உன் ஞாபகக் குதிரையில்
பயணிக்கும் என்னிடம்
சில முத்தங்களைத்
தந்தனுப்புகிறாய்.

அவை வழி நெடுகிலும்
பூக்களென
ப்ரியங்களைத் தூவிச் செல்கின்றன

பருகக் கொடுத்த தேநீரின் இளஞ்சூடு
மனசுக்குள் பரவுகிறது

கண்களில் மின்னும் காதல் ஒளி
என் பாதையை இன்னும்
வெளிச்சக் காடாய் மாற்றுகிறது

உன் கையசைப்புகளில்
உறித்த மாதுளையென சிதறுகின்றன
கணங்கள்

ஆரத்தழுவி அணைத்தலில் தான் மூழ்கிப்போகிறேன்
தாய்மடி குழந்தையென

- சிவ.விஜயபாரதி

Pin It