சட்டசபையில் ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் சங்கரன் கோவில் இடைத்தேர்தலை மையமாக வைத்து மோதிக் கொண்டது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த சில நாட்களில் ஆளுங்கட்சியின் 3 அமைச்சர்கள் அந்தப் பகுதியில் களமிறங்கியது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் அப்பகு தியில் நீண்ட நெடுங்காலமாக ஒற்றுமையுடன் வாழும் முஸ்லிம்களுக்கும், தலித்துகளுக்கும் இடையே ஏற்பட்ட கலவரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சங்கரன்கோவிலில் காந்தி நகர், கக்கன் நகர், காவேரி நகர் பகுதிகளில் உள்ள 5 தெருக்களில் தேவேந்திரகுல, அருந்ததிய இன மக்களும், காயிதே மில்லத் நகரில் 7 தெருக்களில் முஸ்லிம்களும் வசித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மேலப் பாளையம், தென்காசி போன்ற பகுதிகளில் மத மோதல்கள் ஏற் பட்டபோதும், சங்கரன்கோவில் பகுதிகளில் தலித் மக்களும், முஸ்லிம்களும் நட்புணர்வோடு வாழ்ந்து வந்தனர்.

தலித் மக்கள் ஆண்டுதோறும் தை மாதத்தில் காளியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடத்தி வருகின்றனர். காளி யம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு பெரிய பள்ளிவாசல் வழி யாக முப்புடாதி அம்மன் கோயி லுக்குச் செல்வது வழக்கம்.

கடந்த 7ம் தேதி அருந்ததியர் இன மக்களும், தேவேந்திர குல மக்களும் சப்பரம் ஏந்தி ஊர்வல மாக சென்றனர். அதிர் வேட்டுக ளுடன் வந்த ஊர்வலம் பெரிய பள்ளிவாசலை கடந்து சென்றது. அதன் பிறகு தேவேந்திர குல மக்கள் ஊர்வலமாக சென்றபோது தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த பள்ளிவாசலை நோக்கி ஒரு சிலர் செருப்புகளை வீச அது பள்ளிவாசலில் வந்து விழுந்தது.

அப்போது இரவுத் தொழுகை முடித்து வெளியே வந்த முஸ்லிம்கள், யார் இந்த செருப்பை வீசியது என்று விசாரித்துக் கொண்டிருக்க... ஊர்வலமாய் சென்றவர்கள்தான் வீசினார்கள் என்ற தகவல் அறிந்ததும், அவர் கள் திரும்பி வரும்போது கேட் கலாம் என்று காத்திருந்தனர். இதற்கிடையில் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உட னடியாக ஒரு பெண் சப் இன்ஸ் பெக்டரும், ஒரு கான்ஸ்டபிளும் அந்தப் பகுதிக்கு வந்தனர்.

அதற்குள் ஊர்வலமாக சென் றவர்கள் பள்ளிவாசல் வழியாக திரும்பி வரவே அவர்களிடத்தில் ஏன் பள்ளிவாசலில் செருப்பை வீசினீர்கள் என்று கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சில விஷமிகள் பள்ளிவாசல் அருகே அதிர் வேட்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் இரண்டு தரப்பினருக்குமிடையே கலவரம் வெடித்தது.

இந்தக் கலவரத்தில் முஸ்லிம் களின் சொத்துகள் சூறையாடப் பட்டன. தீ வைத்து கொளுத்தப் பட்டன. முஸ்லிம்கள் சிறுபான்மையாகவும், தலித் சமூகம் பெரும்பான்மையாகவும் இருந்த காரணத்தால் முஸ்லிம்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள் ளது.

கலவரம் ஏற்பட்ட தெருவில் நிறுத்தப்பட்டிருந்த முஸ்லிம்க ளின் 10க்கும் மேற்பட்ட வாகனங் கள் சேதப்படுத்தப்பட்டன. ஒரு சில வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. கடைகளிலும், வீடுகளி லும் புகுந்து பொருட்களை சூறையாடியது ஒரு கும்பல். சேத மதிப்பு 2 கோடிக்கும் மேல் இருக் கும் என்று மதிப்பிடப்பட்டுள் ளது. பெரிய பள்ளிவாசல் கண் ணாடிகள் முழுவதும் கல்வீச்சி னால் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து நெல்லையிலி ருந்து காவல்துறை கண்காணிப் பாளர் விஜயேந்திர பிதாரி தலை மையில் வந்த காவல் படையினர் கலவரக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.

