இட ஒதுக்கீட்டை முழுமையாகத் தருகிறோம்!!

- வின் டி.வி. விவாதத்தில் விஜயதாரணி எம்.எல்.ஏ.

மத்திய அரசு சிறுபான்மையினருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் 4.5 சதவீத இட ஒதுக் கீட்டு சட்ட மசோதாவை டிச. 22, 2011 அன்று நிறை வேற்றியது. இதனை எதிர்த்து ஆந்திர மாநில பிற்படுத்தப்பட் டோர் நலச் சங்கத்தின் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. ஆந்திர உயர் நீதிமன்றம் இதனை விசாரித்து மத்திய அரசு நிறைவேற்றிய சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இப்பிரச்சினையை விவாதப் பொருளாக எடுத்துக் கொண்டு வின் தொலைக் காட்சியில் "நீதியின் குரல்' நிகழ்ச்சியில் விவா திக்கப்பட்டது. இந்த விவாத நிகழ்ச்சியை, நிகழ்ச்சியின் ஒருங் கிணைப்பாளர் சி.ஆர். பாஸ்கரன் தொகுத்து வழங்கினார்.

இதில், இந்திய தேசிய காங்கி ரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப் பினர் எஸ். விஜயதாரணி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம். சையது இக்பால், இந்திய கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பேராயர் என். கிறிஸ்து மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை களை வழங்கினர். இந்த விவாத நிகழ்ச்சியின் தொகுப்பு சமுதாய மக்கள் ரிப்போர்ட் வாசகர்களுக் காக இங்கே...

சி.ஆர். பாஸ்கரன் : மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்ப டையில் கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் சிறுபான்மை யினருக்காக மத்திய அரசு நிறை வேற்றியுள்ள 4.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை ஆந் திர உயர் நீதிமன்றம் ரத்து செய் துள்ளது. ரங்கநாத் மிஸ்ரா கமி ஷன், சிறுபான்மையினருக்கு பதி னைந்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந் துரைத்த நிலையில், "வாராது வந்த மாமணிபோல் வாடிய பயி ர்களை காத்த மாமழைபோல் இருண்டு கிடந்தவர்களின் வாழ்க் கையில் ஒளியேற்ற வந்த சிறு பான்மையினருக்கான இட ஒதுக் கீட்டிற்கு ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் தடை செய்து தீர்ப்பு வழங்கி முட்டுக் கட்டை போட் டுள்ளதே?

விஜயதாரணி : ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மத்திய அரசுக்கு பேரிடி தான். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவிருக்கிறோம். சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை குறிப்பாக உள் ஒதுக்கீட்டை நிறைவேற்ற மத்தி யில் ஆளும் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது.

ரங்கநாத் மிஸ்ரா கமிஷனை நியமித்தது காங்கிரஸ் அரசு தான். இந்தக் குழு அறிக்கையின் பரிந்துரைகளை மசோதாவாக நிறைவேற்ற பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பாஜகவினர் சிறுபான்மையின ருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்த விஷயம் தேசிய ஒருமைப்பாடு சார்ந்த விஷயம் என்பதை என்றைக்கா வது அவர்கள் புரிந்து கொள் வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.

சி.ஆர். பாஸ்கரன் : நீங்கள் தேசிய ஒருமைப்பாடு குறித்த விவகாரம் என்று சொல்கிறீர்கள். ஆனால் பாஜக தேசத்தை பிளவு படுத்தும் முயற்சி என்று சொல் கிறதே?

விஜயதாரணி : இந்த இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற விடா மல் பாஜக மட்டுமல்ல பல கட்சிகள் தடையாக இருந்தன. இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

சி.ஆர். பாஸ்கரன் : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு இந்த ஒதுக்கீட்டை 9 சதவீதமாக ஆக்க மத்திய அரசு எண்ணியிருந்த நிலையில் இந்தத் தீர்ப்பு வந்திருப் பது, உள்ளதுக்கே மோசம் என்ற நிலையை ஏற்படுத்துமா?

விஜயதாரணி : இது பிரச்சி னையே இல்லை. நிறைவேற்றக் கூடிய ஒன்றுதான். ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிட்டி ஆகிய அறிக்கைகளின் அடிப்ப டையில் மட்டுமல்லாது மக்கள் தொகையின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நியாயமான விஷயம். கொடுக்கக் கூடாது என்று சொல்ல முடி யாது.

சி.ஆர். பாஸ்கரன் : கல்வி, பொருளாதார நிலையில் மட்டு மல்லாமல் மக்கள் தொகை அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா?

