"வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!' என்பது திராவிட இயக்கத்தின் பிரபலமான பிரச்சார முழக்கம். ஆனால் கால் நூற் றாண்டுகளுக்கும் மேலான திராவிட இயக்கங்களின் தமிழக ஆட்சியில் சென்னை மாநகரத்தை பொறுத்த வரை வடக்கு வாடுகிறது - தெற்கு தெம்பாக இருக்கி றது என்பது மறுக்க முடியாத உண்மை.

அண்ணா தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், டைடல் பார்க் என்று தென் சென்னை ஹைடெக் சிட்டியாக ராக்கெட் வேகத்தில் முன்னே றிக் கொண்டிருக்கும் வேளை யில், தொழிற்சாலை புகைகள், தெருவில் ஓடும் கழிவு நீர், சுகா தாரமற்ற குடிசைப் பகுதிகள் என்று வட சென்னை நாறிக் கொண்டிருக்கிறது.

சுதந்திரமடைந்த அறுபது ஆண்டுகளில் தென் சென்னைப் பகுதியில் பல பொறியியல் கல் லூரிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் வட சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரி கூட கிடையாது என்பதே வட சென் னைப் பகுதியின் யதார்த்த நிலையை எடுத்துக் காட்டும்.

புதிய வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் வட சென்னைப் பகுதியில் நிறைவேற்றப்படாத நிலையில் நீண்ட காலமாக வட சென்னைப் பகுதியில் இருந்து வரும் ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்றக் கோரும் மக்களின் கோரிக் கையை மத்திய அரசு புறக்க ணித்து வருவது வட சென்னை மக்களிடையே கோபத்தை ஏற்படுத் தியுள்ளது.

ராயபுரம் ரயில் நிலையம் நூற் றைம்பது ஆண்டுகள் பழமையா னதாகும். ஆங்கிலேயர்கள் வடக் கில் கொல்கத்தாவிற்கு அடுத்தப டியாக இரண்டாவதாக சென் னையில் நிர்மாணித்தது ராயபு ரம் ரயில் நிலையம்தான்.

இது தவிர, ராயபுரம் ரயில் நிலையம் தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமைக்கும் உரியது.

1856ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி இந்த ரயில் நிலையம் துவங்கப்பட்டது. இதனை அப் போதைய கவர்னர் ஹாரிஸ் திறந்து வைத்தார். இங்கிருந்து புறப்பட்ட முதல் ரயில் வாலாஜா பாத் ரயில் நிலையம்வரை சென் றது. ஆங்கிலேயர்கள், அதிகாரி கள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னூறு பேர் இந்த ரயிலில் பயணித்தனர்.

அப்போது முதல் 1873ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல் நிலையம் துவங்கப்படுவதுவரை 17 ஆண்டுகள் வரை ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்தே அனைத்து ரயில்களும் இயக்கப் பட்டன.

அதன் பிறகு ராயபுரம் ரயில் நிலையத்தின் முக்கியத்தும் மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு இன்று ரயில் பெட்டிகளை பழுது பார்க்கும் பணிமனையாக மாற் றப்பட்டு வருகிறது.

1873ம் ஆண்டு ஆறு மீட்டர் கேஜ் வழித்தடங்களுடன் துவங் கப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இன்று 15 பிராட்கேஜ் வழித்தடங்களுடன் முன்னேற்றம் பெற்றுள்ளது.

1906ம் ஆண்டு மூன்று மீட்டர் கேஜ் வழித்தடங்களுடன் துவங் கப்பட்ட எழும்பூர் ரயில் நிலை யம் ஒன்பது பிராட்கேஜ் வழித் தடங்களுடன் வளர்ச்சி பெற்றுள் ளது.

அண்மையில் துவங்கப்பட்ட கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் சரக் குப் பெட்டக முனையமாக வளர்ச்சி கண் டுள்ளது.

ஆனால் 1856 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையம் எந்த வளர்ச்சியும் காணாமல் முடக்கப் பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் ராயபுரம் ரயில் நிலை யத்தை முனையமாக மாற்றக் கோரி ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ரயில்களை இயக்குவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் 7 ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மாற்றப் பட்டுள்ளது.

