பூந்தமல்லி பாப்பாபி தர்கா பிரச்சினை

முஸ்லிம்களின் வழிபாடு மற்றும் சமுதாய நலன்களுக்காக அளிக்கப்படும் நன்கொடைச் சொத்துகள் வக்ஃபு சொத்துகளாகும். இச்சொத்துகளை பராமரிப்பதற்காவும், பாதுகாப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு வக்ஃபு வாரியத்தை அமைத்துள்ளது.

பயன்பாட்டிற்கு உட்படுத்தப் படாமல் இருக்கும் காலி நிலங் கள் எளிதாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாவதால் அவற்றைக் கல் விக் கூடங்கள் மற்றும் மருத்துவ மனைகள் கட்டுவதற்கு அனுமதி யளித்தால் சமுதாய மக்களுக்கு பலன் கிடைக்கும் என்ற அடிப் படையில் புதிய கொள்கை முடிவை வக்ஃபு வாரியம் நிறை வேற்றியது.

அதன்படி சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பள்ளிக் கூடம் கட்டுவதற்கு வக்ஃபு நிலம் வழங்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சலச லப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நம்மிடையே பேசிய பூந்தமல்லி பாப்பாபி குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளர் அப்துல் ரஹ்மான்...

“பூந்தமல்லி பாப்பாபி தர்கா வுக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங் கள் குடியிருந்து வருகின்றன. பாப்பாபி தர்காவுக்கு சொந்த மாக 3 ஏக்கர் 60 செண்ட் காலி நிலம் உள்ளது. 60 செண்ட் நிலம் கபரஸ்தானிற்கும், 1 ஏக்கர் நிலத்தை கல்விக் கூடம் கட்டுவ தற்காக அப்துல் ரசாக் என்பவ ருக்கும், 2 ஏக்கர் நிலத்தை இஸ் லாமிய கலாச்சார மையம் துவங் குவதற்கும் வழங்கியுள்ளது வக்ஃபு வாரியம்.

இம்மாதிரி நிலம் வழங்குவது குறித்து அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே வக்ஃபு வாரி யம் எந்த ஆலோசனையும் நடத் தவில்லை. நாங்கள் வாடகை தருகிறோம், பள்ளிவாசலுக்கு சந்தா தருகிறோம். எங்களிடத் தில் ஆலோசனை செய்யாமல் நிலத்தை வழங்கியது ஏன்?

பள்ளிவாசல் நிர்வாகத்திற் கும், தர்கா நிர்வாகத்திற்கும் கடந்த 10 ஆண்டு காலமாக தேர்தல் நடத்தப் பெறவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் நிர் வாகத்தில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இவர்கள் கட்டும் பள்ளிக் கூடத்தினால் இப்பகுதி ஏழை மக்களுக்கு எந்தப் பயனும் விளையப்போவது இல்லை. இப் பகுதியைச் சுற்றி 15 தனியார் பள்ளிகளும், 5 அரசு பள்ளிக ளும் உள்ளன. இந்தப் பகுதி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதால் குறைவான கட்டணம் கொண்ட அரசு பள் ளிகளிலேயே தங்கள் பிள்ளை களை படிக்க வைக்க முடிய வில்லை. அப்புறம் எப்படி அப் துல் ரஹ்மான் கட்டும் பள்ளிக் கூடத்தில் படிக்க வைக்க முடி யும்?

அப்துல் ரசாக் பாய் பெரும் பணக்காரர். அவரால் கட்டப்ப டும் பள்ளிக் கூடம் பணக்கார உயர்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன்படும். ஏழைகளுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. மேலும் பல லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை வெறும் 40 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸிற்கும், நான் காயிரம் ரூபாய் மாத வாட கைக்கு தாரை வார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

பள்ளி வாசலுக்கு அட்வைஸரி கமிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள தமுமுகவினர் ஐந்து பேரும் இந்த மஹல்லாவாசிகள் கிடையாது. பக்கத்தில் உள்ள பூந்தமல்லி நகரத்தைச் சேர்ந்த வர்கள். இவர்களுடைய பரிந்து ரையின் பேரில்தான் அந்த இடத்தை அப்துல் ரசாக்கிற்கு பள்ளிக் கூடம் கட்ட வக்ஃபு வாரியம் வழங்கியுள்ளது.

மேலும் 3 ஏக்கர் 60 செண்ட் இடத்தைச் சுற்றி காம்பவுண்ட் கட்டுவதற்கு வக்ஃபு வாரியத்தி டம் அனுமதி பெற்ற தமுமுகவி னர், அந்த நிலத்தைச் சுற்றி காவல்துறை பாதுகாப்புடன் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ள னர்.

இத்தனை ஆண்டு காலம் இப்பகுதி மக்கள் அந்த நிலத்தை போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இந்த காம்பவுண்டு சுவரை எழுப்பியதன் மூலம் இப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகள் அடைபட்டுள்ளது. இதனால் இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து வழக்கு மன்றம் சென்றுள்ளோம். இவர் கள் சட்டத்தை மீறி செய்துள்ள இச்செயலை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம். எந்த நிலையிலும் இந்த நிலம் பாமரர்களுக்கு பயன் படாமல் பணக்காரர்கள் தங்கள் சொத்தாக மாற்றிக் கொள்ள விட மாட்டோம்...'' என்று கொந்தளிப் புடன் பேசினார்.

