புடம் போட்டு வளர்க்கிறேன்

உன் மீதான வெறுப்பை
உன் மீதான கோபத்தீயை
உன் மீதான காழ்ப்புணர்வை

உன் மீதான வஞ்சத்தை
உன் மீதான ஆற்றாமையை
உன் மீதான விரோதத்தை

உன் மீதான பழியுணர்வை
உன் மீதான பற்றற்ற ப்ரியத்தை
உன் மீதான சினத்தை

உன் மீதான பரிகாசத்தை
உன் மீதான விஷமத்தை
உன் மீதான வன்மத்தை

கங்கு ஊதி
கனல் பெருக்கும்
வீராய்ப்பாய்...

அத்தனையும் வீண்
விரோதி கண்டும் கெக்கலிக்கிற
குழந்தையைப் போல.

- இசைமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.