makkal_report_logo

இலங்கைப் பெண் ரிஸ்னா 4 மாத குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்தாள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சவூதி அரசாங்கம் மரண தண்டனை விதித்த சம்பவத்தைத் தொடர்ந்து சவூதி அரசாங்கத்தின் குற்றவியல் தண்டனை குறித்து அதிகளவில் விமர்சனம் செய்யப்படுகிறது.

இந்த விமர்சனங்களையும் மீறி அவதூறுப் பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன. சர்வதேச மனித உரிமை அமைப்புகள்தான் சவூதியின் தண்டனைச் சட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகின் றன.

கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் சவூதி யைச் சேர்ந்த ஒருவரை இன்னொருவர் தாக்கியதில், தாக்கப்பட்ட நபரின் உடல் செயலற்றுப் போனதால் அவரைத் தாக் கிய நபருக்கும் அதேபோன்ற தண்ட னையை வழங்கி அவரது உடலியக்கத் தையும் செயலிழக்கச் செய்ய வேண்டும் என சவூதி நீதிமன்றம் தண்டனை விதித்த தாக செய்தி பரப்பப்பட்டது.

இந்த தண்டனையை சர்வதேச பொது மன்னிப்புச் சபையான ஆம்னெஸ்டி இன் டர்நேஷனல் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிய பின் இப்பிரச்சினை பூதாரக மாக வெடித்தது. இந்த கடுமையான தண் டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஆம்னெஸ்டி இன்டர்நேஷ னல் சவூதி அதிகாரிகளை கேட்டுக் கொண் டிருந்தது.

இதனை பொய்ப் பிரச்சாரம் என மறுத் துள்ளது சவூதி அரசின் நீதித்துறை அமை ச்சகம். ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பிரிட்டன் அலுவலகம் இந்த தண்டனை மிக விவகாரமானதாகும் என கடுமையான சொற்பிரயோகத்துடன் கண் டனம் தெரிவித்ததையடுத்து, சவூதியின் நீதித்துறை அமைச்சகம் தனது டிவிட்டர் பதிவில் "இந்தச் செய்தி முற்றிலும் பொய் யானது' என மறுப்பு தெரிவித்திருக்கிறது.

"உரிமைகள் என்ற பெயரில் லாபி செய் யும் மீடியாக்களும், மனித உரிமை அமைப் புகளும் இந்த தகவலை நன்றாக சரிபா ருங்கள்' என்று கேட்டுக் கொண்டுள்ளது.

சவூதி அரசின் நீதித்துறை அமைச்ச கம், "குற்றவாளியின் உடலை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை தள்ளுபடி செய்ய நீதிபதி முடிவு செய்திருக்கிறார்...' என்றும் அது தெரிவித் துள்ளது.

சவூதியைச் சேர்ந்த அலி அல் கவா ஹிர் என்ற 24 வயது இளைஞர் 2003ன் பிற்பகுதியில் அவரது நண்பரைத் தாக்கி யுள்ளார். தாக்குதலுக்குள்ளான நபர் இடுப் புக்கு கீழே செயலிழந்த தன்மைக்கு ஆளாகி விட்டார். அலி கவாஹில் இந்த குற்றத்தில் ஈடுபட்டபோது அவருக்கு வயது 14தான். இந்த குற்றத்திற்காக அலி கவாஹிர் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு மில் லியன் ரியால்களை (இந்திய மதிப்பில் ரூ. 1,43,90,000) இழப்பீடாகத் தர வேண்டும். தவறினால் அவருக்கு உரிய வகையில் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

அதாவது, அலி கவாஹிருக் கும் இடுப் புக்குக் கீழே செயலிழக்கத்தன்மையை ஏற்படுத்தப்படும் என்று சவூதி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக செய்தி வெளியிட்டி ருந்தது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்.

மேலும், இதேபோன்ற உடலியக் கத்தை முடக்கும் தண்டனை 2010ல் சவூ தியில் ஒருவருக்கு கொடுக்கப்பட்டதாக வும், ஆனால் அந்த தண்டனை நிறைவேற் றப்பட்டதா என்பது தெரியவில்லை என் றும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரி வித்திருந் தது.

சவூதி அரேபியாவில் மட்டும் தான் இஸ்லாமிய தண்டனைச் சட்டங்கள் அமல்படுத் தப்படுகின்றன. இஸ்லாமிய ஷரியா சட்டங் களுக்கு எதிராக விஷ(ம)ப் பிரச்சாரம் செய்து வரும் மேற்குலக ஊடகங்களுக் கும், சர்வதேச மனித உரிமை அமைப்பு களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதமான தீர்வை வழங்கும் ஷரியா சட்டங் கள் எட்டிக்காயாக கசக்கின்றன.

மனித உரிமைகள் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நியாயங்க ளைப் பற்றி, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் குற்றவாளிகளுக்கு மட் டுமே பரிந்து பேசி போலியாக மனித உரி மைகளை நிலை நிறுத்தத் துடிப்போருக்கு நடுநிலையான நீதியை வழங்கும் ஷரீயா சட்டங்கள் அச்சுறுத்தலாக இருப்பதில் வியப்பில்லைதான்.

சவூதி அரேபியாவில் மட்டுமே ஷரீயா சட்டங்கள் அமலில் இருப்பதால் அதனை இல்லாது ஆக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, சவூதியின் தண்டனைச் சட்டங்களை சர்வதேச அளவில் விவாதப் பொருளாகவும் கேள்விக் குறியாகவும் மாற்றத் துடிக்கின்றன போலி மனித உரிமை அமைப்புகளும், மீடியாக் களும்!

இதுபோன்ற உள்நோக்கத்துடன் அவை செயல்படுவதால்தான் செய்திக ளைக் கூட சரியாக உள்வாங்காமல் சவூதி அரசாங்கத்தின் மீது அவை அவசர கோல த்தில் அவதூறுகளை அள்ளி வீசி வரு கின்றன.

