கீற்றில் தேட

kanavu 300

இயக்கம் : இரா. ரவிக்குமார்

எழுத்து : சுப்ரபாரதிமணியன்

மாற்று ஊடக முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருபவர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். உலகப்படங்களையும் தமிழ் உலகக்கு அறிமுகம் செய்து வருபவர். குறும்பட, ஆவணப்படத் துறையிலும் பங்கெடுத்து வருபவர். எட்டாம் வகுப்பு, சூழல் என்னும் குறும்படங்கள் மூலம் குறும்பட உலகில் ஓரிடத்தைப் பிடித்து இருப்பவர் இரா.ரவிக்குமார். இருவரும் இணைந்து அளித்திருக்கும் படம் சுமங்கலி’. எழுத்து சுப்ரபாரதிமணியன். ஒளிப்பதிவு, இயக்கம் இரா.ரவிக்குமார்.

மில் முதலாளிகள் பெண் தொழிலாளர்களுக்கு சுமங்கலிஎன்னும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தி மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்து மூன்றாண்டுக ளுக்குப் பின் தொகை தருவதாகக் கூறி பின்னர் ஏமாற்றி வருகிறது. ஏமாற்றுவது என்பது பெண்களை ஒழுக்கம் கெட்டவள் என குற்றஞ்சுமத்தி வெளியேற்றுவது. இத்திட்டத்தில், இம்மாயவலையில் ஏராளமான பெண்கள் சிக்கியுள்ளனர். இப் பிரச்சினை திருப்பூர் மில்களில் மிகுதியாக நடைமுறையில் உள்ளன. தேநீர் இடைவேளைஎன்னும் நாவல் உட்பட பல படைப்புகளின் மூலம் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் இத்திட்டத்தை எதிர்த்துள்ளார். பெண்களுக்கு புரியச் செய் துள்ளார். கூண்டில் அடைபட்ட பெண் தொழிலாளர்கள்என்னும் கட்டுரைத் தொகுப்பு மூலமும் இச்சுமங்கலிதிட்டத்தை விரிவாக எழுதி அதன் உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளார். இத்திட்டத்தை மனிதத்தன்மையற்றது மற்றும் சுரண்டல் தன்மையானது என்றும் சாடியுள்ளார். இத்துடன் இத்திட்டத்தை மைய மாக்கி சுமங்கலிஎன்னும் தலைப்பிலேயே ஒரு கவிதையும் எழுதியுள்ளார் சுப்ரபாரதிமணியன்.

கவிதையைக் காட்சிப்படுத்தியதே இக்குறும்படம். வரிக்கு வரி அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இரா.ரவிக்குமார். காட்சிகளின் மூலம் வரிக்கு உயிர் கொடுத்துள்ளார். கவிதையின் கருவைச் சிதையாமல் தந்துள்ளார். கவிதை பெண் குரலாக ஒலிக்கிறது. பல பெண்களின் பிரதிநிதியாகி பேசுகிறது. சுமங்கலிதிட்டத்தைக் கூறி முப்பதாயிரம்கனவை ஏற்படுத்தி பெண்களை அழைத்து வந்த தைக் கூறுகிறது. முப்பதாயிரம் தொகையை எத்தனை பெண்கள் வாங்கியிருப்பர் என்னும் வினாவையும் எழுப்புகிறது. தினமும் 16 மணிநேரம் பணி என்றும் மாதத்தில் ஒரு நாளே விடுமுறை என்று உழைப்புச் சுரண்டலையும் சொல்கிறது. ஊருக்குப் போன பெண்களில் பலர் பணிக்கு திரும்பவில்லை என்றும் சுவரேறி தப்பித்துச் சென்று விட்டனர் சிலர் என்றும் கூறுகிறது. பெரும்பாலும் மச்சான்கள் குடித்துவிட்டுத்தான் வருவார்கள் என்பது ஆண்கள் மீதான விமரிசனம்.