விஜயதாரணி : கல்வி, பொரு ளாதார மற்றும் மக்கள் தொகை யின் அடிப்படையில் எடுக்கப் பட்ட முடிவு. நியாயமாக கிடைக்க வேண்டிய ஒன்று. அந்த அடிப்படையில்தான் உத்திரப் பிரதேசத்தில் வாக்குறுதி கொடுத் தோம். அதை அரசியல் என்று சொன்னார்கள். இப்போதும் அதையேதான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப் போது என்ன தேர்தலா நடை பெற்றுக் கொண்டிருக்கிறது?

எஸ்.எம். சையது இக்பால் : இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கி றார்கள். இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்த நீதிபதி சச்சார், முஸ்லிம் கள் - தலித்துகளை விட மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கி றார்கள் என்கிறார். அதனைய டுத்து முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆய்வு செய்வ தற்காக ரங்கநாத் மிஸ்ரா கமி ஷனை மத்திய அரசு அமைத்தது.

முஸ்லிம்களின் சமூகப் பொரு ளாதார பின் தங்கிய நிலையை உறுதி செய்த ரங்கநாத் மிஸ்ரா, தனது அறிக்கையில், சிறுபான் மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என் றும் அதில் குறிப்பாக 10 சதவீ தத்தை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அப்போதே மத்திய அரசு அதனை நிறைவேற்றி இருக்க லாம். ஆனால் அறிக்கையை கிடப்பில் போட்டு விட்டு உத்தி ரப் பிரதேசத்திற்கு தேர்தல் விரை வில் அறிவிக்கப்படும் என்றிருந்த காலகட்டத்தில் மாயாவதி தன்னு டைய பின்னடைவை சரி கட்டுவ தற்காக, முஸ்லிம் வாக்கு வங் கியை கவர்வதற்காக "நான் மறுப டியும் ஆட்சிக்கு வந்தால் உத்தி ரப் பிரதேசத்தில் முஸ்லிம்க ளுக்கு இட ஒதுக்கீட்டைத் தருவேன். மத்திய அரசும் அகில இந்திய அளவில் முஸ்லிம்க ளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி இதனை தேர்தல் பிரச்சாரத்தில் வைக்கப் போவதாக' சொன்ன மாத்திரத் தில், உத்திரப் பிரதேச தேர்தல் அறிவிப்புக்கு ஒரு வார காலத் திற்கு முன்னதாக அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலமாக மத்திய அரசு இந்த மசோதாவை நிறை வேற்றியது.

சி.ஆர். பாஸ்கரன் : மத்திய அரசு அவசர கோலத்தில் நிறை வேற்றிய காரணத்தால்தான் நீதிமன்றம் நிறுத்தி வைத்து விட்டதாக சொல்ல வருகிறீர் களா?

எஸ்.எம். சையது இக்பால் : இந்தத் தீர்ப்பை பொறுத்தவரை யில் நீதிபதி தெளிவாக, முஸ்லிம்கள் சமூகப் பொருளாதார அடிப்படையில் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதற்கான ஆதா ரங்களை மத்திய அரசு சமர்ப் பிக்கவில்லை என்று சொல்லியி ருக்கிறார்.

சச்சார் கமிட்டி அறிக்கை, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை ஆகியவற்றில் உள்ள புள்ளி விபரங்களையும், ஆவ ணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தார்களென் றால் நீதிமன்றத்தால் இடஒதுக் கீட்டை மறுத்திருக்க முடியாது.

ஏனென்று சொன்னால் முஸ் லிம்களின் இட ஒதுக்கீடு என் பது இந்த நாட்டிற்கு புதிதான ஒன்றல்ல... ஏற்கெனவே சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஒன்றுதான். அதிலும் குறிப் பாக தென்னிந்திய நிலங்கள் நான்கிலும் இது நடைமுறையில் இருக்கிறது.

சி.ஆர். பாஸ்கரன் : சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட் டிற்கான சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்துவோம் என்று அதி கார தோரணையில் சொல்லி யிருக்கிறார். அவர்கள் இந்த விஷயத்தில் நழுவ மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?

எஸ்.எம். சையது இக்பால் : நிச்சயமாக! எங்களைப் போலவே மத்திய அரசும் இந்த தீர்ப்பு தங்கள் மீது விழுந்த பேரிடி என்பதை உணர்ந்து இருக்கிறது. நாங்கள் கல்வியிலும், பொருளா தாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். எங்க ளுக்கு ஏதாவது கொழு கொம்பு கிடைக்காதா? கடலில் மிதக்கின் றவனுக்கு கட்டை கிடைக்காதா என்று எண்ணியிருந்த வேளை யில், கொடுத்த ஒதுக்கீடும் பற் றாக்குறையாக இருக்கிறதே என்ற ஆதங்கம் இருந்த நேரத் தில் ஒன்றுமில்லாததற்கு ஏதோ ஒன்று கிடைத்ததே என்று ஆறு தல் அடைந்த நேரத்தில், ஆந்திர உயர் நீதிமன்றம் இதனை தடை செய்திருக்கிறது.

