குருதிக் கொடையும் இனிமைப் பேச்சும்
பெருவலி ஆற்றி உய்வித் தலையும்
கண்டு பார்ப்பனர் பண்புடை யோரென
எண்ணிட வேண்டா; திறமை என்பது
மண்ணில் யார்க்கும் பொதுவாய் இருக்கையில்
உயர்நிலைப் பணிகளில் பார்ப்பனர் மிகுவதும்
நயமிகு திறனுடைச் சூத்திரர் பஞ்சமர்
உரியது பெறாததன் காரணம் வினவிடில்
எரியும் நெஞ்சுடன் நிலையிலா திருப்பர்
திறமை யில்லாப் பார்ப்பனர் தாமும்
குறைந்த கூலியில் உடல்வலி மிகுந்த
பணிகளில் இருந்து தப்பா திருக்க
அணியமாக அழைத்தால் அவரும்
நொடியில் மறைவார் தொடரா திருக்க.

(இரத்த தானம் (போன்ற சமூக சேவைகள்) செய்தும், இனிமையாகப் பேசியும் (நம்முடைய தற்காலிகமான) பெரும் துன்பங்களை ஆற்றிக் காப்பாற்றுவதைக் கண்டு, பார்ப்பனர்கள் பண்புடையோர் என்று (தவறாக) எண்ணிட வேண்டாம். திறமை என்பது இம்மண்ணில் பிறந்த யாவருக்கும் பொதுவாக இருக்கையில், உயர்நிலைப் பணிகளில் (அனைத்து வகுப்பு மக்களும் தேர்ந்து எடுக்கப்படாமல்) பார்ப்பனர்கள் நிரம்பி வழிவதற்கும், சூத்திரர்களிலும் பஞ்சமர்களிலும் உள்ள மிகுந்த திறமை உடையர்களும் உரிய பங்கைப் பெறாமல் போவதற்குமான காரணத்தைக் கேட்டால் (பார்ப்பனர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாது) எரிச்சல் கொண்ட நெஞ்சுடன் நிலை கொள்ளாது இருப்பார்கள்; திறமை இல்லாத பார்ப்பனர்கள் குறைந்த கூலியில் உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பாமல் இருக்க இணைந்து செயல்பட அழைத்தால், அந்த விவாதம் தொடராது இருக்க அவ்விடத்தை விட்டு நொடியினில் மறைந்து விடுவார்கள்.)

- இராமியா

Pin It