ஆன்மீகத் தலைவர்களாக உலா வந்து கொண்டிருக்கும் சிலர், கோடிக் கணக்கான பணத்தில் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்போது அரசியலுக்குள்ளும் மூக்கை நீட்டத் துடிக்கிறார்கள். அண்ணாஅசாரே ஊழல் ஒழிப்பு இயக்கத்தில், ராம்தேவ், ஸ்ரீரவிசங்கர் போன்றவர்கள் தொடக்கத்தில் தலை காட்டினர். இப்போது காணவில்லை. முற்றம் துறந்தவர்களாக ‘ஆன்மீக’த் துக்கு பாதை காட்டப் புறப்பட்ட இவர்கள், பல கோடி ரூபாய் முதலீட் டில் தொழில் நடத்துகிறார்கள். அறக்கட்டளை நடத்துகிறார்கள். பெரும் தொழிலதிபர்களைப்போல் விமானத்தில் பறக்கிறார்கள்.

இதேபோல் 1970 ஆம் ஆண்டு களில் இந்திராகாந்தி குருவாக திரேந்திர பிரம்மச்சாரி என்ற ‘யோகா’ கற்றத் தருபவர் இருந்தார்; அரசியல் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்தார். இந்திரா குடும்பத்தில் மருமகள் மேனகாவோடு பிரச்சினை வந்த போது தலையிட்டு, ‘சமாதானம்’ பேசும் எல்லைக்கு அவரது செல் வாக்கு இருந்தது. அதேபோல், வங்காளத்தைச் சார்ந்த ஆனந்தமாயி என்பவரும் இந்திராவின் குரு. சந்திராசாமி, 1991களில் பிரதமராக இருந்த நரசிம்மராவின் குரு. நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரிய சோதிடராக வும் அவர் விளங்கினார். டெல்லி ஜும்மா மஸ்ஜீத் தலைமை மத குருவான இமாம், இந்தியா முழுவ திலும் முஸ்லீம் வாக்காளர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தார். அவரது ஆதரவைத் தேடி அரசியல் தலைவர்கள் ஓடினார்கள். காஞ்சி சங்கராச்சாரியும் ஒரு காலத்தில் அரசியல் அதிகாரத்தோடு வலம் வந்தவர்தான். புட்டபர்த்தி சாய்பாபா வின் தலைமையகம் அரசியல் அதிகாரத்தின் மய்யமாக விளங்கியது. குடியரசு தலைவரிலிருந்து பிரதமர் வரை - புட்டபர்த்தி நோக்கி ஓடினார்கள்.

பழங்கால எகிப்து நாட்டின் அரசர்கள், கடவுளின் பிரதிநிதி களாகவே கருதப்பட்டனர். 1945 வரை சீனாவின் அரசர்களை, கடவுளின் புத்திரர்களாக வழிபட்டனர். ஜப் பானிலும் இதே நிலை தான். அந் நாட்டு மன்னர்கள் பெண் தேவதை யின் வழித் தோன்றல்களாக வணங்கப் பட்டனர். நேபாள அரசரும் விஷ்ணு வின் வாரிசாகவே கருதப்பட்டார்,. 2008 ஆம் ஆண்டில் தான், அங்கே மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

பிரான்ஸ் நாட்டை 72 ஆண்டு காலம் ஆட்சி செய்த 16 ஆம் லூயி மன்னர், தன்னை சூரியனின் புதல்வனாகக் கூறிக் கொண்டார். எனவே கடவுளின் ஆட்சியை எதிர்க்க எவருமே முன்வரவில்லை. ஆனால், கடவுளின் பெயரால் ஆட்சி நடத்தி யவர்கள் அனைவருமே மக்களைச் சுரண்டினார்கள். கொடுங்கோல் ஆட்சி தான் நடத்தினார்கள். 1993 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக் கழகத்தைச் சார்ந்த இரண்டு பொருளாதார நிபுணர்கள் (பிராட் டிலாங் மற்றும் ஆண்ட்ரி ஷீலிஃபர்) - இப்படி கடவுள் அவதாரங்களாக கூறிக் கொண்ட அரசர்கள் ஆட்சி யில், மக்கள் வளர்ச்சிப் பெற்றார்களா என்ற ஆய்வை நடத்தினர். “வெற்றி கரமான இந்த மன்னர்கள் ஆட்சியில் மக்களின் பொருளாதாரம் கடுமை யாக மோசமடைந்திருந்தது, இந்த ஆட்சிகள் கவலைக்குரியவைகளே தவிர, கொண்டாடக் கூடியவை அல்ல” என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