சல்மான் குர்ஷித் இந்த இட ஒதுக்கீட்டை மத ரீதியாக வழங் கப்பட்ட ஒன்று அல்ல... முஸ் லிம்களின் சமூகப் பொருளா தார நிலையை கவனத்தில் கொண்டுதான் இந்த மசோ தாவை நிறைவேற்றி உள்ளோம். இதனை எதிர்த்து உச்ச நீதிமன் றம் செல்வோம் என்று தீர்ப்பு க்கு பிறகு சொல்லியிருக்கிறார்.

எங்களைப் பொறுத்தவரை யில் நாங்கள் காங்கிரஸ் அரசாங் கத்திற்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் ஆட் சிக் காலத்தில் நீங்கள் நிறை வேற்றிய மசோதா, உங்களு டைய தவறினால் தடை செய் யப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும்.

சி.ஆர். பாஸ்கரன் : இது நிறை வேற்றப்படவில்லை என்றால் காங்கிரஸ் வாக்கு வங்கிக்குத் தான் சேதாரம். உங்களுக்கு வாழ்வாதாரமே சேதம் என்று சொல்ல வருகிறீர்களா?

எஸ்.எம். சையது இக்பால் : நிச்சயமாக! சல்மான் குர்ஷித், உச்ச நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்வோம் என்று சொல்லியி ருக்கிறார். இதற்கான சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தி இந்தச் சட்டம் அமுல்படுத்தப் பட வேண்டும்.

விஜயதாரணி : சல்மான் குர் ஷித், நீதிமன்றத்தில் போது மான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்திருக்கி றார். அது மட்டுமல்லாது இது மத ரீதியான இட ஒதுக்கீடு இல்லை. மத மற்றும் மொழிவா ரியான சிறுபான்மையினர் அனை வருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என் றும் கூறியுள்ளார்.

சி.ஆர். பாஸ்கரன் : பிறகு ஏன் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வில்லை என்று நீதிபதியே சொல்லியிருக்கிறார்?

விஜயதாரணி : ஆவணங்க ளைப் பொறுத்தவரையில் சச் சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை எல்லாமே இணைய தளத்தில் கிடைக்கின்ற ஒன்றுதான்.

சி.ஆர். பாஸ்கரன் : எல்லோ ருக்கும் கிடைக்கிறது. நீதிமன்றத் திற்கு மட்டும் கிடைக்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

விஜயதாரணி : நீதிமன்றத் தைப் பொறுத்தவரை இவை சப்ஜெக்ட் ஆப் ஆர்க்யுமென் ட்ஸ் மட்டும்தான்.

கிறிஸ்து மூர்த்தி : ஆந்திர உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பேசுகிறீர்கள். தமிழ் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதம், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத் தார்கள். கிறிஸ்துவ பேராயர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இது போதாது. கொடுத்தால் அதிக மாக கொடுங்கள் இல்லையென் றால் இதுவும் வேண்டாம் என்று சொல்லி திருப்பி கொடுத்து விட்டார்கள்.

சி.ஆர். பாஸ்கரன் : வரலாற்றி லேயே முதல் முறையாக கொடுத் ததை திருப்பிக் கொடுத்த பெருமை உங்கள் சமுதாயத் தையே சாரும்.

கிறிஸ்து மூர்த்தி : அதற்குப் பிறகு யாரும் அது பற்றி பேச வில்லை.

சி.ஆர். பாஸ்கரன் : ஆந்திர உயர் நீதிமன்றத் தீர்ப்பை பற்றி சீக்கியர்கள், முஸ்லிம்கள், பார்சி கள் கவலைப்படுகிறார்கள். ஆனால் கவலைப்படாதவர்கள் கிறிஸ்துவர்கள் மட்டும்தான்.

கிறிஸ்து மூர்த்தி : என்ன காரணம் என்றால் நாங்கள் முழு மையாக அந்த இறைவனைத் தான் நம்பியுள்ளோம். அவர் எப்படியாவது உதவி செய்வார் என்று நம்புகிறோம்.

சி.ஆர். பாஸ்கரன் : கிறிஸ்த வர்களுக்கு இட ஒதுக்கீடு வேண் டாம் என்று சொல்ல வருகிறீர் களா?

கிறிஸ்து மூர்த்தி : இல்லை... இல்லை. கிறிஸ்தவர்களுக்கு கண்டிப்பாகத் தேவை. நாங்கள் மறுக்க மாட்டோம்.

(இடையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கருத்து களை வழங்கினார்.)

