முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு விஷயத்தில் ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு அப்படி என்ன அதிருப்தி என்று தெரியவில்லை. தொடர்ந்து பலமுறை முஸ் லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு அது தடை விதித்தே வந்திருக் கிறது.

2004ல் ஆந்திர சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என வாக்குறுதி அளித்தார்.

காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில் முஸ்லிம்க ளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வழங்கினார் முதல்வராகப் பொறுப்பேற்ற ராஜசேகர ரெட்டி. அதுவும் மதச் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு என்று அறிவித்தே இந்த இட ஒதுக்கீட்டை வழங்கி னார்.

இந்த இட ஒதுக்கீட்டிற்கான அரசு ஆணை ஜூலை 7, 2004ல் வெளியிடப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்த உயர் நீதி மன்றம் இந்த இட ஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி ரத்து செய்தது.

இதனையடுத்து, பிற்படுத்தப் பட்ட வகுப்பிற்குள் (முஸ்லிம்க ளுக்கு) உள் ஒதுக்கீடு வழங்கும் முயற்சியாக, முஸ்லிம்களின் நிலை குறித்து புதிய ஆய்வை மேற்கொள்ளுமாறு ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு உத்திரவிட்டது ராஜசேகர ரெட்டி அரசு.

பின்னர் இந்த ஆய்வறிக் கையின் அடிப்படையில் ஜூன் 2005ல் ஒரு அவசரச் சட்டத் தைப் பிறப்பித்து கல்வி மற்றும் மாநில அரசின் வேலை வாய்ப் புகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

தொடர்ந்து இந்த இட ஒதுக் கீட்டை உறுதிப்படுத்த ஆந்திர சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டபோது மீண் டும் ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நவம் பர் 2005ல் ஆந்திர உயர் நீதிமன் றம் அரசியல் அமைப்புக்கு எதிராகவும் மத அடிப்படையில் இருப்பதாகவும் கூறி இந்த புதிய சட்டத்தை ரத்து செய்தது.

உயர் நீதிமன்றத்தின் ரத்து நடவடிக்கையைத் தொடர்ந்து முஸ்லிம்களின் உள் ஒதுக்கீட் டிற்கு புத்துயிர் ஊட்டும் நடவ டிக்கையாக சமூக மற்றும் கல்வி நிலையில் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்காக 5 சதவீத ஒதுக்கீட்டை இன்னொரு சட்ட மசோதா மூலம் கொண்டு வந்து ஆகஸ்ட் 2007ல் சட்ட மாக்கி யது ராஜசேகர ரெட்டி அரசு.

இதற்கு முன்னதாக, எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து 5லிருந்து 4 சதவீத உள் ஒதுக்கீடாக குறைத்து சட் டம் இயற்றியிருந்தது அரசு. இதற்கு எதிராகவும் தொடுக்கப் பட்ட வழக்கில் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து மெஜாரிட்டி நீதிபதிகளின் கருத்து என்று இந்த சட்டத்தை யும் செல்லாததாக்கியது நீதிமன் றம்.

தனது முயற்சியில் தளராத ஆந்திர அரசு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற முன் னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையி லான பெஞ்ச் மேல்முறையீ ட்டை ஏற்றுக் கொண்டு முஸ் லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை மாநில அரசு இயற்றிய சட்ட அட்டவணைப் பட்டியலில் இருக்கின்றபடியே தொடரலாம் என அனுமதித் தது.

முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்கிற வகையில் இந் தச் சட்டம் இன்றுவரை ஆந்தி ரப் பிரதேசத்தில் நடைமுறை யில் இருக்கிறது.