அய்ரோப்பாவில் கடவுளின் பெயரால் ஆட்சி செய்ய வந்த அரசர் களுக்கு 1700 ஆம் ஆண்டுகளிலேயே எதிர்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. மார்டின் லூதர் கிங், கிறிஸ்தவ பழமை வாதத்தை கேள்விக்குள்ளாக்கினார். நியூட்டனின் கண்டுபிடிப்புகள், உலகத் தோற்றம் பற்றிய மதவாதக் கருத்துகளை ஆட்டம் காண வைத்தன.

ஆனாலும், இந்தியாவில் பார்ப் பனர்கள் இன்னும் மதத்தின் ஆட்சிக் கனவில் மிதந்து கொண்டிருக் கிறார்கள். கடவுளின் நேரடி அவ தாரங்களாக தங்களைக் கூறுவதற்கு, இவர்களுக்கு துணிவில்லை என்றா லும், ‘ராமனை’, ‘விநாயகனை’, ‘கிருஷ்ணனை’ வைத்து அரசியல் நடத்துகிறார்கள். பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, தண்டனை எதுவும் பெறாமல், மீண்டும் ரதங்களில் ஏறி, ‘யாத்திரை’ வருகிறார்கள். உ.பி.யில் கோரக்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டி யிட்டு வெற்றிப் பெற்றுள்ள பா.ஜ.க. வைச் சார்ந்த யோகி ஆதித்தியநாத் என்பவர், தன்னை மதகுருவாகக் கூறிக் கொள்கிறார். தனது தந்தையிட மிருந்துதான் பெற்ற ‘ஆன்மீக’ பலத்தினால் தான் தனக்கு தேர்தலில் வெற்றி கிடைத்தது என்று கதை அளந்து கொண்டிருக்கிறார். ‘இந்து யுவவாகினி’ என்று தனியாக ஒரு ராணுவத்தையும் இவர் நடத்தி வரு கிறாராம். கோரக்பூரில் மதக்கல வரத்தை உருவாக்கி, அதை 6 மாவட் டங்களில் பரவச் செய்த இந்த மத வன்முறையாளர், அதற்காக சிறைத் தண்டனையைப் பெற்றவர். பெண் களுக்கு 33 சதவீதம் நாடாளு மன்றத் தில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று வெளிப்படையாகப் பேசி வரு கிறார். அதற்காக பா.ஜ.க. இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இனப்படுகொலைகளை நடத்தி முடித்த குஜராத முதல்வர் மோடி, அடுத்து பிரதமர் பதவிக்கு காய் நகர்த்துகிறார். ரோம் பற்றி எறிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல், குஜராத் பற்றி எரிந்தபோது வேடிக்கைப் பார்த்தவர் என்று உயர்நீதிமன்றத்தாலே குற்றம் சாட்டப்பட்டவர்தான் மோடி. கடவுள்களையும், கமண்டலங்களை யும், ரதங்களையும், திரிசூலங்களை யும் தூக்கிக் கொண்டு அரசியல் அதிகாரத்தைப் பிடிக்க ஓடிவரும் துணிச்சல் இந்த நவீன யுகத்திலும் இவர்களுக்கு எப்படி வருகிறது? பார்ப்பனிய சிந்தனைகள் சமூகத்தில் இருக்கும்வரை, தங்கள் சமூக ஒடுக்கு முறையைத் தடுத்துவிட முடியாது என்ற அசட்டுத் துணிச்சல்தானே!

- ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ (அக்.12) நாளேட்டில் அபிஷேக் பர்மன் எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

Pin It