அலி அல் கவாஹிர் விஷயத்திலும் இவை அவதூறு பிரச்சாரம் செய்து வரு கின்றன என்பதை சவூதியின் நீதித்துறை அமைச்சகம் அளித்துள்ள மறுப்புச் செய் தியின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

அத்தோடு, "உடலியக்கத்தை முடக்கும் தண்டனை 2010ல் சவூதியில் ஒருவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அது நிறை வேற்றப்பட்டதா என்பது தெரியவில்லை' என்ற ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் வரிகள், சவூதி அரசாங்கத் தின் தண்டனைகள் குறித்த விஷயத்தில், உண்மை நிலையை ஆய்ந்து உணரும் முஸ்தீபுகளை மேற்கொள்ளாமல், தகவல் களை உரிய வகையில் உள்வாங்காமல் நுனிப்புல் மேய்ந்து விட்டு, அவதூறுப் பிரச்சாரம் செய்யும் அதன் சுயரூபத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

ஆக, சவூதி அரசின் தண்டனைச் சட் டங்களை விமர்சனம் என்ற நேர்மையான பார்வையையும் தாண்டிய காழ்ப்புணர்ச்சி யோடும், உள்நோக்கத்தோடும், விஷத்தன் மையோடும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், மீடியாக்களும் சர்ச்சை யாக்கி வருகின்றன என்பது மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

Pin It

கடந்த 2007ம் ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க மக்கா மஸ்ஜித்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக் கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன் னாள் உறுப்பினர்கள் இருவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் கீழ் கோர்ட் ஒன்றில் வழங்கப்பட்ட பிணையை கடந்த வியாழன் அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களான லோகேஷ் சர்மா மற்றும் தேவேந் தர் குப்தா ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்ட பிணையை செசன்ஸ் கோர்ட் மறு ஆய்வு செய்யவும் ஆந்திர உயர் நீதிமன் றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தேசிய புலனாய்வு நிறுவ னத்திற்கு ஒரு நிம்மதியை ஏற்படுத் தியுள்ளது என்றால் அது மிகையா காது. ஏனெனில் கீழ் கோர்ட்டின் பிணை விடுதலை தேசிய புல னாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ. அந்த குண்டு வெடிப்பு சம்மந்த மாக நடந்து வரும் புலன் விசார ணையை இந்த தீர்ப்பு பாதிக்கும் என்று முன்பு எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேசிய புலனாய்வு அமைப்பு கூறும்போது குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மாலே கான், அஜ்மீர் மற்றும் சம்ஜவ்தா விரைவு ரயில் போன்ற பிற குண்டு வெடிப்பு தீவிரவாத செயல்களி லும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் இவர்கள் இரு வரையும் பிணையில் விடுவதென் பது மேற்கூறப்பட்ட வழக்குகளி லும் பெரும் பின்னடைவை ஏற்ப டுத்திவிடும் என் றும் வாதித்தது.

17ம் நூற்றாண்டைச் சேர்ந்த மக்கா மஸ்ஜித்தில் கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் கொல் லப்பட்டனர். மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.

மேலும் ஆந்திராவின் உயர் நீதிமன்றம் கடந்த டிச. 24, 2012 அன்று செசன்ஸ் கோர்ட் வழங் கிய தீர்ப்பையும் தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்னாள் உறுப்பினர்களான ஷர்மா மற்றும் குப்தாவோடு சேர்த்து சுவாமி அசி மானந்த் மோகன்லால் ரத்தேஸ் வர், தேஜாராம், ராஜேந்தர் சவுத்ரி ஆகியோரும் புலனாய்வு அமைப் பால் கைது செய்யப்பட்டு நீதி மன்றக் காவலில் வைக்கப்பட்டுள் ளனர்.

மேலும், சந்தீப் வி. டாங்கே மற்றும் ராமச்சந்திர கல்சங்கரா ஆகிய இருவரும் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். மேலும், இதே வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி என்பவர் கடந்த டிசம்பர் 2007ல் தனது சகாக்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pin It

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அருகே கடந்த 17ம் தேதி குண்டு வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மே மாதம் 5ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர் தலை சீர்குலைக்க சதி என்ற கோணத்தில் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

மல்லேஸ்வரத்தில் கர்நாடக பாஜகவின் தலைமை அலுவலகம் மட்டுமல்ல, கர்நாடக ஜனதா கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் கூட அங்கே இருக்கின்றன. ஆனால் குண்டு வெடித்தது பாஜக அலுவலகம் அருகே என்ப தால் பாஜக அலுவலகத்திற்கு வரும் தலைவர்களை குறி வைத்தே இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகி றது.

“பாஜக தலைவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு இது; பாஜக தலைவர்களை கொலை செய்யும் நோக்கத் தில் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் கூட அப்படித் தான்...'' என்கிறார் கர்நாடக மாநில துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான அசோக்.

இவையெல்லாம் பாஜக ஆடும் நாடகம் என்றே தெரிகிறது. இந்த குண்டு வெடிப்பு என்பது பாஜக அலுவலகத்தின் வாசலிலோ அல் லது அலுவலகத்தையொட் டியோ நடைபெறவில்லை. பாஜக அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள விநா யகர் கோவிலுக்கு அருகில் நிறுத் தப்பட்டிருந்த பைக் ஒன்றில் குண்டு வெடித்திருக்கிறது.

இதனால், குண்டு வெடித்த பைக்கிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சில தீப்பற்றி எரிந்துள்ளன.

விநாயகர் கோவிலுக்கு அரு கில் குண்டு வெடித்திருந்தும் வழக்கம்போல கோவிலை தகர் க்க தீவிரவாதிகள் சதி என்ற ரீதி யில் செய்திகள் வெளியாகவி ல்லை. மறந்தும் கூட பாஜகவினர் இதனை சொல்லவில்லை என் பது கவனிக்கத்தக்கது.

பாஜகவினரும் இந்த கோணத் தில் செய்தி பரப்பாமல் அக்கட்சி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நடந்தது என்பதை பூதாகரப்ப டுத்துவதன் மூலம், அக்கட்சியின் மீதே சந்தேகம் எழுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்த குண்டு வெடிப்பு நடத்தப் பட்டிருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரி வித்திருப்பதில் உண்மையில்லா மல் இல்லை.

