கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற முடியாதா என வெறி கொண்ட நாயாக அலைந்து கொண்டிருக்கும் பிஜேபி கும்பல் அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கின்றது. மற்ற மாநிலங்களில் செய்தது போல சாதிக் கலவரங்கள், மதக்கலவரங்கள் என எதையாவது தமிழ்நாட்டில் தூண்டிவிட்டு இங்கு ஒரு எம்.எல்.ஏ சீட்டாவது வாங்க முடியாத என தனது ரத்தம் தோய்ந்த நாக்கை தொங்கப் போட்டு பார்த்துக் கொண்டிருகின்றது. ஆனால் என்ன தான் தூண்டிவிட்டாலும் எரிகின்ற நெருப்புதான் எரியும் என்பது இந்தப் பார்ப்பன கும்பலுக்கும், அவனின் வைப்பாட்டி மகன்களுக்கும் (சூத்திரர்களுக்கும்) தெரிவதில்லை. கோவையில் கலவரம் செய்து பார்த்தார்கள், திருப்பூரில் கலவரம் செய்ய தூபம் போட்டார்கள், பழனியில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தொந்தி பார்ப்பானின் நலனுக்காக கலவரம் செய்து ஏழை விவசாயியை ஒழிக்கத் துணிந்தார்கள். தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களாகவே பிஜேபி கும்பல் தமிழ்நாட்டில் கலவர முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் பிஜேபி அடிவருடி ஆட்சியைப் பயன்படுத்திக்கொண்டு தனது பயங்கரவாத நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

h rajaசென்ற மாதம் 17 ஆம் தேதி கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக கோவை காவல்துறை மேட்டுப்பளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவனை கைதுசெய்து இருக்கின்றார்கள். இவன் விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பின் வடக்கு மாவட்ட அமைப்பாளராக இருந்துள்ளான். மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படித்துள்ள சரவணக்குமார் லண்டனில் பணியாற்றிவிட்டு, கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்புதான் தமிழகம் வந்துள்ளார். வந்தவர் ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்துக்கொண்டு இறை மறுப்பாளர்களுக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பொய்ப்பிரச்சாரம் செய்துவந்துள்ளான். சும்மா சொன்னால் எவனும் வரமாட்டான் என்று இலவசமாக யோகா சொல்லிக் கொடுக்கின்றோம் என்ற பெயரில் கோவையின் பல பகுதிகளில் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி அங்கு வருபவர்களிடம் மதவெறியூட்டும் பேச்சுக்களை பேசி உசுப்பேத்தி விட்டிருக்கின்றான். தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பிஜேபியை தமிழ்நாட்டு மக்கள் அம்மணமாக்கி ஓட ஓட விரட்டி அடிப்பதை சகிக்க முடியாத ஆர்.எஸ்.எஸ் –பிஜேபி கும்பல் சரவணக்குமார் மூலம் சதித்திட்டத்தை அரங்கேற்றத் திட்டம் தீட்டியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட சிபிஎம் தலைமை அலுவலகத்தின் மீது நம்பர் பிளேட் அகற்றப்பட்ட வண்டியில் வந்து அதிகாலை நேரம் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றிருக்கின்றார்கள். இதில் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் ஒரு பகுதி எரிந்ததுடன், அலுவலக ஜன்னல்களும் சேதம் அடைந்தது. பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு குறி தவறியதால் காரின் டீசல் டேங் வெடிக்காமல் போனாது. ஒருவேளை காரின் டீசல் டேங் வெடித்து இருந்தால் நிலைமை விபரீதமாகப் போயிருக்கும்.

