நெல்லை மாவட்டம் ஏர்வாடி டவுன் பஞ்சாயத்தில் உள்ள கிராம துணை சுகா தார நிலையம் முன்பாக கிராம செவிலியர்களை கண்டித்து வைக்கப்பட்டுள்ள பேனர் அந்த வட்டார அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அரசின் சுகாதாரத்துறை சார்பாக கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலை யங்களில் தொடர்ந்து 24 மணி நேரமும் அந்த வட்டார மக்களுக்கு மருத்துவ சேவை கிடைப்பதற்காக மருத்துவர்க ளையும், செவிலியர்களையும் அரசு பணி நியமனம் செய்துள் ளது.

இந்த சுகாதார நிலையங்களை கிராமப்புற பெண்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வீடுகளுக்கே சென்று ஆலோசனைகள் கூறவும், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் கிடைப்பதற்காக உதவிகளை செய்வதற் காகவும் தனித் தனியே செவிலியர்களை அரசாங்கம் நியமித்துள் ளது.

ஆனால் கிராமப்புறமக்களின் இயலாமை, அறியாமையைப் புரிந்து கொண்டுள்ள மருத்துவர் களும், செவிலியர்களும் தங்கள் பணியை சரியாக நிறைவேற்றா மல் அம்மக்களை அலட்சியப்ப டுத்தி அலைக்கழிக்கின்றனர்.

சுகாதார நிலைய மருத்துவர் கள் பேருக்கு காலையில் தலை யாட்டிவிட்டு செல்வதோடு சரி. அதன் பிறகு அடுத்த நாள் காலை யில்தான் மறுபடியும் தலை காட்டுவதற்காக வருகின்றனர்.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி அவசர நேரங்களில் முதலுதவி யும் கிட்டாமல் நகர்ப்புற மருத் துவமனைக்கு செல்லும்போது கடுமையாக பாதிக்கப்படுகின்ற னர். உயிரிழப்புகளும் சில நேரம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவர்களின் நிலை இது வென்றால் செவிலியர்கள் படுத் தும்பாடோ சொல்லி மாளாது. கிராமப்புற செவிலியர்கள் தாங் கள் எந்தப் பகுதியில் பணிபுரிய வேண்டுமோ அந்தப் பகுதியிலே தங்கி இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது.

ஆனால் ஏர்வாடி பகுதியில் பணியாற்றும் கிராம செவிலியர் சுப்புலட்சுமி அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புளியஞ்சுவனம் கிரா மத்தில் தங்கி உள்ளார். இத னால் அவசர காலங்களில் இவருடைய உதவி பெண்க ளுக்கு கிடைப்பதில்லை.

மேலும் அரசாங்கம் கர்ப் பிணிப் பெண்களுக்கு வழங் கும் சலுகைகளை பெறுவதற் காக அந்த வட்டாரப் பெண் கள் செவிலியர் சுப்புலட்சு மியை அணுகும்போதெல் லாம் வி.ஏ.ஓ.வைப் பார்; ஆர். ஐ.யை பார்; தாசில் தாரைப் பார் என்று அலைக்கழித்து வந்துள் ளார்.

கிராமப்புறங்களுக்கு நேரடி யாக செல்ல வேண்டிய சுப்பு லட்சுமி அங்கு செல்லாமல் ஒவ் வொன்றுக்கும் தன்னைச் சந்திக்க புளியஞ்சுவனம் கிராமத்திற்கு வருமாறு அழிச்சாட்டியம் செய் துள்ளார்.

இதனால் பெருந்துன்பம் அனுபவித்த அப்பகுதி கர்ப்பி ணிப் பெண்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏர்வாடி கிளை நிர்வா கிகள் சித்திக் மற்றும் முஹம்மது சாலிஹ் ஆகியோரிடம் முறை யிட்டுள்ளனர். இதனையடுத்து செவிலியர் சுப்புலட்சுமியை நேர டியாக சந்தித்து பேசிய ஐஎன் டிஜே நிர்வாகிகள், “ஏன் கர்ப்பி ணிப் பெண்களை அலைக்கழிக்கி றீர்கள்?'' என்று கேட்டபோது, “நான் கவர் மென்ட் சர்வெண்ட். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. யாரை வேண்டுமானா லும் கூப்பிடுங்கள். எங்கே வேண்டுமானாலும் போங்கள். என்னை ஒன்றும் செய்துவிட முடியாது...'' என்று எகத்தாள மாக பேசியுள்ளார்.

கிராம செவிலியரின் திமிர் பேச்சிற்கு பதிலடி கொடுப்பதற் காக ஐஎன்டிஜே நிர்வாகிகள் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளிடமும், சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணனிட மும் புகார் மனு கொடுத்தது மட்டுமல்லாமல் துணை சுகாதார நிலையம் எதிரிலேயே செவிலி யரை கண்டித்து பேனரும் வைத் தனர்.

ஐஎன்டிஜேவின் அதிரடியால் மிரண்டு போன வட்டார சுகா தார இயக்குனர் சாகுல் ஹமீது, பகுதி சுகாதார ஆய்வாளர் சிதம் பரம் ஆகியோர் நேரடியாக ஏர் வாடி கிராமத்திற்கே வந்து ஐஎன் டிஜே நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின்போது, “சுகாதார நிலையத்தில் மருத் துவர்கள் பணிக்கு சரியாக வராமல் இருப்பதையும், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் உதவிகள் சரி யாக கிடைப்பதற்கு உதவிகள் செய்ய வேண்டிய செவிலியர் கள் அப்பெண்களை அலைக் கழிப்பதையும் ஆதாரத்து டன் எடுத்துக் கூறினர்.

இவை அனைத்தையும் கவனமாகக் கேட்டு குறித்துக் கொண்ட அதிகாரிகள் விரை வில் அனைத்தையும் சரி செய்வ தாகவும், தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்த னர். இதனை அடுத்து பரபரப்பு அடங்கி சகஜ நிலை திரும்பியுள் ளது ஏர்வாடியில்!

- அபு சுபஹான்

Pin It