கர்நாடகாவில் பாஜகவின் செல்வாக்கு பெருமளவில் சரிந்து போயிருக்கிறது. பாஜக தலைவர் களின் மெகா ஊழல்கள், அதை யும் தாண்டிய பாலியல் குற்றச் சாட்டுகள் கர்நாடக மக்களை அக்கட்சியின் மீது காறித் துப்ப வைத்துள்ளன.

மேலும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எடியூரப்பா, கர்நாடக பாஜகவிலி ருந்து விலகி புதுக் கட்சியைத் தொடங்கியதிலும் பாஜகவின் செல்வாக்கு பெருமளவு சரிந்துள் ளது.

கர்நாடக முஸ்லிம்களின் வாக் குகளைக் குறி வைத்து வேகமாக இயங்கி வருகிறார் எடியூரப்பா. முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு மத் தியில் பேசும் எடியூரப்பா, “நான் ஆட்சியில் இருந்த காலத்தில் சிறு பான்மையினருக்கு சலுகைகள் வழங்க பாஜக தலைமை எனக்கு தடை போட்டது...'' என்று பகிரங் கமாக சொல்லி வருகிறார்.

தன்னை மதச்சார்பற்றவனாக முன்னிறுத்தி, தனது கட்சிப் பொறுப்பில் முஸ்லிம்களை இணைத்திருப்பதும், சட்டமன் றத் தேர்தலின்போது முஸ்லிம்க ளுக்கு அதிக பிரதிநிதித்துவம் தருவேன் என்று அவர் சொல்லி வருவதும் பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

மே மாதம் நடைபெறவிருக் கும் சட்டமன்றத் தேர்தலில் ஏனைய மாநிலக் கட்சிகளைவிட பாஜகவிற்கு கடுமையான போட் டியாளராக எடியூரப்பாதான் இருப்பார் என்று கவலைப்படும் பாஜக, கர்நாடகத்தில் இழந்த செல்வாக்கை பெற வேண்டுமா னால் கர்நாடக மக்கள் பாஜக பற் றிய பழைய விவகாரங்களை தற் காலிகமாக மறக்க வேண்டும். அதற் கென அதிர்ச்சிகரமான நிகழ்ச்சி நிரல் நடந்தேற வேண்டும் என்ற பின்னணியில்தான் இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கக் கூடும் என்று கணிக்க முகாந்திரம் இருக் கிறது. அதனால்தான் தேர்தலை யொட்டி இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.

இந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டிருப்பது பைக் வெடி குண்டு என்பதும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா சக்திக ளின் மீதான சந்தேகத்தை வலுப் படுத்துகிறது. பைக் வெடிகுண்டு, சைக்கிள் வெடிகுண்டு மூலம் குண்டுகளை வெடிக்கச் செய்வது இந்துத்துவாவினரின் பாணி.

மாலேகான் முதல் கோவா குண்டு வெடிப்புவரை பைக் வெடிகுண்டு சம்பவங்களில் அபினவ் பாரத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்ச ரான சுஷில் குமார் ஷிண்டே, இந்த குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என்பது குறித்து இது வரை எந்த முடிவுக்கும் வர வில்லை. விரிவான விசாரணைக் குப் பின்னர்தான் தெரிய வரும் என்கிறார்.

ஆனால் அன்றைய தினமே கர்நாடக டி.ஜி.பி. பச்சாவுவும், கமிஷ்னர் அவ்ராக்கரும், “குண்டு வைத்தது இந்தியன் முஜாஹித் தீன் அமைப்பைச் சேர்ந்தவர் களா என்பது குறித்து விசாரணை க்கு பின்னர்தான் தெரிய வரும்...'' என மீடியாக்களிடம் கூறியிருப் பது வேடிக்கை மட்டுமல்ல... இது காவல்துறை உயர் அதிகாரிக ளின் பொறுப்பற்றதனத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

தேசிய புலனாய்வு நிறுவன மும், பெங்களூர் சிட்டி குற்றப்பி ரிவு போலீசாரும் இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர். “குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏதேனும் முக்கிய தடயங்கள் கிடைக்கிறதா என்பதை கண்ட றிய தேசிய புலனாய்வு நிறுவனம் மற்றும் தடயவியல் நிபுணர்க ளுக்கு எங்களது காவல்துறை சிறப்புக் குழுவினர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்...'' என்கிறார் பெங்களூர் உயர் காவல் அதிகாரி ஒருவர். ஆனால் அதற்குள் இந்தியன் முஜாஹித்தீனை மீடியாக்களுக்கு நினைவுபடுத்தியிருக் கின்றனர் பெங்களூரூ டி.ஜி.பி. யும், கமிஷ்னரும்!

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் நொறுங்கிக் கிடக்கும் பைக் மற்றும் வாகனங்களின் இடிபாடுகளிலிருந்து தடயவியல் நிபுணர்கள் திரட்டிய ஆதாரங்க ளின்படி, அமோனியம் நைட் ரேட் போன்ற இரசாயனப் பொருட்களும் லித்தியம் அல்கா லைன் பேட்டரிகளும் கிடைத் துள்ளன.

வெடிமருந்தை வெடிக்கச் செய்யும் ஐ.இ.டி. கருவி இந்த வெடிப்பில் பயன்படுத்தப்பட் டுள்ளதா என்பது சந்தேகத்திற்கு ரியது என தெரிவித்துள்ளனர் தடயவியல் நிபுணர்கள்.

மேலும், இந்த வெடிகுண்டில், பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத் தும் இரும்புத் தகடுகள், ஆணி கள், பால் பேரிங்குகள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டி ருக்கவில்லை. அதற்கான தடயங் கள் குண்டு வெடித்த இடத்திலி ருந்து கண்டெடுக்கப்படவில்லை என்றும் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குண்டு வெடிப்பு நடந்த இடம் பாஜக அலுவல கத்தை விட்டு தூரம் என்பதால், பாஜக அலுவலகத்தில் பொருத் தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக் களில் குற்றவாளிகளின் உருவங் கள் தெளிவாக பதிவாகவில்லை என்கின்றனர் தடயவியல் நிபு ணர்கள்.

