பூமியின் தரைக்குக் கீழே 25 கிமீ அடியில் ஏகப்பட்ட அழுத்தத்தில் தண்ணீர் இருக்கிறது. அதைச் சுற்றியுள்ள பாறைகள் தண்ணீரை நசுக்கியபடியுள்ளன. அதனால் தண்ணீரானது வழுக்கும் கிரீஸ் மாதிரி மாறிவிடுகிறது. பாறைகள் இதனால் ஒன்றன் மேல் ஒன்று சுலபமாக நழுவி நகருகின்றன. லேசான விசை கொடுத்தாலும்கூட உடனே நிலநடுக்கம் ஏற்படுகிறது.rocks_317

நிலாவும் சூரியனும் நேர்க்கோட்டில் வரும்போது அவை தரையை இழுக்கின்றன. சில பாறைகள் நழுவி நில நடுக்கங்கள் ஏற்பட அந்த இழுப்பே போதும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழக நிலவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

சேன் ஆன்டிரிஸ் பிளவு என்பது பூமியின் தரையில் காணப்படும் தழும்பு போன்ற கீரல். இந்தத் தழும்பு தரையின் அடியிலிருந்து மெல்ல மேலெழும்பிக் கொண்டிருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இதன் உயரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் வளர்ச்சிக்குக் காரணம் நிலாவின் இழுப்பே என்று சொல்கிறார்கள்.

படத்தில் பார்ப்பது அந்தத் தழும்பின் ஒரு சின்ன பகுதிதான். அதன் முழுநீளத்தையும் இங்கே காட்ட முடியாது. அம்மிக் குழவி மாதிரி காணப்படும் பாறைகள் என்றோ நடந்த எரிமலைக்குழம்பினால் உருவானவை.

- முனனவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

தன்னுடைய மூதாதையர்களைவிட இன்றைய மனிதனே வலிமையானவன் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஸ்டீபன் ரோ தன்னுடைய குழுவினருடன் நடத்திய ஆராய்ச்சியில் தற்கால மண்டை ஓடுகளும், நமது மூதாதையரின் மண்டை ஓடுகளும் இயந்திரவியல் அடிப்படையில் ஆராயப்பட்டன. மிகவும் வலிமையாக கடிக்கும் ஆற்றல் பெற்றவன் இக்கால மனிதனே என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. Proceedings of the Royal Society B என்னும் இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்கால மனிதர்கள் வலிமையாக கடிக்கும் ஆற்றலை இழந்துவிட்டார்கள் என்றும் தாடைகளும், தாடை தசைகளும் பலவீனமடைந்துவிட்டன என்றும் இதுவரை கருதப்பட்டுவந்தது. பல்வேறு சாதனைங்களைக் கொண்டு உணவை சமைத்து உண்பதும், மென்மையான உணவுப்பொருட்களை உண்ணுவதும் காரணமாக கூறப்பட்டுவந்தது. ஆனால் இதுபோன்ற கருத்துகள் எல்லாம் ஆதாரமற்றவை என்கிறார் ஆஸ்திரேலிய விஞ்ஞானி ரோ. மனிதர்களின் பல்லில் இருக்கும் எனாமல் தடிமனானது என்றும் கடினமான உணவை வலிமையுடன் கடிப்பதற்குத் தேவையான உறுதியை இந்த எனாமல் பூச்சு பெற்றிருப்பதாகவும் ரோ கூறுகிறார். ரோ தன்னுடைய ஆய்வில் மனிதனின் கபாலத்துடன் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சிம்பன்ஸி, கொரில்லா, ஒராங்குட்டான், கிப்பன் ஆகிய நான்கு விலங்குகளின் கபாலங்களை ஆராய்ந்தார். மேலும் புதை படிமங்களில் இருந்து பெறப்பட்ட Australopithecus africanus and Paranthropus boisei  என்னும் ஆதிமனிதர்களின் மண்டை ஓடுகளின் அமைப்பையும் ஆய்விற்கு எடுத்துக்கொண்டார். இந்த இரண்டு ஆதிமனித இனமும் கொட்டைகளைத் தின்று வாழ்ந்த மனிதர்களாக கருதப்படுபவர்கள்.

