சேலம் பழைய பேருந்து நிலையத்தை ஒட்டி படி திருச்சி மெய்ன் ரோட்டில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் அந்த காலி நிலம், ஒரு புறம் நரிக்குறவர்களின் கூடாரங்க ளாலும், மறுபுறம் நான்கு சக் கர வாகனங்களின் தற்காலிக பார்க்கிங் ஏரியாவாகவும் மாற் றப்பட்டு, அவ்வழியே வரு வோர் செல்வோர் பலரது கவ னத்தையும் ஈர்க்கத் தவறுவதி ல்லை. அதிலும் அவ்வழியே கடக்கும் முஸ்லிம்களின் நெஞ்சில் ஏக்கத்தை பன்ம டங்காக்கும் அந்த நிலம், முஸ் லிம்களின் வக்ஃபு சொத்து ஆகும்.

மேற்படி நிலமானது காஜி இனாம் வகையில் முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அரசு குறிப் புகளில் முஸ்லிம் பரியல் கிரௌ ண்ட் என்று அழைக்கப்படும் அந நிலத்தில் சுமார் நாற்பது வருடங்க ளுக்கும் மேலாக அங்கு இருக்கும் ஒரு சமாதியை முஸ்லிம்கள் பிஷ் தர் ஷா வலி தர்கா என்று கொண் டாடி வர, அந்நிலத்தை ஆக்கிரமித்த அப்பகுதியில் இருக்கும் ஒரு சிலர் அந்த சமாதியில் அடங்கியிருப்பது எங்களின் புலிக்குத்தி வீரன் என்று சொல்லிக்கொண்டு பிரச்சினையை வளர்த்து விட்டனர்.

இதனால் இன்னமும் அந்நிலம் முஸ்லிம்களின் கைக்கு வராத நிலையில் இருப்பதும் நமது விசார ணையில் தெரிய வந்தது.

மேற்படி நிலத்தின் நிலை இவ் வாறிருக்க கடந்த மாதம் சேலம் மாநகராட்சி துப்புரவு வாகனங்கள் வக்ப் நிலத்தில் நுழைந்து நிலத்தை சீர்படுத்தும் பணியை செய்யத் துவங்கின. இச்செய்தி சேலத்தில் இருக்கும் இஸ்லாமிய அமைப்பினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தவே சிலர் துப்புரவு பணி செய்து கொண்டு இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதனால் அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது!

இந்நிலையில் மேற்கண்ட முஸ்லிம்களின் சொத்தான வக்ஃபு நிலம் ஏன் இன்னமும் பராமரிப் பின்றி உள்ளது? அந்த நிலத்தை வக்ப் சொத்தாக கையகப்படுத்த முடியாமல் இருப்பதற்கான சட்ட ரீதியான பிரச்சினைதான் என்ன? பல வருடங்களாக கேட்பாரற்று கிடந்த அந்நிலத்தில் சேலம் மாநக ராட்சி வாகனங்கள் நுழைந்தது ஏன்? என்பது போன்ற கேள்விக ளுடன் மேற்படி நிலத்தின் பராம ரிப்பு பொறுப்புதாரரான சேலம் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி நாசர் கான் (எ) அமானைச் சந்தித் தோம்.

"நீங்கள் கேட்கின்ற அந்த நிலம் பல வழக்குகளை சந்தித்து இன் றைக்கு வக்ஃபு சொத்தாக உச்ச நீதி மன்றம் அறிவித்துள்ளது! இது தொடர்பாக பல வழக்குகள் நடத்தி அதை வெற்றிகரமாக நமது சமுதா யத்திற்கு மீட்டு கொடுத்திருக்கி றேன். தற்போது பிரச்சினை என்னவெ னில் அந்த நிலத்தின் மூன்றில் இரு பகுதி தான் நமக்கு சார்பாக நீதி மன்றத்தில் வென்றிருக்கிறோம். மீதி ஒரு பகுதி நகர வளர்ச்சியின் கார ணமாக தனியே பிரிந்து உள்ளது. (மொத்த நிலத்தின் நடுவே திருச்சி மெய்ன் ரோடு வருவதால்) மூன் றில் இரு பகுதி கிழக்கிலும், ஒரு பகுதி மேற்கிலும் உள்ளது.

