இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ரஷ்யா ஏச்சரிக்கை

இரானின் அணு உலை மீது தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கின் அழி வுக்கே வழிவகுக்கும் என அமெரிக்காவுக் கும், இஸ்ரேலுக்கும் ரஷ்ய வெளியுறவு இணை அமைச்சர் செர்கி ரியாப்கோவ் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

இரான் அணு உலை மூலம் அணு குண்டுகள் தயாரிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் அணு சக்தியை மின்சார உற்பத்தி போன்ற ஆக்கப் பணிக ளுக்கு மட்டுமே பயன்படுத்துவ தாக இரான் கூறுகிறது.

இப்பிரச்சினை தொடர்பாக, சர் வதேச அணு சக்தி ஏஜன்சியினர் பல்வேறு வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவின் தூண்டுதலால் இரான் மீது பல்வேறு பொருளா தாரத் தடைகள் விதிக்கப்பட்டுள் ளன.

இரான் கடந்த சில மாதங்களில் அணு சக்திப் பொருட்களை அதி கம் பயன்படுத்தி வருவதாகக் கூறி ராணுவ நடவடிக்கை மூலம் இரான் அணு உலைகளை அழிப்போம் என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

இந்தப் பின்னணியில், இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடாது என்று ரஷியா கடும் எச்ச ரிக்கை விடுத்துள்ளது முக்கியத்து வம் வாய்ந்ததாகும்.

இரான் அணு குண்டு தயாரிப்ப தாகத் தெரியவில்லை. அங்கு அணு சக்திப் பொருட்கள் ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட வில்லை என்பதை சர்வதேச அணு முகாமை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆதலால் இந்த அணு உலை பிரச்சினைக்காக இரான் மீது இஸ்ரேல் மற்றும் வேறு நாடுகள் தாக்குதல் எதையும் நடத்தக் கூடாது.

ராணுவ நடவடிக்கை விவேக மாக இருக்காது என எச்சரிக்கி றோம். மீறித் தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்குப் பகுதியில் அது பேரழிவை ஏற்படுத்தும். அந்தப் பகுதியின் நிலைத்த தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன் அப்பகுதியின் பாதுகாப்பு, பொரு ளாதாரம் போன்றவை கடுமையா கப் பாதிக்கப்படும் என்று அமைச் சர் செர்கி ரியாப்கோவ் கூறியுள் ளார்.

ரஷ்யா இதற்கு முன்பும் பல முறை இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தாலும் இம்முறை விடப்பட்ட எச்சரிக்கை இஸ்ரே லின் தாக்குதல் திட்டம் கிட்டத் தட்ட உறுதியானதையே குறிக்கி றது. ஐக்கியநாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் உள்ள நாடுக ளுள் ஒன்றான ரஷ்யாவின் எச்ச ரிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Pin It