மண்ணடி கூட்டத்தில் முஸ்லிம்கள் கோரிக்கை

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று சிறைச்சாலைகளில் பல்லாண்டுகளாக சிறைபட்டுள்ள கைதிகளை விடுதலை செய்வது தமிழக அரசின் வாடிக்கையான நடவடிக்கை.

பல்லாண்டுகளாக தமிழக சிறைச்சாலைகளில் வாடி வரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

இதனை வலியுறுத்தி சென்னை மண்ணடி தம்புச் செட்டி தெரு வில் கடந்த 31-08-2012 வெள்ளிக் கிழமையன்று இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக சிறைவா சிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது.

இன அழிப்புக்கு எதிரான இஸ் லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவர் உமர் கய்யாம் இக்கூட் டத்திற்கு தலைமை தாங்கினார்.

சகோதரி ஆயிஷா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் தெஹ்லான் பாகவி, தமுமுக நிறுவனர் குணங் குடி ஹனீபா, கொங்கு இளைஞர் பேரவை சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, இந்திய தவ்ஹீத் ஜமா அத் தலைவர் எஸ்.எம். பாக்கர் ஆகியோர் உரையாற்றினர்.

இப் பொதுக் கூட்டத்தில் பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தின் தேசிய தலைவர் எஸ்.எம். பாக்கர், “சிறைச்சாலைக்குப் போகாமல், சிறைச்சாலையைப் பார்க்காமல் யாரும் இங்கே வர வில்லை. இங்கே அமர்ந்திருப்பவர் கள் எல்லோருமே சிறையைப் பார்த்தவர்கள்தான். சிறைச்சாலை தான் பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. சிறைச்சாலைகளில் தான் பல புரட்சிகளுக்கு வித்திடப் பட்டிருக்கிறது.

எந்த சமுதாயம் அடக்கியாளப் படுகிறதோ அந்த சமுதாயம் வீறு கொண்டெழுந்து நாட்டை ஆண்ட வரலாறுகள் இருக்கின் றன. இன்ஷா அல்லாஹ் நாங்க ளும் ஆளுவோம். ஏற்கெனவே 800 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவர்கள் நாங்கள்.

நரசிம்மராவ் என்ற அயோக்கி யனால்தான் 1992ல் முதல் இந்த சமுதாயத்திற்கு கேடு விளைவிக் கப்பட்டது. அது வரையில் சிறையை பார்க்கவில்லை. பாபர் பள்ளிவாசலை பாவிகள் உடைத் தெறிந்தார்கள். அதன் பிறகுதான் சமுதாயம் தட்டி எழுப்பப்பட் டது. வீறு கொண்டு எழுந்திருக்கி றது.

பா.ஜ.க.காரன் ஆட்சியில் இருந் தபோது மட்டும்தான் இந்தச் சமுதாயத்திற்கு துரோகம் இழைக் கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நாற்காலியில் அமர்ந்த காலத்திலும் இந்தச் சமு தாயத்திற்கு எதிராக சதித் திட்டங் கள் தீட்டப்பட்டு அரங்கேற்றப் பட்டிருக்கின்றன.

குஜராத் படுகொலைக்காக 27 வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கிற்கு நேற்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு இன்றைய தினம் தண்டனைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாயா கோத்னானி என்ற முன் னாள் பெண் அமைச்சர் நரோடா பாட்டியா கிராமத்தில் முஸ்லிம்க ளுக்கு எதிராக கலவரத்தை தூண்டி 97 முஸ்லிம்களை கருவ றுத்தார்.

அவருக்கு 28 ஆண்டு காலம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டி ருக்கிறது. இந்தக் கலவரக்காரர்கள் எல்லாம் ஜாமீனில் வெளியே வந் துதான் வழக்குகளை நடத்தினார் கள். எங்களுடைய 168 பேரும் சிறைச் சாலையில் இருந்து கொண்டுதான் வழக்குகளை நடத் தினார்கள். எங்களுடைய சகோத ரர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட் டதா? அப்துல் ரஹீமுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதா? ஹனீபாவு க்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதா?

ஜாமீன் வழங்கப்படவில்லை. ஏன் முஸ்லிம்கள் என்றால் பார பட்சம். எங்களைப் பார்த்து தீவிர வாதிகள் என்று சொல்கிறீர்களே? தீவிரவாதம் என்பது எங்களுக்குத் தெரியாது.

