தமிழ்நதி அவர்களுக்கு,

வணக்கம்.

நான் உங்களைப்போல புலியடிமையல்ல. அல்லது மொன்னையான புலி ஆதரவு/ எதிர்ப்பு அமைப்பு எதுவொன்றின் உறுப்பினனுமல்ல. எனவே இலங்கை/ ஈழம் சார்ந்து உணர்ச்சிப்பிழம்புகள் நடத்தும் எந்தவொரு விவாதத்திலும் குறுகிய ஆதாயங்களுக்காக பங்கேற்கும் நோக்கம் எதுவும் எனக்கில்லை. எனது வாசிப்பு மற்றும் தோழர்கள் நண்பர்களுடனான உரையாடல்கள் வழியே எட்டிய புரிதல்கள் வழியே நான் இலங்கைத் தமிழர் பிரச்னையை புரிந்துகொள்கிறேன். சிங்களப் பேரினவாதத்தால் பீடிக்கப்பட்ட ஒரு அரசின் பயங்கரவாதத்திற்கு ஆளாகிவிட்ட இலங்கைத் தமிழர்களை நான் வாழும் காலத்தின் மிகக்கொடிய துயரமாக கருதுகிறேன்.

Aadhavan Dheetchanya
அதேவேளையில் ஜனநாயக உரிமைகளுக்காவும் சுயமரியாதைக்காவும் இலங்கை மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை என்றென்றைக்குமாக மிகப்பெரும் பின்னடைவுக்குள் தள்ளிவிட்டவர்கள் என்ற முறையிலும் ஏகப்பிரதிநிதித்துவம் என்கிற தன்முனைப்பில் பிற இயக்கங்களையெல்லாம் அழித்தொழித்தவர்கள் என்பதற்காகவும் புலிகள் மீது எனக்கு கடும் விமர்சனங்களுண்டு. புலிகள் இயக்கத்தின் பாசிசத்தன்மை, இந்துத்துவ வெறி, இஸ்லாமிய எதிர்ப்பு, சாதியழிப்பு பேசியவர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் தலையெடுக்கவொட்டாமல் தீர்த்துக்கட்டியவர்கள் என்று அந்த விமர்சனங்களுக்கான காரணங்கள் இன்னும் நீள்கின்றன. ஆகவே இலங்கைத் தமிழர் பிரச்னையில் எனது அக்கறை புலிகள் சார்ந்தது அல்ல, அது எளிய மக்கள் சார்ந்தது. இனவெறி ராணுவத்தின் இலக்காகவும் புலிகளின் கேடயமாகவும் சிக்கித் தவித்த லட்சக்கணக்கான மக்கள் குறித்தது. தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் கைதிகளைப் போல வதியும் ஏதிலிகள் பற்றியது. (இனவுணர்வின் மிகுதியில் எகிறிக் கொண்டிருக்கும் பல தலைவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் அகதி முகாம்கள் எந்தளவிற்கு வாழத்தகுதியற்றதாய் இருக்கின்றன என்பது நீங்கள் அறிந்ததுதானே?)

தங்களது உட்சாதிப் பிரிவைக்கூட தாண்டி வெளியே வரத் துணியாத சாதிவெறியர்கள் இங்கே எழுப்பும் தமிழ் இனம் என்கிற முழக்கத்தின்பால் எனக்கு எப்போதும் ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. தலித்துகள் தாக்கப்படும்போதெல்லாம் இவர்கள் தீண்டத்தக்க சாதியினராகவும், சிறுபான்மையினர் தாக்கப்படுகையில் சுத்த இந்துக்களாகவும் பெண்ணுரிமை குறித்த விவாதங்களில் உள்ளாடையை கழற்றிக் காட்டத் துணிகிற ஆண்களாகவுமே வெளிப்படுகின்றனர். இத்தகைய குறுகிய வட்டங்களுக்குள் அடைபட்டுக் கிடக்கிற இனவுணர்வுத் திலகங்கள்தான் இன்று உங்களைப் போன்றவர்களின் கபடம் நிறைந்த பேச்சுக்கு கைதட்டும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதிகாரப் பெருமிதமும் சாதிய சிறுமதியும் கொண்ட இவர்கள் இலங்கையின் பூர்வீகத் தமிழர்களை தம் சொந்த இனமாகவும், தமிழ்நாட்டிலிருந்து 150 வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு பிடித்து செல்லப்பட்ட தமிழர்கள் குறித்து பாராமுகமாகவும் இருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் உள்ளடக்கியே புதுவிசை இதழின் தலையங்கங்கள், நேர்காணலில் எழுப்பப்படும் கேள்விகள் அமைந்துள்ளன. எனவே ஈழப்பிரச்னையில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி உங்களை நான் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டதாக கருதவில்லை. உங்களது நிலைப்பாட்டைச் சொல்ல உங்களுக்கிருக்கும் அதே உரிமை எனக்கும் உண்டு. ஆனால் அப்படியொரு ஜனநாயகப் பண்பை கடந்தகாலத்தைப் போலவே இனியும்கூட நீங்கள் எட்டப்போவதில்லை என்பதற்கு என்னைப் பற்றிய உங்கள் அவதூறான பதிவே நிரூபணம்.

2.

‘ஓரளவுக்கு பதட்டம் தணிந்தால்கூடப் போதும், நான் ஊருக்குப் போய்விடுவேன்’ என்று கீற்று.காம் நேர்காணலில் தாங்கள் தாய்மண் பாசத்தோடு சொல்லியிருந்தபடியால் இந்நேரம் இலங்கைக்கு பறந்தோடிப்போய் மக்களோடு மக்களாகத்தான் இருப்பீர்கள் என்றெல்லாம் அதீதமாக நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லை. ஆகவே மதுரை முகாமில் உங்களைப் பார்த்தபோது (அகதிகள் முகாமில் அல்ல- அங்கு போய் அவதியுற உங்களுக்கு தலையெழுத்தா என்ன?) எனக்கு சற்றும் அதிர்ச்சியில்லை. எனக்குத் தெரியும், இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்ப மாட்டீர்கள் என்று. இலங்கை ராணுவத்தாலும் உங்களது பிரியத்திற்குரிய போராளிகளாலும் சுடுகாட்டுச் சாம்பல் கொண்டு நிரவப்பட்டுவிட்ட அந்த மண்ணுக்குத் திரும்புகிற அளவுக்கானதல்ல உங்களது தாய்நாட்டு பக்தி. ஏனென்றால் நீங்கள் நேசித்தது நாட்டையோ மக்களையோ அல்ல, புலிகளை. (உடனே ஆதவன் என்னை நாட்டை விட்டுப் போகச் செல்கிறான் என்று திரித்து அடுத்தப் பதிவு எழுதி மூக்கு சிந்த பதைக்காதீர்கள் தமிழ்நதி. அந்த மலிவான உத்தி எல்லா நேரத்திலும் கைகொடுக்காது.)

ஆனால் நான் ஆச்சர்யப்பட்ட விசயம் என்னவென்றால், ‘இந்த தேவேந்திர பூபதியிடமிருந்து எப்படி என்னை தற்காத்துக் கொள்வது என்பதுதான் தமிழ்நாட்டில் எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் திகிலாகவும் இருக்கிறது...’ என்று 2009 ஜனவரியில் அஞ்சி நடுங்கிய தமிழ்நதி இப்போது ஏன் அதே தேவேந்திரபூபதி நடத்துகிற முகாமுக்கு வலிய வந்திருக்கிறார் என்பதுதான். ஒருவேளை பூபதியைக் கையாளும் தற்காப்புக்கலையை அவர் பயின்றிருக்கவேண்டும் அல்லது சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று அதன் பிடரியை உலுக்குவது என்று தீர்மானித்து புறநானூற்று மறத்தமிழச்சியாக மனதளவில் மாறியிருக்கக்கூடும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

மதுரை கூடல் சங்கமத்தின் இறுதி அமர்வில் தாங்கள் பேசத்தொடங்கும் போது ‘எனக்கு கதைகள் அவ்வளவாக வராது, அவை எல்லாமே சோதனை முயற்சிகள்தான்’ என்று சொன்னீர்கள். 24 மணிநேர அவகாசம்கூட எடுத்துக்கொள்ளாமல் ரெடிமிக்ஸ் சாம்பார் செய்கிற அதிரடி வேகத்தில் ‘ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி’ என்ற தலைப்பில் பிரமாதமான ஒரு கதையை எழுதத் தெரிந்த நீங்களே இப்படி உங்களை மட்டம்தட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ஒட்டுமொத்த நிகழ்விலிருந்தும் உங்களது நோக்கத்திற்கு இயைவான துணுக்குகளை மட்டும் தேர்ந்தெடுத்து நீங்கள் எழுதியிருக்கும் இந்த கதைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரியவில்லையா உங்கள் கதை வாசகர்களை ஈர்க்கும் வல்லமை கொண்டது என்பது? நீங்கள் திரித்துச் சொன்ன கதையை உண்மையென நம்பி ஈழப்போராட்டத்தின் லேட்டஸ்ட் துரோகி ஆதவன்தான் என்று முத்திரைக் குத்துவதற்கு சிலர் கிளம்பியிருப்பதும்கூட உங்கள் கதைத்திறமைக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடுங்கள் தமிழ்நதி.