மேற்கில் உள்ள பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் மேல் முறையீடு செய்துள்ளதால் நமக்கு சொந்தமான நிலத்தில் நாம் சென்றா லும் எதிர்தரப்பினர் ஆட்சேபிக்கி றார்கள். இதுதான் தற்போதய நிலை. இன்ஷா அல்லாஹ் மீத முள்ள பகுதியும் வென்று விடு வோம்...'' என்று நம்பிக்கையுடன் சொன்னவரிடம்,

நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டது என்கிறீர்கள். அப்போதே ஏன் அந்நிலத்தை பாதுகாக்க வில்லை..? என்று கேள்வி எழுப் பினோம்.

"நானும் அவ்வாறுதான் நினைத்து தீர்ப்பு வந்த நிலையில் அடுத்த ஜும்மா தினத்தில் தொழுகை முடிந்த கையோடு ஜமாத்தை அழைத்துக் கொண்டு சென்று அந்த நிலத்தில் பாத்தியா ஓதி துஆ செய்யலாம் என்று சென்றோம். ஆனால் எதிர் தரப்பா ரும் எதிர்ப்பு தெரிவித்து அணி திரண்டு வரவே சூழ்நிலை சரியில் லாத காரணத்தால் மேற்கொண்டு நாம் ஏதும் செய்யவில்லை...'' என்றார் பொறு மையாக.

முஸ்லிம்களின் நிலத்தை மாநகராட்சி பார்க்கிங் ஏரியாவாக பயன்படுத்துவது எப்படி? என்ற கேள்விக்கு..

"தற்போது சேலம் பழைய பஸ் நிலையத்தில் அரசு பொருட் காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலை யில் சேலம் மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் சிலர் என்னி டம் வந்து பழைய பேருந்து நிலை யத்தை ஒட்டி உள்ள நமது ஜாமியா மஸ்ஜித் நிலத்தை சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி கொள்ள அனு மதிக்க வேண்டும் என்று கேட்ட னர். ஆனால் நான் உடனே சம்ம திக்கவில்லை.

தாங்கள் எதுவாக இருப்பினும் எழுத்து பூர்வமாக கேளுங்கள்; நான் நிர்வாகத்தில் வைத்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பிவிட்டேன். அதைப் போலவே அவர்களும் சேலம் மாந கராட்சி மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி பழனிச்சாமி மூலமாக, சேலம் ஜாமியா மஸ்ஜித் வக்ஃபு சொத்தான தங்கள் பராமரிப்பின் கீழ் உள்ள நிலத்தை மாநகராட் சிக்கு சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பினர். நானும் அதற்கு சம்மதித்து அனு மதி அளித்தேன். என்னுடைய நோக்கம் என்னவெனில் நம்மு டைய நிலத்திற்கு எழுத்துப்பூர்வ கடித ஆதாரம் கிடைத்திருக்கிறது மற்றும் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்கும்போது அங்கிருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அவர்களே வேலி அமைத்து தந்து விடுவார்கள் இது நமக்கு சாதக மாக இருக்கும் அல்லவா? ஆனால் அதற்குள் சில முஸ் லிம் அமைப்புகள் அவசரப்பட்டு காரியத்தை கெடுத்து விட்டன...'' என்று வெடித்தார் நம்மிடம்.