சங்கரன்கோவிலில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ள தால் பதட்டம் குறைந்துள்ளது. காவல்துறையினர் இரு தரப்பு முக்கியஸ்தர்களை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்த சமூக நல்லிணக்கக்குழு அமைப்பதென் றும், அதன் மூலம் இரு தரப்பி லும் ஏற்படும் சிறு சிறு பிரச்சி னைகளை உடனடியாக பேசி முளையிலேயே கிள்ளி எறிவ தென்றும் முடிவெடுக்கப்பட்டது.

இருந்தபோதிலும் தாழ்த்தப் பட்டோர் பகுதிகளில் வசித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களை உடன டியாக காலி செய்யுமாறு சிலர் வற்புறுத்தி வருவதும், காந்திநகர், கக்கன் நகர், காவேரி நகர் போன்ற இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவது அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கலவரம் குறித்து புதிய தமிழகம் கட்சி யின் மாநில இளைஞர் அணிச் செயலாளரும், மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான பாஸ்கரனிடம் சம்பவம் பற்றி பேசியபோது...

“தாழ்த்தப்பட்டவர்களுக்கும், முஸ்லிம்க ளுக்கும் இடையே மோதல் என்பதை வரலாற்றில் முதல் தடவையாக இப்போது தான் கேள்விப்படுகிறேன். இது மிகவும் வருத்தத்திற்குரியது. துர திருஷ்டவசமானது.

இரு சமூக தலைவர்களும் புரிதலுடனும், நட்புணர்வோடும்தான் இருக்கிறார்கள். ஒரு சிலர் செய்த தவறினால் இரண்டு சமூகத்தா ருக் கிடையே பிளவு ஏற்பட்டுவிட்ட தைப் போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. இதனை கார ணமாக வைத்துக் கொண்டு இந் துத்துவா இயக்கங்களின் தாழ்த்தப்பட் டோர் பிரிவு என்று கூறிக் கொண்டு ஒரு சிலர் இதனை ஊதிப் பெரிதாக்கி அதன் மூலம் ஆதாயம் தேட முனைகின்றனர். அவர்களை நாங்கள் புறக்கணித்து விட்டோம்.

இது இடைத்தேர்தலையொட்டி நடை பெற்ற அரசியல் சதி நிகழ்ச்சியாகத்தான் தோன்றுகிறது...'' என்று கூறியவரிடம்,

“தாழ்த்தப்பட்டோர் பகுதியில் வாட கைக்கு குடியிருக்கும் முஸ்லிம் குடும்பங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வற்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டோம்.

“இது திட்டமிட்டு செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம். போலீஸ் செய்கிற சூழ்ச்சி. அவர்கள்தான் தாழ்த்தப்பட்டோர் பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை; பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள் என்று கூறுகிறார்கள்.

கலவரத்தின்போது தாழ்த்தப் பட்டோர் பகுதிகளில் வசிக்கும் எந்த முஸ்லிமின் வீட் டிற்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்ப திலிருந்தே இதனை புரிந்து கொள்ள வேண் டாமா?

இவ்வளவு ஏன்! என்னுடைய வீட்டி லேயே இரண்டு முஸ்லிம்களை குடி வைத்திருக்கிறேன். அவர்களிடம் கேட் டுக் கொள்ளுங்கள். யாராவது வீட்டை காலி செய்யு மாறு சொன்னார்களா என்று! இது தாழ்த்தப்பட்டோரையும், முஸ் லிம்களையும் பிரிப்பதற்கான சதி...'' என்று கூறியவர் இறுதியாக,

“இரு சமூகத் தலைவர்களையும் அழைத்து கலந்துரையாடல் நடத்த உள்ளோம். இதன் மூலம் இரு சமுதாயங்களில் உள்ள பிணக்கு கள் அகன்று விடும்...'' என்றார் நம்பிக்கை யோடு!

இந்தக் கலவரத்தினால் முஸ்லிம்களின் சொத்துகள் பெரிய அளவில் சேதப்படுத்தப் பட்டுள்ளது. அரசு உடனடியாக அவர்க ளுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண் டும். அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுத லைத் தரும்.

நீங்கள் சங்கரன்கோவிலுக்கு வரணும்! - ஐஎன்டிஜே தலைவரை அழைத்த பள்ளிவாசல் நிர்வாகி

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஐஎன்டிஜே தேசியத் தலைவர் எஸ்.எம். பாக்கர், மாவட்ட நிர்வாகிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி... சகஜநிலை திரும்ப ஒத்துழைப்பு தருமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுமா றும் பணித்தார்.