சி.ஆர். பாஸ்கரன் : மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படை யில் மத்திய அரசு வழங்கியுள்ள 4.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?

எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் : ஆந்திர உயர் நீதிமன்றத் தின் இந்தத் தீர்ப்பு தவறான தீர்ப்பு. இதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்று மண்டல் கமிஷன் அடிப்படை யில் பிற்படுத்தப்பட்டவர்களுக் கான 27 சதவீதத்தில் மதவழி சிறுபான்மையினர்களை ஒன்றி ணைத்து 4.5 சதவீத இட ஒதுக் கீடு அளித்தத சம்பந்தமான விஷ யங்களில் மத்திய அரசு வழக்கறி ஞர்கள் தங்கள் வாதங்களை சரியாக எடுத்து வைக்கவில்லை.

உத்திரப் பிரதேச தேர்தலை கணக்கில் கொண்டு தேர்தல் அறிவிப்பு வருவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக எல்லா மதவழி சிறுபான்மையினரை யும் ஒன்றிணைத்து ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீதத்தை அனுபவித்துக் கொண்டிருந்த குழுக்களை ஒன்றி ணைத்து 4.5 சதவீத இட ஒதுக் கீட்டை அறிவித்தார்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி யின்போது பிற்படுத்தப்பட்டவர் களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 3.5 சதவீதம் ஒதுக்கி கொடுத்தார்கள். அதற்கு முன்பு பிற்படுத்தப்பட் டோர் ஆணையம் அமைக்கப் பட்டு நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் கமிஷன் அமைக் கப்பட்டது. அதன் அறிக்கைபடி இட ஒதுக்கீட்டை அறிவித்தார் கள். தேசிய மத மொழிவழி சிறு பான்மையினருக்கான ஆணை யம் ரங்கநாத் மிஸ்ரா தலைமை யில் அமைக்கப்பட்டு அந்த ஆணையமும் பரிந்துரைகளை அளித்துள்ளது.

மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தச் சட்டம் அமைந்திருந்தால் இது போன்ற சிக்கல் ஏற்பட்டிருக் காது.

சி.ஆர். பாஸ்கரன் : இது குறித்து தங்கள் இயக்கத்தின் சார்பாக தெரிவித்திருக்கிறீர் களா? சல்மான் குர்ஷித்தின் பதில் தங்களுக்கு திருப்தி அளிக் கிறதா?

எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் : 4.5 சதவீத இட ஒதுக் கீட்டை மத்திய அரசு அவசர கோலத்தில் அறிவித்தபோதே கண்டனங்களை தெரிவித்தோம். மேல்முறையீடு செய்யப் போவ தாக சல்மான் குர்ஷித் கூறியிருக் கிறார். அவருடைய பதில் எங்க ளுக்கு திருப்தி அளிக்கவில்லை. இட ஒதுக்கீட்டில் மதவழிச் சிறு பான்மையினரும், மொழிவழி சிறுபான்மையினரும் வருகிறார் கள் என்று சொல்கிறார். மிஸ்ரா கமிஷன் மதவழி சிறுபான்மையி னருக்கு ஒதுக்கீடு வழங்க முடி யும். மொழிவழிச் சிறுபான்மையி னருக்கு வழங்க முடியாது என்று கூறியிருக்கிறது. சட்டம் பயின்ற சட்ட அமைச்சர் புரியாமல் பேசி யிருக்கிறார்.

சி.ஆர். பாஸ்கரன் : தமிழ்நாட் டில் தேர்தலின்போது தமிழக முதல்வர் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தரு வதாக வாக்களித்திருந்தார். அதன் அடிப்படையில் வாக்குக ளைப் பெற்று முதல்வரான பிறகும் 3.5 சதவீதமாகவே நீடித்து வருகிறதே?

எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் : நான் சட்டமன்றத்தில் 7 முறை பேசியிருக்கிறேன். ஏழு முறையும் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று பேசியிருக்கி றேன். இதற்கு தமிழக அரசும் பதிலளித்திருக்கிறது. இந்த விஷயம் சிறுபான்மையினர் ஆணையத்தின் பரிசீலனையில் இருக்கிறது என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். எதிர்காலத் தில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சி.ஆர். பாஸ்கரன் : (கிறிஸ்து மூர்த்தியை நோக்கி) சிறுபான்மையி னர் இட ஒதுக்கீடு குறித்து உங் கள் சமுதாய அகில இந்திய அமைப் புகள் என்ன சொல்லி உள்ளன?

கிறிஸ்து மூர்த்தி : சிறுபான்மை யினர் இட ஒதுக்கீடு என்பது பேப்பரில்தான் இருக்கிறது. செயலளவில் இல்லை. இந்த விஷ யத்தில் பாஜகவும், காங்கிரசும் ஒன்றுதான். பாஜகவினர் பேசவே மாட்டார்கள். காங்கி ரஸ் கட்சியினர் பேசுவார்கள். செய்ய மாட்டார்கள்.