பள்ளிக் கூடம் கட்டுவதற்கு இடம் வழங்கிய வக்ஃபு வாரியத் தின் மீது கோபப்படாமல் அட் வைஸரி கமிட்டியினரான தமு முகவினர் மீது இப்பகுதி மக்கள் கோபப்பார்வை வீசுவது ஏன்? என்ற கேள்வியை திருவள்ளூர் மாவட்ட தமுமுக பொருளாளர் ஷேக் தாவூத்திடம் கேட்டோம்...

“பாப்பாபி தர்காவுக்கும், தமுமுகவிற்கும் மிக நீண்ட தொடர்பு உள்ளது. 1997-98 ஆண்டுகளில் இந்தச் சொத்துகளை நிர்வாகித்து வந்த குத்தூஸ் என்பவரின் நிர்வாகத்தில் பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அதனை சரிப்படுத் தக்கோரி தமுமுக பல போராட்டங்களை நடத்தியது. அதன் காரணமாக வக்ஃபு வாரியம் இந்தச் சொத்துகளை தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் கொண்டு வந்தது.

2001ம் ஆண்டு ஹனிபா கவுஸ், ஜாவித் கொண்ட 11 நபர் கமிட் டியை வக்ஃபு வாரியம் அமைத் தது. இந்தக் கமிட்டியின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந் ததால் 2006ம் ஆண்டு ஹைதர் அலி வக்ஃபு வாரியத்தின் தலை வராக இருந்தபோது இம்தியாஸ் அஹ்மது தலைமையில் ஐந்து நபர் கொண்ட அட்வைஸரி கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டிதான் தற்போது தொடர்ந்து வருகிறது...'' என்று சொன்னவரை இடைமறித்து,

அட்வைஸரி கமிட்டியில் நிய மிக்கப்பட்டுள்ளவர்கள் மஹல் லாவாசிகள் கிடையாது என்ற குற்றச்சாட்டு உள்ளதே?'' என் றோம்.

“அட்வைஸரி கமிட்டியில் நிய மிக்கப்பட்டுள்ள 5 பேர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். வக்ஃபு வாரிய நிலத்தில் குடியி ருப்பவர்கள் நிர்வாகத்தில் இடம் பெறக் கூடாது என்று வக்ஃபு வாரிய விதிமுறைகளில் கூறப்பட் டுள்ளது.

அதனால்தான் அவர்களால் நிர்வாகத்தில் இடம் பெற முடி யவில்லை. இந்த விதிமுறையைப் பற்றிய நாலெட்ஜ் இல்லாத கார ணத்தினால்தான் அவர்கள் இம் மாதிரி பேசுகிறார்கள்...'' என்று சென்ன தாவூத்,

“மேலும் வக்ஃபு வாரியத் தலைவராக கவிக்கோ அப்துல் ரஹ்மான் வந்தபின்னர் பரா மரிக்க முடியாத வக்ஃபுச் சொத் துகளை கல்விக் கூடங்கள் கட் டவும், மருத்துவமனைகள் கட்ட வும் வாடகைக்கு கொடுப்பதாக நாளிதழ் மூலம் விளம்பரம் செய் தார்.

அதன் அடிப்படையில் மியாசி (இஸ்லாமிய கல்விச் சங் கம்) மலபார் முஸ்லிம் அசோசி யேஷன், டாக்டர் ஆயிஷா மற் றும் அப்துல் ரசாக் ஆகியோர் முயற்சித்தனர். இதன் பிறகு வக்ஃபு வாரியம் அப்துல் ரசாக் என்பவருக்கு பள்ளிக் கூடம் கட்ட அனுமதி வழங்கியது. எல் லாமே சட்ட ரீதியாக நடந்துள் ளது. இதில் எந்த முறை கேடும் இல்லை.

நிலத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்ப வக்ஃபு வாரியம் அனுமதி அளித்ததன் பேரில் தான் சுற்றுச் சுவர் எழுப்பி னோம். சுற்றுச் சுவர் எழுப்பினா லும் பொது மக்கள் சென்று வர பாதைகள் உள்ளன. சுற்றிச் சென் றாலும் அல்லது காலி நிலத்தின் வழியாக சென்றாலும் பூந்தமல்லி போக 2 கிலோ மீட்டர்தான்...

இந்தக் காலி இடத்தை ஆக்கி ரமிப்பதற்காக ஒரு சிலர் பல ஆண்டுகளாக முயற்சித்து வரு கின்றனர். காம்பவுண்ட் சுவர் எழுப்பி பாதுகாப்பு ஏற்படுத்தி விட்டபடியால் இப்பகுதியில் வசிக்கும் மக்களை அவர்கள் தூண்டி விட்டுள்ளனர். எந்த நிலையிலும் வக்ஃபு சொத்து களை யாரையும் கைப்பற்றவிட மாட்டோம்... என்று பொங்கித் தீர்த்தார்.

வக்ஃபு சொத்துகளை காலி யாக வைத்திருந்தாலும் பிரச் சினை. வேறு விஷயத்திற்கு பயன்படுத்த நினைத்தாலும் பிரச்சினை. வக்ஃபு நிலம் என் றாலே பிரச்சினை என்ற நிலை உருவாகி விட்டது. பல நல்ல உள் ளங்கள் நல்ல எண்ணத்துடன் சமுதாயத்தின் பயன்பாட்டிற்காக வழங்கிய வக்ஃபு சொத்துகள் முறை யாக நிர்வகிக்கப் பட வேண்டும். சமு தாயத்திற்கு பயன் பட வேண்டும் என்பதுதான் மக்க ளின் எதிர்பார்ப்பு. இதனை சம்பந்தப் பட்டவர்கள் புரி ந்து கொண்டால் சரி!

- அபு சுபஹான்

Pin It