சுமங்கலிஎன்னும் அட்டை கழுத்தில் தொங்கவிடப்படுவதை அவமானமாகக் கருதுகிறாள். ஒரு நாயின் கழுத்தில் தொங்கவிடப்பட்டது போல் கூசுகிறாள். சுமங்கலிஎன திட்டத்தின் பேரால் அழைக்கப்பட வேண்டாம் என்றும் உண்மையிலேயே சுமங்கலிஆக விரும்புவதையும் கவிதை விவரிக்கிறது. சுமங்கலி அட்டையை வாங்கிக் கொண்டாலும் சரி என்னும் இறுதி வரி பெண்ணின் கோரிக்கையாய் வெளிப்பட்டுள்ளது. இக் கவிதை சுமங்கலிதிட்டத்தை மறுக் கிறது. உழைப்பைச் சுரண்டும் முதலாளிகளை எதிர்க்கிறது. விழிப்புணர்வை ஊட்டுகிறது. கவிதை வாசிப்பதைவிட காட்சியினூடாக கவிதையைக் கேட்பது தாக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. எழுதிய சுப்ரபாரதிமணியனும் இயக்கிய இரா.ரவிக்குமாரும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்துள்ளனர். உடன் உதவியது சு.சுபமுகி. கவிதையின் நாயகியாக குறும் படத்தில் காணப்படுகிறார். இயல்பாக இயக்கத்துக்குக் கட்டுப்பட்டுள்ளார். படைப்பின் தன்மையை அவரிடம் முழுமையாகக் கொண்டுவர முயன்றுள்ளார். இவர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதையைக் காட்சிப்படுத்துவது குறும்படத் துறையில் புதிதல்ல எனினும் சுமங்கலிஎன்னும் ஏமாற்றுத் திட்டத்தை வெளிச்சப்படுத்தியிருப்பதால் சிறப்புப் பெறுகிறது. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கும் இயக்குனர் இரா.ரவிக்குமாருக்கும் பாராட்டுக்கள். குறும்படத்துறையில் ஒரு கலைக்குடும்பத்தின் வாரிசாக பிரவேசித்திருக்கும் சு.சுபமுகிக்கு வாழ்த்துக்கள். தயாரித்து வழங்கியிருக்கும் திருப்பூர் மக்கள் அமைப்புக்கு நன்றி.

- பொன்.குமார்

(திருப்பூர் மக்கள் அமைப்பு, தாராபுரம் சாலை, திருப்பூர்)

Pin It

இயக்கம் : மணிமேகலை நாகலிங்கம்

இயக்குனர் மணிமேகலை நாகலிங்கத்தின் இரண்டாவது குறும்பட முயற்சியாக குமுறலுடன் வெளியாகியுள்ளது ‘...த்தூ’. அவரது முதல் படைப்பான ஐக்கூ தரிசனத்தில் குறுங்கவிதைகளைக் காட்சிப்படுத்தி சமூக முரண்களைச் சாடி யிருந்தார். ஒவ்வொரு கவிதைக்கான திரையாக்கங்களையும் ஒரே ஒரு ஷாட்டில் சொல்ல முயன்றிருந்த அவரது அந்தப் படைப்பிலக்கியத் திறன் பெரிதும் கவனம் பெற்றது. இம்முறை குறுங்கவிதை போன்றே ஒரு சிறு செய்தியை எடுத்துக் கொண்டு அதைத் தத்துவ விசாரங்களுக்குள் உள்ளாக்கி விரித்து ஊடகக் கதையாகக் கட்டமைத்து திரை இலக்கியம் செய்திருக்கிறார் மணிமேகலை.

எந்த ஒரு பொது ஒழுக்கமும் தனிமனித ஒழுக்கத்திலிருந்தே தொடங்குவதாக அவர் செய்யும் வாதம் ஒரு விதத்தில் சரியானதாகவே படுகிறது. அதாவது, தனி மனித ஒழுக்கத்தைச் சாத்தியப்பட விடாத அரசியல் தர்க்கங்களுக்கு வெளியே நின்று பேசுவதால் அழுத்தம் குறைகிறதே தவிர, ஊர் - சமூகம் - குடும்பம் - தனி மனிதர்கள் என்ற அடக்குமுறை அடிப்படையில் யோசித்தால் ‘...த்தூசரியாகத்தான் துப்பியிருக்கிறது.