தீவிரவாதிகள் இந்த தாக்குதல் நடத்தியிருந்தால் அல்லது பாஜ கவினர் சொல்வதைப்போல, அக் கட்சியின் தலைவர்களைக் கொல்ல சமூக விரோதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்தால் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளையல் லவா பயன்படுத்தியிருக்க வேண் டும்? அதுவும் பாஜக அலுவலகத் திற்கு அருகில் அல்லவா அவ ற்றை வைத்திருக்க வேண்டும்?

ஆக, இந்த குண்டு வெடிப்பில் அந்த நோக்கம் இல்லை என் பதை புரிந்து கொள்ள முடிகிறது.

பைக்கில் குண்டுகள் பொருத்தி - அதை இத்தனை தூரத்தில் வைத்தால்தான் பாஜக அலுவல கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிராவில் உருவங் கள் பதிவாகாது என்பதை நன் றாக அறிந்தவர்கள்தான் இந்த குண்டு வெடிப்புக்கு பின்னணி யில் செயல்பட்டிருக்க வேண்டும்.

குண்டு வெடிப்பினால் பெரும் உயிர் சேதம் ஏற்படக் கூடாது; அதே சமயம் பெரிய குண்டு வெடிப்பாகவும் இருக்க வேண் டும். அதை தமக்கு சாதகமாக ஆக் கிக் கொள்ள வேண்டும் என்பது தான் குண்டு வெடிப்பின் பின்ன ணியாக பார்க்க முடிகிறது.

விநாயகர் கோவிலுக்கு அருகில் குண்டு வெடித்தும் கோவிலை தகர்க்க சதி என்ற ரீதியில் செய்தி வெளியாகாதது ஒன்றே இது அரசியல் காரணங்களுக்காக அரசியலில் செல்வாக்கிழந்தவர்க ளின் அரக்கத்தனமான வேலை என்பதை வெளிப்படுத்துகிறது.

Pin It

ஆந்திரப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளரான மின்னி மேத்யூ அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் வழங்கியிருக்கும் உத்தரவில் பிரதமரின் சிறுபான்மையினர் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த 15 அம்சத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும், சிறுபான்மை நலத் திட்டங்களுக்காக அரசின் அனைத்து துறைகளும் மொத்த பட்ஜெட்டில் 15 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், காவல்துறை வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடங்களை உறுதிப்படுத்துமாறும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ள மின்னி மேத்யூ, முஸ்லிம்கள் காவல்துறைக்கான வேலை வாய்ப்புகளுக்கு முன்வருவதில்லை என்ற போலீஸ் அதிகாரிகளின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரி வித்துள்ளார்.

முன்னாள் தலைமைச் செயலாளர் பங்கஜ் நிவேதி கடந்த 2012 ஜூன் மாதம் ஓய்வு பெற்ற தையடுத்து மின்னி மேத்யூ தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.

கடந்த 17ம் தேதி ஆந்திர அர சின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் 17 துறைகள் கலந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுக் கூட்டம், ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி கலந்து கொள்ளவிருக்கின்ற கண் காணிப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்னதாக நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் கலந்து கொள்ளவிருக்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இம்மாதம் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலவளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.

தலைமைச் செயலாளர் மின்னி மேத்யூ தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறைத் தலைவர்களும், சிறுபான்மையினர் வளர்ச்சி குறித்த பிரதமரின் 15 அம்சத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக தங்கள்துறைகளின் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இதில் அரசுத்துறைகளின் தலைவர்கள் பலர், தங்கள் துறைகளின் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் சிறுபான்மையினர் 15 சதவீ தம் ஒதுக்கீட்டை பெற்று வருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். சில விஷயங்களில் இந்த இலக்கு எட்டப்படவில்லை என்றாலும் அவற்றையும் ஈடு செய்வதாகவும் அவர்கள் தலைமைச் செயலாளரிடம் உறுதியளித்துள்ளனர்.

இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் சொந்தத் தொழில் தொடங்குவதற்காக ஒரு லட்சம் குடும் பங்களுக்கான கடனுதவி வழங்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது என தெரிவித்துள்ள மின்னி மேத்யூ,

சிறுபான்மையினருக்கான பட் ஜெட் ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டி, சிறு பான்மையினருக்கு ஒதுக்கப்பட் டுள்ள பட்ஜெட் முறையாக பயன்படுத்துவதில் அரசு தீவிர மாக இருக்கிறது. சிறுபான்மையி னருக்கான நலத் திட்டங்களின் நன்மைகள் பயனாளிகளுக்கு முழுமையாக கிடைக்க வேண் டும். சில துறைகள், சிறுபான்மை மக்களுக்கு மொத்த பட்ஜெட் டில் 15 சதவிதம் ஒதுக்கு வதில் சிரமங்கள் இருப்பதாகத் தெரி வித்துள்ளனர். அதை ஏற்க முடி யாது. எப்படியாவது இந்த இலக்கை அடைந்தே தீர வேண் டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், சிறுபான்மை நலத்துறையின் முதன்மைச் செயலாளர், காவல் துறையில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத ஒதுக்கீடு பின்பற்றப்படுவ தில்லை என புகார் வாசித்தார். அப்போது, ஆள்சேர்ப்பு விதிகள் 1999ன் படிதான் காவல்துறை பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த விதிகளில் சிறுபான்மையி னருக்கு இட ஒதுக்கீட்டிற்கென எதுவும் சொல்லப்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு, அந்த விதிமுறைகளை திருத்துங்கள் என மின்னி மேத்யூ அவர்களை கேட்டுக் கொள்ள... காவல்துறையில் ஆட்சேர்ப்பின் போது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதற்காக முன் வருவதில்லை என காவல்துறை அதிகாரிகள் மீண்டும் கூற... நீங் கள் முதலில் 4 சதவீத ஒதுக் கீட்டை வழங்குங்கள் அதன் பின் னர் அவர்கள் தானாக முன் வரு வார்கள் என அவர்களுக்கு பதில ளித்திருக்கிறார் தலைமைச் செய லாளர் மின்னி மேத்யூ.

