அசத்திய மதுரை முஸ்லிம் இளைஞர்!

காவல்துறையினர் புலனாய்வு செய்ய முடியாமல் கைவிட்ட வழக்கை தனியொரு இளைஞன் துப்பறிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், குற்றவாளியையும் கண்டுபிடித்திருப்பது மதுரை மாவட்ட காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரி லிருந்து 8 கிலோ மீட்டர் தூரத் தில் அமைந்துள்ளது தும்பைப் பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த மீரா லப்பை ரெடிமேட் துணி வியாபாரம் செய்து வந்த வர்.

கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதியன்று காலை 8.30 மணிய ளவில் மேலூர் - திருச்சி சாலையை குறுக்காக கடந்தபோது வேக மாக வந்த கார் ஒன்று மீரா லப்பை மீது மோதி தூக்கி எறிந்து விட்டு பறந்தது.

சம்பவ இடத்திலேயே மீரா லப்பை பரிதாபமாக மரணத்தை தழுவினார். விபத்தைப் பார்த்த பாதசாரிகள் மீரா லப்பையை மோதிவிட்டுச் சென்றது டாடா இண்டிகா கார் என்று துப்பு தந்தனர். விபத்து நடந்த இடத் தில் உடைந்து கிடந்த இண்டி கேட்டரும் அதை உறுதி செய் தது.

எப்போதும் போல எளியவர் கள் விஷயத்தில் அலட்சியம் காட்டும் காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய வாக னத்தை கண்டுபிடிக்க முடிய வில்லை என்று கூறி மீரா லப்பை குடும்பத்தினரை அலைக்கழித்தனர்.

இதனால் மனம் குமுறிய மீரா லப்பையின் மகன் ராஜா முஹம் மது தன்னந்தனியே விபத்து ஏற் படுத்திய வாகனத்தை கண்டுபி டிக்கும் முயற்சியில் இறங்கி னார்.

மேலூரை அடுத்துள்ள விராலி மலை டோல்கேட்டில் சம்பவ தினத்தன்று கடந்து சென்றவாகனங்களின் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பச 69 ண 7035 எண் கொண்ட டாடா இண்டிகா கார் 9.24 மணிக்கு விராலி மலை டோல் கேட்டை கடந்து சென்றது கண்டு பிடிக்கப்பட்டது.

உடனடியாக மேலூர் காவல் நிலையம் சென்று சம்பந்தப் பட்ட வாகனத்தை டோல்கேட் பதிவுகளின் மூலம் கண்டுபிடித்த தாகக் கூறி விவரங்களை தெரி வித்தார். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடிக்க வேண் டிய காவல்துறையினர் தாங்கள் இருந்த இடத்தை விட்டு அசை யாமல் ராஜா முஹம்மதையே டோல்கேட்டிற்கு சென்று வாக னத்தின் போட்டோவை வாங்கி வருமாறு ஏவினர்.

டோல்கேட்டில் போட் டோவை கேட்டபோது, திருச்சி யில் உள்ள தேசிய நெடுஞ்சா லைத் துறை அலுவலகத்தில் இருந்து உத்தரவு தந்தால்தான் போட்டோவை தர முடியும் என்று கூறினர்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை அணுகிய போது காவல்துறையினர் போட்டோவைக் கேட்டு கடிதம் தந்தால் மட்டுமே போட் டோவை தர முடியும் என்று கூறி மீண்டும் போலீஸ் ஸ்டே ஷனுக்கே அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரிடம் கடி தம் பெற்று போட்டோவை வாங் கிக் கொண்டு மேலூர் காவல் நிலையம் சென்றபோது இதனை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. மேலூருக்கு முன்னால் உள்ள செக்போஸ்ட் டில் இந்தச் சாலையில் வாகனம் சென்றதாக பதிவாகி இருக்கி றதா? என்று விசாரித்து ஆதாரம் கொண்டு வா... என்று கூறினர்.

மேலூருக்கு முன்னால் உள்ள கந்தப்பட்டி செக்போஸ்ட்டில் உள்ள 9வது பூத்தில் சம்பவ தினத் தன்று டாடா இண்டிகாவின் எண் பதியப்பட்டிருப்பதை ஆதா ரத்துடன் கொண்டு சென்றார் ராஜா முஹம்மது.

அப்போதும் அசைந்து கொடுக்காத மேலூர் காவல்து றையினர் வாகன உரிமையாள ரின் விலாசம் கிடைக்கவில்லை என்று கூறி வாரக்கணக்கில் அலைய வைத்தனர்.

காவல்துறையினர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தபோதும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராத ராஜா முஹம்மது வாகன உரிமையாளரின் விலாசத் தைக் கண்டு பிடிக்கும் முயற்சி யில் இறங்கினார்.

தூத்துக்குடி வட்டார வாகனப் பதிவு அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.) முயற்சி செய்து பெரும் சிரமத்திற் கிடையே வாகன உரிமையாள ரின் விலாசத்தைக் கண்டு பிடித் தார். விலாசத்தைக் கண்டு பிடித் தது மட்டுமல்லாமல் நேரடியாக அந்த இடத்திற்கே சென்று டாடா இண்டிகா கார் அங்கே இருப்பதையும் உறுதி செய்தார்.

இவ்வளவு ஆதாரங்களையும் ராஜா முஹம்மது திரட்டித் தந்த பிறகு தங்களது தூக்கத்தை கலை த்த காவல்துறையினர் சம்பந்தப் பட்டவர்கள் மீது மேலூர் கோர் ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள னர்.

காவல்துறை உங்கள் நண்பன் என்றும், தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகரானது என்றும் பெருமை பீற்றிக் கொள்கிறது தமிழ்நாடு காவல்துறை... அந்த காவல்துறை புலனாய்வு செய்ய முடியாத வழக்கின் உண்மைகளை தனி மனிதனாக நின்று ராஜா முஹம் மது கண்டு பிடித்து ஒப்பற்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

மாவட்ட காவல்துறை உயரதி காரிகள் அலட்சியம் காட்டிய மேலூர் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபத்தில் காயமடைந்த வர்களுக்கு உதவுவது மனிதாபி மான நடவடிக்கை. ஆனால் விப த்தை நிகழ்த்தி விட்டு வாகன த்தை நிறுத்தாமல் ஓட்டிச் செல் லும் வாகன ஓட்டிகள் மீது கடு மையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

விபத்தில் மரணமடைபவர்களுக்கு எந்த விதத்திலும் பலன் தராமல் வாகன ஓட்டிகளுக்கு சாதகமான வகையில்தான் சட்டங்கள் உள்ளன. மத்திய மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் வாகன விபத்தில் பாதிக்கப்படுப வர்களுக்கு தகுந்த நீதி கிடைக் கும்.

- சாலியா மைந்தன், உதவி: ராஜா முஹம்மது

விபத்து குறித்து நம்மிடம் பேசிய ராஜா முஹம்மது, "பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களிடம் அரசுத்துறையினர் பெரும் அலட்சியம் காட்டுகின்றனர். போஸ்ட்மார் டம் ரிப்போர்ட்டில் எனது தந்தையின் வயது 70 என்று தவறுதலாக குறிப்பிட்டுள் ளனர்...'' என்று கூறியவர் மேலும், "3 மாதம் வேலை வெட்டியை விட்டு விட்டு பெரும் செலவு செய்து என் தந்தையின் மரணத்திற்கு காரணமானவன் குறித்த ஆதாரங்களைக் கண்டு பிடித்து தந்தேன். ஆனால் என் கண்ணெதிரே கோர்ட்டுக்கு வந்த 1 மணி நேரத்தில் ஜாமீன் வாங்கிக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் ஹாயாக வெளியே சென்று விட்ட னர்...'' என்று வேதனையுடன் சொன்னபோது நம் கண்ணில் கண்ணீர் திரண்டது.

Pin It