கவிதைக்குள் ஒளித்து வைத்திருக்கும்
பிரியங்களையும்
மனதிற்குள் புரையோடிப் போயிருக்கும்
ஏக்கங்களையும்
மௌனத்தின் பாஷைகளில் வலிந்து பரவச் செய்கிறேன்
உடல்முழுதும்...
நீயே உயிரெனக் கொள்ளும் எனதிரவின் சாமத்தில்
எதைஎதையோ அசைபோட்டபடி
நிகழ்வதெனத் தெரியாது திரும்பும் நினைவருந்து
உனை ஆரத் தழுவிக்கொள்கிறேன்
பருவத்தின் பசியுணர்ந்த உன் தேகம்
அலையலையாய் உடல்முழுக்க உஷ்ணத்தை பாய்ச்சி
இறுக கட்டித்தழுவி
முத்தப்பூக்களை பரிசளிக்கிறது...
உன் பிடியிலிருந்து விலகிச்செல்லும் எனை
கீழே கிடத்தி என் மீது ஊஞ்சலாடுகிறாய்
மயங்கிச் சாய்கிறது எனக்கேயுரிய
பருவத்தின் சமிக்ஞைகள்
உடைகள் தானாய் அவிழ்ந்தோட
கையோடு கைபிடித்து காலோடு கால் இறுக்க
கட்டியணைக்கிறாய்
வெட்கக்கூட்டிற்குள்
உனதிருவிழியின் வெளிச்சம் நிறைய
அச்சம் கலந்த தடைகள் உடைகிறது என்னுள்…………
காமம் தலைக்கேற பெருமூச்சொன்றை உள்ளிழுத்துக் கொண்டு
உயிர்தளத்தோடு உறவாடி உறவாடி
உயிர்த்தேனை அள்ளி சுவைக்கிறாய்
பனித்துளி கீழிறங்க கலைகிறது
தேகத்தின் தீப்பிழம்பு
உறக்கத்தை தொலைத்த இரவுப்பொழுதுகளில்
எனைப் பார்த்து சிரிக்கிறது
நிர்வாணகோலத்தில் ஒற்றை நிலாவொன்று…
- வழக்கறிஞர் நீதிமலர்
உறக்கத்தை தொலைத்த இரவுப்பொழுதுகளில்
More articles by நீதிமலர்
- காதல் நோவு (09 மே 2025)
- நானமர்ந்த இரகசியக் கூடு (17 மே 2024)
- நேசப்பெருவெளி (05 மார் 2024)
- உச்சபட்ச வன்மங்கள் (22 ஜன 2024)
- மழையிரவு (14 ஜூன் 2023)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.