பிரதமரின் 15 அம்ச திட்டங்க ளின் வழிகாட்டு நெறிமுறைப் படி, ஒவ்வொரு மூன்று மாதத்திற் கொருமுறை கண்டிப்பாக ஆய் வுக் கூட்டம் நடத்தப்பட வேண் டும். ஆந்திர மாநில அரசின் கடைசி ஆய்வுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 2012ல் நடைபெற் றது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைச் செயலாளர் மின்னி மேத்யூ தலைமையில் நடைபெற்ற மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் கல்வித்துறை அதிகா ரிகள், பாலி டெக்னிக் கல்வி நிறு வனங்களில் சிறுபான்மை மாண வர்களின் சேர்க்கையின்போது 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத் தப்படுகிறது என தெரிவித்தனர். அப்போது, சிறுபான்மை மாண வர்களுக்கு பள்ளிக் கூடங்களில் 15 சதவீத சேர்க்கையை உறுதிப்ப டுத்த வேண்டும் என உத்தரவிட்ட மின்னி மேத்யூ, குழந்தைகளின் பெற்றோர்கள், தங்களது குழந்தை களை பள்ளிக்கு அனுப்ப அங்கன்வாடி மூலமாக கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை நலத் திட்டங் களை பயன்படுத்திக் கொள்வது பற்றி சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப டுத்த வேண்டும் என இந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது.

இக்கூட்டத்தில் சிறுபான்மை நலத்துறை ஆணையர் முஹம்மது அப்துல் வாஹித், கூடுதல் காவல் துறை தலைவர் அன்வாருல் ஹுதா ஐ.பி.எஸ்., உள்துறை முதன் மைச் செயலாளர் டி.பி. தாஸ் ஐ.ஏ.எஸ். மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருக் கின்றனர்.

சிறுபான்மை மக்களின் நலத் திட்டங்கள் மீதான ஆந்திர அர சின் இந்த வேகம் பாராட்டுக்குரி யது. ஆந்திர அரசைப் பின்பற்றி, தமிழக அரசும் பிரதமரின் சிறு பான்மை நலத் திட்டங்கள் அம் மக்களுக்கு பயன்படுத்தப்படுகி றதா என்பதையும், காவல்துறை உள்ளிட்ட இதர அரசுத்துறை களில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வுக் கூட்டம் நடத்தி உறுதி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார் கள்.

மேலும், ரங்கநாத் மிஸ்ரா கமி ஷன் பரிந்துரையின்படி, முஸ்லிம் கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம் இன்ஸ்பெக்டர் அல்லது சப் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான முன் முயற் சிகளை அனைத்து மாநில அரசுக ளும் எடுக்க வேண்டும் என மத் திய அரசு உத்தரவிட வேண்டும்.

மாநில அரசுகளே பொறுப்பு!

முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட பகுதிகளில், முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண் டும் என்கிறமத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் மட்டத்திலான வழிகாட்டுதலுக்கு ஏற்ப செயல்படுத் துவது என்பது இந்த நாட்டில் கடினமான விஷயமாகவே உள் ளது.

ஏனெனில் போலீஸ் சேவையில் முஸ்லிம்களின் பிரதிநிதுத்துவம் மிக மிக குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறது. முஸ்லிம் பகுதிகளில் நியமிக்கப்ப டும் அளவிற்கு காவல்துறையில் போதுமான அளவிற்கு முஸ்லிம்களின் எண் ணிக்கை இல்லை என்பதையே இது நிரூபிப்பதாக உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விபரப்படி, நாட்டின் ஒட்டு மொத்த போலீஸ் படையான 16.6 லட்சத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர் நிலையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 1.08 லட்சம்தான்.

அதாவது, நாட்டின் ஒட்டுமொத்த காவல்துறையினரில் முஸ்லிம்களின் பிரதிநி தித்துவம் என்பது வெறும் 6 சதவீதம்தான் இருக்கிறது. ஆனால் யதார்த்த உண்மை என்னவென்று பார்த்தால் 4 சதவீதத்திற்கும் குறைவான பிரதிநிதித்துவம்தான் இருக் கிறது.

ஏனெனில், ஒட்டுமொத்த 1.08 லட்சம் முஸ்லிம் போலீசாரில் ஏறக்குறைய பாதி அளவிற்கு அதாவது 46,250 பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டுள் ளனர்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிபரக் கணக்குபடி, டெல்லியில் முஸ்லிம் போலீஸ் அதிகா ரிகளின் எண்ணிக்கை மோசமாக அல்லது மிக குறைந்த அளவில்தான் இருக்கிறது.

டெல்லி காவல்துறையினரின் மொத்த எண்ணிக்கையான 75,117 பேரில் முஸ் லிம் போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1,521 தான். இது, டெல்லி காவல் துறை யில் முஸ்லிம் அதிகாரிகளின் பங்களிப்பு என்பது 2 சதவீதத்தைக் காட்டுகிறது.

எனவே மத்திய உள்துறை செயலாளரின் வழிகாட்டுதல்படி, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ரேங்க் முஸ்லிம் அதிகாரிகளை (முஸ்லிம் பகுதிகளில்) நியமிப்பது என்பது சாத்தியமாகாது.

போலீஸ் அதிகாரிகள் பற்றிய சமீபத்திய புள்ளி விபரத்தை வெளியிட்டிருந்த ஒரு ஆங்கில நாளேடு, முஸ்லிம்களின் குறைந்த பிரதிநிதித்துவம் குறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கவலை தெரிவிப்பதாக எழுதியிருந்தது.