(ஷோபா சக்தி ராஜபக்ஷேவிடம் வாங்கியப் பணத்தில் ஒரு பகுதி ஆதவனிடம் இருப்பதாகவும் அந்தப் பணத்தில்தான் இப்படி மிடுக்காக திரிகிறார் என்றும், செருப்பால் அடிக்கவேண்டும் என்றும் வந்த பின்னூட்டங்களை மகிழ்ச்சியோடு பிரசுரித்துவிட்டு ‘‘ஆதவன் மீதும் ஷோபா சக்தி மீதும் தாக்குதல் தொடுத்து பின்னூட்டங்களை நான் வெளியிடவில்லை, எனக்கென்று சில அடிப்படை நேர்மைகள் உண்டு’’ என்று மற்றுமொரு சுவாரசியமான கதையை தொடங்கியிருக்கிறீர்கள். இப்படியெல்லாம் பேசுவதற்கு கூசவில்லையா உங்களுக்கு? பணம் பெற்றிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவரும் மற்றும் அதை ‘நேர்மையோடு’ வெளியிட்ட தாங்களும் இந்த அவதூறுக்கான ஆதாரத்தை அவசியம் வெளியிட்டாக வேண்டும். அதுபோலவே செருப்பால் அடிக்கவிரும்புகிறவர் அநாமதேயம்போல் ஒளிந்துகொண்டிருக்காமல் நேருக்குநேர் என்னைச் சந்திக்க வேண்டும். அந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை அவருடைய நண்பர் என்ற வகையில் தாங்கள்தான் செய்யவேண்டும். இவ்விரண்டு விசயத்திலும் உங்களிடம் ஒருபோதும் சமரசம் கிடையாது)

28.06.09 அன்று நடந்தவை எல்லாவற்றையும் மீண்டும் நன்றாக நினைவுபடுத்திக்கொண்டு தாங்கள் எழுதியிருப்பதெல்லாம் உண்மையா என்று ஒருமுறை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் நான் வற்புறுத்தமாட்டேன். அந்தளவிற்கு உங்களுக்கு அறிவு நாணயம் இருந்திருந்தால் இப்படியொரு கட்டுக்கதையை எழுதத் துணிந்திருக்கமாட்டீர்கள். எனவே நடந்ததை நானே ஒருமுறை உங்களுக்கு ரீவைண்ட் செய்து காட்டவேண்டியிருக்கிறது. உலகத்திலிருப்பவர்களெல்லாம் எங்களுக்காக ரத்தக்கண்ணீர் வடிக்க வேண்டும், ஆனால் மற்றவருக்காக நாங்கள் ஒரு சொட்டு உப்புக்கண்ணீரைக்கூட சிந்தமாட்டோம் என்று சத்தியம் செய்துவிட்டு வந்திருக்கிற உங்களுக்காகவெல்லாம் எங்களது நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறதே என்ற ஆற்றாமையோடுதான் இதை எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

அந்த அமர்வில் என்முறை வந்தபோது, எழுதுவதில் நான் சந்திக்கும் இடர்ப்பாடுகள் குறித்து மட்டுமே பேசிவிட்டு அமர்ந்துவிட்டேன். எனக்கு அடுத்து நீங்கள் பேச வந்தீர்கள். ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ என்று நீங்கள் யாரையோ பார்த்து கேள்வி கேட்டிருந்தால் நான் என்பாட்டுக்கு இருந்திருப்பேன். ஆனால் ‘சமூக ஒடுக்குமுறைகளை காத்திரமாக எதிர்த்து எழுதுகிற ஆதவன் தீட்சண்யா ஏன் ஈழத்தமிழர் குறித்து எழுத மறுக்கிறார்’ என்று நீங்கள் மிக நேரடியாக என்னைக் கேட்டதை முன்னிட்டே நான் பேசித்தொலைக்க வேண்டியதாயிற்று என்பதையாவது மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நரியோ நதியோ இடமும் போகாமல் வலமும் போகாமல் என்மீதே குறிவைத்துப் பாய்ந்தநிலையில்தான் நான் பேச வேண்டியிருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவும்கூட உங்களுக்கு ஆதரவாக ஊளையிட்டவர்கள் தயாரில்லாத நிலையில்தான் இந்த தன்னிலை விளக்கம்.

3.

‘‘நான் ஏன் எழுதவில்லை என்று கேட்க தமிழ்நதிக்கு உரிமையிருப்பதைப் போலவே தமிழ்நதியிடம் கேட்பதற்கு சில கேள்விகளும் அதைக் கேட்பதற்கான உரிமையும் எனக்கிருப்பதாக கருதுகிறேன். தமிழ்நாட்டில் இருக்கிற தமிழ்நதி இங்கு நிகழும் எத்தனை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக ஆடுமாடுகளைப்போல லட்சக்கணக்கான தமிழர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். அந்த அடிமைத்தனத்திலிருந்தும் கொடிய சுரண்டலிலிருந்தும் அட்டைக்கடியிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்வதற்காக அவர்கள் நடத்தியப் போராட்டங்களுக்கு ஆதரவாக ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேரின் கவிமனம் பதறித் துடித்திருக்கிறது? பிறந்தமண்ணை பிரிந்து ஏறத்தாழ 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களது குடியுரிமையைப் பறித்து சுமார் 10 லட்சம் பேரை நடுத்தெருவில் நிறுத்தியபோது ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேர் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்கள்? (இந்தியத் தமிழர்களுக்கு ஆதரவாக செல்வநாயகம் பாராளுமன்றத்தில் பேசியதை படைப்பாளிகளின் கணக்கில் வரவி வைக்கத் துணிந்துவிடாதீர்கள்)

2005 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில் எழுத்தாளர் அந்தனி ஜீவா, ‘இன்றளவும்கூட இலங்கைத்தமிழருக்கும் இலங்கையிலுள்ள இந்தியத்தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டதை சமீபத்திய செங்கதிர் இதழ் மறுபிரசுரம் செய்துள்ளதே- அதை என்னவென்று புரிந்து கொள்வது? இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்? இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா?

தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து 500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்? தமிழ்நாட்டில் வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டபோது ஈழத்திலிருந்து எந்த குரலும் ஒலிக்கவில்லை. திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமையை எதிர்த்தோ இதோ இப்போதும் உத்தபுரத்தில் மறித்து நிற்கிற சாதிச்சுவரை இடிக்க வேண்டுமென்றோ ஈழத்திலிருந்து எழுந்த தமிழினக்குரல் எதுவுமுண்டா?

இதையெல்லாம் நீங்கள் செய்யவில்லை என்பதற்காக நாங்களும் எழுதவில்லை என்று ஏட்டிக்குப் போட்டியாக ‘டிட் ஃபார் டாட்’ என்று நான் சொல்வதாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. இலங்கைத்தமிழர் மீது நிகழ்த்தப்படும் கொலைப்பாதகங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் இங்கு யாருமில்லை. அது குறித்த ஆழ்ந்த கவலைகள் எமக்குண்டு. ஆனால் அதற்காக ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்று காசி ஆனந்தனைப்போல அதிகாரத்துக்காக நான் எழுத முடியாது.

இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது மட்டுல்ல, பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒரு கண்ணி அறுபட்டுக் கிடக்கிறது. ஒருவேளை கூட்டாக விவாதித்து அதை கண்டுபிடிப்போமானால் உடனடி நிகழ்வுகள் மீது படைப்புகள் வரலாம். அதுகுறித்து வேண்டுமானால் பேசலாம்...’’

4.

மேற்கண்டவை தான் அந்த அமர்வில் நான் பேசியவை. இவையெல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கைவசமிருக்கும் வீடியோ பதிவில் இடம் பெற்றிருப்பது ஒரு ஆறுதலான விசயம்தான். அதை விடுத்து உங்கள் பதிவில் இட்டுக்கட்டி குறிப்பிட்டுள்ளவாறு ‘நாங்கள் ஈழத்தமிழர்களுக்காக பேசவேண்டுமென்று, குரல் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?’ என்றோ ‘எங்களுக்கே ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன, உங்களுக்காக நாங்கள் ஏன் பேச வேண்டும் எழுத வேண்டும்’ என்றோ நான் பேசவில்லை. பொய் சொல்லியாவது உங்கள் வலைப்பதிவின் வாசகர்களிடம் அப்ளாஷ் பெறுவது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் உங்களது பொய்யின் அளவு இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் பேசி முடித்ததும் நீங்கள், ‘நாங்கள் அதையெல்லாம் செய்யவில்லை என்பதற்காக இப்போது எங்களைப் பழிவாங்குகிறீர்களா ஆதவன்..?’ என்று கேட்டீர்கள். ஏட்டிக்குப் போட்டியில்லை என்றும் சமகாலப் பிரச்னைகளுக்கு முகம் கொடுப்பதில் தமிழகப்படைப்பாளிகளின் மனநிலை குறித்தும் நான் பேசியிருந்த நிலையில் நீங்கள் வேண்டுமென்றே திரித்துப் பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்தாலும் பொறுப்புடன் பதில் சொல்ல நான் மீண்டும் எழுந்தேன். அவ்வாறு நான் எழுந்ததை ‘ஆதவன் என்னைத் தாக்க எழுந்தார்’ என்று பதிவில் தலைவிரிக்கோலமாக எழுதாமல் விட்ட உங்களது பெருந்தன்மைக்கு எப்படியாவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அப்படி நான் எழுந்தபோதுதான் யோக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான டி.கண்ணன் துள்ளியெழுந்து- வால் மட்டும் தெரிகிறது சார் என்று சொன்ன மாணவனைப்போல- ‘இது அயோக்கியத்தனம்’ என்று கத்தினார். எது அயோக்கியத்தனம் என்று நான் கேட்கும்போது, லேனாகுமார் ‘இது அவன் ஒருத்தனோட கருத்து. தமிழ்நாட்டு மக்களின் கருத்தல்ல...’ என்று கூறினார்.

ஒருவேளை என்னைத் தவிர்த்து மீதியுள்ள ஆறரைக்கோடி தமிழர்களும் அவரிடம் ஆதரவு கையெழுத்துப் போட்டு பிரமாணப்பத்திரம் எதுவும் கொடுத்திருக்கிறார்களோ என்னமோ என்று ஒருகணம் அசந்துதான் போனேன். அவர் சொன்னதும் ஒரு தனிமனிதனின் கருத்துதான் என்பதை மறந்துவிடுவதில்தான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு ஆர்வம்? அப்போது ஒரு கும்பல் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ‘ஆதரவாக பல குரல்கள் எழுந்தன’ என்று எழுதி உங்களை நீங்களே இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாற்றிக்கொள்ளப் போகிறீர்கள் தமிழ்நதி?