மனித நேயத்தை உலகத்திற்கு கற்றுக் கொடுத்த மார்க்கம் இஸ்லாம். மனிதனை மனிதனாக வாழச் சொல்கிற மார்க்கம் இஸ் லாம். சாதியின் பெயரால் ஏற்றத் தாழ்வுகள் கூடாது என்று சொல் லுகிற மார்க்கம் இஸ்லாம்.

தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன்;

தொடையிலிருந்து பிறந்தவன் சத்திரியன்;

வயிற்றிலிருந்து பிறந்தவன் வைசியன்;

காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன்;

இதில் எதுவும் இடம் கிடைக் காமல் பிறந்தவன் பஞ்சமன் என்று பேதம் கற்பிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நீங்கள் அத்தனை பேரும் ஒரு தாய் தந்தையின் வயிற்றில் பிறந்தவர்கள் என்று சமத்துவம் சொன்ன மார்க்கம் இஸ் லாம். அத்தனை பேரும் இங்கே வந்து விடுவார்களோ என்ற பயத் தில்தானே இத்தனை தாக்குதல் கள்.

இவர்கள் எல்லாம் இஸ்லாத் திற்கு சென்று விட்டால், சாதீயம் அழிந்து விட்டால், இன மோதல் அழிந்து விட்டால், மொழி பேதம் அழிந்து விட்டால், அப்ப டிப்பட்ட நாடு அமைந்து விட் டால் தங்களுக்கு அங்கே இடமி ருக்காது என்ற பயத்தில் இத் தனை கலவரங்கள். அத்தனை அநீதிகளும் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளன.

முஸ்லிம்கள் ஓரிறையை பின்பற்றுவதால்தானே இத்தனை அநீதிகளும் நிகழ்த்தப்படுகின்றன.

கலிமாலிவை சொன்ன மக்களாக இருக்கின்ற காரணத்தால் பர்மாவில் கொல்லப்படுகிறார் கள். அசாமில் கொல்லப்படுகிறார்கள்.

தமிழக சிறைச்சாலைகளில் வாடுகிறார்களே நம்முடைய சகோதரர்கள், தங்கள் பிரச்சினை க்காகவா அவர்கள் சிறை சென் றார்கள்? இந்த சமுதாயத்திற்கு கண்ணியம் வேண்டும்; இந்த சமு தாயம் அழித்தொழிக்கப்படுகி றது; இந்த சமுதாயத்திற்கு அநீதி இழைப்ப வர்களுக்கு எதிராக போராடிய காரணத்தால்தான் தங்கள் வாழ்வை தியாகம் செய்தி ருக்கிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுப்பது உங்கள் மீது கடமை இல்லையா? நாம் செய்ய வேண்டுமா இல்லையா?

எங்களுக்கு தீவிரவாதி என்று முதல் பட்டத்தை சட்டசபையில் சூட்டியதே கருணாநிதிதானே? ஆர்.எஸ்.எஸ்.காரன் சொல்ல வில்லை. பா.ஜ.க.காரன் சொல்ல வில்லை. சிவசேனாகாரன் சொல் லவில்லை. முதலில் சொன்னவர் கருணாநிதிதான்.

சிறைச்சாலைக்கு இத்தனை பேர்கள் சென்றார்களே... யாரு டைய ஆட்சியில்? 1996ல் கருணா நிதி ஆட்சியில் அமர்ந்தபோது பாலாறும் தேனாறும் ஓடும். முஸ் லிம்களுக்கு சுபிட்சம் ஏற்படும் என்றல்லவா நினைத்தோம்.

1996ல் இருந்து 2001 வரை நடந்த கருணாநிதி ஆட்சியில் முஸ்லிம்கள் மீது எத்தனை வழக்குகள்; எத்தனை சிறைகள்? நானே மூன்று முறை சிறை சென் றேன்.