நீதிபதி சச்சார் கமிட்டியின் 2006ம் ஆண்டு அறிக்கை கூட அரசுத்துறைகளிலும், காவல் படையிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்த அளவில் இருக் கிறது என்று அடையாளப்படுத்தியிருந்தது.

இந்த கமிட்டி, முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில் முஸ்லிம் அதிகாரிகளை நிய மிப்பது அவசியம் என பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை கருத்தில் கொண்டு முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட பகுதிகளில் முஸ்லிம் போலீஸ் அதிகாரி களை நியமிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியிருந்தது மத்திய அரசு.

“காவல்துறையில் முஸ்லிம்களின் குறைந்த அளவு பிரதிநிதித்துவத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பு; காவல்துறையில் முஸ்லிம்களை சேர்க்கும் செயற்பாடுகளில் மாநில அரசுகள் மந்தமாக செயல்படுகின்றன...'' என்று கூறும் தேசிய சிறுபான்மை கமிஷனின் தலைவரான வஜாஹத் அப்துல்லாஹ்,

“பிரதமரின் 15 அம்ச திட்டத்தில், காவல்துறையில் பணியமர்த்தலின்போது, சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண் டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த அறிவுறுத்தல்களை மிகச் சில மாநில அரசுகளே அமல்படுத்தி யுள்ளன (ஆந்திர அரசு சமீபத்திய உதாரணம்). சச்சார் கமிட்டி அறிக்கையின்படி முஸ் லிம்களின் எண்ணிக்கை பெரும் அளவில் உள்ள உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் முஸ்லிம் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் உள் ளது.

ராஜஸ்தான் காவல்துறையில் முஸ்லிம்கள் ஒரு சதவீதமே உள்ளனர். இதனால், பிரச்சினைகளை கையாளும்போது போலீஸ் பக்கச் சார்பு கொண்டதாக ஆகி விடு கிறது. ஐ.பி.எஸ். மட்டத்திலான முஸ்லிம் அதிகாரிகளின் தேவை தற்போது அவசியமா கிறது. ஆனால் அதே சமயம், கான்ஸ்டபிள் அந்தஸ்தில் முஸ்லிம் அதிகாரிகளை சேர்ப்பது என்பது மிக மிக அவசியம்...'' என்கிறார் கவலையுடன்!

காவல்துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்

மாநிலங்கள்                      காவல்படையின்    முஸ்லிம்அதிகாரிகளின்            சதவீதம்                                   

டெல்லி                                                   75,117                         1,521                                       2

மஹாராஷ்டிரா                                  1,82,971                      1,945                                       1

உத்திரப் பிரதேசம்                             1,87,425                      9,166                                       4.8

பீஹார்                                                    65,476                         3,084                                       4.5

ஆந்திரப் பிரதேசம்                             89,404                         8,933                                       10

கர்நாடகா                                               74,699                         4,796                                       6.4

ராஜஸ்தான்                                          76,356                         954                                          1.2

ஜம்மு & காஷ்மீர்                                 76,805                        46,250                                     60

இந்திய அளவில்                                 16,60,151              1,08,389                                     6

- நன்றி : மில்லிகெஜட்

இது 2012ம் ஆண்டின் புள்ளிவிபரம் ஆகும். இதில் தமிழகம் உள்பட பல மாநிலங்க ளின் புள்ளி விபரங்கள் இல்லை. 8 மாநிலங்களின் புள்ளி விபரங்கள் மட்டுமே இவை. தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய குற்றப் பதிவுத்துறையின் 2004 அறிக்கை 88,524 காவல்துறையினரில் முஸ்லிம் அதிகாரிகளின் எண்ணிக்கை வெறும் 99 மட்டுமே என்கிறது.

2001 சென்செஸ் அடிப்படையில், 2004 ஆண்டின் தேசிய குற்றவியல் பதிவுத் துறை மூலம் பெறப்பட்ட முஸ்லிம்களின் மக்கள் தொகை கணக்கு மற்றும் காவல்து றையில் அவர்களின் பங்கு (சதவீத அளவில்) குறித்து 2006ம் ஆண்டு பிரண்ட் லைன் ஆங்கில இதழ் வெளியிட்ட தகவல் இது.

மாநிலம்    மொத்தமக்கள்தொகையில காவல்துறையில்முஸ்லிம்களினஎண்ணிக்கை                

ஆந்திரப் பிரதேசம்                                             9.17                 13.25

அஸ்ஸாம்                                                          30.92               10.55

பீஹார்                                                               16.53               5.94

குஜராத்                                                              9.06                 5.94

ஜம்மு & காஷ்மீர்                                            66.97               56.36

கர்நாடகா                                                          12.23               6.71

கேரளா                                                               24.70               12.96

மஹாராஷ்டிரா                                             10.60               4.71

தமிழ்நாடு                                                          5.56             0.71

திரிபுரா                                                               7.95                 2.01

உத்திரப் பிரதேசம்                                        18.50               4.24

மேற்கு வங்கம்                                               25.25               7.32

டெல்லி                                                               11.72               2.26

இதில் தமிழகத்தில் காவல் சேவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.

Pin It

ஒரு நாட்டின் பெரும்பான்மை இனம் அந்த நாட்டின் ஆட்சியதிகாரம் மற்றும் முக்கிய விஷயங்களில் அது முடிவெடுக்கும் தன்மை என்பன தனது கையை விட்டு நழுவிவிடக் கூடும் என்று கருதுமாயின் அந்த பெரும்பான்மை இனம் வன்முறைமிக்கதாக மாறும் இப்படியொரு யதார்த்தமான ஆனால் ஆய்வுக்குரிய வார்த்தைகளை வெளிப்படுத்தியவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழ கத்தின் பேராசிரியர் எம்.டி. முனி.

