புரட்சி (மக்களின் கோபம்) எரிமலை போன்றது. நிலத்திற்கு அடியில் குமுறிக் குமுறி காலம் எடுத்துத்தான் அது வெடிக்கும் என்கிறார் ஜவகர்லால் நேரு.

பத்தாண்டு காலம் குமுறிக் கொதித்திருந்த இந்திய ஒன்றிய மக்களின் கோபம் 04-06-2024 அன்று வெடித்துச் சிதறியது, தேர்தல் முடிவுகளாக.

இந்தியா கூட்டணியின்`கோடு உயர்ந்தது'. காவிகளின் `குன்றம் தாழ்ந்தது'.

எந்த வடிவத்தில் இருந்தாலும் சர்வாதிகாரத்திற்கும், அடிமைச் சமூகத்திற்குமான சமரசமற்ற போரால்தான் ஜனநாயத்தை மீட்டெடுக்க முடியும் என்ற மையப்புள்ளியை ரூசோவின்`சமுதாய ஒப்பந்தத்`தில் பார்க்க முடிகிறது.

அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் இருந்த மோடி, தன்நிலை மறந்தும், தனித்த ஆணவத்துடன் பேசியும், செயல்பட்ட மோடியை, இன்று சந்திரபாபு நாயுடுவிடம் கையேந்த வைத்தனர் மக்கள்.

 சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் நடத்திய இத்தேர்தல் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராகவே அமைந்து விட்டது.

வென்றனர் மக்கள்! வீழ்ந்தனர் காவிகள்!

ஆயுதப் போர் நடத்தி மன்னர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது பிரஞ்சுப் புரட்சி!

அறிவுப் புரட்சியால்`மன்னர்' மோடியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது ஒன்றியத் தேர்தல் புரட்சி!

ஒன்றியம் எல்லாம் ஒலிக்க வேண்டும், "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்"!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It