மதுக் கோப்பையில் எஞ்சியிருக்கும் 
துளி மதுவின்
தழும்பலை ஒத்திருந்தது
அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர்.
எந்த சந்தர்ப்பத்திலும்
தான் அழக்கூடாதென்பதில்
மிகவும் திடமாக இருந்தாள் எனினும்
அவளின் பிடிவாதத்தை தளர்த்த
எல்லா முயற்சிகளும்
நடந்தேறிக் கொண்டேதான் இருந்திருக்கிறது
யுகங்கள் பல.
இப்படியாக அவளின் கண்களில்
தேங்கி உறைந்த கண்ணீர்
சிறிய குத்துவாளாக உருமாற
அதைத் தன் தற்காப்பு கருதி
கண்களின் உரையில்
மீண்டும் சொருகிக்கொள்கிறாள்.
அந்த குறுகிய இடைவெளிக்குள்
அவளையும் அறியாமலேயே
சில கொலைகளும் நடந்தேறி இருக்கிறது
மிகவும் நேர்த்தியாக.
துளியும் அனுமதி இல்லாமல்
அவனின் ஆளுமையை பிரகடனப்படுத்தும்
கொடிய வன்முறைப் புணர்ச்சிக்குப் பிறகு
அவன் எழுதிக் கொண்டிருக்கும்
கவிதை முடியும்
ஒரு சில நொடிகள் முன்னரே
அவனும் ஒரு வேளை கொ!!!!!!!!!!!!?????

- பிரேம பிரபா

Pin It