எத்தனை சத்தியமான வார்த்தைகள் இவை! அப்படியே சிங்கள இனத்திற்கு கனகச்சிதமாய் பொருந்துகிறதல்லவா! முப்பது வருடங்கள் தொடர்ந்து தமிழ் இனத்தின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான சிங்கள அரசின் யுத்தம், மேற்கண்ட பேராசிரியர் முனியின் கூற்றுக் கொப்ப சிங்கள இனத்தின் அச்சத்தினால் விளைந்ததுதான். இந்த அச்சம் இலங்கை சிறு பான்மை சமூகமான முஸ்லிம்களின் சமூக அரசியல் எழுச்சியைக் கண்டும் சிங்கள் இனத் திற்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் முஸ்லிம்களுக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கிறது சிங்கள இனவெறிக் கூட்டம்.

கடந்த மார்ச் 9ம் தேதி காலியில் சிங்கள இனவெறிக் கூட்டமான பொதுபல சேனா என்கிற அமைப்பின் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் கோத்த பய ராஜபக்சே கலந்து கொண்டார்.

இது, இலங்கை குடிமக்களின் பார்வையில் சாதாரண நிகழ்வாக - ஒரு அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தாலும், சிங்கள பௌத்த இனத்திற்காக, அவர்களின் நலன்களுக்காக மட்டுமே பாடுபடுவதாக கூறிக் கொள் ளும், அந்த சிங்கள பௌத்த மக்களின் நலன்களுக்காக சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வன்முறைத் தாண்டவமாடும் மதவாத அமைப்பான பொதுபல சேனாவிற்கு ஆட்சியாளர்க ளின் ஆசிகள் உண்டு என்பதை மறைமுகமாக உணர்த்தும் ஒரு நிகழ்வாகவே இதை பார்க்க முடிகிறது.

இந்த நிகழ்வோடு, இன்னொரு செய்தியையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் சென்னைக்கு வந்த இலங்கை தமிழ் தேசியக் கூட்டணியின் இணை செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், பொதுபல சேனாவை உருவாக்கியதும், அதைபின் நின்று இயக்குவதும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜ பக்சேதான் என்று வெளியுலகத்திற்கு தெரி யாத உண்மையை அம்பலப்படுத்தினார்.

கோத்தபயவின் பொதுபல சேனா நிலையத் திறப்பு விழாவிற்கும், பிரேமச் சந்திரன் வெளியிட்ட உண்மைக்கும் தொடர்பிருக்கிறதல் லவா?

ஆக, சிறுபான்மையினரை ஒரு கை பார்க்ககளமிறக்கப்பட்டிருக்கும் பொதுபல சேனாவின் பிதாமகன் யார் என்பதை இனி சந்தேகத் திற்கிடமில்லாமல் நம்ப முடியும். அந்த பொது பல சேனாவின் பயணம் என்பது நம் நாட்டின் சிவசேனாவையொட்டி இருக்கிறது. பெயரில் மட்டுமல்ல செயற்பாடுகளிலும்தான்.

"மராட்டா சிர்ஃப் மராட்டியோங்கேலியே' (மராட்டியம் மராட்டிய மக்களுக்கே) என்ற கோஷத்தை முன் வைத்துதான் சிவசேனா துவங்கப்பட்டது.

1970களில் இந்த கோஷத்துடன் துவங்கப் பட்ட சிவசேனா... மும்பைத் தமிழர்களை விரட்டியடித்தது. தொடர்ந்து, உத்திரப் பிரதேசம், பீஹார் மேற்கு வங்கம் என பல மாநிலத்த வரை மும்பையை விட்டும் விரட்டியடித்தது. மராட்டியம் என்ற ஒற்றை கோஷத்தை முன் வைத்து துவக்கத்தில் மராட்டியர்களின் நலன்களைப் பற்றி மட்டும் பேசிய சிவசேனா மெல்ல மெல்ல தனது நிகழ்ச்சி நிரலை பல் வேறு தளங்களுக்கு மாற்றிக் கொண்டது. அத்தனையும் வன்முறைத் தளங்கள்தான்!

1992 டிசம்பர் மாதம் பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான பெரும் கலவரத்தில் ஈடுபட்டது சிவ சேனா. 1993 ஜனவரி கடைசிவரை ஏறக்குறைய 2 மாதங்கள் இந்த வன்முறை நீடித்தது. பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பதை சிவசேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு ஒரு வாய்ப்பாக அது ஆக்கிக் கொண்டது.

அதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக சிவ சேனா செய்து வந்த அவதூறுப் பிரச்சாரங்கள் விஷக் கருத்துகள் எத்தகையது என்பதற்கும், இந்தப் பரப்புரைகள் மூலம் மராட்டிய மக்க ளிடத்தில் அது எத்தகைய செல்வாக்கு செலுத் தியது என்பதற்கும் இந்த 1992-93 கலவரமே சான்று.

சிவசேனாவின் வன்முறை அரசியலின் அரிச்சுவடியைத்தான் தனது கொள்கையாக வகுத்துக் கொண்டு, "சிங்கள நாடு சிங்கள வர்க்கே' என்ற கோஷத்துடன் பொதுபல சேனா வெளியுலகிற்கு வந்திருக்கிறது.

பொதுபல சேனாவின் இனவெறிக்கு முதல் சாட்சி தம்புள்ள பள்ளிவாசல். பள்ளிவாசலை பதம் பார்த்த பொதுபல சேனா ஹலால் பிரச் சினை, பர்தா என அடுத்தடுத்த நிகழ்ச்சி நிர லுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.

சிறுபான்மை தமிழ் - முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு இணையான அதிகாரத்தைப் பெறக் கூடாது என்ற சங்கல்பத்துடன் களமாடி வருகிறது பொதுபல சேனா.

இந்த வன்முறை அமைப்பின் உறுப்பினர்கள் பௌத்தபிக்குகள் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியல்ல. ஏனெனில், அமெரிக் காவை இஸ்ரேலியர்கள் இயக்கு வதைப்போல, சிங்கள ஆட்சியார்களை இயக்குவது இந்த புத்த பிக் குகள்தான். அதனால், பிக்குகள் அடங்கிய பொதுபல சேனா சட்டத்திற்கு கட்டுப்படாமல் சிவசே னாவைப்போல தனி ராஜ்ஜியம் நடத்துகிறது.

