(சாகித்ய அகாதமியின் பாரதி - 125 மூன்று நாள் தேசிய விழாவில் வாசிக்கப்பட்ட சில கவிதைகளின் தமிழாக்கம்)

ஜம்பனா அமிரசிந்தா (தெலுங்கு)

பெட்ரோமாக்ஸ் சுமப்பவர்கள்

யார் இவர்கள்? யார் இவர்கள்?

அவர்கள் எங்கே போகிறார்கள்

காலம் காலமாக, இன்னும்

தலையில் விளக்குகளை சுமக்கிறார்கள்

இவைகளுக்கு அறியாமல் இவைகளுக்கு மற்றும் அவைகளுக்கு

அவர்களின் சொந்த நிழலைக்கூட.

புகழ்பெற்ற கவிஞர்களும்

இந்த நாடோடி கீதங்களை மறந்து விட்டார்கள்

 

பெட்ரோமாக்சுகளின் சூட்டை தலையில் சுமந்து

பசி வயிறுகளில் எரியும் நெருப்பு

வாழ்க்கை முழுவதும் கொதித்து எரிந்தும்

ஆவியாகிக் கொண்டு

பகலும் இரவும் அவர்களின் வயிறுகளில்

பசி என்னும் பிள்ளையை பிரசவித்து

செல்வந்தர்களும், கொள்ளையர்களும்

தேர்தல் வெற்றியாளர்களும்

விளக்கேந்துவோரின் வெளிச்சத்தில்

பளபளக்கிறார்கள்

யார் இவர்கள், யார் இவர்கள்

வெற்றுக் கண்களுக்குத் தெரியாதவர்கள்

பெட்ரோமாக்ஸ் சுமப்பவர்கள் இருட்டில்

இருட்டிலே இருந்தும் எப்போதும்

இருட்டில் மெதுவாக மூழ்கியும் புதைக்கப்பட்டும்

எப்போதும் மறைக்கப்பட்டவர்களாய்

 

(தமிழில் : சு. சுபமுகி)
Pin It