இந்தக்கட்டத்தில்தான் அரசு நுழைந்தார். அரசு என்றால் வன்முறைக்கருவி என்பது வீ.அரசுக்கும் பொருந்தும்போல. ‘ஆதவன் சொன்னதைப்போல இலங்கை வரலாற்றைப் பற்றி பேச இங்குள்ள பலரிடமும் ஏராளமான விசயங்கள் இருக்கு. அங்கு நிகழ்ந்த தவறுகள் ஏராளம். ஆனால் அதைப் பற்றி இப்போது பேசுவது உள்நோக்கம் கொண்டது. ஆதவன் நடத்தும் புதுவிசை என்ற பத்திரிகையில் (சிறுபத்திரிகை அரசியல் என்ற புத்தகத்தில் புதுவிசை என்ற பெயரை கவனமாக மறந்திருந்த அரசுவுக்கு இப்போது எப்படியோ ஞாபகம் வந்துவிட்டது பாருங்களேன்) சுரேந்திரன் என்பவருடைய பேட்டியை வெளியிட்டிருக்கிறார். (சுசீந்திரனைத்தான் சுரேந்திரன் என்கிறார்) அந்த சுரேந்திரன் புலிகளை கொச்சைப்படுத்தியிருக்கிறார். அதுவும் உள்நோக்கம் கொண்டது... ’ என்று நீட்டி முழக்கி ‘தவறான புரிதலோடு இருக்கிறீர்கள் என்று சொல்வதற்காக மன்னிக்க வேண்டுகிறேன் ஆதவன்...’ என்று ஆவேசமாக முடித்தார். (பலத்த கைத்தட்டல் என்று இவ்விடத்தில் ஒரு பிட்டை ஏன் குறிப்பிடாமல் விட்டீர்கள் தமிழ்நதி?). நீங்கள்தான் தவறாகப் பேசியிருக்கிறீர்கள் அரசு. ஆகவே நீங்கள் கேட்டபடியே உங்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயாராக இருக்கிறேன் என்றேன்.

தாங்குமா அரசுவுக்கு? நான் சொன்ன வார்த்தையை வச்சிக்கிட்டு என்கிட்டயே விளையாட்டுக் காட்டுறியா... நான் தமிழ் வாத்தியான். என்கிட்ட வார்த்தை விளையாட்டுக் காட்டாதே... என்று எகிறினார். அவர் சலாமியா பாஷைக்குகூட வாத்தியாராக இருந்துவிட்டுப் போகட்டுமே, எனக்கென்ன அதைப்பற்றி? நான் அவரிடம் இலக்கணப்பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ஸ்கூல் பையனில்லையே? பின் எதற்கு இந்த எகிறாட்டம் என்று யோசிக்கும்போதே அடுத்த ரவுண்டுக்கு இறங்கினார் அரசு. ஈழத்தைப் பற்றி எனக்கொன்னும் சொல்லாதயா... போய்யா உன் வேலையப் பாத்துக்கிட்டு... என்றதும் ‘வாய்யா போய்யான்னு பேசறதுதான் ஒரு பேராசிரியருக்கு அழகா?’ என்று நான் கேட்டதும் சுதாரித்துக்கொண்ட நமது மாண்புமிகு பேராசிரியப் பெருமகனார், ‘வாய்யா போய்யாங்கறது தமிழ்ல மரியாதையான சொல்தான்’ என்று பதவுரை பொழிப்புரை பகன்றார். ‘அப்படியானால் உங்க மாணவர்களை இனிமேல் உங்களை வாய்யா போய்யான்னே கூப்பிடச்சொல்லய்யா..’. என்று நானும் மரியாதை கூட்டி மறுமொழி பகன்ற பின் ஓரிரு மணித்துளிகளில் முகாம் முடிந்துவிட்டது.

ஆனால் இவ்விடத்தைப் பற்றி எழுதும்போதுதான் உங்களது ‘செலக்டிவ் அம்னீசியா’ வேலை செய்கிறது தமிழ்நதி. ‘இருவரும் வாய்யா போய்யா’ என்ற அளவுக்கு இறங்கினார்கள் என்று பொத்தாம் பொதுவாக உங்கள் பதிவில் எழுதிக் கடக்கிறீர்கள். அரசுவின் வாய்த்துடுக்கை கண்டிக்கத் துப்பில்லையா அல்லது தங்களுக்கு ஆதரவாகப் பேசியதற்கு பிரதிக்கருணையா?

விக்கிரமாதித்யன் இரண்டு நாட்களாக எதெதற்கோ ஸ்பிரிங் போல துள்ளிக் குதித்து என்னவெல்லாமோ பேசினார். அதையெல்லாம் குறிப்பிடாமல் உங்களுக்குத் தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டிக் காட்டுகிற இந்த எடிட்டிங் வேலையை எங்கே கற்றீர்கள்? அதற்குப் பிறகு பேருந்தில் மதுரை வரை என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து அதே விக்ரமாதித்யன் என்னிடம் சொன்னதையெல்லாம் இப்போது நான் எழுதினால் என்ன சொல்வீர்கள்?

விசயம் இத்தோடு முடியவில்லை. கூட்டம் முடிந்து வெளியே வரும்போது, ‘நீங்கள் வேறு ஏதோ கணிப்பில் என்னை டீல் செய்யறீங்க ஆதவன். தேவையில்லாமல் என்னை தமிழ் வாத்தியான் என்றெல்லாம் பேசிவிட்டீர்கள்’ என்றார் அரசு. நானொரு தமிழ் வாத்தியானாக்கும் என்று முண்டா தட்டத் தொடங்கியவர் அவர்தான், நானில்லை என்று தெரிவித்துவிட்டு நகர்ந்தேன். நாம் மீண்டும் பேசுவோம் என்றார். ‘இப்படித்தான் பேசுவோம் என்றால் நாம் பேசி என்ன ஆகப்போகிறது’ என்றேன். கையைப் பிடித்து நிறுத்திய டி.கண்ணன் ‘நீ சொன்ன விசயமெல்லாம் சரிதாண்டா தம்பி. நேரம்தான் சரியல்ல’ என்றார். வெண்மணியில் இங்க எரியறப்பவும் அங்க அவங்க அநாதையாத்தாண்டா இருந்தாங்க என்று வரலாற்றை ஒரு தீட்டாக்கோணத்திற்கு திருப்பிவைத்தார் கண்ணன்.

இது பொருத்தமான நேரமல்ல, இந்த விசயத்தைப் பேச இதுவா நேரம்?, எப்ப எதைப் பேசணும்னு ஒரு கணக்கிருக்கில்ல என்ற வார்த்தைகள் ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து காதில் விழுந்து கொண்டேயிருக்கிறது. மாற்றுக்கருத்துகளில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ள திராணியற்று நேரப்பொருத்தம் வாய்க்கவில்லை என்று இன்னும் எத்தனை காலத்திற்கு தப்பித்துக்கொள்ள முடியும்? மாற்றுக்கருத்து எதுவொன்றையும் பேச இது தருணமல்ல என்ற அறிவிப்போடு நிகழ்த்தப்பட்ட கொலைகள் தான் எத்தனை? அழிக்கப்பட்ட அமைப்புகள் ஒன்றா இரண்டா?

நேற்று பேச முயற்சித்தபோது, போராட்டக் களத்தில் இருக்கிறவர்களை விமர்சிக்கக்கூடாது என்று குரல்வளையைக் கவ்வினீர்கள். இன்று பேசும்போது அது இழவுவீடு என்கிறீர்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக இலங்கைத் தமிழ்மக்களின் வீடுகளில் தொடர்ந்து இழவு விழுந்து கொண்டேதான் இருக்கிறது. தியாகமென்றும் துரோகமென்றும் நானாவிதப் பெயர்களோடு மரணத்தை அவர்களுக்கு விநியோகித்தவர்கள் இப்போது கொல்லப்பட்ட நிலையில்தான் உங்களுக்கெல்லாம் இழப்பின் வலி உறைக்கிறது. ஆகவே இப்போதும் மௌனம் காக்கச் சொல்கிறீர்கள். இன்னும் நாலைந்து வருடம் கழித்துப் பேசினால், அதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே இப்போது எதற்கந்தப் பேச்சு என்று அப்போதும் வாயடைக்கப் பார்ப்பீர்கள்.

நிகழ்ந்துவிட்ட இழப்புகளுக்கு சம பொறுப்பாளியாக இருந்தவர்களை அடையாளம் காட்டி அம்பலப்படுத்திவிடும் எந்தவொரு உரையாடலையும் மறுப்பதற்கே நேரப்பொருத்தம் என்ற வார்த்தைஜாலம் களமிறக்கப்படுகிறது. நேரம் கணிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பட்சத்தில் டி.கண்ணனும் தமிழாசிரியர் அரசுவும் ஒரு நன்முகூர்த்தத்திற்காக காத்திருக்கட்டும். ஆனால் அதை என்மீது பிரயோகிக்க அவர்களுக்கு உரிமையில்லை.

உங்களுக்கு மேலும் சில விசயங்கள் தமிழ்நதி-

தங்களுக்கு உவப்பில்லாத விசயங்களைப் பேசுகிறவர்களையெல்லாம் ‘சிறுமை கொண்டவர்கள்’ என்று மதிப்பீடு செய்யும் புலிகளின் புத்தி உங்களுக்கும் இருக்கிறது. அதுசரி, ‘கத்த புத்தி செத்தால்தான் போகும்’ என்பது மூத்தோர் வாக்கு. பெருமைக்கும் சிறுமைக்குமான துலாக்கோலை உங்களுக்கு வழங்கியது யார் அம்மணி? அல்லது பாம்பின் கால் பாம்பறிகிறதா? ஒரு மாற்றுக்கருத்தை எதிர்கொள்ளத் திராணியற்று பின்னூட்டம் என்ற பெயரில் வசைபொழிகிற பத்து அநாமதேயங்கள் இருக்கிற தைரியத்தில் நீங்கள் எதுவும் எழுதுவீர்களோ?

