அகல் விளக்கில்
ஊற்றிய நெய்
கொஞ்சம் கொஞ்சமாகத்
தீர்ந்து கொண்டிருக்கிறது!

வீடெங்கும்
வெளிச்சம் தந்த தீபம்
மெல்ல மெல்ல
மங்கலாகி முற்றிலும்
அணைந்து விட்டது!

விம்மி அழுதாலும்
ஊர்கூடித் தொழுதாலும்
காற்றில் கரைந்த தீபம் - இனி
யார் கண்களுக்கும்
தெரியப் போவதில்லை!

விளக்கில்
ஏற்றப்பட்ட தீபம்
நெய் தீரும் போது
அணைந்து போகும்
என்பதை மனம்தான்
ஏற்க மறுக்கின்றது!

- கு.சிதம்பரம், சென்னை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.