இதன் காரணமாக இட நெருக்கடி ஏற்பட்டதால் எழும் பூர் ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, இராம நாதபுரம், கன்னியாகுமரி செல் லும் ரயில்களை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படு வதற்கான பணிகளை தென்னக ரயில்வே மேற்கொண்டது.

இதனால் ஆவேசமடைந்த வட சென்னை வாழ் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங் கள், உண்ணாவிரதம், ஊர்வலங் கள் என்று போராட்ட வியூகங் களை வேகப்படுத்தினர்.

மக்களின் போராட்டத்திற்கு செவி சாய்த்த முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, 2007ம் ஆண்டு ராயபுரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் இன்ஜின் பழுது பார்க்கும் பணிமனை துவக்க விழா நிகழ்ச் சியின்போது, “வட சென்னை வாசிகளின் நியாயமான கோரிக் கையை ஏற்று வடக்கே செல்லும் ரயில்கள் ராயபுரம் ரயில் நிலை யத்திலிருந்து இயக்கப்படும்...'' என்று அறிவித்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலா மீட்டர் தூரத்திலும், எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 4.5 கிலோ மீட்டர் தூரத்திலும் ராய புரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ஆனால் தாம்பரம் ரயில் நிலையம் 32 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

தாம்பரத்தில் இறங்கும் பயணிகள் சென்னை மாநகருக்குள் வர வேண்டுமென் றால் தங்களுடைய சுமைகளுடன் வேறு நடைமேடைகளுக்கு பயணிக்க வேண்டும். அல்லது ரயில் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக ஆட்டோவிற்கும், டாக் ஸிகளுக்கும் செலவழிக்க வேண்டி வரும். அது மட்டுமல்லாது கால விரயமும் ஏற்ப டும்.

எழும்பூரிலிருந்து தினமும் 23 ரயில்கள் தென் மாவட்டங்கள் நோக்கி செல்கின்றன. இவைகளில் சுமார் 35,000 பேர் மட்டுமே தாம்பரத்தில் இறங்குகின்றனர். தி.நகரில் 12,000 பேரும், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் எழும்பூரிலும் இறங்குகிறார்கள். முனையம் தாம்பரத்திற்கு மாற்றப்படும் பட்சத்தில் இவர்கள் அனைவரும் மின்சார ரயில்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் அன்றாடம் அலுவலகம் செல்வ தற்காக மின் ரயில்களில் பயணிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

மேற்கண்ட சாதகமான அம்சங்களை வட சென்னை வாழ் மக்கள் ரயில்வே நிர்வாகத்திடம் எடுத்துச் சொன்னபோதும், ஆதாரப்பூர்வமாக விவரித்த பிறகும் உப்பு சப்பில்லாத காரணங்களைக் கூறி ரயில் முனையத்தை தாம்பரத்திற்கு கொண்டு செல்ல முயன்று வருகின்றனர் அதிகாரிகள்.

ராயபுரம் ரயில் நிலையத்தில் போதிய இட வசதி இல்லை. உயரமான கட்டடங்கள் இருக்கின்றன. ராயபுரம் மேம்பாலம் இடைஞ்சலாக உள்ளது என்பன போன்ற வைதான் ராயபுரம் ரயில் நிலையத்தை ஆய்வு செய்த அதிகாரிகளும், ரயில்வே நிர் வாகமும் சொன்ன குறைபாடுகள்.

ராயபுரம் ரயில் நிலையம் 1015 மீட்டர் நீளமும், 420 மீட்டர் அகலமும் கொண்டது. ராயபுரம் ரயில் நிலையத்தின் உள்ளே இருந்த குடியிருப்புகள் மாற்றப்பட்டு விட் டது. குடோனுக்கு வாடகைக்கு விடப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்தாகிவிட்டது. வாடகைக்கு இருந்த திருமலை கெமிக்கல்ஸின் வாட கைக் காலம் காலாவதியாகிவிட்டது. அங்கி ருந்த ரயில்வே பிரஸ் அலுவலகம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது.