சி.ஆர். பாஸ்கரன் : சிறிதளவு முன்னேற்றம் கூட இல்லை என்று சொல்கிறீர்களா?

கிறிஸ்து மூர்த்தி : ஒன்றுமே கிடையாது.

சி.ஆர். பாஸ்கரன் : சட்டம் ஏட்டில்தான் இருக்கிறது. பயனா ளிகள் ஒருவர் கூட இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. (விஜயதாரணியைப் பார்த்து) இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

விஜயதாரணி : மண்டல் கமிஷன் அறிக்கை முதலில் மத்திய அரசால் அமுல்படுத்தப் பட்டு தற்போது எல்லா மாநிலங் களிலும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இதர பிற்படுத்தப் பட்டவர்கள் ஒதுக்கீடு, அதிலி ருந்து உள் ஒதுக்கீடு என்ற அள வில் வளர்ந்திருக்கிறது. இப் போது நாம் அது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த பரி ணாம வளர்ச்சி என்பது தொடர்ந்த நடைமுறைகளால் ஏற்பட்டுள்ளது. ஒன்றுமே நடக்க வில்லை என்பது தவறு.

சி.ஆர். பாஸ்கரன் : இட ஒதுக் கீட்டிற்கு ஆதரவான இயக்கம் காங்கிரஸ் கட்சி என்று சொல்கி றீர்களா?

விஜயதாரணி : நிச்சயமாக பிற கட்சிகளால் இட ஒதுக்கீட்டை நினைத்து பார்க்க முடியாது. அனைத்து இந்தியர்களையும், அனைத்து மதத்தினரையும் சமமாக நினைப்பவர்கள் காங்கி ரஸ் கட்சியினர். மொழிவாரியாக வித்தியாசம் இருந்தாலும் மத வாரியாக வித்தியாசம் இருந்தா லும் அனைவரையும் ஒன்றாக கருதுவதுதான் காங்கிரஸ் அர சின் கொள்கை.

சி.ஆர். பாஸ்கரன் : கொள்கை சரியானதாக இருக்கிறது. பல நேரங்களில் கோட்டை விட்டு விடுகிறீர்களே?

விஜயதாரணி : கோட்டை விடுவதில்லை. 10 வருடங்களாக என்ன நடந்து கொண்டு இருக்கி றது என்பதைப் பார்க்க வேண் டும். பல கட்சிகளை கூட்டணி யில் வைத்துதான் அரசாங்கத்தை நடத்திச் செல்ல வேண்டிய கட் டாயம்.

சி.ஆர். பாஸ்கரன் : அப்போது மைனாரிட்டி காங்கிரஸ் அரசு என்று சொல்லலாமா?

விஜயதாரணி : மைனாரிட்டி என்று சொல்ல முடியாது. எண் ணிக்கையை பார்க்க வேண்டும்.

சி.ஆர். பாஸ்கரன் : பல நேரங் களில் உங்களுக்கு தனிப் பெரும் பான்மையை மக்கள் கொடுத்தி ருக்கிறார்களே?

விஜயதாரணி : தனிப் பெரும் பான்மை வழங்கப்பட்டு பதி னைந்து ஆண்டுகள் ஆகி விட் டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை மட்டும் கொடுத்துப் பாருங்கள். பெண்கள் மசோதா, சிறுபான் மையினர் இட ஒதுக்கீடு ஆகிய வற்றை நிறைவேற்றிக் காட்டு வோம்.

சி.ஆர். பாஸ்கரன் : ஆவணங் கள் சரியாக சமர்ப்பிக்காத தால்தான் ஆந்திர உயர் நீதிமன் றம் எதிரான தீர்ப்பு வழங்கியது என்று குற்றம் சாட்டுகிறார் களே?

விஜயதாரணி : நீதிமன்ற தீர்ப்பு என்பது தரப்படுகின்ற ஆவணங்களை மட்டும் வைத்து கொடுக்கப்படுவதில்லை. ஆவ ணங்கள், இரு தரப்பு வாதங்கள், வேறு பல விஷயங்களையும் ஆராய்ந்து தரப்பட வேண்டும். அதுதான் நீதிமன்றத் தீர்ப்பாக அமையும்.

இந்தத் தீர்ப்பில் என்ன சொல் லப்படுகிறது என்பதை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. அதில் கொள்கை அடிப்படை யில் பல கருத்துகளை சொல்லி யுள்ளார்கள். அட்வகேஸி ஆஸ் பெக்டில் எதுவும் சொல்லப்பட வில்லை.

சி.ஆர். பாஸ்கரன் : (சையது இக்பாலைப் பார்த்து) வழக்கை தொடர்ந்தவர்கள் யார்?

