எவ்வளவு மோசமான ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியை நடத்தியிருக்கும் பா.ஜ.கவின் பிரதமர் மோடி, இன்று ஆடிப்போய் இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்து ராஷ்டிர ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கில் மதவெறி, இனவெறி, வெறுப்பரசியல், தகுதித் தேர்வுகள், நீட் என்று பெரும்பாலான சமூக மானவர்களின் கல்விக் கழுத்தை நெறித்த மோடியின் ‘ஏழைமகன்’ வேஷம் கலைந்துவிட்டது மக்களிடம்.

தமிழ்நாட்டில் தமிழ், தமிழ் என்று ஆடக் கூடாத ஆட்டத்தை எல்லாம் ஆடி, இன்று அவரே ‘ஆடி’ப் போய் இருக்கிறார், தோல்வி பயத்தில்.

தமிழ்நாடு அரசின் மக்கள் நிவாரண உதவியைக் கேவலாமாகப் பேசிய, ஆணவம் தலைக்கேறிய நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க என்னிடம் பணம் இல்லை என்று கூச்சம் இல்லாமல் சொல்கிறார்.

தேர்தல் பத்திரங்களைத் திரைமறைவில் வைத்துக் கொண்டு பா.ஜ.க மோடி அரசு கார்ப்பரேட்டுகளிடம் மிரட்டி வாங்கிய பணக் கொள்ளை, உச்சநீதி மன்ற உத்தரவால் மக்கள் முன் அம்பலப்பட்டு விட்டது.

வெள்ள நிவாரண நிதியென்று இன்னமும் ஒரு செப்புக்காசு கூட கொடுக்காத மோடி-அமித்ஷாக்களின் வரண்டு போன நெஞ்சத்தை மறைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களிடம் நரித்தனமாக வாக்குக்காக கையேந்தும் மோடியை இனியும் மன்னிக்க மாட்டார்கள் அவர்கள்.

எல்லோரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. இந்தியா கூட்டணி உடையும் என்று கூவியர்கள், இன்று பா.ஜ.கவை விட்டே தெரித்து ஓடுகிறார்கள்.

இன்று மோடியால் பேச முடியவில்லை. அமித் ஷாவின் பேச்சைச் கேட்க முடியவில்லை. நிர்மலா சீத்தாரமன் உளரிக் கொண்டு இருக்கிறார். அண்ணாமலையின் மனநோய் பேச்சைச் சொல்ல வேண்டியதில்லை.

என்ன காரணம்?

தோல்வி பயம்தான்! எங்கள் தந்தை பெரியாரின் தேவையை இப்போது வட ஒன்றியம் உணரத் தொடங்கி விட்டது.

வடஒன்றியமே இன்று தமிழ்நாட்டின் ‘திராவிட மாடலை’த் திரும்பிப் பார்க்கிறது, அதுதான் தேவை என்று சொல்லத் தொடங்கி விட்டது.

பா.ஜ.க வின் தோல்வி நிச்சயமாகி விட்டது! ‘இந்தியா கூட்டணி’ யின் வெற்றி உறுதியாகி விட்டது!

மக்கள் கவனமாக தாமரையைத் தோற்கடிக்க வேண்டும், வாக்குப் பதிவு நாளில்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It