அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்...
மக்களை சிறந்ததின் பக்கம் அழைக்கும் ஒரு குழு உங்களுக் கிடையே இருக்கட்டும். அவர் கள் நன்மையின் பக்கம் அழைக் கட்டும் தீமையை விட்டும் தடுக் கட்டும்; இவர்களே வெற்றி பெறுபவர்கள்.
(அல்குர்ஆன் 3:104)
பல்வேறு தீமைகளுக்கு எதிராக களம் இறங்கும் சமூக ஆர்வலர்கள் கூட போதைப் பொருள்களுக்கு எதிராக களம் இறங்குவதில்லை அல்லது வீரி யம் காட்டுவதில்லை. இதனால் அரசாங்கம் "குடி குடியைக் கெடுக்கும்' என்று விளம்பரம் செய்து கொண்டே தமிழக மக்களின் குடியைக் கெடுப்பதில் முன்னிலை வகிக்கிறது.
கழகங்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு, அரசு சார்பு பள்ளிக் கூடங்கள் 10,000 மூடப்பட்டுள் ளன. அதே நேரம் 7000 சாராயக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. படிப்பை பின்னுக்குத் தள்ளி விட்டு, குடியை முன்னிலைப்ப டுத்தி உள்ளன.
பள்ளிக்கூடம், கோவில், மசூதி, சர்ச் என்ற பாகுபாடு இல் லாமல் அனைத்து இடங்களி லும், பெட்டிக் கடைகளுக்கு சம மாக டாஸ்மாக் சாராயக் கடை களை அரசே திறந்து இருக்கிறது. சாராய உற்பத்தி செய்யும் ஆலை கள் 6ஆக இருந்ததை மேலும் 8ஆக உயர்த்தி 14 ஆலைகளுக்கு அனு மதி வழங்கி தொழிற் புரட்சி(?) ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு.
சாராயத்தின் மூலம் 83-84ம் ஆண்டுகளில் 139 கோடி வருவாய் ஈட்டிய தமிழக அரசு, 2010ம் ஆண்டில் 12,500 கோடி வருமா னத்தை ஈட்டும் அளவுக்கு குடி மக்களின் குடியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.
6 கோடி எண்ணிக்கை உள்ள தமிழ்நாட்டில் 1 கோடி பேர் குடிமகன்கள். அதில் 49 லட்சம் பேர் தினசரி குடிப்பழக்கம் உள் ளவர்கள். இவர்களில் 13 வயது சிறுவர்களும் அடக்கம் என்ற வேதனையான விஷயம் ஆய் வின் மூலம் கண்டறியப்பட்டுள் ளது.
அதுமட்டுமல்ல! சாராய வியா பாரத்தில் கின்னஸ் சாதனை படைத்ததுபோல, தமிழக அரசு சாலை விபத்துகளிலும் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிர் இழந் தோர் 65,000 பேர். காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகம். இதில் பெரும்பாலானவை குடியினால் ஏற்பட்டவைகளே.
குடியினால் குடிகாரனுடைய குடும்பம் மட்டுமே சீரழியும் என்று தப்புக் கணக்குப் போடுகி றோம். ஆனால் அது உண்மை யல்ல. குடிகார டிரைவரால் ஏற்ப டும் சாலை விபத்தினால் பாதிக் கப்படுபவர்களில் பொது மக் களே அதிகம் என்பதே நிதர்சன மான உண்மை.
பூரண மது விலக்கு அமல்ப டுத்தப்பட்டால், சாராயத்தின் மூலம் குடும்பம் நடத்தும் தொழி லாளிகள் பாதிக்கப்படுவார்கள்; வேலை இழப்பு ஏற்படும். கள்ளச் சாராயம் பெருகி சாவு எண் ணிக்கை உயரும் என்றும் தமிழக அரசு சப்பை கட்டு கட்டுகிறது. இது முட்டாள்தனமானது.
காரணம், லாட்டரிச் சீட்டு நடத்தி வந்த தமிழக அரசு அதை தடை செய்ததால் பல குடும்பங் கள் நடுத் தெருவிற்கு வந்து விட்ட தாக பலரும் ஒப்பாரி வைத்தனர். உண்மையில் லாட்டரி தொழில் செய்தவர்கள் எல்லாம் ஆக்கப் பூர்வமாக வேறு வகையில் தொழில் செய்ய தொடங்கி விட்டார்கள். அதுபோலவே மது விலக்கு அமல்படுத்தப்பட்டால் ஆக்கப்பூர்வமானவை நடக்கும் என்பது திண்ணம்.
அரசு சாராயக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயச் சாவு அதிகமாகும் என்கிறார்கள். இது ஒரு வகையில் உண்மையென்றால் அதன் எண்ணிக்கை சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட மிகக் குறைவாகவே இருக்கும் என்பது யதார்த்த உண்மை.
பல குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்று சொல்வார்கள். பல குடிகாரர்கள் இறந்தாலும் ஒரு நல்லவன் வாழ வேண்டும் என்ற தத்துவம் உரு வாக வேண்டும். அதுவே நாட்டுக் கும் வீட்டுக்கும் சமூகத்திற்கும் நல்லது.
வாருங்கள் ஒருங்கிணைவோம்! போதைக்கு எதிராக போராடுவோம்!!