ஈழ மண்ணில் நிகழ்த்திய திட்டமிட்ட இனப்படுகொலைக்காக,  ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில்  சர்வதேசத்தின் எதிர்ப்பைச் சந்திக்க இருக்கிறது சிங்கள அரசு.  இந்தநிலையிலும், இந்தியா தன்னைக் காப்பாற்றிவிடும் என்று அது நம்புகிறது. சுதந்திர - சர்வதேச விசாரணை நடக்க முட்டுக்கட்டை போடுவதுடன், இனப்படுகொலைக்கு நிகரான அனைத்து அடக்குமுறைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இலங்கையின் இனவெறிப்போக்குக்கு எதிராகத்  தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்துவருகின்றனர். ஜெனிவா மாநாடு நெருங்கும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த  படைப்பாளிகளான நாமும் உரத்த குரலில் நம்முடைய கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டியது அவசியமாகிறது. உலகெங்கும் போராடும் தமிழினம், நாமும் பேசுவோம் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது. நியாயமாகப் பார்த்தால், தமிழ்ச் சமூகத்தில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் கடமையும் பொறுப்பும் மற்றெவரையும் காட்டிலும் நமக்கே அதிகம்!

பாதிக்கப்பட்ட பல லட்சம் உறவுகளுக்கு நியாயம் கேட்பதற்காக, கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,  ஓவியர்கள் - உள்பட படைப்பாளிகளான நாம் அனைவரும் 15.02.2013 வெள்ளிக்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திரள இருக்கிறோம்.

பாவலர் புதுவை ரத்தினதுரை முதலான தளபதிகள் எங்கே?
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!
வடகிழக்கில் இருந்து ராணுவத்தைத் திரும்பப் பெறு!
தமிழ்ச்சகோதரிகள் மீதான வன்முறையை நிறுத்து!
மொழி அழிப்பையும் நிலப் பறிப்பையும் கைவிடு!
சுதந்திர சர்வதேச விசாரணைக்கு வழிவிடு!
என்று உரத்தகுரலில் பேச இருக்கிறோம்.

இதில் பங்கேற்பதன் மூலம், தொடர் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நம் உறவுகளிடையே, நம்பிக்கை விதைகளை நாம் தூவ முடியும். இனப் படுகொலையாளர்களைத் தண்டிக்க சர்வதேசம் எடுக்கும் முயற்சிகளை ஊக்குவிக்க முடியும்.

இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்க
பிப்ரவரி 15 வெள்ளி காலை 11 மணிக்கு
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (அரசினர் தோட்டம், சேப்பாக்கம்)
ஒன்றாகத் திரளுவோம்!

நன்றி!

என்றும் அன்புடன்,

புலவர் புலமைப்பித்தன்
கவிஞர் தாமரை
ஓவியர் டிராட்ஸ்கி மருது
ஓவியர் அரஸ்
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்

தொடர்புக்கு: 9841906290

Pin It