எஸ்.எம். சையது இக்பால் : வழக்கைத் தொடர்ந்தவர் ஆந்தி ராவில் இருக்கக் கூடிய பிற்படுத் தப்பட்டோர் நலச் சங்கத்தின் தலைவர்தான். எங்களுடைய ஒதுக்கீட்டில் இருந்து உள் ஒதுக் கீடு கூடாது என்ற அடிப்படை யில்தான் வாதம் வைக்கப்பட்டி ருக்கிறது.

விஜயதாரணி : இயல்பாக சிறு பான்மை அமைப்புகள் இந்த வழக்கில் தங்களை சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும். மத் திய அரசின் நிலைப்பாட்டை யும் முன்னிறுத்தி இருக்க வேண்டும்.

எஸ்.எம். சையது இக்பால் : சகோதரி விஜயதாரணி சொல் வது எப்படி இருக்கிறது என் றால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது எங்களது பொறுப்பு. நாங்கள் சரியாக செய்ய மாட் டோம். நீங்களே சரி செய்து கொள்ள வேண்டும் என்பது போல் இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி யில் இருந்த பிறகும் எங்களுக்கு பெரும்பான்மையில்லை. அத னால் நிறைவேற்ற முடியவில்லை என்பது சரியான வாதம் கிடையாது.

விஜயதாரணி : குறை சொல்வ தாக இருந்தால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். செய்ப வர்களை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். செய் யாத பாரதீய ஜனதா கட்சியைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.

எஸ்.எம். சையது இக்பால் : பா.ஜ.க. கட்சி என்ற ஒரு கட்சி இருப்பதால்தான் பல நேரங்க ளில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயத் தில் இருக்கிறோம்.

சி.ஆர். பாஸ்கரன் : சீக்கியர் கள், பார்சியர், கிறிஸ்துவர்கள் ஆகியோர் முஸ்லிம்களுடன் இந்த ஒதுக்கீட்டில் பயனாளிக ளாக இருக்கும்போது முஸ்லிம் கள் மட்டும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக கொந்தளிப்பது ஏன்? முஸ்லிம்களுக்கு மட்டும் பலன் அதிகம் கிடைக்கிறதா?

எஸ்.எம். சையது இக்பால் : இயல்பாக பார்த்தீர்கள் என் றால் யார் பட்டினியில் இருக்கின்றானோ அவனுக்கு எதிரில் உணவுப் பாத்திரத்தை வைத்து விட்டு அதனை தட்டி விட்டால் பட்டினியில் இருப்பவனுக்கு கோபம் வரத்தான் செய்யும். அது இயல்பான ஒன்றுதான்.

சச்சார் கமிஷனில் முஸ்லிம் கள் பலர் ஐந்தாம் வகுப்பை தாண்டவில்லை என்று கூறப்பட் டுள்ளது. அதனால்தான் தமிழ கத்தில் மக்கள் தொகை அடிப் படையில் அதிகம் இருக்கின்ற போதும் குறைவாக வழங்கிய 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டோம்.

கிறிஸ்துவர்கள் பிற்படுத்தப் பட்டோர் ஒதுக்கீட்டில் 3.5 சதவீ தத்தை விட அதிகமாக அனுப வித்துக் கொண்டிருப்பதால் அதிகப்படுத்திக் கொடுத்தால் கொடுங்கள் என்று திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

அது மட்டுமல்லாது தன்னார் வமாக தங்கள் மிஷினரிகளின் மூலமாக பள்ளிகள் அமைத்து கல்வியில் அவர்கள் தன்னி றைவை எட்டியிருக்கிறார்கள்.

சி.ஆர். பாஸ்கரன் : (கிறிஸ்து மூர்த்தியைப் பார்த்து) இந்த வாதப் படி நீங்கள் தன்னிறைவை எட்டி யிருக்கிறீர்களா?

கிறிஸ்து மூர்த்தி : எல்லோரும் தன்னிறைவு அடைந்து விட்டார் கள் என்று சொல்ல முடியாது. பலர் அடித்தட்டில்தான் இருக் கிறார்கள். இதெல்லாம் வைத் துப் பார்த்துதான் 3.5 சதவீதம் என்பது போதாது என்று திருப் பிக் கொடுத்தோம்.

சி.ஆர். பாஸ்கரன் : நான் மாநிலம் தழுவி கேட்கவில்லை. தேசிய அளவில் இது குறித்து கருத்து சொல்லுங்கள்.

கிறிஸ்து மூர்த்தி : 60 ஆண்டு காலமாக தலித் கிறிஸ்தவர்க ளுக்கு ஒதுக்கீடு கேட்டு வருகி றோம். மத்திய அரசு இதனை கண்டு கொள்ளவில்லை. அவர்க ளால்தான் இதனை செயல்ப டுத்த முடியும். அது கிடைத்த தென்றால் நாங்கள் மேலோங்க முடியும்.