மாற்றுக்கருத்து எல்லாவற்றுக்கும் ஷோபாசக்திதான் பிறப்பிடமா? அ.மார்க்ஸ் பேசினாலும் ஆதவன் பேசினாலும், நீலகண்டனோ அடையாளம் சாதிக்கோ புத்தகம் போட்டாலும் அவர்களை உடனே ஷோபாசக்தியின் சீடர்களாக்கிவிடுவதில் உங்களைப் போன்றவர்களுக்கு அப்படியென்ன அலாதிப் பிரியம்? மேய்ப்பனின் கீழ் உழன்ற மந்தை மனோபாவம் பிறரையும் அவ்வாறே பார்க்கப் பணிக்கிறதா? உங்களது குரலுக்கு எஜமானர்களாக யாரையும் வைத்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களின் குரல் சுதந்திரமானதாய் இருக்கக்கூடும் என்று நம்புவதற்கான பயிற்சியை இனியாவது கைக்கொள்ளுங்களேன். எனது குரல் பிரான்சிலிருந்து கேட்கிறதென்றால், உங்களது குரல் எங்கிருந்து ஒலிக்கிறது என்று கேட்பதும் சாத்தியம்தானே? தமிழ்நாட்டின் எந்தவொரு சமூக- அரசியல் பிரச்னையிலும் தலையிடாத சிலர் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மட்டும் உரத்து முழங்கி உக்கிரவேஷம் போடுவதற்குப் பின்னால் வெறும் இனவுணர்வு மட்டும்தான் இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப எவ்வளவு நேரமாகும்? உங்களது சந்தேகத்தை திருப்பிப்போட்டு எதிர்மறையாக நீட்டித்தால், இலங்கைத் தமிழர்கள் செரிந்து வாழும் கனடாவை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் குடியேறியிருப்பதற்கான உள்நோக்கம் என்ன என்றும்கூட ஒருவர் குதர்க்கமாக கேட்டுவிட முடியும்.

உங்களுக்கு நியாயம் கேட்கிற அவசரத்தில் ‘எங்கோ இருக்கிற குஜராத்’ என்கிறீர்கள். தமிழ்நாட்டானைப் பொறுத்தவரை குஜராத் எங்கோ இருக்கிறது என்ற தர்க்கத்தில் இறங்கினால், இலங்கையும் தமிழ்நாட்டானுக்கு எங்கோ இருக்கிற ஒன்றாகிவிடும் என்பதாவது தங்களுக்குப் புரிகிறதா? எங்கோ இருக்கிற இலங்கையில் நடக்கிற பிரச்னைகளுக்கு இங்கே ஏன் 14 தமிழர்கள் தம்முயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற கேள்வி எழும்பாதா? உங்களுக்கென்ன, வென்றால் ஈழம் தோற்றால் இலங்கை. ஆனால் உங்களுக்காக இறந்துபோன அந்த இந்தியத் தமிழர்கள் 14 பேரின் குடும்பத்துக்கும் என்ன இருக்கிறது? அவர்கள் உங்களை எங்கோ இருக்கிற இலங்கைத்தமிழராக பார்க்கவில்லையே? ஆனால் இலங்கையில் இஸ்லாமியர்களைக் கொன்றும் எஞ்சியவர்களை இரவிரவாக விரட்டியடித்தும் பெருமிதம் கொண்ட இந்து மனோபாவத்தின் எச்சம் உங்களுக்குள்ளிருந்து, எங்கோ இருக்கிற குஜராத்தின் இஸ்லாமியருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களைப் பார்த்து எரிச்சலடைகிறதோ? அதெப்படி உங்களால் அப்படி சொல்ல முடிகிறது? இங்குள்ள தமிழர்கள் யாருக்காக துக்கப்பட வேண்டும் என்பதைக்கூட நீங்கள்தான் தீர்மானிப்பீர்களோ? ஒடுக்கப்படுகிற ஒரு சமூகம் உலகின் பலபாகங்களில் ஒடுக்கப்படுகிற பிற சமூகங்களோடு இயல்பாகவே ஒருமைப்பாடு கொண்டிருக்கும். ஆனால் உங்களுக்கேன் இந்த வன்மம்? எனக்கொன்றும் பதில் சொல்ல வேண்டியதில்லை, முடிந்தால் ஒருமுறை யோசித்துப் பாருங்கள்.

இலங்கையின் ஒரு பகுதிக்குள்ளேயே இருக்கிற இந்தியத் தமிழர்களை ஒதுக்கிவைத்திருக்கிறீர்கள். ‘இந்தியத் தமிழர்களைத் தங்களுடன் அரவணைத்துக் கொள்வது பற்றி இலங்கைத் தமிழர்கள் நினைத்தும் பார்க்கவில்லை’ என்கிறார் அந்தனி ஜீவா ( செங்கதிர்- மே 2009 பக்கம்- 10). ஆனால் நீங்கள் இங்கேயுள்ள அவர்களது சொந்தங்களான எங்களிடம் வந்து துளியும் உறுத்தலின்றி ‘‘எங்களுக்காக குரல் கொடுங்கள்’’ என்று கேட்கிறீர்கள். ‘ஆடு பகை குட்டி உறவு’ என்று எங்களூரில் சொல்லப்படும் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அதுகுறித்து நாங்கள் எதுவும் கேள்வி எழுப்பினால் சிறுமைப் புத்தி உள்ளவர்கள் என்று பதிவு எழுதக் கிளம்பி விடுகிறீர்கள். சரி, எங்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என்று உங்களுக்கு வெகு அருகாமையில் ஒட்டியிருக்கும் கிழக்கு மாகாணத்து தமிழனிடமாவது உங்களால் கேள்வி எழுப்ப முடியுமா? அவர்கள் ஏன் உங்களிடமிருந்து பிரிந்து போனார்கள்? அவர்களில் ஒருவரும் ஏன் உங்களுக்காக தீக்குளிக்கவில்லை? உண்ணாவிரதம் ஊர்வலம் என்று ஒரு சுக்கும் நடக்காதது ஏன்? எல்லாவற்றுக்கும் கருணாவையும் பிள்ளையானையும் காரணமாக்கிவிட முடியுமா?

உங்கள் தேவைக்காக தமிழினம் என்று குரல் கொடுத்துக்கொண்டே உடனிருக்கும் தமிழர்களை அண்டவிடாமல் ஒதுக்கிவைத்தீர்கள், ஒழித்துக்கட்டினீர்கள். இந்த சூதுக்கள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் மாற்றுக்கருத்து தெரிவிப்போரை துரோகிகளாக சித்தரிக்கும் இழிவான செயல்களை கைக்கொள்கிறீர். உங்களையழிக்கும் துரோகிகள் வெளியிலிருந்துதானா வரவேண்டும்? புலிகளின் துரோகிகள் புலிகள்தான் என்ற உண்மையை எப்போது படிக்கப்போகிறீர்கள்?

மாற்றுக்கருத்துக்கு செவிமடுக்கும் ஜனநாயகப்பண்பும் சகிப்புத்தன்மையும் அற்ற புலிகளின் அராஜகப் போக்கு தமிழ்நாட்டிலும் பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் போக்குக்கு இரையானவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தாங்கள் அறிந்திருப்பதே இறுதி உண்மை என்று நிறுவப்பார்க்கிறார்கள். அடுத்தவர் கருத்தை பொறுமையற்று கேட்கிறார்கள். அல்லது கேட்க மறுத்து காதையும் மனதையும் மூடிக் கொள்கிறார்கள். தாங்கள் வைத்திருக்கும் பலவீனமான நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள மேலும் மேலும் அவர்கள் குறுங்குழு வாதங்களுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் புலிகளிடம் இருந்த துரோகி முத்திரையை இப்போது யார் முதுகில் குத்தலாம் என்று ஏந்தி அலைகிறார்கள். ‘புலிகள் ஈழத்தில் இருக்கமாட்டார்கள், ஆனால் புகலிடத்தில் இருப்பார்கள்’ என்றார் சுசீந்திரன். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள் என்று சொல்லும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அப்படியானவர்களுக்கு ஒரு சாமர்த்தியமான- கற்பனை வளம்மிக்க- கதை ஜோடிக்கத் தெரிந்த ஒரு தலைவி தேவைப்படலாம். எனவே இங்கேயே இருங்கள். வீம்புக்காகவோ ரோஷத்திலோ ஊருக்குப் போறேன்னு கிளம்பிவிட வேண்டாம்.

மற்றபடி படைப்பாளியின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லும் இலக்கணமெல்லாம் சரிதான். ஆனால் அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும் முன் ஒருமுறையாவது அதை நீங்கள் கடைபிடிக்க வேண்டுமென்பதுதான் இதிலுள்ள அக்கப்போர். அதற்காக குறைந்தபட்சம் இப்போதாவது ஒரு மட்டக்களப்பானை, ஒரு இஸ்லாமியனை, ஒரு மலையகத்தமிழனை, முடிந்தால் ஒரு சிங்களனையும்கூட உங்களைப்போலவே அவர்களும் மனிதர்கள்தான் என்று நினைக்கப் பழகுங்கள்.

பார்த்துப் பழகிய ஆதவனை இனி பார்க்க முடியாது, பொய்யாகவேனும் ஒரு புன்னகையைக்கூட உதிர்க்க முடியாது என்று எழுதியிருக்கிறீர்கள். தனக்கு உவப்பான கருத்தைச் சொல்லாதவன் முகத்தில் விழிக்கக்கூடாது என்ற இந்த நினைப்புதான் சகிப்பின்மையாக உருவெடுத்து சகோதரப் படுகொலைகளை நிகழ்த்த உங்கள் தலைமையை இட்டுச் சென்றது. ஆனால் நான் உங்களை எதிர்கொண்டால் பேசுவேன். உள்ளார்ந்த அன்போடு புன்னகைப்பேன். இன்னா செய்தாரை ஒறுப்பது என்ற ரீதியில் அல்ல, கருத்துகளும் தனிமனித உறவும், ஒன்று மற்றொன்றுக்கான பலியோ பணயமோ அல்ல என்று நம்புவதால்.

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
.
வாசகர் கருத்துக்கள்
Gikkan
2009-07-02 10:33:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் இத்தனை அசிங்கமானவரா? இவரது எழுத்துக்களை முன்பு விரும்பிப் படித்தவன் என்ற முறையில், இந்தக் கட்டுரையைப் பார்க்கும்போது வெறும் காழ்ப்புணர்ச்சி மட்டுமே இதை எழுதத் தூண்டியிருக்கும் எனத் தோன்றுகிறது.

