உனக்கான என்
வார்த்தைகள்
மொழி பெயர்த்தாலும்
மௌனமாகவே
இருந்து விடுகிறது......
என்னிலிருந்து
என்னையே பிரிக்கும்
யுக்தி தெரிந்தவன் நீ
மட்டுமாகவே
இருக்கிறாய்........
உனக்கு மட்டும்
புரிந்து விடுகிறது
என் தேவைகளின்
நீளமும் அவசியமும்
என்னவென
சில நேரங்களில்
புரியாமலும்.....
என்னை விட்டு நீ
விலகி நிற்பதும்
ஒருவித
நேசமாகவே இருக்கலாம்.....
என் மௌனம்
உடைக்க மலையை
தகர்க்கிறாய் - உன்
கண் அசைவில்
கரைவேன் இப்பதுமை
என தெரியாத
அப்பாவியாக......
பின்னொரு நாளில்
இன்னொரு
பிரபஞ்சத்திற்குள்
புரட்டிப் போடுவோம்
நம் நேசத்தையும்
முடிந்தால்.......
- ஆனந்தி ராமகிருஷ்ணன்
தொடர்புடைய படைப்புகள்
மௌன வார்த்தைகள்
- விவரங்கள்
- ஆனந்தி ராமகிருஷ்ணன்
- பிரிவு: கவிதைகள்
More articles by ஆனந்தி ராமகிருஷ்ணன்
- அமுத தாரணை (08 செப் 2026)
- உனக்காக... (08 ஜன 2025)
- எப்போதும் ஒன்று...! (02 மார் 2022)
- சொல் (18 செப் 2020)
- இரவின் மெல்லொலி! (13 ஜூலை 2020)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.