இந்தச் சதித் திட்டம் தோல்வியில் முடிந்ததால் அடுத்து தனது செயல்திட்டத்தை எச்சிகலை ராஜா தலைமையில் பிஜேபி திட்டமிட்டிருக்கின்றது. அதன்படி இராமநாதபுரத்தில் பாஜகவின் நகரச் செயலாளராக இருக்கும் அஸ்வின் குமார் என்பவர் ஜூன் 22 ஆம் தேதி தாக்கப்பட்டிருக்கின்றார். உடனே எச்சிக்கலை ராஜா 'இது இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தான் செய்தது. அவர்கள் அஸ்வின்குமாரை தாக்கிவிட்டு நிதானமாக அருகில் இருந்த மசூதிக்குச் சென்று தொழுகை நடத்திச் சென்றுள்ளார்கள்' என தன்னுடைய பார்ப்பன நச்சு நாக்கால் புரளியைக் கிளப்பி விட்டிருக்கின்றான். இதன் தொடர்ச்சியாக அங்கிருந்த மதராசா பள்ளியின் மீது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதை வைத்து எப்படியாவது இராமநாதபுரத்தில் இந்து முஸ்லிம் கலவரத்தை நடத்திவிட வேண்டும் என திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் தனது ஓபிஎஸ் சப்போட்டர் ஐடி விங் மூலம் பல போலியான அயோக்கியத்தனமான அவதூறுகளைப் பரப்பியிருக்கின்றது. ஆனால் காவல்துறை விசாரணையில் அஸ்வின்குமாரைத் தாக்கியது அவரது உறவினரான புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துராமலிங்கமும், அவரது கூட்டாளிகளும் தான் எனத் தெரிய வந்திருக்கின்றது. இருவருக்கும் இடையில் இருந்த முன்பகையே இதற்குக் காரணமாக இருந்துள்ளது. ஆனால் அதற்குள் காவல்துறை இந்தக் காலிகளின் பேச்சை நம்பி ஜாபர்சாதிக் என்ற இஸ்லாமியரைக் கைது வேறு செய்திருக்கின்றார்கள்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் –பிஜேபி கும்பல் இருப்பது என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெரும் கேடு என்பது தொடர்ச்சியாக நடந்துவரும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இந்தக் காலிகளுக்குச் சூடு, சுரணை, மான வெட்கம் என எதுவும் கிடையாது. ஆட்சி கிடைக்கும் என்றால் கூட்டிக்கொடுக்கும் வேலையைக்கூட மனமகிழ்ச்சியோடு செய்யும் கும்பல்தான் இது. தமிழக காவல்துறை உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து இருந்தாலும், இன்னும் ஏன் கலவரத்தைத் தூண்ட பொய்ப்பிரச்சாரம் செய்த எச்சிகலை ராஜாவை கைது செய்யவில்லை என்பது மிகப் பெரிய கேள்வி. நடக்கும் அனைத்துக் கலவரங்களும் ஏதோ தன்னிச்சையாக நடைபெறும் கலவரங்கள் கிடையாது. அனைத்தும் நன்கு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கலவரமும் பிஜேபியின் மாநில தலைமைக்குத் தெரிந்தே நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஏன் என்றால் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் நடத்திய அனைத்துக் குண்டுவெடிப்புகளும் அதன் தலைமைக்குத் தெரிந்தே அதன் வழிகாட்டுதல் படிதான் நடந்து வந்துள்ளதை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம்.

ஆர்.எஸ்.எஸ் சில் உள்ள நபர்கள்தான் பிஜேபியில் உள்ளார்கள், பிஜேபியில் உள்ள நபர்கள்தான் ஆர்.எஸ்.எஸ் சில் உள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ் சாதிக் கலவரத்தையும் மதக்கலவரத்தையும் தூண்டும் அமைப்பு என்றால், பிஜேபி அதை வைத்து அரசியல் ரீதியாக பொறுக்கித் தின்னும் அமைப்பு. அதனால் சரவணக்குமாரை கைதுசெய்தது போல தமிழக காவல்துறை எந்த ஆதாரமும் இல்லாமல் இந்து முஸ்லிம் கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்த பார்ப்பன விஷ நாக்குப் பேர்வழி எச்சிக்கலை ராஜாவையும் இந்தக் கலவரத்துக்கு வழிகாட்டியாக இருந்த சூத்திரச்சி தமிழிசையையும் கைதுசெய்ய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு காவல்துறை நேர்மையாக இந்தச் சம்பவத்தில் நடந்துகொண்டது என சொல்லமுடியும்.

தமிழக மக்கள் உண்மையாகவே சமூக நல்லிணக்கம் இங்கு நிலவ வேண்டும் என விரும்பினால், இந்த ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். அந்த அமைப்புகளில் சூடு சுரணை இல்லாமல் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்ற பட்டத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு சேவை செய்துகொண்டு இருக்கும் தமிழினத் துரோகிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உழைப்பில் உடல் வளர்த்துக்கொண்டு அவர்களுக்கே துரோகம் இழைக்க நினைக்கும் இந்தப் பார்ப்பன அடிவருடிக் கட்சியில் இருப்பது இழிந்த கீழ்த்தரமான மனிதர்களின் செயல் என்பதை உணர வேண்டும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைகள் தான் இது போன்ற கீழ்த்தரமான வன்முறை செயல்களில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒரு அருவருப்பான ஜந்து போன்று இருக்கும் இந்தக் கும்பலை மானமுள்ள தமிழக மக்கள் கூடிய விரைவில் குப்பைத்தொட்டியில் வீசி எறியத்தான் போகின்றார்கள்.

- செ.கார்கி