இந்தியாவில் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிகமாக உள் ளது முஸ்லிம்களின் வக்ஃபு நிலங்கள் என்று கூறுகின்றன அரசாங்க குறிப்புகள். தமிழகத்தில் மட்டும் சுமார் 3600 கோடி ரூபாய் மதிப்பில் வக்ப் சொத்துக்கள் இருக்கின் றன. ஆனால் முஸ்லிம்களின் நிலையோ இன்றைக்கு வாழ்வாதரங்களை இழந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உழன்று கொண்டுள்ளது.

முஸ்லிம்களின் பெரும்பாலான வக்ஃபு நிலங்கள் இன்று பெரும் பண முதலைகளின் கைகளிலும், அரசியல்வாதிகளின் கைகளிலும் அடைபட்டு கிடக்கின்றது என் பதே நிதர்சன உண்மையாகும். இருப்பி னும் வக்ஃபு நிலங்கள் பாழ்பட்டு , ஆக்கிரமிப்புகள் செய்வதை அனு மதிக்க முடியாது..!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற் பட்டு முதல்வர் பொறுப்பில் அமர்ந் திருக்கும் ஜெயலலிதா "ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ள வக்ஃபு நிலங்கள் மீட்டு முஸ்லிம்களுக்கு தரப்படும்'' என்று கூறியுள்ள நிலை யில், நமக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்கிறார்கள் என்கிற காரணத்திற்காக அதை கையகப்படுத்தாமல் விடுவது நமது உரிமையை நாமே இழப்ப தற்கு சமம் என்பதை சம்பந்தப் பட்ட பொறுப்பாளர்கள் உணர வேண்டும்.

இன்னும் நீதி மன்றங்கள் வழங் கிய தீர்ப்பை செயல்படுத்தவும், நியாயத்தின் பக்கம் நிற்கவும் காவல்துறை கடமைப்பட்டுள்ளது. இதை நினைவில் கொண்டு காவல் துறையின் துணை கொண்டு மேற் கண்ட முஸ்லிம்களின் வக்ஃபு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்பதே சேலம் வாழ் முஸ்லிம்க ளின் விருப்பம். விருப்பம் நிறை வேறுமா காத்திருப்போம்.

ஜஎன்டிஜே நடவடிக்கை எடுக்க வேண்டும் முத்தவல்லி அமான்

வக்ஃபு நிலங்கள் தொடர்பாக சேலம் ஜாமியா மஸ் ஜித் முத்தவல்லி நாசர் கான் (எ) அமானிடம் பேசிய நாம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பணிகள் குறித்தும், இந் திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன் றான வக்ஃபு நிலங்கள் மீட்டெடுப்பது குறித்தும் விளக்கி னோம். இன்னும் இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற மாநில தேர்தலுக்கு முன்பாக ஐன்டிஜேவின் மாநில நிர்வாகிகள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து நமது வக்ஃபு நிலங்கள் மீட்டெடுப்பது குறித்து கோரிக்கை வைத்த நிகழ்வுகளையும், ஜெயலலிதா நமது கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டு, அவர் முதல்வரான பின் "ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ள வக்ஃபு நிலங்கள் மீட்டு முஸ்லிம்களுக்கு தரப்படும்'' என்று சட்ட மன்றத்தில் அறிவித்திருப்பதையும் எடுத்துச் சொன்னோம்.

மேலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே பிரதானமாக இவ் விஷயத்தை முன்னெடுத்து செல்வதை கேட்ட முத்தவல்லி, மேற் படி வக்ஃபு நிலம் தொடர்பான ஆரம்பம் முதல் இந்நாள் வரையி லான அனைத்து ஆவணங்களையும் நான் தங்களுக்கு தருகிறேன். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுமானாலும் இந்த விஷயத்தை முன்னெடுத்து செல்லட்டும்; சமுதாயத்திற்கு நன்மை ஏற்பட்டால் எனக்கு மகிழ்ச்சியே'' என்று குறிப்பிட்டார். "இது குறித்து மீண்டும் தங்களை சந்திக்கிறோம்! என்று கூறி அவரிடமிருந்து விடை பெற்றோம்.

Pin It