கீற்றில் தேட...
சமூகம் - இலக்கியம்
- விவரங்கள்
- தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்
- பிரிவு: மின்னூல்கள்
தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் மூன்றாம் ஆண்டு மாநாட்டு மலரை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.
- விவரங்கள்
- சூறாவளி
- பிரிவு: மின்னூல்கள்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தமது தேர்தல் அரசியலுக்கே ஆபத்து ஏற்படும் என்பதைக் கூட பெரிதாகப் பார்க்காத அளவிற்கு மோடி அரசை நிர்பந்திக்கும் - நெருக்கும் அவ்வளவும் பெரிய காரணி எது?
பணமதிப்பு நீக்க நடவடிக்கை தவறானது என்றால், வேறு என்னதான் செய்ய முடியும்? இதனால் ஏற்பட்டிருக்கும், ஏற்படப் போகும் பாதிப்புகளும், தீர்வுகளும் என்ன?
தெரிந்து கொள்ள படியுங்கள்...
- விவரங்கள்
- கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு - தமிழ்நாடு
- பிரிவு: மின்னூல்கள்
கல்வியாளர்கள் வே.வசந்திதேவி, ச.சீ.இராசகோபாலன் மற்றும் பலருடைய கருத்துப் பகிர்வுகள் மூலம் இவ்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 21 ஆம் நாள் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.
இவ்வறிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொடுத்துள்ளோம். இவ்வறிக்கையில் உள்ள கல்விக் கோரிக்கைகளை நிறைவேற்ற தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்தோம்.
பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையிலும், நாம் தமிழர் கட்சி ஆட்சி செயல்பாட்டு அறிக்கையிலும் மக்கள் கல்விப் பறைசாற்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இன்னும் ஒரு சில கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வராமல் உள்ளன. நமது கல்விக் கோரிக்கைகள் மீதான உறுதிமொழிகள் இனிமேல் வெளியிடப்பட இருக்கின்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வறிக்கையை ஆசிரியர்கள், மாணவர்கள் , சமூக செயல்பாட்டாளர்களிடம் கொண்டு செல்லவும் விளக்கக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.
தங்களின் மேலான பார்வைக்கும் இவ்வறிக்கையை அனுப்புவதில் பெருமையடைகிறோம். நமது கல்விக் கோரிக்கைகள் நிறைவேறவும் கல்வியில் மக்களாட்சி நெறியுடைய வளர்ச்சி ஏற்படவும் உங்களது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வேண்டுகிறோம்.
அறிக்கையினைப் படிக்க இங்கே அழுத்தவும்.
- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு - தமிழ்நாடு
- விவரங்கள்
- சூறாவளி
- பிரிவு: மின்னூல்கள்
புத்தகத்திலிருந்து....
காந்தியின் அறவழிப் போராட்டத்தின் விளைவாகவே, இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியதாக பாடங்களில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், முன்பே அதைப் படித்து முடித்திருந்த இளைஞர்களுக்கும், ஏனைய மக்களுக்கும் ஏறு தழுவுதல் போராட்டத்தில் போலீசு நடந்து கொண்ட விதம், அறவழிப் போராட்டங்களைப் பற்றிய சிறந்த நடைமுறை அனுபவமாக விளங்கியது என்பதில் மிகையிருக்க முடியாது!
ஜனவரி -17ல் இருந்து ஜனவரி -22 வரை, ஒரு வார காலமாக அங்குலம், அங்குலமாக நம்மால் கட்டப்பட்ட கோட்டை, ஜனவரி – 23 அதிகாலை வேளையில் போலீசின் ஒரே ஒரு உதையில் ஒன்றுமில்லாமல் சரிந்து விழுந்தபோதுதான், நம் அனைவருக்கும் தெரிந்தது, நாம் கட்டிய கோட்டை கற்கோட்டையல்ல, மணல் கோட்டை என்பது! அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது, ஆனால் உண்மை அதுவாக இருக்கும் போது, அதை ஏற்பதைத் தவிர நமக்கு வேறு வழியென்ன இருக்கிறது!
பெரும்பான்மை மக்களின் சக்தியும், ஆற்றலும் ஆட்சியாளர்களின் நலன்களுக்கு எதிராக திரும்பி விடாமல் தடுப்பதே அகிம்சை, அறவழி ஆகியவைகளின் உண்மையான பணியும், கடமையுமாகும். அது தனது வரம்பை மீறுகின்ற அந்தக் கணமே, அதாவது ஆட்சியாளர்களின் நலன்களுக்கு எதிராக மக்களை உருவாக்குவதற்கான ஆயுதமாக மாற்றப்படும்போது என்ன ஆகும் என்பதற்கான ஆதாரமே தமிழக போலீசின் ஜனவரி - 23 கோரத் தாக்குதல்கள் ஆகும்.
மின்னூலைத் தரவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
- விவரங்கள்
- துரைசிங்கவேல் & பழனி
- பிரிவு: மின்னூல்கள்
கடந்த 2011 ஏப்ரலில் நமது கட்சியின் கொள்கை திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது மே 5, 2011இல் நடந்த முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அவ்வறிக்கையில் வரலாறு மற்றும் திருத்தங்கள் இறுதி வரைவு அறிக்கையில் கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அமைப்பு சிக்கல் மற்றும் இரண்டு கைதுகள் காரணமாக இறுதி வரைவு அறிக்கை தயாரிப்பு தாமதமானது.
கடந்த 28.4.2014இல் நடந்த நிலைக்குழுக் கூட்டத்தில் தோழர்கள் துரைசிங்கவேல், பழனி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவு அறிக்கை விவாதிக்கப்பட்டது. இவ்வறிக்கை மையக் குழுவில் முன்வைத்து சுற்றுக்கு கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
இவ்வறிக்கை இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி தமிழ்நாடு வரலாறாகும். நமது கட்சி தமிழக வரலாற்றைப் பற்றி மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பதால் இக்கொள்கை அறிக்கையிலேயே வரலாற்றை இணைப்பது என்று முடிவு செய்தோம்.
இவ்வறிக்கை மீதான விமர்சனங்களை, ஆலோசனைகளை முன்வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்த இறுதி வரைவு அறிக்கை மாநாட்டிலோ அல்லது பேராயத்திலோ இறுதி செய்யப்படும்.
தோழமையுடன்,
நிலைக் குழு
மக்கள் சனநாயக குடியரசு கட்சி
கொள்கை அறிக்கையினைப் படிக்க இங்கே அழுத்தவும்.