முஸ்லிம்களுக்கு அவர்களின் மக்கள் தொகை கணக்கிற்கேற்ப இட ஒதுக் கீடு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் அரசியல் ரீதியாக வலிமை பெற முடியும் எனத் தெரிவித் திருக்கிறார் ஆந்திரப் பிரதே சத்தின் பிரபல புரட்சிக் கவிஞ ரான கத்தார்.

சியாசத் உருது நாளிதழுக்கு கத்தார் அளித்திருக்கும் பேட்டி யில்தான் மேற்கண்டவாறு தெரி வித்திருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு 4.5 சதவீதம் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு என்பது அர்த்தமற்றது. அவர்க ளுக்கு 12.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். குறைந்த அளவிலான இட ஒதுக்கீடு முஸ் லிம்களுக்கு வழங்கப்பட்டிருப் பது பயனற்றதாகும். இட ஒதுக் கீடு என்பது முஸ்லிம்களுக்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத் தும் வகையில் இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் எல்லோரும் சமம். அதனால் எல்லோருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண் டும்.

சமூகத்தில் எந்தவொரு பிரிவாவது தொடர்ந்து பின்தங் கிய நிலையில் இருக்குமானால் அது, தேசத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்து விடும்...” என்று கூறியுள்ள கத்தார்,

ஆந்திர உயர் நீதிமன்றம் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருப் பதை பாஜக வரவேற்றுள்ளதைக் குறித்து கருத்து சொல்லியிருக் கும் கத்தார், “பாஜக இந்த நாட்டு முஸ்லிம்களின் முன்னேற்றத்தை விரும்புகிறதா இல்லையா என் பதை வெளிப்படையாக கேட் டால், இந்த விஷயத்தில் அது முஸ்லிம்களின் வளர்ச்சியை விரும்பவில்லை என தெளிவாக அறிவித்துள்ளது. ஆனால் முஸ் லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங் குவது பற்றி அரசியல் கட்சிகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்...” எனக் கூறியுள்ளார்.

“அரசியல் ஒதுக்கீடு வழங்க வேண்டியது அரசியல் கட்சிக ளின் தனியுரிமை. முஸ்லிம்க ளுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி அரசியல் கட்சி கள் தீவிரமாக யோசிக்குமேயா னால் முஸ்லிம்கள் முன்னேற்றம் காண்பார்கள். தங்களது உரிமைக ளைப் பெறுவார்கள்.

4.5 சதவீத இட ஒதுக்கீடு என்று அளித்து முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது காங்கிரஸ். வெறும் 4.5 சதவீதம் கொடுத்து விட்டு முஸ்லிம்களின் 12.5 சதவீத வாக்குளை அறுவடை செய்ய முயற்சிக்கிறது காங்கிரஸ்.

மேலும் முஸ்லிம்கள் தங்கள் மக்கள் தொகை சதவீதத்திற் கேற்ப இட ஒதுக்கீட்டு கோரிக் கையை எழுப்ப வேண்டும். அரசியலில் வலிமை பெறுவதின் மூலமே முஸ்லிம்கள் ஜனநாயகத் தின் பயன்களை அடைய முடி யும்...” எனத் தெரிவிக்கிறார் கத் தார்.

முஸ்லிம்களுக்காக கத்தார் எழுப்பும் குரல் நியாயமானது தான். 4.5 சதவீத இட ஒதுக் கீட்டை கொடுத்து அதிலும் பிற சிறுபான்மை சமூகங்களையும் இணைத்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் கிடைக்கா மல் ஆக்கியுள்ளது மத்திய காங்கி ரஸ் அரசு.

இந்த 4.5 சதவீதத்தில் அடங் கும் இதர சமூகமான பார்சிகள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தைவிட கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலையில் மேம் பட்டே இருக்கிறார்கள். ஆயினும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் கிடைத்து விட்ட தைப்போல பாஜககூப் பாடு போடுகிறது.

கத்தார் சொல்வதைப்போல, மக்கள் தொகை அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் அவர்களுக்கு பய ணுன்டு. ஆனால் யதார்த்தத்தில், வாராமல் வந்த மாமணிபோல் வந்த 4.5 சதவீத இட ஒதுக்கீடுக் கும் கேடு வந்து விட்டதே. இது யார் குற்றம்?

- ஹிதாயா

Pin It