Robin
2009-07-02 10:34:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அருமையான கருத்துக்கள். வெற்றுக் கூச்சல்களிடையே ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஆதவன் தீட்சண்யா அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

mani senthil
2009-07-02 11:07:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தேவேந்திரபூபதி குறித்து தமிழ்நதி கூறியதாக ஆதவன் தெரிவித்திருக்கும் செய்தியைப் படிக்கும்போது ஆதவன்மேல் பரிதாபம்தான் வருகிறது. இப்படி கா.சு. கண்ணன் ரேஞ்சுக்கு இறங்கிட்டாரே என்ற பார்க்கும்போது வருத்தமும் வருகிறது.

dharmaseelan
2009-07-03 12:02:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இம்மானுவேல் சேகரன் என்ற தலித் தலைவரை முத்துராமலிங்கம் என்ற சாதி வெறியன் கொன்றான். அதனையொட்டி நடந்த முதுகளத்தூர் கலவரத்தில் ஏராளமான தலித்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது அந்த சாதி வெறியனைக் கைது செய்யக்கூடாது என்று கூச்சல் போட்டவர்கள் அன்றைக்கு இருந்த பார்ப்பன கம்யூனிஸ்ட்கள். அதே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டுதான் ஆதவன் தலித்தியம் பேசுகிறார்.

வெள்ளாள மக்களின் சாதித்திமிருக்காக ஈழப்போராட்டத்தை உதாசீனப்படுத்தும் ஆதவன், என்ன காரணத்திற்காக இடஒதுக்கீட்டை எதிர்க்கும், இந்து மதத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் (காண்க: உ.ரா.வரதராசன், கீற்று.காம் நேர்காணல்) இருக்கிறார்? ஒருவேளை காலச்சுவடு இரவிக்குமாரை வளர்ப்பது போல், ஆதவனை சிபிஎம் கட்சியினர் வளர்க்கிறார்களா?

PURAM BOAKKU
2009-07-03 12:25:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு பேசுவதுதான் அண்ணனின் வழக்கம். 

இஸ்லாமியர்கள் குசாராத்திலோ, ஈழத்திலோ, உலகில் எந்தப் பகுதியுலும் தாக்கப் படக் கூடாது , அவமானப்படுத்தப் படக் கூடாது என்பதுதான் நமது கொள்கையும். ஆனால் அதற்காக அப்பாவி ஈழத் தமிழர் இனப் படுகொலை செய்வதைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என்று இருப்பவரைப் பற்றி என்ன சொல்வது?

திண்ணியத்தில் தலித்தின் வாயில் பீ திணிக்கப் பட்டதற்கு, குண்டடி பட்டு இரத்தம் வழியும் நிலையில் இருக்கும் ஈழத் தமிழன் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், இந்த மனித நேய மகா அறிங்கர்! அப்படி ஈழத் தமிழர் கண்டனம் தெரிவிக்காததால், ஈழத்தில் நடந்த படுகொலை பற்றி இவர் எதுவும் பேச வேண்டியதில்லையாம்.

இதை கேட்டு சிரிப்பதா, அழுவதா? 

திண்ணியத்திலே தலித்துகளின் வாயில் பீ திணிக்கப் பட்டதற்கு அண்ணன் என்ன செய்தார்? 

சட்டப்படி அதிக பட்ச தண்டனை வழங்கப் பட்டதா? 

இந்தியாவில் உள்ள எல்லா மக்களும் தங்கள் நாகரீகத்தைப், பண்பாட்டை வளர்த்து, மனிதரை மனிதராக நடத்தும் மனப் பக்குவம் வர, மனதினில் மனிதர் மீது அன்பை வளர்க்க வேண்டும் என்பதுதான் நம் கருத்து. 

தலித்துகளின் வாயில் பீ திணித்த மிருக குணம் கொண்டவரைப் போன்றவரைத் திருத்த, மனதினில் அன்பையும், மண்டையில் அறிவையும் திணிக்க வேண்டும் என்பது நம் கருத்து. அதோடு கடுமையான தண்டனையும் வழக்கப் பட வேண்டும் என்பதும் நம் கருத்து. 

ஆனால் அண்ணனுக்கு பிடித்தது எல்லாம், எல்லோரின் வாயிலும் மாட்டுக் கறியைத் திணிக்க வேண்டும் என்பதுதான்.

மாட்டுக் கறி உணவு பற்றி அண்ணன் மணிக் கணக்கில் பேசுவார், எழுதுவார். ஆனால் மாடை விடக் கேவலமான நிலையில் அடைத்து வைக்கப் பட்டு இருக்கும் மக்களைப் பற்றி கவலைப் பட வேண்டிய கட்டாயம் அவருக்கு இல்லை.

thenkani kannan
2009-07-03 12:40:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நிதானமிழந்து எழுதியிருக்கிறார் ஆதவன் தீட்சண்யா

sakthivel
2009-07-03 01:20:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் தீட்சண்யா கொந்தளிப்பார்ன்னு தெரியும் ஆனால் இவ்வளவு கொந்தளிப்பாருன்னு தெரியாது. கவுண்டமணி ஒரு படத்தில் பொண்டாட்டிய அடிக்கவரும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி தடுக்கிறீங்களே நான் எப்பதான் பொண்டாடிய அடிக்கிறது என கேட்பார். இப்ப ஆதவனும் கவுண்டமணியைபோல நான் எப்பதான் ஈழத்தமிழர்களை குறைசொல்லறது என கேட்கிறார் அவ்வளவுதான். எங்க ஊருல ஒரு வக்கீல் ஒரு சிக்கலான கேசை வாதாட ஒத்துக்கொண்டார் மற்றவரல்லாம் இந்த கேசை ஏன் எடுத்தாய்..என கேட்டபோது இந்த கேசின் நான் ஜெயிப்பேன் என்றார். அதே போல ஜெயித்தார். அப்போது இந்த கேஸ் ஜோடிக்கப்பட்டது என உங்களுக்கு எப்போது தெரியும் என காவலதிகாரி கேட்டபோது அந்த வக்கீல் சொன்னார் நீங்க எப்.ஐ.ஆர் வழக்கமாக போடும் பக்கங்களை விட இது நான்கு மடங்கு அதிகம் அப்போதே தெரிந்துகொண்டேன் இது ஜோடிக்கப்பட்டது என இது ஆதவனுக்கும் பொருந்து.
ஒரு நிகழ்ச்சி முடிந்த்தது அந்த நிகழ்ச்சி பற்றியைவிட தன்னை பற்றி அதிகம் பேசவேண்டும் எனும் ஜெயமோகன த்தனத்தின் வெளிப்பாடே.
ஈழமக்களுக்குகாக குரல்கொடுக்க துணியாத நீங்கள் அதற்கு உப்புக்குசப்பானியாக எழுதியிருக்கும் கட்டுரையை நீங்கள் கூட இரணடாம்முறை வாசிக்கமாட்டீர்கள் எடுத்த வாந்தியை யார்தான் திரும்ப மோந்துபார்ப்பர். 
உங்கள் கொபச மாக இருக்கும் சிபிஎம் கட்சிதான் தலித் ஆதரவாண கட்சி என முழங்குவதற்கு உங்களுக்கு காமடியாக இல்லை. வெண்மனியில் தலித் தலைவர்களை உள்ளே விடாமல் அந்த இடத்தை சொந்தமாக்கி, இது என் இடம் உள்ளே வராதே எனும் முதலாளித்துவ முறைக்கு தலையாட்டும் நீங்கள் எப்படி தலித் களுக்கான பக்கம் என சொன்னால் நல்லா இருக்கும். வெண்மனி போராட்டத்தை வெறும் வர்க்கம் சார்ந்துமட்டுமே பார்க்கும் அரைப்பார்வையில் வர்ணத்தை மூடிமறைக்கும் கட்சியில் இருந்துகொண்டு தலித் சிந்த்தனை எல்லாம் பேசுவதற்கு உங்களூரிலே நல்ல பழமொழி உண்டு அதனை இங்கு பொருத்திக்கொள்ளுங்கள்.
முதலில் உங்கள் கட்சிக்குள் இருக்கும் பார்ப்பனியத்தலைமைகளை அகற்ற நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறிர்கள். உங்களின் மறைந்த சிங் தலைவரின் தலைபாகை இந்துத்துவ குறியீடுதானே அதனை ஏன் அவர் அகற்றவில்லை என கேட்டத்தற்காக அவருக்கு துரோகி பட்டம் அளித்து வெளியேற்றிய அக்கட்சியில் இருந்துகொண்டு புலிகள் தரும் பட்டங்களை விமர்சிக்க என்ன தகுதி இருக்கு?
தொடரும்...

maruthan
2009-07-03 02:21:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் சீரியஸான ஆளுன்னு நினைச்சா, இவர் என்ன இப்படி காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு?

சரவணன்.செ
2009-07-03 03:31:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


நண்பர்களே!
ஆதவனின் கதை,கட்டுறைகளை படித்தவர்கள் மற்றும் அவரை நன்கு அறிந்தவர்கள் அதிகமாக பின்னூட்டம் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். 

ஆதவன் நல்ல, உணர்வுபூர்வமான , சமகால படைபாளி . அவரின் எழுத்துக்களை அறிந்தவன் என்ற முறையில் ஆதவன் தவறாகவோ அல்லது அப்படி பேசியிருப்பின் அதை மறைப்பவராகவோ இருக்க வாய்ப்பு இல்லை.

தமிழ் நதி புலிகளுக்கோ அல்லது மற்ற எவருக்கோ வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்... ஆதவனுக்கு அந்த அவசியம் இல்லை... அவரது எழுத்துக்கள் ஒடுக்கப்பட்ட மற்றும் தலித்துக்கள் மீது அக்கறை கொண்டிருப்பினும் அவர் தலித்துக்கள் தவறு செய்தாலும் விமர்சிப்பவர்.. திருமாவளவனையும் விமர்சித்தார்..