இந்தப் பகுதிகளை சீர்படுத்தினால் 72 ஏக்கர் நிலம் கிடைக்கும். இதன் மூலம் 17 ரயில் வழித்தடங்கள் அமைக்க முடியும். இது எழும்பூர் ரயில் நிலையத்தை விட இரண்டு மடங்கு அதிகமான பகுதியாகும்.

அடுத்த காரணமான உயரமான கட்டடங்கள் இருக்கின்றன என்பது எவ்வளவு பொய்யானது என்று எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதிகளை சுற்றிப் பார்த்து விட்டு ராயபுரம் ரயில் நிலையப் பகுதியை பார்வையிட்டாலே தெரிந்து விடும்.

ராயபுரம் ரயில்வே பாலம் இருப்பது இடைஞ்சல் என்றால் அதனை இடித்து விட்டு புதிய பாலத்தையோ, சுரங்கப் பாதை யையோ உருவாக்கிக் கொள்ளலாம்.

இவற்றையெல்லாம் மீறி ரயில்வே அதி காரிகள் பிடிவாதத்துடன் தாம்பரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக அறிவித்துள்ளனர். மத்திய அரசும் அதற் கான நிதியை ஒதுக்கி ஆயத் தப் பணிகள் நடந்தேறி வரு கின்றன.

தாம்பரம் பகுதியில் மேல் தட்டு வர்க்கத்தினர் வசிக்கின் றனர். வடசென்னைப் பகுதி யில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப் பட்ட தலித், பிற்படுத்தப் பட்ட மக்கள் வசிக்கின்ற னர். சாதகமான அம்சங்கள் குறைவாக உள்ள தாம்பரம் ரயில் நிலையம் மூன்றா வது முனையமாக மாற்றப்பட் டுள்ளது.

இது, அடித்தட்டு மக்களாக இருப்பதால்தான் நாம் புறக்கணிக்கப்படுகிறோமோ என்ற எண்ணத்தை வட சென்னை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இருப் பினும் தங்க ளுடைய முயற்சியில் தளராத வட சென்னை வாழ் மக்கள் ராயபுரம் ரயில் முனையத்தை நான்காவது முனையமாக அறிவியுங்கள் என்ற கோரிக்கையுடன் தென் னக ரயில்வே நிர்வாகத்தையும், மத்திய அரசை நிர்ப்பந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நடை பெற்றது. மத்திய ஆட்சியில் திராவிட கட்சி கள் கூட்டணிக் கட்சிகளாக தொடர்ந்து பங்கேற்று வருகின்றன.

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்றகோஷத்தை வைத்து காங்கிரûஸ ஆட்சிக் கட்டிலிலிருந்து திராவிடக் கட்சி கள் வெளியேற்றின. தொடர்ந்து ராயபுரம் ரயில் நிலையம் 4வது முனையமாக அறி விக்கப்படுவது புறக்கணிக்கப்படுமானால் எல்லா அரசியல் கட்சிகளையும் வட சென்னை வாழ் மக்கள் தேர்தல் களத்தில் இருந்து புறக்கணித்து விடுவார்கள்.

அரசுக்கு வேண்டுகோள்!

மக்களின் வேண்டுகோளை ஏற்று ராயபுரம் ரயில் நிலையம் முனையமாக அறிவிக்கப்படுமானால் இங்கிருந்து 72 ரயில்களை தினந்தோறும் வட மாநிலங்களுக்கு இயக்க முடியும். நாள் தோறும் 3 லட்சம் பயணிகள் பயணிக்க முடியும்.

பல வகைகளிலும் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு வரும் வட சென்னை மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் விரும்பினால் ரயில் நிலையத்தை நான் காவது முனையமாக மாற்றுவதற்கான முயற்சியை தொடங்க வேண்டும். இது ஒட்டுமொத்த வட சென்னை மக்களின் கோரிக்கை.

Pin It