மத்திய அரசின் தகவல் ஒளி-ஒலி பரப்புத்துறையின் கீழ் தூர்தர்ஷன் தொலைக்காட்சியும், ஆல் இந்தியா ரேடியோவும் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது.

முழுக்க முழுக்க மத்திய அரசின் முழு செலவில் செயல்படும் இந்நிறுவனங்களில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ பணியாற்றும் ஊழியர்களுக்கு கையும் - பையும் நிறையும் வகையில் மத்திய அரசால் சம்பளம் வழங்கப்படுகிறது.

அரசுத்துறை நிறுவனமான சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் செய்திப் பிரிவில் பணியாற்றும் குலோத்துங்கன் என்பவர் வாங்கும் சம்பளம் போதாதென்று தினந்தோறும் "கிம்பள மாக' பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என ஆல் இந்தியா ரேடியோ வட்டாரத்தில் சலச லப்பு கேட்கிறது.

தனியார் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள், கேமரா மேன்கள் சிலருக்கு நிகழ்ச்சி நடத்துனர்கள் வழங்கும் அன்பளிப்பு (கவர்) போல தனக்கு மூன்று மடங்கு தந்தால்தான் "ஆல் இந்தியா ரேடியோவில்' செய்தி வெளியாகும் என மிரட்டும் வகையில் பேசி வருகிறாராம் குலோத்துங்கன்.

கிம்பளம் வாங்கும் குலோத்துங்கன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வியை ரேடியோ வட்டாரத்திலேயே எழுப்புகிறார்கள்.

மத்திய அரசு நிறுவனத்தின் பொறுப்பான செய்தித்துறையில் பணியாற்றி பல ஆயிரம் மாத சம்பளம் வாங்கும் ஊழியர் ஒருவர், செய்திகளை விற்பனை செய்வதுபோல கட்டணம் வசூ லிப்பது எந்த வகையில் நியாயம்?

அவர் மீது ஆல் இந்தியா ரேடியோ டைரக்டர் விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்! இல்லாவிட்டால் ஆல் இந்தியா ரேடியோவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்கிறார்கள். இவர் மீது எரிச்சலில் இருப்பவர்கள்.

Pin It