பரமக்குடியில் தலித் மக்கள் மீது தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிக் சூடு பற்றி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.அருண்ராய் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஷ்குமார் ஆணையத்தின் முன் நேரில் நடந்த சம்பவங்களைக் கூறி, துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தினர். இவர்களின் பதிலில் ஆணையம் திருப்தியடையவில்லை என்றும், கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஆணையத்தின் முன் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், ஜான் பாண்டியனைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது என்றும், ஆணையத்தின் தலைவர் லதா பிரியகுமார் கூறியுள்ளார்.

Pin It