ஆதவன் ஒரு சுதந்திரமான எழுத்தாளர் .. அவரின் இலங்கை தமிழர்கள் மீதான கருத்துக்களும் ,தலித்திய சிந்தனைகளும் அவரின் மற்ற கருத்துக்களும் விவாதத்திற்கு அப்பாட்பட்டவை அல்ல... ஏன் ,ஆதவனே மாற்று கருத்துக்களை உளமாற வரவேற்பவர்தான்.. 

எனவே ,நடந்த ஒரு சம்பவத்தை இரு வேறு தரப்பின் வழியாக உள்வாங்கிக்கொண்டு ஆதவனை விமர்சிப்பது சரியல்ல....

ஆதவனின் கருத்துக்களை, மாற்று கருத்து இருப்பின் அதன் மூலம் எதிர்ப்பதே சரியானது... இருவருக்கும் தனி மனித வசைபாடல் அழகல்ல! 

செ.சரவணன்.

PURAM BOAKKU
2009-07-03 04:52:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நான் கூட இந்தக் கட்டுரையை விமரிசித்து தான் எழுதி இருக்கிறேன். ஆனால் விமரிசனம் செய்ததற்கான காரணம் என்ன வென்றால், ஈழப் பிரச்சினையை ஒதுக்கியது சரியல்ல என்பதற்காகத்தான். தனிப் பட்ட முறையில் அவர் மீது நாம் குற்றம் சாட்ட வில்லை.

nallasamy
2009-07-03 05:49:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் போன்ற முற்போக்கு எண்ணங்கொண்ட எழுத்தாளர்கள் தரம் தாழ்ந்த முறையில் தனிமனித விமர்சனத்தில் இறங்குவது ஆரோக்கியமானதல்ல. நக்கல் என்ற பெயரில் அவர் எழுதியிருப்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

vishnupuramsaravanan
2009-07-03 09:05:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துலகம் மீது எனக்கு அளப்பறிய மதிப்புண்டு.அவர் மேடைப்பேச்சு குறித்து அதிகம் சிலாகித்தும் இருக்கிறேன் நண்பர்களிடம். இப்போது நான் எழுத விரும்புவது இந்த பிரச்சினை ஒட்டிய என் பதிவினைத்தான்.

ஈழத்தில் சாதிய வேறுபாடு இருப்பது என்பது டேனியலிருந்து பதிந்துதான் வருகிறார்கள். அங்கு ஆயுதபோராட்டம் துவங்குவதற்கு முன்னும் இருந்தே வருகிறது. அந்த சாதியப்பார்வைதான் இத்தகைய வீழ்ச்சிக்குகாரணம் என சொல்லமுடியுமா என்ன? ஆதவனின் நிலைபாடு தமுஎச வின் நிலைபாடும் ஒன்றுதான் என நான் நினைக்கிறேன். ஈழத்தில் போரை நிறுத்தக்கோரும் பலவித போராட்டங்களில் பல இயங்கங்கள் கலந்துகொண்ட சூழலில் தமுஎச கலந்துகொள்ளவில்லை [அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டது வேறு விசயம்] ஆனால் இறுதியில் தமுஎச வும் ஈழப்போரை நிறுத்தச்சொல்லி தெருமுனைபரப்புரை செய்தது. [தஞ்சையில் நடந்த அக்கூட்டத்தில் ச.தமிழ்செல்வன் ஈழப்போரை நிறுத்த சொல்லுவதற்கான காரணங்களை காட்டிலும் அதுவரை தமுஎச களத்தில் இறங்காத்தை விமர்சித்த இயக்கங்களை ஒரு பிடிக்கவே அதிகநேரம் எடுத்துகொண்டது ஒரு புறம்]. சிபிஎம் ன் புகழ்பெற்ற பேச்சாளர் சிலர் கூட சிபிஐ யின் நிலைபாட்டை பொதுமேடையில் கடுமையான சொல்லாடலில் விமர்சித்தார். இப்படி உங்கள் சார்ந்திருக்கிற இயக்கம் கட்சி என நீங்கள் சொல்வதுபோல ஈழபோராட்டத்தின் உள்முகத்தை பட்டியலிட முயலவில்லை. அங்கு அமைதிபேச்சுவார்த்தை நடந்தபோது அதுகுறித்து ஒரு கருத்தரங்கம் கூட நடத்தவில்லை. நீங்கள் ஈழவிடுதலைக்கு ஆதரவாக இல்லை என்பதற்காக அந்த நிலைபாடுக்கு தேவையான நபர்களுடனும் சித்தாங்களுடனும் இணைந்திருக்கிறீர்கள். அதனை மறைக்க கொஞ்சம் கோவமும் படுகிறீர்கள்.
புலிகள்தான் அங்குள்ள தமிழர்கள் கொல்ல காரணம் என சொல்வதை வைத்துக்கொண்டால் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவமே சொல்கிறதே. இப்போதாவது முயலுங்களேன் மிச்சசொச்சமிருக்கும் தமிழர்களை காப்பாற்ற.
""""ஈராக்கில் மனிதர்கள் செத்தபோது நாம் குரல் கொடுக்கலையா..பாலஸ்தீனத்தில் மடிந்தபோது நாம் குரல் கொடுக்கலையா..""""என
உங்களின் பல மேடைபேச்சாளர்கள் இவ்விசயத்தை பேசும்போது எனக்கு அனிச்சயாய் ஒரு கேள்வி எழும் அங்குள்ள மனிதர்கள் சாகும்போது குரல் கொடுத்த நீங்கள் ஈழத்தமிழகள் சாகும்போது குரல் கொடுக்கவில்லை?
தமிழ்நதி உள்ளிட்டோர்களை எப்போது இந்தியாவைவிட்டு கிளம்பபோகிறிர்கள் என மறைமுகமாக கேட்கிறீர்கள் சில நாட்களுக்கு முன் சில அரசியல் வாதிகள்[ப.சிதம்பரம் உள்ளிட்ட] வேறுவிதமாக சொல்லிவந்தார்கள் என்பதை உங்களுக்கு தனியே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இன்னும் சிலவிச்யங்கள் எழுதனும் முடிந்தால் பிறகு..

விஷ்ணுபுரம் சரவணன்

simbu
2009-07-03 10:14:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆயிரக்கணக்கான தலித்துக்கள் கடந்த ஒரு ஆண்டில் ராஜ பக்‌ஷே குடும்பத்தால் வேட்டையாடப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு ஆதவன் குரல் கொடுப்பாரா????
இலை செத்துமடிந்த ஒரு லட்சம் பேரையும் புலிகள் என்கிறாரா ஆதவன்???

mahi
2009-07-03 10:38:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கு .....
சாதிய ஒடுக்கு முறைகள் கட்டாயம் கண்டிக்கப்படவேண்டியதே ,இந்த விசயத்தில் மாற்று கருத்து இல்லை ,ஆனால் நீங்கள் எதற்கு எதையோ முடிச்சு போடுகிறிர்கள் ,ஈழ மக்களுக்காக வருத்தபடுகிறிர்கள் என்று சொல்லிவிட்டு ,எதை எதையோ இழுத்து நாங்கள் ஏன் உதவ வேண்டும் என்று போகிறபோக்கில் சொல்லுகிறிர்கள் ,...
முதலில் ஒரு தீர்க்கமான பார்வைக்கு வாருங்கள் ,திரைபடங்களில் வருவது போல பழிக்கு பழி என்ற வசனங்கள் தேவையில்லாதது ,
இழவு வீட்டில் பங்காளி சண்டை மனோபாவமே உங்களிடம் மண்டிகிடகிறது ,ஒன்று ஈழ தமிழனுக்கு எதாவது செய்யுங்கள் ,இல்லையேல் அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவதை நிறுத்திகொள்ளுங்கள் ,புலிகள் பற்றிய விமர்சனம் எல்லாம் அப்புறம் பார்க்கலாம்

மனோ
2009-07-03 10:49:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தமிழ்நதி அன்று கடவு நிகழ்வில் தன் நன்பர்களிடம் குஜராத் பற்றி பேசும் போது அ.முத்துக்கிருஷ்ணன் எப்படி தெகல்காவின் புலனாய்வை உடனடியாக வெளிப்படுத்தினார், அவ்வாராக இங்கு ஈழம் பற்றி ஏன் எழுத்தாளர்கள் துரிதமாக எழுதவில்லை என ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது ஆதகம அவ் வகையில் தான் குஜராத்தை குறிப்பிட்டது.

அப்பாவித் தமிழன்
2009-07-03 11:09:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன்,
உணர்ச்சி பொங்கக் கதைகளைச் சொல்லி தமிழன் சாகிறான் சாகிறான் எனக் கூவி தமிழகத் தமிழர்களின் ஆதரவைத் தேடிய ஈழத்து மக்கள் தங்கள் மத்தியில் வாழ்ந்த தமிழர்களை எப்படி கொடுமை படுத்தினார்கள் என்பதை கேட்பதற்கே ஆபாசமாயிருக்கிறது. ஆதாயமிருந்தால் மட்டுமே இவர்கள் நம்மை தேடுகிறார்களே தவிர நம்மை மற்றபடி கண்டுகொள்வதுமில்லை நினைப்பதுவுமில்லை.

இதில் புலிகளின் சில தவறுகள், சிறு தவறுகள் என அவர்களின் மாபெரும் வரலாற்றுப் பிழைகளை சிறிதுபடுத்தும் கயமை வேறு நடக்கிறது. உங்களைப் போன்ற்வர்கள் தமிழர்களின் கண்களைத் திறக்க வேண்டும். இலங்கையில் நடக்கும் நடந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். புலிகளின் கதையை வீர சாகசமாக்கி புத்தகம் போட்டு பணம் பண்ணுபவர்களுக்கு மாற்று கருத்து இல்லாமல் போய் விடும்.

அதிஷா
2009-07-03 11:19:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

புரிந்துணர்வோடு எழுதப்பட்ட கடிதமாகவே இதை பார்க்கிறேன். இதில் எந்த காழ்ப்புணர்ச்சியோ , கோபமோ வெறுப்போ தெரியவில்லை என்பது தெளிவாய்த் தெரிந்தும். புலிவால் பிடித்த சில பேருக்கு மட்டும் இது வெற்று கூச்சலாய் தெரிவதில் ஆச்சரியமில்லை.

