lovers handsஅண்மையில் தாம்பரம் இரயில் குடியிருப்புக்குச் செல்லும் வழியில் ஒரு கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டுத், தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளான் ஒருவன் என்ற செய்தி தொலைக்காட்சியில் வெளியானது.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். காதல் வரவேற்கத் தக்கது தான். ஆனால் அந்தப் பெண் சூழல் காரணமாகப் பேசுவதைத் தவிர்க்க நினைத்த போது அவளை, அவன் கொலை செய்கிறான்.

ஏன் பெண்கள் மட்டும் பாதிக்கப்படுகிறார்கள்?

அவர்கள் பெண்கள், ஆண்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டிய போகப்பொருள்கள் என்ற ஆணாதிக்கச் சிந்தனைதான் காரணம்.

இத்தகையப் பாடத்தை, சிந்தனையை ஆண்களின் மண்டையில் இச்சமூகம் திணிப்பதும், அதற்குள் சாதி ஒளிந்து கொண்டிருப்பதும் இன்னொரு காரணம்.

ஆணவக் கொலையானாலும், காதலனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பெண்தான் பெரும் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறாள்.

பெண்ணை யாரும் தாயாகவும், தங்கையாகவும், அக்காவாகவும், ஏன் கடவுளாகவும் கூட நினைக்க வேண்டாம்.

 அவளை ஒரு பெண்ணாக (மனுஷியாக) அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தோழமையாகப் பார்த்துப் பேசினாலே போதும், துன்பம்
தொலையும், இன்பம் கூடும், உள்ளம் தெளிவு பெறும். காதலில் இணைவதும், பிரிவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்ற உரிமையைக் காதலர்கள் உணர்ந்து கொண்டால், அங்கே கொலைக் கருவிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It