சி.ஆர். பாஸ்கரன் : (விஜய தாரணியை நோக்கி) காங்கிரûஸ விமர்சிப்பதற்காக இந்த நிகழ்ச் சியை நடத்தவில்லை. ஆனால் இட ஒதுக்கீடு பிரச்சினையில் அவர்கள்தான் கொடுத்துக் கொண்டு இருப்பதாக சொல்கி றார்கள். பா.ஜ.க.தான் எதிர்த்துக் கொண்டு இருக்கிறது. அப்படி இருந்தாலும் உங்களை நோக் கியே ஏன் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

விஜயதாரணி : செய்பவர்க ளைத்தான் விமர்சனம் செய்வார் கள். அது இயற்கைதான். எந்த விமர்சனங்கள் வந்தாலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்ப டுத்த வேண்டும் என்ற முனைப் புடன்தான் இந்திய தேசிய காங் கிரஸ் இருக்கிறது. அதுதான் இன்றைய நிலைப்பாடு. இதில் என்ன இழந்தாலும் என்ன பெற் றுக் கொண்டாலும் அதைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை. இப்போது தேர்தல் காலம் எதுவும் இல்லை. நாங் கள் எங்கள் கடமையை செய்து கொண்டுதான் இருப்போம்.

சி.ஆர். பாஸ்கரன் : முஸ்லிம்க ளுக்கு 9 சதவீதம் இட ஒதுக்கீடு தருகிறோம் என்று காங்கிரஸ் சொன்ன பிறகும் அந்த மக்க ளின் நம்பிக்கையை பெறவில் லையே ஏன்?

விஜயதாரணி : உத்திரப் பிரதேச தேர்தல் களம் என்பது வித்தியாசமான ஒன்று. எங்கள் பிரச்சாரமும் சமாஜ் வாடிக்கு சாதகமாக போய் விட்டது. அங்கு தேசிய அரசியல் பின் தங்கி மாநில அரசியல் மேலோங்கி விட்டது. வருங்கா லத்தில் அந்த நிலை மாறும்.

சி.ஆர். பாஸ்கரன் : இட ஒதுக்கீட்டிற்கு எதிரான தீர்ப்பு உங்கள் வாக்கு வங்கியை பாதிக் கும் என்பதால்தான் இந்த வேகம் காட்டுகிறீர்களா?

விஜயதாரணி : அதெல்லாம் காரணம் கிடையாது. இட ஒதுக் கீட்டை கொடுக்க வேண்டும் என்று நினைத்தவர்களே நாங் கள்தான். இதனை நிலை நிறுத்த பாடுபடுவோம். அதை எப்படி யும் நடைமுறைப்படுத்தியே தீருவோம். சட்டத்தை கொண்டு வந்த நாங்கள் அதனை அமுல் படுத்த தீவிரமாக இருக்கிறோம். எங்களுக்கு பெரும்பான்மை கிடைத்தால் பெண்கள் மசோதா, உணவுப் பாதுகாப்பு சட்டம், சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு ஆகியவற்றை கண்டிப் பாக முழுமையாக நிறைவேற் றியே தீருவோம்.

இருக்கின்ற அதிகாரங்களைக் கொண்டே 93 லட்சம் என வழங் கப்பட்ட ஸ்காலர்ஷிப் 1 கோடியே 41 லட்சமாக ஸ்காலர்ஷிப் அதி கப்படுத்தப்பட்டிருக்கிறது.

நேஷனல் டேட்டா பேங்க் என்பதை உருவாக்கி இருக்கி றோம். மௌலானா ஆசாத் பவுன்டேஷனுக்கு முதலில் 200 கோடி ஒதுக்கி இருந்தோம். அதனை 700 கோடியாக உயர்த் தியுள்ளோம். நேஷனல் மைனா ரிட்டி கார்ப்பரேஷனுக்கு முன் னதாக 375 கோடி ஒதுக்கப்பட் டிருந்தது. தற்போது 815 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் பணி யாற்றும் சிறுபான்மையினரின் சதவீதம் அதிகப்படுத்தப்பட்டுள் ளது.

சி.ஆர்.பாஸ்கரன் : (சையது இக்பாலை நோக்கி) சிறுபான்மையி னருக்கு சாதகமாக பல விஷயங் களை நிறைவேற்றி இருப்பதாக அட்டவணைப்ப டுத்துகிறார் களே?