இந்நிலையில் மத்திய அரசு முஸ்லிம்களுக்கு வழங்கிய 4.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த ஆந்திரப் பிர தேச பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத் தலைவர் கிருஷ்ணய்யா,

“(ஆந்திர) முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீடு குறிப்பாக முஸ்லிம்க ளுக்காகவே (தனி ஒதுக்கீடாக) வழங்கப்பட்டிருக்கிறது. இதனை நாங்கள் எதிர்க்க வில்லை. அதே சமயம், மத்திய அரசால் கடந்த டிசம்பர் 22, 2011 அன்று வழங் கப்பட்டுள்ள 4.5 சதவீத இட ஒதுக் கீடு தொடர்பான அலுவலக குறிப்பாணை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை துண்டாடுகிறது. இதனை நாங் கள் அனுமதிக்க மாட்டோம்...” என்கிறார்.

ஆந்திர உயர் நீதிமன்ற தீர்ப் பையடுத்து கருத்து கூறியுள்ள ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கட் சியின் தலைவரான போட்ஸô சத்திய நாராயணா, “ஆந்திர முஸ்லிம்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆந்திர அரசு அவர்களுக்கு கொடுத்திருக்கும் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு மாநில அளவில் தொடரும். அதே சமயம், முஸ்லிம்களுக் கான மத் திய அரசு வழங்கிய 4.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்தானது வருத் தத்திற்குரியது.

முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என மத் திய அரசுக்கு ஆந்திர அரசு ரிப் போர்ட் அனுப்பியிருக்கிறது. ஆந்திர உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யும் என சல்மான் குர்ஷித் அறிவித்திருக்கிறார்...” என்று தெரிவித்திருக்கிறார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்திருப்பதோடு, காங்கி ரஸ் அரசை கடுமையாக தாக்கி யிருக்கும் மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாத்துதீன் உவை ஸியோ,

“சிறுபான்மையினரின் இட ஒதுக்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி அலட்சியமாக நடந்து கொண்டிருக்கிறது. சின்னச் சின்ன வழக்குகளுக்கெல்லாம் அட்டார்னி ஜெனரலை வழக் காட அனுப்பும் மத்திய அரசு, சிறுபான்மையினரின் இட ஒதுக்கீடு குறித்த விஷயத்திற்கு மட்டும் துணை அட்டார்னி ஜெனரலை அனுப்பி வைத்திருக் கிறது.

மத்திய அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி ஆந் திர உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை வாங்கி, ஐ.ஐ.டி. மற்றும் இதர மத்திய கல்வி நிறுவனங் களில் சேர்க்கைக்காக காத்தி ருக்கும் சிறுபான்மை மாணவர் களை பாதுகாக்க முன் வர வேண்டும்...” எனத் தெரிவித்தி ருக்கிறார்.

முஸ்லிம்களின் பின் தங்கிய நிலையை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பித்து அதன் மூலம் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மத் திய அரசு முன் வர வேண்டும். இதை விடுத்து ஓ.பி.சி., பி.பி.சி. என்பதெல்லாம் சர்ச்சையைத் தான் உருவாக்கும்.

- ஹிதாயா

மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்துக!

ஆந்திர உயர் நீதிமன்றம் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் சூழலில், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச முஸ்லிம் இட ஒதுக்கீடு முன்னணி என்ற அமைப்பு முஸ்லிம்களில் பின் தங்கியுள்ள வகுப்பின ருக்கு ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அடிப்படையில் 10 சத வீத தனி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இதற்காக அரசியல் அமைப்பில் தேவையான திருத் தங்களை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வமைப்பின் தலைவரான முஹம்மது இஃப்தி காருத்தீன், “ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கெடு வாய்ப் பாக அமைந்திருக்கிறது. சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு அவர்களின் பின் தங்கிய அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது. மத அடிப்படையில் அல்ல.

மத்திய அரசு இந்த வழக்கில் அஜாக்கிரதையாக இருந்திருக் கிறது. அது போதிய வாதங்களை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் முன் வைக்கவில்லை. துணை அட்டார்னி ஜெனரல், சிறு பான்மை முஸ்லிம்களின் பின் தங்கிய நிலையை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்களை முன் வைக்கவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ள னர். இதுவே சிறுபான்மை இட ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசின் அலட்சியப் போக்கிற்கு சான்றாக இருக்கிறது...” என தெரிவித்துள்ளார்.

Pin It