தத்துவம் 1 - ‘கடவுளோடு கனவில் புணர்ந்த ஆண்டாளின் மனோபாவம்என்று சித்தாந்த விமர்சனம் பேசும் முதல் காட்சி.

தத்துவம் 2 - ‘முட்டாளோடு வாதம் செய்யாதே, யார் முட்டாள் என்று பார்ப்பவருக்குத் தெரியாதுஎன்று அண்ணனிடம் கதாநாயகன் அடங்கிப் போகும் இரண்டாம் காட்சி.

தத்துவம் 3 - ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடுஎன்பதை - பாத்திரம் அறியாது பிச்சையிட முற்பட்டு, ‘பிச்சை வாங்கிக்கன்னு கெஞ்சுற நிலைமைஎன்று தன்னிறக்கப் படுவதில் சொல்லும் மூன்றாம் காட்சி.

தத்துவம் 4 - ‘எல்லோரும் என்னவர்கள்என்ற நிலையிலும் ஒரு அபலைப் பெண்ணை உடற்பசிக்கு இரையாக்கிக் கொண்ட அவர்களைத் ‘...த்தூவென்று காறி உமிழும் ஞானத் துணிவும், சற்றும் தாமதியாமல் அப்பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு ஒளித்திசை நோக்கி நடந்து தனிமனித ஒழுக்கமே தலையாய ஒழுக்கம்என்று அழுந்தச் சொல்லும் இறுதிக் காட்சி.

கதையின் கனத்திற்கு ஒரு சரியான காரணமும் இருக்கத்தான் செய்கிறது. ‘...த்தூவைக் கருவுற்றுப் பிரசவித்தவர் நவீனத்துவக் கவிஞரும் எழுத்தாளருமான அமிர்தம் சூர்யா. பகுதிநேரக் கடவுளின் நாட்குறிப்பேடுபடித்தவர்கள் அமிர்தம் சூர்யாவின் வீச்சைப் புரிந்திருப்பார்கள். அவரது பிடிக்குள் அடங்காத படைப்புத் திறத்தை படமாக்கத் துணிந்ததே இயக்குனருக்குப் பெருமைதான்.

ஒழுக்கம் போற்றும் முகப்புப் பாடல், திரைநுட்ப ஆளுமைகளை ஓவியங்களாக முகப்பில் வைத்தது என்று குறும்பட எல்லைகளை விரிக்க முயன்றுள்ளார் இயக்குனர். நுட்பமான காட்சிகளுக்கு முயலவில்லையெனினும் தெளிந்த ஒளிப்பதிவு. எண்ணி அளந்து பேசும் வசனங்கள் உரை நடை போலிருப்பினும் கச்சிதம். பார்வையாளனையும் கதைக்குள் பாத்திரமாகச் சிக்க வைத்திருக்கம் திரைக்கதை உத்தி என்று நிறையப் பாராட்டலாம்.

தவிர, தனிமனித ஒழுக்கம் குறித்து இந்த அளவு பேச வேண்டுமா? விபச்சாரமே ஒரு தொழில் முறை அந்தஸ்து நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில் ஒழுக்கத்தின் எல்லைகளை பாலியல் சார்ந்து பேசலாமா? அது எதுவரையென்று எப்படிச் சொல்ல முடியும்? அபலைப் பெண் என்றால் விபச்சாரம் தான் கதியா... பிழைக்க வேறு வழி இல்லையா? அபலைப் பெண்ணுக்கு வாழ்வு தர அவளையே கட்டிக் கொண்டுதானாக வேண்டுமா? இப்படியெல்லாம் ‘...த்தூமீது எதிர் வினையாற்ற முடியும்தான்.

ஆனால் வேலியே பயிரை மேய்ந்தகதையாகக் காவலர்களும், சாமியார் களும், படிப்பாளிகளாகத் தங்களை அறிவித்துக் கொள்ளும் ஞானவான்களும் ஒரு அபலைப் பெண்ணைத் தங்கள் உடற்பசிக்கு இரையாக்குவார்களேயானால் துப்பு ‘...த்தூவென்று - என்று உறுமும் மணிமேகலை நாகலிங்கத்தின் தரவோடு நின்று கொண்டால் யாருக்கும் வேறு கேள்வியில்லை.