ஆறு கோடித் தமிழரும் ஈழத்தமிழருக்குத்தான் ஆதரவாய் இருக்கின்றனர். புலிகளுக்கு அல்ல என்பது புலிகளின் பினாமிகளுக்கு புரிவதில்லை.

தமிழ்நதியின் ஒருபக்க சார்புடைய கட்டுரைக்கு சரியான பதிலடி.!

நன்றி

தோழமையுடன்

அதிஷா

கிருத்திகன்
2009-07-03 11:22:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் சொல்கிற வெள்ளாள ஆதிக்கம் காரணமாகத்தான் புலிகள் மாற்றுக் கருத்தாளர்களைக் கொன்றார்கள் என்பதெல்லாம் அதிகபட்ச நகைச்சுவை. உணமையைச் சொல்லப்போனால் பிரபாகரன் ஒரு மீனவர். (அதற்கான கொச்சை வார்த்தையை நான் உபயோகிக்க விரும்பவில்லை). இதனால் தான் பல அறிவுஜீவிகள் (வெள்ளாளர்கள்) அவரது தலைமையை எதிர்த்தார்கள் என்பது ஈழத்தில் வாழ்ந்த சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரியும்

Murugan
2009-07-03 01:04:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Hello Mr.
Could you explain me or correct me if our honorable C.M.Kalainger did spmething good for the so called dalit people or SC, ST people in tamilnadu ?to develop or uplift their life in TN to lead a decent life ..then i accept all your comment towards the LTTE, can you explain what you personally did for the wealth of SC people in tamilnadu or in your place ? Madurai one of the great place in tamilnadu and unoffically belongs to kalaingers son and all the media and kalainger and co holds more than 40 companys in tamilnadu and allover the india...can you ever tried to talk about this on behalf of tamilnadu people ? never then how can you give your comments blindly on LTTE, yes ofcourse every one who can think accept that LTTE did quite a lot of mistake that most of politician did in tamilnadu too ..........so why didnot you talk about you holes with in your place first before commeting on LTTE ...sometime back i read your talk in Aanadhavikatan and i felt wow this man is amazing and trying to fighting for the innocent SC people in tamilndau now i realized that you are not going to achieve anything by talking like this, what ever your talking is just for you name and nothing going to change.............bullshit

i am sorry to say thing common man you got so talent to write in a powerful manner why dont you keep on try to write some valauble stuffs for the wealth of common and innocent people and stop criticising others.Finally one thing i want to say for all writers before commenting others just look back yourself what you did for your own people ? analyse yourself first, you have 100s of holes in your body and you forgot everything and you are interested in talking about others hole stop all your nonsense...................................

நந்தா
2009-07-03 01:14:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் தீட்சண்யா ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கின்றேன். உங்கள் மீதான மரியாதையை நீங்களே கெடுத்துக் கொண்டீர்கள்.

தேவா
2009-07-03 01:32:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

புலிகளை நீங்கள் ஏன் ஆதரிக்கிறீர்களில்லை எதற்காக இப்படி ஒரு பேட்டியை எடுத்து வெளியிடுகிறீர்கள் என்பது தமிழ்நதியின் கேள்வி. ஆக புலிகளை எல்லோரும் ஆதரித்தே தீர வேண்டும் என்பது தமிழ்நதியின் நியாயம். மாற்றுக்கருத்து என்பதை புலிகளோ புலிஆதரவாளர்களோ ஏற்றுக்கொள்ளாத ஒன்று. இரவல் தலை எனக்குத்தேவையில்லை சொந்தமாகவே சிந்திக்கத்தெரியும் என்று வெகு தெளிவாகவே ஆதவன் தனது கட்டுரையில் சொல்லிவிட்டார்.ஒருவரைப்போய் புலியை ஆதரித்தே தீரவேண்டுமென்று தமிழ்நதி எப்படிக்கேட்கமுடியும். ஏதோ ஆதவன் ஈழத்தமிழன் செத்துமடிவதை கால்மேல் கால்போட்டு இரசிப்பதுபோல் பரிதாபமாக மற்றவர்களுக்குச்சொல்ல முனைந்திருக்கிறார் தமிழ்நதி. அய்ரோப்பிய புலிஆதரவாளர்கள் முதலில் போரென்றால் சனம் சாகத்தான் செய்யுமென்றும் பிறகு கடைசி நேரத்தில் சனம் செத்தது காணாது இன்னும்கூடச் செத்திருந்தால் சர்வதேசம் எங்கள்பக்கம் சாய்ந்திருக்கும் என்றும் கதைத்ததை நானே கேட்டிருக்கின்றேன். நல்லவேளை ஆதவன் புலிகளை ஆதரிக்கவில்லை.அம்மணி ஆதரவும் எதிர்ப்பும் தானாக வருவது வெருட்டியோ விலைகொடுத்தோ வாங்குவதில்லை அதற்குப்பெயர் வேறு. உங்கள் கட்சியில் இல்லாதவன் எல்லாம் துரோகி, துரையப்பா காலத்தில் இருந்தே துரோகி தொடர்ந்து வருகின்றான். நீங்கள் எப்போதாவது அமைப்பு ரீதியாகவோ தனியாகவோ வேறு எந்த மனிதத்துவ மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் திரண்டு தொண்டை புடைக்கக் கத்தி எதிர்ப்பை தெரிவித்திருக்கிறீர்களா? உங்கள் நியாயம் மட்டும்தான் நியாயம் மற்றவைகளை நீங்கள் பார்ப்பதில்லை என்பதை எப்போது ஒப்புக்கொள்ளப்போகிறீர்கள். புலிக்கு எதிராக கருத்தை வைப்பவன் துரோகி மாத்திரமல்ல ஜெயவர்த்தன தொடக்கம் ராஜபக்ச வரை கைநீட்டி காசு வாங்குகிறவன் என்று வாய் கூசாமல் சொல்வீர்கள். புலியை விமர்சிப்பவன் அரசாங்கத்தை தூக்கிப்பிடிப்பவன் அல்ல என்று எத்தனை ஆயிரம் தடவை சொல்லியாயிற்று என்ன செய்ய மீண்டும் சொல்லித்தொலைக்கவேண்டிய நிலைமை. குற்ற உணர்வை ஏற்படுத்தி குளிர்காய நினைக்காதீர்கள் அம்மணி ஆதவன் நல்ல எழுத்தாளன், சிந்தனையாளன், எல்லாவற்றையும்விட பாசாங்கு இல்லாத மனிதன், அவர் எழுத்து அப்படி இருப்பதால்தான் ஆதவன், இல்லை என்றால் ஆயிரத்தோட இன்னொருவன்.

கலை
2009-07-03 02:13:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் தீட்சன்யா said ..
"ஓரளவுக்கு பதட்டம் தணிந்தால்கூடப் போதும், நான் ஊருக்குப் போய்விடுவேன்’ என்று கீற்று.காம் நேர்காணலில் தாங்கள் தாய்மண் பாசத்தோடு சொல்லியிருந்தபடியால் இந்நேரம் இலங்கைக்கு பறந்தோடிப்போய் மக்களோடு மக்களாகத்தான் இருப்பீர்கள் என்றெல்லாம் அதீதமாக நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லை. ஆகவே மதுரை முகாமில் உங்களைப் பார்த்தபோது (அகதிகள் முகாமில் அல்ல- அங்கு போய் அவதியுற உங்களுக்கு தலையெழுத்தா என்ன?) எனக்கு சற்றும் அதிர்ச்சியில்லை. எனக்குத் தெரியும், இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்ப மாட்டீர்கள் என்று. இலங்கை ராணுவத்தாலும் உங்களது பிரியத்திற்குரிய போராளிகளாலும் சுடுகாட்டுச் சாம்பல் கொண்டு நிரவப்பட்டுவிட்ட அந்த மண்ணுக்குத் திரும்புகிற அளவுக்கானதல்ல உங்களது தாய்நாட்டு பக்தி. ஏனென்றால் நீங்கள் நேசித்தது நாட்டையோ மக்களையோ அல்ல, புலிகளை. (உடனே ஆதவன் என்னை நாட்டை விட்டுப் போகச் செல்கிறான் என்று திரித்து அடுத்தப் பதிவு எழுதி மூக்கு சிந்த பதைக்காதீர்கள் தமிழ்நதி. அந்த மலிவான உத்தி எல்லா நேரத்திலும் கைகொடுக்காது.)"

....
எப்படி தீட்சண்யா ஒரு மார்க்கீசிய வாதி என கூறி கொள்ளும் உங்களால் இப்படி எழுத முடிகிறது. ஆத்திரத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல்... அருவருப்பாய்... இவ்வளவு கீழ்தரமானவரா நீங்கள்?

Akilan
2009-07-03 03:07:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மதிப்பிற்குரிய ஆதவன் அய்யா அவர்களுக்கு, 

இதே கீற்று இணையத்தில் உங்கள் கடந்த கால எழுத்துக்களை மிக அதிகமான குற்ற உணர்வுடன் எதிர்கொண்டேன். 

இந்து மதத்தை பற்றிய கொடூரங்களை உங்களிடம் இருந்தே தெரிந்து கொண்டேன். 

உங்களை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு சமூக அறிவு அதிகம் இல்லை என்பதில் எனக்கு சிறிதும் ஐயம் இல்லை.

ஆனால் ஈழப்பிரச்சனை பற்றிய உங்களின் எழுத்தை எதிர்கொண்ட எந்த ஒரு நேர்மையான அல்லது நாடு நிலையான சிந்தனையாளனுக்கும் வேதனை அளிக்கும்...

கார்ல் மர்க்ஸ்யும் அம்பேத்காரையும், பெரியாரையும் ஏற்று கொண்ட உங்களால் எவ்வாறு இப்படி எழுத முடிந்தது ?

மாற்று கருத்தை ஏற்று கொள்ள முடியாதவர்கள் புலிகள், மக்களாட்சி முறையில் இருந்து வழி தவறி சென்றவர்கள், சகோதர படுகொலைகள் செய்தவர்கள், இன சுத்திகரிப்பு செய்தவர்கள் இன்னும் எத்தனையோ குற்ற சாட்டுகள்...