பின்னர், பெரிய பள்ளிவாசல் நிர்வாகி (முத்த வல்லி) ஜலாலுத்தீனை தொடர்பு கொண்டு நிலைமையை விசாரித்து அறிந்தார். அவரிடம் பேசிய ஜமாஅத் நிர்வாகி, “இது போன்ற பிரச்சினை ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம். அதற்காக நல்லிணக்க நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யவிருக்கிறோம். இதில் கண்டிப்பாக நீங்களும், டாக்டர் கிருஷ்ணசாமியும் கலந்து கொள்ள வேண்டும். இது அப்பகுதி மக்கள் மத்தியில் நல்லி ணக்கத்தை ஏற்படுத்த ஏதுவாக இருக்கும்...'' என் றார்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஐஎன்டிஜே மாவட்ட நிர்வாகிகளான தலைவர் அலி, செயலாளர் ஹாரிஸ், செங்கோட்டை காதர் ஆகி யோர் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்க ளுக்கு ஆறுதல் கூறியதோடு அப்பகுதியில் அமைதி நிலவ நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஈவ்டீசிங் - பி.சி.ஆர்!

2 மாதங்களுக்கு முன் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி பள்ளி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரைப் பின் தொடர்ந்த தேவேந்திர குலத்தைச் சேர்ந்த மூவர் அந்த மாணவியிடம் கலாட்டா செய்தனர். இதனைக் கண்ட முஸ்லிம் இளைஞர்கள் அவர்களை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர் கள் முஸ்லிம் இளைஞர்கள் மீது பி.சி.ஆர். சட்டத்தில் புகார் செய்தனர்.

இதன் காரணமாக தவறைதட்டிக் கேட்ட மூன்று முஸ்லிம்களும் பி.சி. ஆர். வழக்கினால் சிறைசெல்லும் நிலை ஏற்பட்டது. இது அப்பகுதி முஸ் லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஒற்றுமைக்கு வேட்டு வைத்த வேட்டுச் சத்தம்!

பெரிய பள்ளிவாசலுக்கு பின்னால் உள்ள பொட்டல் வெளி தாழ்த்தப்பட்டோரின் பட்டா நிலம். அந்தப் பகுதியில் கடந்த சில வரு டங்களாக ஆடி திருவிழாவின்போது பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. அதில் ராட்டினம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது மரணக் கிணறு என்ற நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது ஒலிப் பெருக்கி மூலமாக சினிமா பாட்டுகள் சத்தமாக ஒலி பரப்பப்படும்.

கடந்த ஆண்டு ஆடி திவசம் முஸ்லிம்களின் ரமலான் மாதத்தின்போது கொண்டாடப்பட்டது. பள்ளிவாசலில் தொழுகை சொற்பொழிவுகளை நடத்த முடியாமல் முஸ்லிம்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இது மட்டுமல்லாது இதுநாள் வரையில் முளைப் பாரி ஊர்வலம் காளியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு பெரிய பள்ளிவாசலுக்குப் பின்னால் உள்ள பழைய தாசில்தார் ஆபிஸ் தெரு வழியாக முப்புடாதி அம்மன் கோயிலை அடைந்து வந்தது.

கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான் பள்ளி வாசல் வழியாக சப்பரத்தை கொண்டு செல்கின்றனர். பள்ளிவாசல் வழியாக கொண்டு செல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் பள்ளிவாசல் முன் ஊர்வலம் வரும்போது ஒலிபெருக்கிகள் மூலம் சத்தமாக பாட்டை ஒலிபரப்புவதும், அதிர்வேட்டுகள் வெடிப்பதும்தான் இரு தரப்பினருக்கிடையே பிரச்சினையை தேற்றுவிக்கிறது.

ஓ.பி.யை சந்தித்த ஐஎன்டிஜே துணைத் தலைவர்!

இச்சம்பவம் தொடர்பாக நிதியமைச்சர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்த ஐஎன்டிஜே துணைத் தலைவர் முஹம்மது முனீர், சங்கரன்கோவிலில் முஸ்லிம்கள், தலித்கள், யாதவர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தவர்களும் நட்புணர் வோடு பழகி வரும் நிலையில் அதை கெடுக்கும் வண் ணம் விஷமிகள் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என வலியுறுத்தினார். மறுநாள் கலவரத்திற்கு காரணம் என்று பாஜகவைச் சேர்ந்தவர்களை கைது செய்திருக்கிறது போலீஸ்.

Pin It