மரங்களைப் பற்றிக் கேட்டபோது

ஒருவன் பழைய சுவடிகளிலிருந்து மந்திரங்களை முழக்கினான்

ஒருவன் ஒரு கவிதை வாசித்தான்

ஒருவன் ஓர் ஓவியம் கொண்டு வந்தான்

ஒருவன் பூகோள விபரக் குறிப்புகளாலான

பெரிய புத்தகத்தை இழுத்து வந்தான்

ஒருவன் காடுகள் காடுகள் என்று உளறினான்

ஒருவன் உரத்த குரலில் அழுதான்

ஒருவன் கவனமாக புன்னகையுடன் போன்சாய் பூச்சாடி அமைத்தான்

ஒருவன் குழியன்றை தோண்டி அவனாகவே நட்டான்

பிறகு அவனின் கிளைகளில் பறவைகள் கூடுகள் கட்டின

ஆரவாரம் செய்தன கழிவுகளைப் போட்டன

அதன் பொந்துகளை எலிகளும், பாம்புகளும்

வீடாக்கிக் கொண்டன

மற்றும் அதுபோல மிருகங்களும்

மண்புழுக்கள் பட்டாம்பூச்சிகள் மரப்பூச்சிகள்

கொட்டும் தேள், எறும்பு, மரக்கொத்திகளும் முற்றுகையிட்டன

மரத்தைச் சுற்றி வளரும் கொடிகள்

குளிர் ஒளி காற்று மழை விடாது

இரவையும் பகலையும் இம்சித்தன.

பல வருடங்கள் கழிந்து விட்டன

மரத்தைவிட

மனிதனாக இருப்பது

சிரமமானது, அர்த்தமற்றது என்பதை அவன்

உணர்வதற்கு முன்பே.

Pin It