழாகும் பாலாறு
- அண்டார்க்டிகாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்
- பூமியின் 1.2% நிலப்பகுதியை காப்பாற்றினால்…
- டர்க்கானாவின் மக்கள்
- இயற்கையின் ஆடம்பர விளைவு
- எரிமலை வெடிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் மரங்களின் இலைகளும் செயற்கைக்கோள் படங்களும்
- ஆடுகளுடன் போர் செய்த ஒரு நாட்டின் கதை
- நிறம் மாறும் அண்டார்டிகா
- ஆழ்கடலில் அதிசய எரிமலைகளின் கண்டுபிடிப்பு
- நஞ்சுள்ள பட்டாணி நாளைய உலகின் உணவாகுமா?
- பவளப் பாறைகளுக்கு மரங்களால் ஒரு புது வீடு
- இந்தியாவில் லித்தியம்
- உலகின் குப்பைத் தொட்டியா அட்டகாமா பாலைவனம்?
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை
- நிறம் மாறும் கடல்கள்
- ஆழ்கடலில் புதிய பவளப் பாறைகளின் கண்டுபிடிப்பு
- உலகை அச்சுறுத்தும் பூஞ்சைகள்
- அதிகரிக்கும் வானவில் நாட்கள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.