இந்தியாவில் மனிதனின் சராசரி வாழ்வின் ஆயுள்காலமே 100. இப்பொழுதெல்லாம் அந்த விகிதம் குறைந்து கொண்டே இருக்கிறது.

முகம்மது அன்வர் அலி - இந்த முதியவரின் வயது 102. இவரிடம் போய் குடியுரிமை கேட்டு நாட்டை விட்டு வெளியேற்றப் போகிறார்களாம்.

Mohammed Anwar Aliஅவருடைய முகத்தைப் பாருங்கள்... பார்வையைப் பாருங்கள்... அதில் தெரிவது பயம் அல்ல, இந்தியாவின் அவமானம். இந்த முகம் உங்கள் தந்தையின் முகம்.

இந்தியாவில் சீனியர் சிட்டிஷன்களின் நிலைதான் இது. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்களெல்லாம் முந்திப் பிறந்தவர்களிடம் குடியுரிமை கேட்கிறார்கள்.

அவரை அப்படியே விட்டுவிட்டால் இந்தப் பூமியை விட்டே அவர் புலம் பெயர்ந்து விடுவார். ஆனால் இந்த வயதிலும் அவரை நாடு கடத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த ஆட்சிக்கு மதவெறியைத் தவிர வேறெதுவுமில்லை.

இந்துத்துவாவின் தீவிரவாதம் இவ்வளவு மனித நாகரீகமற்று இருக்கிறதா என்ன?

102 வருடங்களாய் நாட்டில் வாழ்ந்த ஒருவரிடம் நீ பக்கத்து நாட்டுக்காரன் என்று வெளியேற்றத் துடிப்பவன் தேசத் துரோகி.

102 வருடத்திற்கு முன்பு இந்தியாவில் உள்ள அஸ்ஸாமில் கம்ரூட் என்கிற மாவட்டத்தில் பிறந்தவர் முகம்மது அன்வர் அலி. பிரதமருக்கே படிப்புச் சான்றிதழைக் காட்ட முடியாத இந்தியாவில் சட்டத்தின் பாதுகாப்பில் இருந்த அவ்வளவு பெரிய ராணுவத் தகவலான, ரஃபேல் ஊழல் டாகுமெண்ட்களே நெருப்பில் எரிந்து காணாமல் போகும்போது,

பிறப்புச் சான்றிதழே பதிவு செய்யப்படாத அந்த நாட்களில் சுதந்திரமே கிடைக்காத, இந்தியாவின் எல்லைகள் பிரிக்கப்படுவதற்கு முன்பாகவே பிறந்தவரிடம் போய் குடியுரிமைச் சான்றிதழ் கேட்பதே இந்தியாவுக்கு அவமானம்.

நாங்கள் சவார்க்கர் வெள்ளைக்காரனின் பூட்ஸை நக்கிய சான்றிதழ்களை வேண்டுமானால் காட்டுகிறோம்.. ஆனால் பிறப்புச் சான்றிதழை ஒரு போதும் காட்டவே முடியாது.

WE BORN IN INDIA. WE WILL DIE IN INDIA.

- ரசிகவ் ஞானியார்

Pin It