மற்றபடி குறும்படங்களுக்கே உரிய தீராப் பிணிகள் இதிலும் உண்டு எனினும், அவை பற்றி(யே)ப் பேசிப்பேசி வயிறு வளர்க்கும் சில குறும்படப் பயிற்சி முகாம்வியாபாரிகள் இருக்கவே இருக்கிறார்கள் என்பதால் அந்த நொதியம்வேலை நமக்கு வேண்டியதில்லை.

- தாண்டவக்கோன்

Pin It

எனக்குப் பிடிக்கிறது மௌனம்

எனது இயக்கம்

உன்னைச் சுற்றியுள்ள போது

வந்த பொழுதும் வராத நாளும்

ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.

வரவேற்பறையில் பேசியவற்றை

படுக்கை அனுமதிப்பதில்லை

எனக்கான வேலைகளில்

சில கணங்கள் மறுக்கிறேன் மௌனத்தை

பழகிய வார்த்தைகளின் முரணில்

மௌனம் கனத்து விடுகிறது.

எனக்குப் பிடிக்கவில்லை

ரணமான நிகழ்வுகளை எழுத

நீ பிடிவாதமாய்

முற்றத்தின் காற்றசைவில்

அடம் பிடிக்கிறாய்,

சாத்தப்பட்ட அறைக்குள்

எரிகின்ற நெருப்பில்

மீதமிருக்கிற ஏக்கங்களை அறியாமல்.

ஒவ்வொரு முறையும்

கண்விழிக்கிறேன் வேறுவழி தெரியாது

குரூரச் சிரிப்பில் மரணித்த மௌனத்தைத் தேடி

Pin It

எனக்கு வயது 43

கறுத்த நிறம்

பருமனான உடல்

குள்ளமான உருவம்

இருந்தாலென்ன

நான் உள்ளே இருக்க மாட்டேன்

ஏனெனில்

வெளியே மழை

மழையில் கரைகிறது என் வயது

எதைக் காண்பித்தும் திரும்பப் பெற முடியாத

எனது பால்யத்தின் கதவுகள்

மழைத் துளியின் சிறு குமிழை

விரல்நுனி தொட்டதும்

மாய உலகென

திறந்து விரிந்து நீள்கிறது

இங்கும் மழை

மேலும் கீழும் ஆட்டி

மழையோடு விளையாடும் என் கைகளுக்கு

இப்போது வயது பத்து விரல்களுக்குள்

பூச்செண்டு குரலால்

அதட்டி உள்ளே அழைக்கும் அம்மா

கைநிறைய வறுத்த புழுங்கல் அரிசி தருகிறாள்

அப்பா தாழம்பூ வாங்கி வர

சவுரி முடி வைத்து

நுனியில் குஞ்சம் தொங்க

பூச்சடை பின்னிவிடுகிறாள்

பட்டுப் பாவாடை சட்டை

தோடு ஜிமிக்கி வளையல்கள் அணிந்து

தோழிகளோடு தட்டாமலை சுற்றுகிறேன்

வீடுகளும் தெருவும் மலையும்

வானமும் தரையும்

ஒன்றையன்று பற்றியபடி

எங்களோடு சுழல்கின்றன

இன்னும் மழை

முத்துக்களைப் பறித்து

மழைக் கம்பிகளால் கோர்த்து

கால்களில் அணிந்து

குதித்துப் பார்க்கிறேன்

கலீர் என்ற ஒலிக்கு

திடுக்கிட்டு நிற்கிறது மழை

என்னை அடையாளம் கண்டு

மீண்டும் குதூகலிக்கிறது

பால்யத்திடமிருந்து

என்னை விடுவிக்கும்

மந்திரம் அறிவீரோ?

--

ஓடுகளம்

கொஞ்ச நேரம் கழித்து

தானே அழைப்பதாகச் சொல்லி

அலைபேசியைத் துண்டித்தவனின்

தூண்டில் சொற்களில் சிக்கிக் கொண்டு

நீண்ட நேரமாக துடித்தபடி என் மீன்கள்

கொஞ்ச நேரம் கழிந்து

வெகுநேரம் ஆகிவிட்டதை

அவன் உணர்ந்திருப்பானா?