man_bite_340

ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மண்டை ஓடுகளின் டிஜிட்டல் மாதிரிகள் முப்பரிமாண பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. Computerized axial tomography தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த மண்டை ஓடுகள் ஒரு கற்பனையான கடின பொருளை பற்களின் பின்பகுதியில் கடிப்பதுபோன்ற காட்சி உருவாக்கப்பட்டது. தாடையில் கொடுக்கப்படும் விசை பரவும் இடங்கள் குறிக்கப்பட்டன. தாடைகளின் எந்திரலாபத்தை ஆராய்ந்தபோது இன்றைய மனிதனின் கடிக்கும்திறன் மனிதக்குரங்குகளைக் காட்டிலும் 40 முதல் 50 சதவீதம் வலிமையானது என்று கணக்கிடப்பட்டது. கடிக்கும் ஒவ்வொரு முறையும் இன்றைய மனிதன் ஒரு கொரில்லாவை விடவோ, சிம்பன்ஸியை விடவோ வலிமையாக கடிக்கிறான். கொட்டைகளைக் கொறித்துக் கொண்டிருந்த Australopithecus africanus and Paranthropus boisei முதலிய ஆதிமனிதர்களின் கடிக்கும் ஆற்றலுக்கும் இன்றைய மனிதனின் கடிக்கும் ஆற்றலுக்கும் உடல் அளவில் வேறுபாடு இருந்தாலும், கடிக்கும் ஆற்றலில் பெரிய வேறுபாடு காணப்படவில்லை..

நெம்புகோல் தத்துவம்தான் இதன் விளக்கம் என்கிறார் விஞ்ஞானி ரோ. தாடை எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பதையும், ஆதாரதானமாக இருக்கும் மூட்டு அமையும் இடம் இவற்றைப் பொருத்தும் கடிக்கும் வலிமை கணக்கிடப்படுகிறது. இத்துடன் தசைநாண்களின் அமைவிடம், அவை அமைக்கப்பட்டிருக்கும் முறை இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் ரோ. கொட்டைகளை உடைப்பதிலும், மாமிசத்தை மெல்லுவதிலும் மனித தாடை வலிமையாக இருந்தாலும், நீண்ட நேரத்திற்கு இலைகளையும், மூங்கில் குருத்துக்களையும் மெல்லுவதற்கு ஏற்றதாக நம்முடைய தாடை இல்லையாம். இந்த வகையில் நாம் நம்முடைய மூதாதையரைவிட வலிமை குறைந்தவர்களே!

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/06/100622095116.htm

Pin It

உலகத்தில் அசுர வேகத்தில் நாளுக்கு நாள் அறிவியலின் வளர்ச்சி முன்னேற்றம் கண்டாலும் இயற்கையான பல நிகழ்வுகளுக்கு எந்த வகையிலும் பயன் இன்றிதான் இந்த வளர்ச்சிகள் உள்ளது. இதில் யாரும் எதிர்பாராமல் ஏற்படும் பூகம்பம், சுனாமி போன்ற ஆபத்தான இயற்கையான நிகழ்வுகள்தான் மனித இனதிற்கு பெரிதும் அச்சுறுதலாக இதுவரையில் இயலுமா என்று கேட்டால் இயலாத ஒன்றுதான்.

frog_320சரி இந்த அபாயங்கள் வருவதற்கு முன்பு ஒருவேளை எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் எதுவும் அறிவியலின் வளர்ச்சியில் சாதித்து இருக்கிறோமா என்று கேட்டால் அதற்கும் இதுவரை சரியான பதில் இல்லை. அந்த வகையில் இந்தப் பதிவு அதைப் பற்றியதுதான்.

ஒருவேளை பூகம்பம் அல்லது சுனாமி இது போன்ற பெரும் அழிவுகள் வருவதற்கு முன்பு நமக்குத் தெரிந்தால் அதில் இருந்து பெரும்பாலான மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலும். அந்த வகையில் இப்பொழுது பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தி எங்கு இருக்கிறது என்று ஆய்வு செய்ததில் நம்மை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் பல விடயங்கள் கிடைத்திருக்கிறதாம். ஆம் நண்பர்களே..! பூகம்பம் வருவதை ஐந்து நாட்களுக்கு முன்பே அறியக்கூடிய திறன் தவளைகளுக்கு உண்டு என்று, பாரீசைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ரசெல் கிரான்ட் தலைமையிலான குழு ஆய்வு அறிக்கை நிரூபித்து இருக்கிறார்களாம்.

உலகத்தில் மனித இன அழிவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் தாக்கங்களில் பூகம்பமும் ஒன்று. இதைப் பற்றி பிரான்சில் நடந்த ஆராய்ச்சியில் உலகத்தில் உள்ள அனைத்து விலங்குகளையும் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இறுதியாக பூகம்பம் ஏற்படப் போவதை குறைந்தது 5 நாட்களுக்கு முன்னதாக தவளைகள் அறியக்கூடும் என்று பிரான்சில் நடந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை உறுதி செய்து ஜூவாலஜி ஜர்னல் என்ற இதழ் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