எஸ்.எம். சையது இக்பால் : தொடர்ந்து ஐம்பது ஆண்டுக ளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். ஆட்சி யில் இருப்பவர்கள்தானே திட்டங் களை நிறைவேற்ற வேண்டும். சுதந்திரம் வாங்கி 50 ஆண்டுக ளுக்குப் பின்னால்தான் சச்சார் கமிட்டியும், ரங்கநாத் மிஸ்ரா கமி ஷனும் தங்களுடைய ஆய்வறிக் கையில், முஸ்லிம்களில் 30 சதவீ தத்திற்கும் மேல் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார் கள் என்று சொல்கின்றன. இவர் கள் வைத்த கமிஷன்களே இவர் கள் ஆட்சியின் ரிசல்டை சொல்லி முடித்து விட்டன.

சி.ஆர். பாஸ்கரன் : இப்போ தாவது செய்தார்களே என்று சந்தோஷப்படலாம் அல்லவா?

எஸ்.எம். சையது இக்பால் : ஏற்றுக் கொள்கிறோம். இயல்பாக நாங்கள் காங்கிரûஸ மிகவும் நம்பி இருக்கிறோம். பாஜக எங்களுக்கும் மற்ற மதவழி சிறு பான்மையினருக்கும் எதிராக போர் தொடுத்துக் கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எந்த சலுகையும் கிடைக்கக் கூடாது என்று திட்டங்களை தீட்டி நிறை வேற்றிக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் எங்களுக்கு உற்ற தோழனாக இருக்க வேண்டியது காங்கிரஸ்தான். அந்த நினைப் போடுதான் காங்கிரûஸ பார்த் துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் பல நேரங்களில் காங்கிரஸ் எங்களை கை விட்டு விடுகின்றது என்பதுதான் எங் கள் வருத்தம்.

விஜயதாரணி : சட்டத் திருத் தம் கொண்டு வந்தால் பாராளு மன்றத்தில் வெற்றி பெற வேண் டும். அதற்கு எங்களுக்கு பெரும் பான்மை என்ற மிருக பலத்தை தாருங்கள். அதனை நிறைவேற் றிக் காட்டுகிறோம்.

கிறிஸ்து மூர்த்தி : இப்போது மிருக பலம் கேட்பது இருக்கட் டும். பலமுறை நீங்கள் பெரும் பான்மையாக இருந்தீர்கள். அப் போது நிறைவேற்றி இருக்க லாமே. காங்கிரஸ் கட்சி மதச் சார்பற்ற கொள்கை கொண்ட தாக இருந்தாலும் இந்தியாவை ஆட்சி செய்வது ஆரியக் கொள் கைதான்.

நீங்கள் எந்த நீதிமன்றத்திற்கு வேண்டுமானாலும் போங்கள். அங்கே இட ஒதுக்கீட்டுச் சட் டம் தோற்கடிக்கப்பட்டு விடும். 3 சதவீதமே உள்ள ஆரியர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.

சி.ஆர். பாஸ்கரன் : 3 சதவீதம் உள்ள ஆரியர்கள்தான் இந்தி யாவை ஆட்சி செய்கிறார்கள் என்று சொன்னீர்கள். அம்பேத் கார் உருவாக்கிய சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற சட்ட அமைச்சர் பொறுப்பு சல்மான் குர்ஷித்திடம் அல்லவா இருக்கிறது.

இக்பால் : சட்டம் இயற்றுகிற இடத்தில் முஸ்லிம் இருந்தாலும் அதைத் தடுக்கிற இடத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சி.ஆர். பாஸ்கரன் : ஆந்திர உயர் நீதிமன்றத்தில் இட ஒதுக் கீட்டை தடுத்தவர்கள் யார் என் பதை உள்ளே நுழைந்து பார்க் கிற வாய்ப்பு இல்லை.

கிறிஸ்து மூர்த்தி : தடையை உருவாக்குபவர்கள் ஆரியர்கள் தான். அரசியல் கட்சிகள் இல்லை. ஆரியக் கொள்கைதான் இங்கே விரோதமாகவுள்ளது.

சி.ஆர். பாஸ்கரன் : மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப் படையில் சிறுபான்மையின ருக்கு வழங்கிய உள் ஒதுக் கீட்டை ஆந்திர உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. அதற்கு எதி ராக சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் உச்ச நீதிமன்றம் செல் வோம் என்று கூறியிருக்கிறார். ராகுல் காந்தி போன்ற தலைவர் களும் இட ஒதுக்கீட்டின் அவசி யத்தை வலியுறுத்தி உள்ளார் கள்.

அரசாங்கம் அமைத்த கமி ஷன்களும் சிறுபான்மையினர் பின்தங்கிய நிலையில் இருக்கி றார்கள் என்று கூறி அவர்க ளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியத்தை வலியு றுத்தியுள்ளது. சிறு பான்மையின ருக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

- அபு சுபஹான்

Pin It