யாசிக்கும் பிச்சையாளியும்
ஊர்ந்துசெல்லும் தொழுநோயாளியும் கூடத்
தன்னைச் சீண்டுபவனை ஏசுகிறான்
“போடாப் பறத் தேவடியாப் பயலே ”
“உங்கொம்மாள பறயன்போவ ”
ஏதுமற்றவனிடமும் ஆழப் பதிந்துகிடக்கிறது
சாதிவன்மம்.
நீங்கள் சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மாற்ற வேண்டுமென.

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.