முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டி தனது அறிக்கையை 2006 நவம்பர் 17ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப் பித்தது.

இந்த அறிக்கையில், முஸ்லிம்களின் பொருளாதார சூழல், இட வசதி, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவை மிகமோசமான அளவில் இருப் பதாக குறிப்பிட்டு, முஸ்லிம் சமூகத்தின் வாழ்நி லையை மேம்படுத்த பல பரிந்துரைகளும் செய் யப்பட்டிருந்தன.

இந்த அறிக்கையில் நீதிபதி சச்சார் குழு பரிந் துரை செய்திருந்த முக்கிய அம்சங்களில் ஒன்று... முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி களில் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பது!

பிரதமரிடத்தில் இந்த சச்சார் கமிட்டி அறிக்கை சமர்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த பின்பும் சச்சார் கமிட்டியின் முக்கிய பல பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத் முன்வரவில்லை என்றா லும், அதிலுள்ள சிலவற்றை பிரதமரின் 15 அம்சத் திட்டத்தின் மூலம் அமல்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த 15 அம்சத் திட்டத்தின் மூலம், காவல் பணிக்கான சேர்க்கையின்போது, முஸ்லிம் சமூகத் திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி களில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ரேங்க் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த உத்தரவை வெகுசில மாநி லங்களே பின்பற்றி வருகின்றன. நமது அண்டை மாநிலமான ஆந்திர அரசு கூட மத்திய அரசின் இந்த உத்தரவை அமல்படுத்தத் தொடங்கியிருப் பதோடு, கடந்த வாரம் இதற்கென அதன் தலை மைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட் டத்தை நடத்தி அனைத்து துறைகளிலும் முஸ்லிம் களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண் டும் என்றும் கண்டிப்புடன் கூறியிருக்கிறது.

ஆனால், மத்திய அரசின் இந்த உத்தரவை ஏனைய மாநிலங்களைப் போலவே, தமிழக அரசும் அலட்சியப்படுத்தி வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் காவல்து றையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. இதை பல்வேறு தேசியப் புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2004ம் ஆண்டு தேசிய குற்றவியல் பதிவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கை, தமிழ கத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 5.56 சதவீதம் இருக்கிறார்கள் என்றும் இதில் காவல்துறையில் 0.11 சதவீதம்தான் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என் றும் கூறுகிறது. இது வேறு எந்த மாநிலத்தை விட வும் மிக மிக குறைந்த அளவாகும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் கூடுதல் அக்கறை உண்டு. அவர் இந்த முறை முதல்வராக பதவியேற்றபோது முதலாவதாக தமிழக மக்களுக்கு அளித்த செய்தி - சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்பதுதான்.

வகுப்புப் பதட்டம், சாதிக் கலவரம், இனமோ தல்கள் இல்லாத அமைதியான தமிழகத்தை கட்ட மைக்கும் எண்ணம் கொண்ட முதல்வர் சச்சார் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கியிருக்கும் அறிவுறுத்தலான - காவல் பணிகளில் முஸ்லிம் சமூகத்திற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை பகுதி களில் அந்த சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி களை நியமித்தல் என்பதை அலட்சியப்படுத்துவது நியாயமற்ற செயல்.

வகுப்பு கலவரங்கள், இன மோதல்களின்போது, காவல்துறையினர் பக்கச் சார்புடன் செயல்படும் நிலை இருப்பதாக சச்சார் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. உண்மை அறியும் குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட இக்கருத்தை வலியுறுத் தியே வருகின்றனர்.

அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் காவல் துறையில் போதுமான அளவிற்கு இருந்தால் வகுப் புப் பதட்டங்களும், இன வன்முறைகளும் மட்டுப்ப டுத்தப்படும். இந்த வகையில்தான் முஸ்லிம் பெரும் பான்மை பகுதிகளில் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறது மத் திய அரசு.

தமிழகத்திலிருந்து, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களின் எண் ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மட்டுமே சிறுபான்மை மக்கள் மீதான முதல்வர் ஜெயலலிதாவின் அக்க றையை வெளிப்படுத்துவதாகாது. சிறுபான்மையி னர் நலன்கள் மீதும், உரிமைகள் மீதும் முதல்வரின் அக்கறை வெளிப்பட வேண்டும்.

தமிழகத்தின் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் கள் கூட சச்சார் கமிட்டி பரிந்துரையின் அடிப்ப டையிலான மத்திய அரசின் உத்தரவை அமல்படுத் துமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைக்க தவறியிருக்கின்றனர் என்பதை அவர்கள் மீது இத்த ருணத்தில் விமர்சனமாகவே வைக்க வேண்டியுள் ளது.

தமிழகத்தை முன் மாதிரி மாநிலமாக மாற்று வேன் என சபதமெடுத்திருக்கிறார் நமது முதல்வர். அந்த முன் மாதிரி மாநிலம் என்பது அனைத்து இன, மொழி, சமூக மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்ட, பாரபட்சமற்ற சமத்துவ வாழ்வு கொண்ட மாநிலமாக வெளிப்பட வேண்டும்.

உண்மையில் முஸ்லிம்களின் நலன்களைப் பேணுவதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட ஆந்திரப் பிரதேசம் முன்னணியில் இருப்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு தர வேண்டியுள் ளது.

தமிழக முஸ்லிம்களுக்கு, இட ஒதுக்கீட்டை அதி கரித்துத் தர வேண்டும்; கட்டாயத் திருமணச் சட் டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும்; உருது பள்ளிக்கூடங்களில் பல வருடங்களாக நிரப்பப்ப டாத பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்; சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் கைதிகளை விடு விக்க வேண்டும் என பல கோரிக்கைகள் உண்டு.

இந்த கோரிக்கைகள் குறித்து அரசுக்கும் தெரி யும். அதே சமயம், சச்சார் கமிட்டி பரிந்துரை அடிப்படையிலான மத்திய அரசின் உத்தரவு என் பதை மாநில அரசுகள் தாமாகவே முன் வந்து அமல்படுத்த வேண்டிய விஷயம்.

எனவே, இதில் தமிழக அரசு அலட்சியம் காட் டாமல் உயர் அதிகாரிகள் மட்டத்திலான ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டி, உடனடியாக மத்திய அர சின் உத்தரவை அமல்படுத்துவது குறித்து தீவிர மாக சிந்திக்க வேண்டும் என தமிழக முதல்வரின் பார்வைக்கு இந்த தலையங்கத்தின் வாயிலாக கோரிக்கை வைக்கிறோம்.

Pin It