ஆகஸ்டு மாதம் 15ம் தேதி சுதந் திர தினத்தன்று சுதந்திரமாய் என்னை கைது செய்தார்கள். என் னுடைய சுதந்திரம் பறிபோனது. என்னை தடாவில் கைது செய் தார்கள். மூன்று நாட்கள் கழித்து என்னை வெளியில் விட்டார்கள். பிறகு எனக்கும் இந்த வழக்கிற் கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னார்கள்! எனக்கு தீவிரவாதி என்று பெயர் சூட்டி னார்களே... இப்போது யார் பதில் சொல்வார்கள்?

இதோ இந்த அப்துல் ரஹீ மும், ஹனீபாவும் பதினான்கு வரு டங்கள் சிறையில் இருந்து விட்டு குற்றமற்றவர்கள் என்று விடுத லையாகி வந்திருக்கிறார்களே... இவர்கள் இழந்த பதினான்கு வரு டங்களை யார் திருப்பித் தரு வார்கள்?

இந்தக் காவல்துறை தருமா? உளவுத்துறை தருமா? நீதிமன்றம் தருமா? இந்த அரசு தருமா? யார் தருவார்கள்; யாரால் தர முடியும்?

168 முஸ்லிம்கள் மீது நடத்தப் பட்ட வழக்கில் தீர்ப்பு எழுதிய நீதிபதி சொல்கிறார்... "இது திட்ட மிட்ட சதியல்ல. வெளிநாட்டு சதி யும் அல்ல. அந்த மக்கள் உணர்ச் சிவசப்பட்டு செய்தது' என்று!

உணர்ச்சிவசப்பட்டு செய் தவை அனைத்தும் மன்னிக்கப் பட வேண்டியவை. சிறையி லேயே பதினான்கு ஆண்டுகள், பதினைந்து ஆண்டுகள் கடந்துள் ளது.

மேலப்பாளையம் புகாரி சிறை க்கு போனபோது அவருடைய வயது 17. இப்போது அவருக்கு 34 வயது. அவர் சிறையில் இருக் கின்றபோதே அவரது தந்தை இறந்து விட்டார். தாயாரும் இறந்து விட்டார். எனது சொந் தங்களே நீங்கள்தான் என்று சொல்கிறார் புஹாரி.

இப்படி பல சகோதரர்களின் சோகங்களை சொல்லிக் கொண்டே போகலாம். பாஷா பாய் உருக்குலைந்து போய் இருக் கிறார். அவருக்கு பரோல் கிடைக் கவில்லை. கேட்டால், வெளியே வந்தால் அவருக்கு பாதுகாப்பி ல்லை என்கிறார்கள்! முதலில் அவர் வெளியே வந்தால் மற்றவர் களுக்கு பாதுகாப்பில்லை என்று சொன்னார்கள். இப்போது மாற் றிச் சொல்கிறார்கள். என்ன அநி யாயம் இது?

இந்த சோகங்களை ஜெயல லிதா புரிந்து கொண்டால் நம்மு டைய கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் சிறைத் தண்டனை என்றால் என் னவென்று அவருக்குத் தெரியும். சிறைச்சாலை தெரியும். கொசுக் கடி தெரியும்.

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று அந்த சகோதரர் களை விடுதலை செய்யுங்கள். விடுதலை செய்வீர்கள் என்று நம் புகிறோம். அல்லாஹ் உங்களை உத்தரவிட வைப்பான்!

மதுரையில் லீலாவதியை சதி செய்து கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விட்டு 7 ஆண்டு தண்டனை முடிந்த நிலை யில் விடுதலை தரப்பட்டதே... எங்கள் மக்கள் சதி செய்ய வில்லை. அவர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். இல்லையேல் உணர வைப் போம்...” என உணர்ச்சி பொங்க முழக்கமிட்டார் எஸ்.எம். பாக்கர்.

முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வரு வது தமிழக முஸ்லிம் மக்கள் மத் தியில் பெரும் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது தமிழக முதல்வர் ஜெயல லிதா முஸ்லிம்களின் சகோதரி யாக இருப்பேன் என்று பேசியது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்பை தோற்று வித்துள்ளதை மறுக்க முடியாது.

அதனை தனக்கு சாதகமாக்கி சிறைவாசிகளை விடுதலை செய்து பாராளுமன்றத் தேர்த லில் முஸ்லிம் வாக்குகளை அறு வடை செய்வார் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத் தாக உள்ளது. இதை உண்மைப்ப டுத்துவாரா ஜெயலலிதா?

- அபு சுபஹான்

Pin It