#01
தனித்திருக்கையில்
தணிய மறுக்கும்
தவிப்பு.
#02
உருகிப்
பெருகும்
உள்ளொழுக்கு.
#03
மௌன மொழி
கிளப்பும்
பேரிரைச்சல்.
#04.
நோய்மை
கொள்ளும் தருணத்து
பிறவிப்பெருங்கடன்.
#05.
கண் எட்டும்
வரை அகப்படா
கானல் பெருந்திட்டு.
#06.
கங்கு
வளர்க்கும்
காற்று.
#07.
வருந்தி
வாங்கும்
வாதை.
#08.
அள்ளக்
குறையா
அட்சயப்பாத்திரம்.
#09.
கதிர்க் கொத்தி
காலஞ் சொல்லும்
கணிப்பானின் கைக்கிள்ளை.
#10.
ப்ரியம்
நிறைந்தொழுகும்
நினைவுத்தாழி.
- இசைமலர்