இந்த ஆய்வில் தவளை பூகம்பம் வருவதை எப்படி உணர்வதாக நீங்கள் அறிந்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்தக் குழு “இத்தாலியின் லாகுய்லா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 500 பேர் பலியாகினர். 60,000 பேர் தங்களின் உடமைகள் வீடுகளை இழந்து தவித்தனர். அந்தப் பகுதியில் பூகம்பத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை வசித்த தவளைகள், பூகம்பம் ஏற்பட்ட தினத்தில் ஒன்று கூட இல்லாமல் அங்கிருந்து சென்றிருப்பது தெரியவந்து இருக்கிறது. அதை வைத்து தவளைகளுக்கு பூகம்பத்தை முன்கூட்டி அறியும் திறன் உள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு நடந்தது. பூகம்பம் ஏற்படுவதற்கு முன் பூமியில் இருந்து வெளியாகும் ஒருவித வாயு, துகள்களை வைத்து ஆண் தவளைகளால் பூகம்பத்தைக் கணிக்க முடியும் என அதில் தெரிய வந்தது. குறைந்தது 5 நாட்களுக்கு முன்பே ஆண் தவளையால் பூகம்பம் ஏற்படப் போவதை உணர முடியும். இதை வைத்து முன்கூட்டி பூகம்ப எச்சரிக்கை விடுக்க முயற்சிக்கலாம்” என்று அவர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.  

இதற்கு முன் நடந்த ஆராய்ச்சிகளில், பூகம்பத்துக்கு முன் புவியீர்ப்பு அலைகள் அல்லது ரேடியோஆக்டிவ் வாயு வெளிப்படுதல் ஆகியவற்றைக் கொண்டு பூகம்பம் ஏற்படப் போவதை முன்கூட்டி அறியலாம் என்று கூறப்பட்டது. எனினும், அதுபற்றி தெளிவான நிலை இல்லை. அவை அனைத்தும் சரியான எந்த தகவலும் தராததால் யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருந்தது. ஆனால் இப்பொழுது இந்த தவளையின் ஆய்வு அறிக்கை அனைவருக்கும் நம்பிக்கை தருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பனித்துளி சங்கர் (  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It

சூறாவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இது கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடி மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூறையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூறாவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும். பயங்கரமான சூறாவளியின் மேற்பகுதி மேகத்தைத் தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும். மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வளைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கிலத்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

TORNADOE
 
சூறாவளியின் வேகம்

சூறாவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்). அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்). இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.

சூறாவளிகள் சுழல ஆரம்பிக்கும்போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூறாவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகளை வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.
 
சூறாவளி – டொர்னடோ எவ்வாறு உருவாகிறது?
 
ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வற‌ண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து வெளிப்படும் விசையே சூறாவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும்போது அந்த சூறாவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது. 
 
tornadoe_1டொர்னடோ என்ற பயங்கரமான சூறாவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம். அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளைத் துவம்சம் செய்துவிடுமாம்.
 
வானத்தில் ஒரு பயங்கரமான சூறாவளி உருவாகிவிட்டால் அந்த சூறாவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூறாவளி நிலத்தைப் பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராகப் பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.
 
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூறாவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமளவுக்கு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூறாவளிகள்.

சூறாவளியின் வகைகள் பார்ப்போம்

SUPERCELL TORNADOES (சூறாவளி மேகங்களுடன்)
 
இந்த வகை சூறாவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூறாவளி, மேகங்களை கருவாகக் கொண்டு சுழன்றடிக்கும். ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூறைக்காற்றை சுழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூறாவளிகள் நிலத்தைத் தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)
 
WATERSPOUTநிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சுழன்றடிக்கும் இந்த கொடிய சூறாவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வேகமாக வீசக்கூடிய சூறாவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO (கஸ்டனாடோ சூறாவளி)
 
இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூறாவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூறைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூறாவளிகளுக்கு மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.
 
WATERSPOUT (நீரில் ஏற்படும் சூறாவளி)
 
வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூறாவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூறாவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூறாவளிகளின் வடிவமேயாகும். ஆனால் இவைகள் நீரில் சுழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிகக் குறைவுதான். இந்த சூறாவளிகள் நிலத்தைத் தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன. 
 
dustdevilDUST DEVILS
 
டஸ்ட் டெவில் அதாவது தூசுகளின் சாத்தான் என்ற சூறாவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூறாவளிகளாகும். இவைகளுக்கு மேகங்களுடன் எந்தத் தொடர்பும் காணப்படாது. மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூறைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகன‌த்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.
 
FIRE WHIRLS
 
நெருப்புச் சூறாவளிகள் அதாவது சூறாவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது. இந்த நெருப்பு ஜுவாலைகளை சூறாவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்குப் பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நெருப்புச் சூறாவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெறும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சுழன்றடிக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 160 கி.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தைக் கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.

- பரூக் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It