ஆளுநர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. நீதிமன்ற அவமதிப்புச் சின்னமாக இங்கேயே இருக்கட்டும்.
உச்ச நீதிமன்றம் ஆளுநரின் மீது இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளது. சட்ட விரோதமாக முறைகேடாக செயல்பட்டுள்ளார் என்பது ஒன்று anti constitunal and erroneous, நல்ல எண்ணம் கொண்டவராக நடந்து கொள்ளவில்லை என்பது இரண்டு.
The conduct exhibited on part of the Governor, as it clearly appears from the events that have transpired even during the course of the present litigation, has been lacking in bonafides. There have been clear instances where the Governor has failed in showing due deference and respect to the judgments and directions of this Court. In such a situation, it is difficult for us to repose our trust and remand the matter to the Governor with a direction to dispose of the bills in accordance with the observations made by us in this judgment. Article 142 empowers this Court to do complete justice and in the facts of the present case, more particularly, in light of the fact that the option of granting assent to the repassed bills was the only constitutionally permissible option available with the Governor, we deem it absolutely necessary and appropriate to grant that very relief by exercising our extraordinary powers. No meaningful purpose would be served by keeping the bills, some of which have already been pending for incredulously long periods, pending for more time. Therefore, we deem the assent to have been granted.
இதன் தமிழாக்கம்: உண்மையும், நேர்மையும் மிக்க நல்லெண்ணமே அவருக்கு இல்லாததைத்தான் ஆளுநரின் அலட்சியப் போக்கு தெளிவுபடுத்துகிறது. தற்போதைய வழக்கு சார்ந்த நிகழ்வுகள் மூலம் அவருடைய உள்நோக்கம் தெளிவாகிறது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளையும், தீர்ப்புகளையும் ஆளுநர் மதிக்கத் தவறிவிட்டது பல சந்தர்ப்பங்களில் தெளிவாகத் தெரிந்து விட்டது. நடவடிக்கைகளின் காலதாமதம் அவர் இந்த நீதிமன்றத்தை அவமதிப்பதாகவே கருத வைக்கிறது. இந்த நிலையில் இந்தத் தீர்ப்புக்கேற்ப ஆளுநரை மசோதாக்களை ஏற்கச் செய்வது எங்களுக்குச் சிரமமாக உள்ளது. அவர் சுமுகமாக முடிவெடுத்து பிரச்சினையைத் தீர்ப்பார் என்று நம்ப முடியவில்லை. முழுமையான நீதி வழங்க இந்த நீதிமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 142 அதிகாரம் வழங்கியுள்ளது. தற்போது எதிர் கொள்ளப்பட்டுள்ள வழக்கு சார்ந்த அம்சங்களையெல்லாம் பார்க்கும்போது, எங்கள் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவது தான் சரி என்று தோன்றுகிறது. மறுமுறையும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழி நிச்சயமாக இல்லை என்பதை அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. எனவே, அவரை இணங்கச் செய்ய எங்கள் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டியதே அவசியம்.
முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் சில மசோதாக்கள் மிக நீண்ட காலமாக உள்ளன. இந்த நிலை மேலும் நீடிப்பது அர்த்தமற்றதாகும். எந்த ஒரு நல்ல நோக்கமும் இதனால் (காலதாமதத்தால்) நிறைவேறப் போவதில்லை. காலதாமதம் இனிமேலும் தொடரக்கூடாது. எனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம்.’’
இந்த ஸ்டிக்கர்களுடன் தமிழ்நாட்டில் இருந்தால் தான் அவரது அத்துமீறல்கள் தமிழ்நாட்டு மக்களிடம் நினைவுபடுத்தி கொண்டே இருக்கும். இவருக்கு பதிலாக வேறு ஒருவர் வந்தால் கூட அவர் மற்றொரு சங்கியாகவே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு வரலாற்றுச் சம்பவத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சுடுகாட்டில் சூத்திர சுடுகாடு என்று தனியாக ஒதுக்கி வைத்திருந்தார்கள். தஞ்சையில் சூத்திர சுடுகாட்டில் தான் சுயமரியாதை சுடரொளி அஞ்சா நெஞ்சன் அழகிரி அடக்கம் செய்யப்பட்டார், பெரியார் அதை கண்டித்து எழுதியிருக்கிறார். அப்போது மதுரையிலும் இதே போல் சூத்திர சுடுகாடு இருந்தது. மேயராக இருந்த திமுகவைச் சார்ந்த சுயமரியாதைக்காரர் மதுரை முத்து இந்தப் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்த போது அதை நீக்க வேண்டாம் அப்படியே இருக்கட்டும் எதிர்கால தலைமுறைக்கு இப்படி ஒரு இழிவு இருந்தது என்பது அப்போது தான் தெரியும் என்று கருத்தை கூறினார். அதே பார்வையில் தான் இப்போது ஆளுநரையும் பார்க்க தோன்றுகிறது.
(சென்னை கண்டன ஆர்ப்பாட்டத்தில் 24.04.2025 திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசியது)