நமநமப்பிலிருந்து
ஒரு நம்பிக்கைக்குத் தாவ
அதன் இல்லாமை வேண்டும்
வடிவமற்ற சர்ப்பம் அது
செத்த பின்னும்
அடிக்கலாம் தகும்
பித்து செய்த மாயத்தில்
சித்து செய்யும் குழி அது
தாண்டி விட கவனம் தேவை
கனவு போல கயிறு திரிக்கும்
கட்டாந்தரையில்
கம்பளம் விரிக்கும்
மெல்லிய கோட்டில்
மலை பிளக்கும்
மறுபேச்சுக்கு முன்பே
தன் பேச்சை முழக்கும்
முகமற்ற முகமூடிக்கு
ஆள் அளவு கனம்
போராடி புயலாகி
வீசி எரிந்து விட்டேன்
புறமற்ற புல்வெளிகளில்
புரண்டு கிடக்க வாழ்த்துகள்
வாட்ஸப் வாசலில்
வந்து வந்து நிற்கும்
வரவேற்று விடக் கூடாது
கூறு கெட்ட இந்த மனம்

- கவிஜி

Pin It