மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

மண்ணுக்கேற்ற மார்க்சியம்: புரட்டா? புதுமையா?

14 மே 2025 கட்டுரைகள்

“மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்று ஒன்று இருக்கிறதா? இது ஜனசக்தி (மக்கள் இணையம்) இணையத்தளத்தில் ச. செல்வகுமார் எழுதி 2022 ஜூலை 27ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ள...

யுரேனஸைத் தேடி

14 மே 2025 விண்வெளி

1739 மார்ச் 13 அன்று இரவு வில்லியம் ஹெர்ஷல், பாத் (Bath) நியூ கிங் தெருவில் (New King Street) உள்ள தன் வீட்டின் புறக்கடைத் தோட்டத்தில் தொலைநோக்கியைக் கொண்டு...

நூறு பெண்கள், நூறு சிறுகதைகள் - ஓர் உரையாடல்

14 மே 2025 உங்கள் நூலகம் - மார்ச் 2025

தமிழிலக்கியப் பரப்பில் பெண் படைப்பாளிகளின் எழுத்துகள் குறித்த சிரத்தையான தொகுப்பு நூல்களோ, திறனாய்வு நூல்களோ எழுதப்படுவது மிகவும் அரிதாகவே நடந்தேறுகிறது. பெண்...

இருத்தலிய வாசிப்பில் தாயைத்தின்னி நாவல்

14 மே 2025 உங்கள் நூலகம் - மார்ச் 2025

படைப்பிலிருந்து அந்தப் படைப்பின் ஆசிரியரை வெளியேற்றியதில் நவீனக் கோட்பாடுகளுக்கு முக்கியப் பங்குண்டு. ஒரு படைப்பின்மீது வெவ்வேறு வாசிப்புகள் நிகழ...

மார்க்சிய ஆய்வுலகில் நா.வானமாமலை

14 மே 2025 உங்கள் நூலகம் - மார்ச் 2025

முனைவர். கோ. ஜெயக்குமார் அவர்கள் களஆய்வின் வழி தகவல்களைத் திரட்டி எழுதும் ஆய்வாளர். எந்த தரவுகளையும் அப்படியே பதிவு செய்யாமல் அதனை பலரிடம் கேட்டறிந்து...

அய்யா வைகுண்டரின் சிந்தனையும் வழிபாடும் பற்றி பேராசிரியர் ந.முத்துமோகனின் பார்வை

14 மே 2025 உங்கள் நூலகம் - மார்ச் 2025

பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள் மார்க்சியர்; இந்திய – தமிழ் மெய்யியல் அறிஞர். பேராசிரியர் நா.வானமாமலையின் ஆய்வு வட்டத்தைச் சேர்ந்தவர். முதுகலையில் வேதியியல்...

வெய்யில் காலம்

14 மே 2025 கவிதைகள்

உதிரும் பூக்களைப் போல சிறகு சுருக்கி வெய்யிலை சுவாசித்துக் கொண்டிருக்கிறதுவேப்பமரத்தில்கரையும் கருங்காகம் தொண்டை தண்ணீர் வற்றிப் போன மனிதர்கள்எதிரே வரும்...

தாவிப் பார்த்த தடுமாற்றம்

14 மே 2025 கவிதைகள்

அரசியல் கட்சிகளின் ஆளுமையெனதலைமையில் இருந்தார்கள்.ஆங்காங்கே அரசு அதிகார மையங்களிலும் இருந்தார்கள்.ஒடுக்கப்பட்டவரென ஓரங்கட்டப்படாமல்பழங்குடியானாலும்...

10 வருஷ உத்தியோக வேட்டை

14 மே 2025 பெரியார்

பார்ப்பனரல்லாத மந்திரிகளும், பார்ப்பனரல்லாத இயக்கமும் இந்தப் பத்து வருஷ காலத்தில் பார்ப்பனர்களிடத்திலும், அவர்கள் மாய்கையில் சிக்குண்ட பாமர மக்களிடத்திலும்...

திராவிட் என்ற சொல்லும்... திராவிடம் என்ற கருத்தியலும்... தேவையான தெளிவு

13 மே 2025 கட்டுரைகள்

காஞ்சி காமகோடி பீடத்தின் 71 - வது பீடாதிபதியாக டுட்டு சத்ய வெங்கட சூர்யா சுப்ரமணிய கணேச சர்மா திராவிட் நியமனம் என்ற செய்தி 26.04.2025 அன்று...

