பிரபல நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதி எழுதி நூலாக வெளிவந்த "சர்க்கரை" நாவல் இப்போது மலையாள இலக்கிய இதழாகிய 'தேசாபிமானி வாரிக"யில் நவம்பர் 22ம்தேதிய இதழிலிருந்து "கரிம்பு" என்கிற பெயரில் ஒரு தொடராக வெளி வருகிறது.

இந்நாவலையும், செம்மலரில் ஆரம்ப காலத்தில் தொடர் நாவலாக கு.சின்னப்பபாரதி எழுதி, பின்னர் நூலாக வெளிவந்த "தாகம்" நாவலையும் சேர்த்து மதிப்பீடு செய்து, பாராட்டி சின்னப்ப பாரதி" என்ற தலைப்பில் இஎம்எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் 1993 -இல் கட்டுரையொன்று எழுதியிருந்தார். இவ்விரு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்யப்பட்டு நூலாக வெளிவந்தன.

இஎம்எஸ்- ஸின் இந்த அறிமுகக் கட்டுரையோடு சர்க்கரை நாவல் 'கரிம்பாக' மலையாள தேசாபிமானி வாரிக'யில் வெளிவரத் துவங்கியுள்ளது.

"தமிழ்நாட்டில் வர்க்க உணர்வும், சங்கமும் வளர்ச்சிப் பெற்று வருவதன் இரண்டு கட்டங்களாகும். தாகமும் சர்க்கையும்" என்று இஎம்எஸ் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

இவ்விரு நாவல்களும் தெலுங்கு "பிரஜாசக்தி" நாளிதழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிந்ததுள்ளது.

 

Pin It