மூன்றாண்டு முழுமை பெற்றது பாசக ஆட்சி

முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் மக்களாட்சி

பொளாதாரம் வேலைவாய்ப்பில் பெரும் வீழ்ச்சி

பொருளற்ற மதக்கொள்கையே மோடியின் மூச்சு

அகண்டபாரதமும் அயோத்திராமனுமே இவர்களின் பேச்சு

அன்றாடம் சாகின்ற விவசாயியின் வாழ்வோபாழாச்சு

இராமராச்சியமும் மனுதருமமுமே இவர்களின் போக்கு

இந்துநாடென பெயரித்துணியுது இவர்களின் நாக்கு

இந்தியாவில் இந்திதான் ஆட்சிஅலுவல் மொழிஎன்று

தொந்திபார்ப்பனரின் சூழ்ச்சியது திணிக்கும் தமிழாகண்விழி

தேசியஇன மக்கள்நாம் ஒன்றாய்இதை எதிர்ப்போம்

அவரவர் தாய்மொழியில் எல்லாம் கற்போம்

மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாத அரசு

பசுவைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றுது

நாடே போர்க்களமாய் மாறப் போகுது

மாடே கொம்பால் தடையை கிழிக்கப்போகுது

எதிரிகளின் பலம்நமை நாளும் சுருக்குது

உதிரிகளாய் நாம்! என்று ஒன்றாவது

கட்சியையும் கொடியையும் தூக்கி எறிவோம்

கட்டாய காலத்தேவை தமிழர்நாம் ஒரணியாவோம்

விரம்செறிந்த காசுமீரு நமக்கு வழிகாட்டுது

உரம் இடுவோம் மண்மீட்க இளைஞர்களுக்கு.

மார்க்சியம் மட்டுமே மானுடத்தின் விடுதலை

பெரியார் அம்பேத்கரே ஆரியத்தின் எதிர்நிலை

விடுதலை முழக்கம் விண்ணை முட்டணும்

இடுஎல்லைக் கோடு நாம்பறை கொட்டணும்.

முட்டி மோதி இந்தியத்தை உடைப்போம்

கட்டி நாமே தமிழகத்தை ஆக்குவோம்!

Pin It