எதிலேனும் சிக்கிக்கொண்டிருந்தாலும்

சோதனை அழைப்புகள்

நிமிடத்திற்கொன்றாய் ஒலிக்க

எனக்கும் அலைபேசிக்கும்

ஓடுகளமாகிறது வீடு

(அலைபேசியை சட்டைப் பையில்

வைத்திருக்கும் பாலினமல்ல என்னுடையது)

மனித முகங்கள் தென்பட நேர்கையில்

விருது பெறத் தகுதிவாய்ந்த நடிப்புகளை

உடலுக்கு அணிவித்து கௌரவிக்கிறது

களவு மனம்

இயக்கு

இயங்கு தசைகளால்

முடையப்பட்ட உடல்

கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுங்கள்

ஏற்கனவே

இதில் நிறைய விருதுகள் பெற்றவராகிய நீங்கள்.

--

மயிலிறகு பக்கங்கள்

என் புத்தகத்தில்

ரகசிய பக்கங்கள் என்று எதுவுமில்லை

பால்யத்தில்

ஒளித்து வைத்திருந்த ஒரே ஒரு மயிலிறகு

இப்போது குட்டிபோடத் தொடங்கிவிட்டது

மளமளவென்று

வாங்கி வாங்கி அடுக்க வேண்டும்

நிறைய நிறைய புத்தகங்கள்

பின்னொரு நாள்

நீங்கள் கேள்விப்படக் கூடும்

மயிலிறகுகள் புத்தகங்களான கதைகளையும்

புத்தகங்கள் ஆண்மயிலான கதைகளையும்

ஆண்மயிலுடன் அடர் வனத்திற்குள்

நான் காணாமல் போன கதைகளையும்.

Pin It

அதிகாலைத் தொட்டே

இடைவிடாத சத்தம்

திசைகள் ஒவ்வொன்றிலிருந்து

வெவ்வேறு விதமாய் எழுந்து

காதோரம் வந்து சேர்கையில்

ஒவ்வொன்றின் அசைவும்

அவைகள் பற்றிய பிரக்ஞையும்

கூடவேத் தொடர்ந்து

சுவற்றில் தழுவும் கொடிபோல

படர்ந்து பற்றிக் கொள்கின்றன.

வேலியில் கிரீச்சிடும்

அணில்களின் குதியாட்டமும்

சரசரசெனப் பாய்ந்தோடும்

ஓணான்களின் சலசலப்பும்

சறுகுகளினூடே ஊர்ந்து செல்லும்

பாம்புகளின் குறுகுறுப்பும்

மரக்கிளையிலமர்ந்து கூவும்

மைனாக்களின் பேசுமொழியும்

வீட்டுக்குள் அடிக்கடி வந்து போகும்

அழியாமல் மீதமுள்ள

சிட்டுக்குருவியின் சிறகசைப்பும்

மூலை முடுக்குகளில் ஒளிந்தபடி

எலிகளின் தொடர்பு ஓட்டமும்

கரப்பான், பல்லிகளின் சிறுசிறு அசைவுகளும்

எங்கோ தன் தாய்மையைத் தேடி

கத்துகின்ற கன்றுக்குட்டியின் அலறலும்

வேறு பகுதி நாய் வரவையெதிர்த்து

சதா ஓலமிட்டுக் கொண்டிருக்கும்

பெருத்த நாய்களின் கூட்டமும்

உணவிற்காய் முட்டிமோதி

எங்கோ ஏரிக்கரையோரம்

உறுமிக் கிடக்கும் பன்றிகள்...

என இவைகள் அனைத்தும் கடந்து

உள்ளுக்குள் சதா எந்நேரமும்

ஓடிக் கொண்டிருக்கும்

இடைவிடாத மனபிம்பத்தின்

இரைச்சலின் ஊடே

ஒற்றையில் உறங்கிக் கிடக்கிறது

இன்றைய தினம்

நாலு சுவர்களின் மத்தியில்

எவரும் அறியாதபடி

யாவரும் உணராதபடி

மௌன சாட்சியாய்

இருள் சூழ்ந்தபடி.

Pin It