கடந்த (02-39) இதழில் "எங்கெங்கு காணினும் குப்பை - அவதிப்பட்ட கீழக்கரை மக்கள்; அகற்ற வைத்த ஐஎன் டிஜே' என்ற தலைப்பில் கீழக் கரையில் சேரும் குப்பைகள் அகற்றப்படாததால் பொது மக்கள் அதிருப்தியடைந் திருப்பதையும், நகராட்சி மேற்கொண்டு வரும் நடவ டிக்கைகளையும் நேரடி ரிப் போர்ட்டாகத் தந்திருந் தோம்.

அதில் குப்பைகளைக் கொட்ட இடம் கிடைக்காமல் இறுதியில் கும்பிடு மதுரை கிராமத்தில் தனியாருக்குச் சொந் தமான ஒரு இடத்தில் குப்பைக ளைக் கொட்டிக் கொள்ள நகராட்சி சேர்மன் பஷீர் முயற்சி எடுத்து, அதன்படியே கீழக்கரை யின் பல இடங்களில் குவிந்தி ருந்த குப்பைகளை அகற்றியும் - சில இடங்களில் அகற்றப்படா மல் இருந்ததையும் சுட்டிக் காட் டியிருந்தோம்.

இந்நிலையில், அந்தத் தனி யார் இடத்திலும் குப்பைக் கொட்டுவதில் சிக்கல் ஏற்பட்டி ருக்கிறது. இச்சிக்கலுக்குக் கார ணம் திருப்புல் லாணி ஒன்றிய திமுக கவுன்சிலரான யோவான் என்று கை காட்டும் கீழக்கரைவாசிகள், யோவான்தான் அப்பகுதி மக்களை தூண்டி விட்டு குப் பைகளைக் கொட்ட விடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்கி றார்கள். இந்த எதிர்ப்பு காரண மாக மீண்டும் குப்பைப் பிரச் சினை தலை தூக்கியிருக்கிறது.

நகராட்சியின் திமுக சேர்மனான பஷீர் அஹ்மதை தொடர்பு கொண்ட நாம், “குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இல்லையா?'' என்றோம்.

“தற்காலிகமாக குப்பைகளை கொட்ட கும்பிடு மதுரையில் தனியார் இடத்தில் ஏற்பாடு செய் தோம். அதையும் பிரச்சினை யாக்கி விட்டார்கள். காவல்துறை யிடம் பேசியிருக்கிறேன். கலெக் டரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறேன்.

காவல்துறையோ, "நீங்கள் குப்பைகள் அந்த இடத் திலேயே (கும்பிடு மதுரை கிராமத்தில்) கொட்டுங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்கி றோம் என்று சொல்லி யிருக்கிறார்கள். ஆயி னும் என்ன முயற்சி செய்து குப்பைகளைக் கொட்டினாலும் இது நிரந்தரத் தீர்வு ஆகாது.

கீழக்கரை நகராட்சிக் குச் சென்று தனியாக அரசாங்கம் இடம் ஒதுக்கித் தர வேண்டும். ஏற்கெனவேதில்லை யேந்தலில் நகராட்சி சார்பாக வாங்கிய 12 ஏக்கர் நிலம் கூட பிரச்சினையாகி அப்பகுதி பஞ்சா யத்து தலைவரால் தடை வாங்கப் பட்டது. அந்தத் தடையை அகற்றினோம். ஆனாலும் அது ஸ்டேடஸ்கோவில் இருக்கிறது. அந்த இடத்திற்குத்தான் உரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டி ருக்கின்றோம். எங்களுக்குச் சாதகமாக ஜட்ஜ்மெண்ட் வந்தால் அது நிரந்தரத் தீர்வாக அமையும்.

இது தவிர, முன்னாள் கலெக் டர் ஹரிஹரன் ஒதுக்கித் தருவ தாக சொன்ன வேறொரு இடத் திற்கும் அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு பின் வாங்கி விட்டது. அதனால இந்தப் பிரச்சினை நிரந்தரமா தீர வேண்டுமானால் புதிதாக பொறுப்பேற்றிருக்கிற அதிமுக அரசு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு கீழக்கரை நகராட்சிக்கு தனியாக இடம் ஒதுக்கித் தர ஆவண செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை மக்கள் ரிப்போர்ட் மூலமாகவே முன் வைக்கிறேன்...'' என்று சொன்ன பஷீர் அஹ்மது, “இன்னொரு விஷயத்தையும் நீங்கள் எழுதியாகனும்'' என்றவர்,

“தமிழகத்திலேயே கீழக்கரை நகராட்சிக்கு மட்டும்தான் புறம்போக்கு நிலம் இல்லை. இருந்த நிலமெல்லாம் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு நிலங்களையும் கண்டறிந்து அதிமுக அரசு மீட்க வேண்டும்...'' என்றார். இதோ எழுதி விட்டோம்!

- ஃபைஸ்

Pin It