பொதுவாக இலங்கை முஸ் லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் தேசிய ஒருமைப்பாடு மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட வர்கள் இந்திய முஸ்லிம்களைப் போலவே! புலிகள் அமைப்பினால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும் - தென் பகுதிகளில் அவர்கள் தஞ்சமடைந்தவர்களே தவிர தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக அவர்கள் களம் கண்டதில்லை.

உண்மையில், தமிழ் போராட்ட அமைப்புகளுக்கு முஸ்லிம்கள் ஆதரவளித்திருந்தார்களேயானால் தமிழ் போராட்டத்தின் வடிவம் மாறியிருக்கும். இன்று தமிழ் அமைப்புகள் தங்கள் நோக் கங்களை அடைய அது வழி வகுத்திருக்கும். தேசிய ஒரு மைப்பாட்டின் மீதான முஸ்லிம் களின் அசைக்க முடியாத நம்பிக்கை பிரிவினைக் குரல் எழுப்பு வதை விட்டும் அவர்களைத் தடுத்தது.

சக இனங்களோடு அமைதியான வாழ்வையே விரும்பும் இலங்கை முஸ்லிம்கள் மீது சிங்களப் பெரும்பான்மை கட்ட விழ்த்து விடுகின்ற இன, மத ரீதியான தாக்குதல்கள் தொடருமானால் இலங்கையின் தேசிய ஒற் றுமை எதிர்காலத்தில் கேள்விக்கு றியாகும் சூழ்நிலை உருவாகலாம்.

இலங்கைத் தீவின் முப்ப தாண்டு காலயுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இன் னும் மீள் குடியேற்றம் செய்யப் படவில்லை. வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் விரட்டினார்கள் என்ற கூப்பாட்டை இன்று வரை போட்டுக் கொண்டிருக்கும் சக்திகள், இன்றுவரை முஸ்லிம்கள் தங்களின் பூர்வீக மண்ணில் குடியமர்த்தப்படாமல் இருக்கும் நிலையைப் பற்றி வாய்திறப்ப தில்லை.

யுத்த முடிவுக்குப் பின் அரசியல் மாற்றங்களினூடாக சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற் சிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இலங்கை தெற்கின் பாசிச இனவாதிகள் அந்த சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வரு கின்றன.

தமிழ் - முஸ்லிம் உறவுகள் மறுமலர்ச்சி அடைந்து வரும் இத்தகு சூழலில் சிங்கள பாசிச இனவாதிகளின் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தமிழ் - முஸ்லிம் உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்பதே இலங்கையிலிருந்து கிடைக்கும் செய்தியாக உள்ளது.

எந்த பெரும்பான்மையினம் தமிழ் முஸ்லிம் உறவுகளை பிரி த்து வைக்கச் செய்ததோ, அதே இனம் இன்று இரு சமூகத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்கும் வேலையை செய்து வருகிறது.

ராஜீவ் காந்தியின் படுகொலை மூலம் விடுதலைப் புலிகளை சர்வதேச அரங்கில் பயங்கரவாத இயக்கமாக சித்தரித்து அதில் வெற்றி கண்ட சிங்கள அரசு, காத் தான்குடி முஸ்லிம் படுகொலை சம்பவம் மூலம் தமிழ் - முஸ்லிம் உறவுகளுக்குள் ஏற்பட்ட விரி சலை தொடர்ந்து தக்க வைப்பதி லும் வெற்றி கண்டிருக்கிறது.

புலிகளின் போராட்டக் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ரொம் பவே யோசித்து, யோசித்து அடியெடுத்து வைத்த சிங்கள அரசு, புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் வழியாக முஸ் லிம்களுக்கு எதிரான திறந்த நிலைப் போரை அறிவித்திருக் கிறது.

புலிகள் இருந்த காலத்தில் முஸ்லிம்களை சீண்டினால் அது சம காலத்தில் இரண்டு எதிரி களை சந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கி விடும் என்பதில் தீர்க் கமாக இருந்திருக்கிறது சிங்கள அரசு. இப்போது அதன் சுயரூ பத்தை காட்டியிருக்கிறது.

இலங்கை வரலாற்றில் இல் லாத அளவிற்கு நடைபெற்ற தம் புள்ள பள்ளிவாசல் தாக்குதல் தான் சிறுபான்மை முஸ்லிம்க ளுக்கு எதிரான சிங்கள இனவாதி களின் தாக்குதலுக்கான முதல் முயற்சி. இப்போது ஹலால், ஹிஜாப் விவகாரங்கள் கிளப்பப் படுகின்றன.

ஹலால் பிரச்சினையில், ஹலால் சான்றிதழ் மூலம் திரட் டப்படும் நிதி அல் காயிதா போன்ற போராளி அமைப்புக ளுக்கு செல்கிறது என்று சிங்கள வெறியர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஹிஜாப் அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவதும், ஹிஜாபை கிழித்தெறியும் சம்ப வங்களும் முஸ்லிம்களை வன்மு றையின் பக்கம் நோக்கி திரும்பும் முயற்சிகள்.

இந்தியாவில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலை அப்படியே பிர திபலிக்கிறது பொதுபல சேனா. முஸ்லிம்கள் மீதான சிங்கள இன வெறித் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இலங்கை அரசு முன்வர வேண்டும். இதில் சிங்கள அரசு, இனவாதிகளுக்கு அணுசரணை யாக நடந்து கொள்ளுமேயா னால் அது இன்னொரு யுத்தத் திற்கு கூட அடித்தளமாக அமை ந்து விடக் கூடும்.

இலங்கையில் இன்னொரு யுத்தம் தொடங்கினால் அது வட கிழக்கில் என்ற அளவில் மட்டும் இருக்காது. ஒட்டுமொத்த இலங் கையிலும் பிரதிபலிக்கும். அப் போது இரண்டு எதிரிகளை எதிர் கொள்ளும் நிலையை இலங்கை அரசு சந்திக்கும்.

Pin It