சபரிமலை (கேரளக் கோவில் ஒன்றின் சமூக வரலாறு)

12 மே 2025 உங்கள் நூலகம் - ஏப்ரல் 2025

மார்ச் 2025 இதழின் தொடர்சி: மலைநாடு என்று அழைக்கப்பட்ட கேரளம் அதற்கேற்றாற் போன்று காடுகள், சோலைகள் என்பனவற்றை மிகுதியாகக் கொண்டிருந்தது. இவற்றைக் காவு என்ற...

அறிவியல் தமிழ் முன்னோடி பேனா (பெ.நா.) அப்புசுவாமி

12 மே 2025 உங்கள் நூலகம் - ஏப்ரல் 2025

“நான் தமிழைப் பள்ளியில் முறையாகப் பயிலவில்லை; என் மனைவிக்கு ஒரு காதல் கடிதம் கூட எழுதியதில்லை. நான் எப்படித் தமிழில் எழுதுவேன்” என்று தன் அறிவு ஏக்கத்தை...

பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்காகச் சூளுரைக்கும் மே நாள்!

12 மே 2025 கட்டுரைகள்

1858-ல் ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற கொள்கையை முன்வைத்து போராடி வெற்றி பெற்றனர். உலகிலேயே...

வேண்டும்! வேண்டும்!! சனநாயக சகிப்புத் தன்மை!!!

12 மே 2025 கட்டுரைகள்

நிறுவனமயமாக்கப்பட்ட சகிப்பின்மை வளர்ந்து வரும் மற்றும் மோசமாகி வரும் பின்னணியில், அனைத்து மட்டங்களிலும் களங்களிலும் ஜனநாயக சகிப்புத் தன்மையை வளர்ப்பது அவசரத்...

ஆடுகளுடன் போர் செய்த ஒரு நாட்டின் கதை

12 மே 2025 புவி அறிவியல்

உலகில் ஆடுகளுடன் போராடி தோற்றுப் போன ஒரு இடம் உண்டு... தென்னமெரிக்காவில். சார்ல்ஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு பிறந்த, ராட்சத ஆமைகள், கடல் இக்வானாக்களின்...

கீற்றில் தேட...

“டேய் பரமா, பக்கத்துல போவாதடா. குட்டிப் போட்ட பன்னி கடிச்சிடும்” அம்மாவின் எச்சரிக்கையால் சற்று தூர நின்றே பார்த்தேன். புசு புசுவென வெள்ளை பஞ்சை உருட்டி விட்டது போல மூன்று வெள்ளைக் குட்டிகள், இரண்டு கருப்பு குட்டிகள்.

தாய்ப் பன்னி படுத்துக் கிடக்க சுற்றிச் சுற்றி வந்து விளையாடின குட்டிகள். ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தவனை “பன்னியைப் பார்த்து போதும், வீட்டுக்கு வா” என அழைத்தாள் அம்மா. நான் எங்கே பன்னிக் குட்டியை கையில் பிடித்துவிடுவேனோ என்ற பயம் அம்மாவுக்கு.

இந்த புது வீட்டுக்கு குடிவந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பக்கத்தில் இருந்த காலி இடத்தில் நிறைந்திருந்த சாக்கடையில் பன்னி கூட்டம் படுத்துக் கிடக்கும். எனக்கு நாய்க்குட்டிகளை விடவும் பன்னிக்குட்டிகள் அழகாக தெரிந்தன.
“ அம்மா நாம அந்த பன்னிக்குட்டியை வளர்க்கலாமா” என்றேன் ஆசையாக.

“டேய் அதெல்லாம் பீயை திங்கும்டா. அது பக்கத்துல எல்லாம் போவதே” என்றாள்.

“குட்டிப் பன்னியுமா அதை சாப்பிடும்”

“பெரிசானதுக்கப்புறம் அதுவும் அதைதான் சாப்பிடும்” அதைக் கேட்டவுடன் எனக்கு அருவருப்பு தொற்றிக் கொண்டது. இருந்தாலும் ஒரு முறை நேரில் அந்த காட்சியைப் பார்க்கவும் எனக்கு பன்னிகள் என்றால் வெறுப்பானது. அழகான பன்னிக்குட்டிகளை அதன் பின் நான் பார்க்கவே செல்லவில்லை. வீட்டுக்குள்ளவே விளையாடினேன்.

****

ஒரு நாள் காலையில் ஒரே சத்தம். நான் எழுந்து வாசலுக்கு ஓடினேன். என் ஆவலைப் புரிந்து கொண்டு அப்பா மாடிக்கு கூட்டிச் சென்றார். எங்கள் தெருவில் விரித்து வைத்திருந்த வலையில் ஒரு பெரிய பன்னி மாட்டிக் கொண்டது. அதன் மரணச் சத்தம் காதைக் கிழித்தது.

“அப்பா இதை எதுக்கு பிடிக்கிறாங்க”

“வெட்டி விக்கறதுக்குடா”

“அதை என்னப்பா பண்ணுவாங்க”

“சாப்பிடுவாங்கடா”

“அது பீயெல்லாம் சாப்பிடுமாமே அதைப் போய் இவங்க சாப்பிடுறாங்களே”

அப்பா என்ன சொல்லுவதென்று தெரியாமல் மௌனமாக இருந்தார்.

****

நாட்கள் நகர்ந்தன. பன்றிகள் பற்றி முழுவதும் மறந்திருந்தேன். இரவு வெளியிலிருந்து பன்றியின் சத்தம் வந்தது. வீட்டில் யாராலும் உறங்க முடியவில்லை. எல்லோரும் என்னவென்று பார்க்க வெளியே வந்தோம்.

சற்றே வளர்ந்த பன்னிக் குட்டியொன்று பின்பக்கம் அடிபட்டு வலி தாங்க முடியாமல் கத்திக் கொண்டிருந்தது. இரண்டு பின்னங்கால்களும் செயலிழந்து போயிருந்தன. முன்னங்கால்களால் ஊன்றி உடலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே கத்தியது. “நாய் ஏதாவது கடித்திருக்கும்” என்று அம்மா சொன்னார். “நாயா இருந்தா இப்படி செய்யாது. எவனோ வண்டில ஏத்திட்டு போயிருக்கான்” என்றார் அப்பா. அது விடாமல் வலியாலும் வேதனையாலும் கத்திக் கொண்டே இருந்தது.

பக்கத்து வீட்டுகாரரும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

“என்னாச்சு சார்”

“எவனோ வண்டியில வந்து அடிச்சிட்டான் போலயிருக்கு”

“அச்ச்சோ, அப்ப அவன் வண்டியை உடனே வித்திடனுமே”

“அவன் வண்டியை விக்கிறான், இல்ல விக்காம போறான். இதை என்ன சார் பண்ணறது.”

“ஒரு குச்சியை வைச்சு வேற பக்கம் தள்ளிவிட்டுடலாம்.”

“அய்ய்யோ வேணாம் சார். அப்படி செஞ்சா அது இன்னும் கத்தும். வீட்டுல மத்தவங்களுக்கு சிரமமாயிடும். ஒரு சாக்குல தூக்கிட்டு போய் தூரமா போட்டிடுவோம்”

“சரி இருங்க, நம்ம வீட்டுல ஒரு பழைய சாக்கு இருக்கு, அத எடுத்துட்டு வரேன்”.

அப்பாவும், பக்கத்துவீட்டுக்காரரும் அதை சற்று தொலைவில் விட்டு வந்தார்கள். தூங்குவதற்குப் படுத்தால் மெதுவாய் அதன் கத்தல் கேட்டுக் கொண்டே இருந்தது. பிறகு சிறிது நேரம் கழித்து ஓய்ந்தது. எல்லோரும் தூங்கினோம்.

****

காலையில் அதை ஆஸ்பெட்டலுக்கு தூக்கிக் கொண்டு போகலாம் என்று அப்பாவிடம் அவர் விட்டுவந்த இடத்தைக் கேட்டேன். அதற்குள் வெளியே “எவன்டா பன்னி மேல கல்லெடுத்துப் போட்டுக் கொன்னது” என அதன் உரிமையாளன் கத்திக் கொண்டிருந்தான்.

“அடப்பாவிகளா அதான் ராத்திரி சத்தம் நின்னதா” என்று அம்மாவும் அப்பாவும் தெருவிற்கு ஓடினார்கள். நான் மட்டும் அப்படியே நின்றேன்.

- ஜெகதீஸ்வரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)