நீங்கள் அறிந்த எந்த ஆயுத புரட்சியாளர் ஏதாவது ஒரு வகையில் மேற்கண்ட செயல்களை செய்யாமல் இருக்கின்றார் என்று சொல்லுங்கள். 

அல்லது ஆயுதம் எந்தா புரட்சியாளர்களின் கனவுகள் தான் நனவாகி விட்டதா? 

பெரியாரும், அம்பேத்காரும் இன்றைய அரசியல் கூச்சல்களுக்கு உபயோகப்படும் அலங்கார பொம்மைகளாகவே உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? 

எங்கேயோ இருக்கும் வெள்ளைகாரர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பானா சூழ்நிலை இல்லை என்று சொல்லி அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறான்...ஆனால் இங்கு உள்ள நீங்கள் அவர்களை அந்த கொலைக்கார நாட்டிற்க்கு திரும்ப சொல்கிறீர்கள்.. 

காசி ஆனந்தனின் எல்லா கவிதைகளையும் படித்து விட்டீர்களா? எவ்வாறு உங்கள் கவிதைகளில் சாதிய கொடூரங்களை எடுத்து சொல்கிறீர்களோ, அதே போல் அவரும் இன அழிப்பு கொடூரங்களை சொல்லி இருக்கிறார். 

ஆண்ட இனம் ஆள கூடாதா என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? 

பிறகெப்படி நீங்கள் சாதிய விடுதலை பற்றி பேசுகின்றீர்? 

ஒவ்வொரு தேசிய இனமும் தன்னை தானே நிர்ணயிக்கலாம் என்ற மார்க்ஸ் சிந்தனை ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் உரிமை போராட்டங்கள் எதனை குறிக்கிறது? அங்கே சாதி இல்லையா? அல்லது மதம் தான் இல்லையா? 

தயவு செய்து உங்களின் கருத்தை மறு பரிசீலனை செய்யவும். அல்லது ஈழம் தொடர்பாக தாங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என வேண்டி கேட்டுகொள்கிறேன்...


உங்கள் மீதும் உங்கள் எழுத்தின் மீதும் மாறாத மதிப்பு கொண்ட,
இரா . அகிலன் 

NAGASUNDARAM.R
2009-07-03 08:20:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவனின் கடிதம் படித்தேன். புலிகள் இயக்கத்தை ஆதரிப்பவர்கள்தான் ஈழத் தமிழரின் நலம் நாடுவோர் மற்றவர்கள் எதிரிகள் என்ற முட நம்பிக்கையை மீண்டும் தகர்த்துள்ளார்.இடது சாரிகள் இப்போதுதான் சாதி பற்றி பேசுவதாக சில கிணற்றுத் தவளைகள் பாவம் பேசிக் கொண்டே உள்ளன போகட்டும்..அங்கு நடந்த நிகழ்வுகளை நோக்கும்போது புலிகளுக்கு ஆதரவான கருத்தியல் வன்முறை அரங்கேறி உள்ளதுபோல் தெரிகிறது.அச்சுழளிலும் சரியான கருத்துக்களைத் தளராமல் பதிவு செய்த ஆதவனுக்குப் பாராட்டுக்கள்.you too brutace என்பதுபோல் வீ.அரசு விடம் "நீங்களுமா?"என்றே கேட்கத் தோன்றுகிறது.

vasagan
2009-07-03 11:43:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன்,

உங்கள் பலமே, எதிரிகளைச் சுடும் உங்கள் மொழி தான். நீங்கள் புஷ் ஷையும், மோடியையும், மற்ற எதிரிகளையும் சுட்டுப் பொசுக்கும் உங்கள் மொழியின் உஷ்ணத்தை தமிழ் வாசகர் பரப்பு அறியும். உங்கள் நக்கலும், நையாண்டியுமே எதிரியை தற்கொலைக்குத் தூண்டும். ஆனால் தமிழ் நதி நம் எதிரியா? 

மதுரைச் சம்பவத்தில் அவருக்கு சாதகமான பகுதிகளை மட்டுமோ, அல்லது நடந்த சம்பவத்தை திரித்தோ கூட எழுதியிருந்தாலும், அவருக்கு பதிலுரைக்கும் போது உங்கள் பக்குவம் வெளிப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் எழுதும் பதில் வினையில், நாங்களும், தமிழ் நதியும் உங்கள் ஆதங்கத்தின் ஞாயங்களை புரிந்தவர்களாக ஆகியிருக்க வேண்டும். மாறாக நீங்கள் கூரிய முட்கள் பொதிந்த நம் எதிரிகளுக்கான சாட்டையைக் கொண்டு எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள்; தமிழ் நதியும், உங்கள் வாசகர்களாகிய நாங்களும் மிகவும் காயப்படுத்தப்பட்டுள்ளோம். 

“ஆதவன் இப்படி பேசியிருக்க தேவையில்லை; ஆதவனின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது” என்று இனி எப்போதவது கருத்து சொல்ல எங்களுக்குள் ஒரு பயத்தை உண்டுபண்ணியிருக்கிறது உங்கள் பதில்வினை.

Mayilvahanan
2009-07-03 11:51:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆக மொத்தம் தேவேந்திரபூபதி ஏற்பாடு செய்த கூட்டத்தில் தங்கள் சரக்கை போனி செய்கிறோம் என ஆதவனும் அரசுவும் சேர்ந்து குழாயடிச் சண்டையாக மாற்றிவிட்டார்கள். வளர்க உங்கள் இலக்க்கிய துண்டு. தமிழ்நதி அவர்கள் இத்தனை பெரும் பூகம்பம் நடத்தும் நோக்கத்துடன் கேள்வி எழுப்பியதாக தெடியவில்லை.

abdul kader
2009-07-03 11:55:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ரஷ்ய மார்க்சிஸ்டு 
பிரான்ஸ் மார்க்சிஸ்டு
வங்க மார்க்சிஸ்டு
காகித மார்க்சிஸ்டு
அல்லது சற்றேறக்குறைய ஜாதிய மார்க்சிஸ்டு
அய்யா இத மொத்லல் ஒரு ஒழுங்கு செய்யுங்கள்

vijayakumar
2009-07-04 12:09:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவனின் கட்டுரைக்கு தமிழ்நதி பதில் எழுதியிருக்கிறார். அவர் கேள்வியில் நியாயம் இருக்கிறது. மோசமான இலக்கியவாதியாக ஆதவன் தன்னை தகுதியிறக்கம் செய்திருக்கிறார். தமிழ்நதியின் பதிவு இதோ:

தனிப்பட்ட தாக்குதல்களால் தன்னையே தரந்தாழ்த்துகிறார் ஆதவன்

சர்ச்சைகள் தொடர்வது அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக வலியையும் மனவுளைச்சலையும் நேர விரயத்தையும் தரக்கூடியது. பழிக்குப் பழி பதிலுக்குப் பதில் என்பது அபத்தமாயிருக்கிறபோதிலும், கீற்று இணையத்தளத்தில் ஆதவன் தீட்சண்யாவால் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் என்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் என்னைப் பேசத்தூண்டுகின்றன. ஒருவருடைய அரசியல் நிலைப்பாடு என்பது அவரது வாழ்வனுபவங்கள், வாசித்து அறிந்துகொண்டவை, தாம் சார்ந்திருக்கும் கட்சி, சூழல் சார்ந்து கட்டமைக்கப்படுகிறது. பட்டறிவில்லாத விவாதங்கள் அதில் பெரிய மாறுதல்களைக் கொண்டுவந்துவிடும் என்று நான் நம்பவில்லை. என்னுடைய தொனியும் விவாதமும் எப்படி இருந்தபோதிலும், ‘புலிகளை விமர்சனங்களற்று ஏற்றுக்கொள்பவர் அன்றேல் புலிகள் மீது ஒற்றை வாக்கியத்தில் விமர்சனங்களை முன்வைத்து அதைக் கடந்து செல்பவர்’என்ற மையப் புள்ளியிலேயே நின்றுசுழல்கிறது என்னைப் பற்றிய பிம்பம். மாற்றுக் கருத்து, மாற்றுக் கதையாடல் என்று பேசிக்கொண்டிருக்கிற சில இணையத்தளங்களும் இவ்வாறு அழுத்தந்திருத்தமாக ‘அவர் அதற்கு மேலில்லை’என்று முத்திரை குத்தி விடுவது வருத்தமாகவே இருக்கிறது.

எனவே அரசியல் நிலைப்பாடு குறித்த விவாதங்களுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆதவன் தீட்சண்யாவின் கடிதத்தைப் படித்தபோது, பால்யத்திலிருந்து ஒரு சொல் மிதந்து மேல்வந்தது. ‘ஆத்தாப் போக்கிலி’என்பதுதான் அந்தச் சொல். பேசவந்த, பேசவேண்டிய விடயத்தைவிட்டு வெளியில் சென்று சம்பந்தமில்லாத விடயங்களைப் பேசுவதன் வழியாகத் தனது வாதத்துக்கு வலுச்சேர்க்க முயன்றிருக்கிறார் ஆதவன். தனது பக்கத் தராசைத் தாழ்த்தவேண்டுமே (உண்மையான அர்த்தத்தில் உயர்த்துவது) என்ற பதட்டத்தில் என்மீது சேற்றை வாரியிறைக்க விழைந்திருக்கிறார். ‘இது அறியப்பட்ட ஒரு படைப்பாளிக்கு அழகல்ல’ என்ற வார்த்தைகளை அதை வாசித்த பலரிடமிருந்து நான் கேட்டுவிட்டேன். ‘தமிழ்நதியைத் தாழ்த்துகிறேன் பேர்வழி’ என்று தரந்தாழ்ந்து நிற்பது அவர்தான். அவரது பதில் நெடுகிலும் இழையோடியிருக்கும் நக்கலும் நையாண்டியும் மூன்றாந்தர, வக்கிரமான நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சற்றும் குறைந்தனவல்ல. 

“ஓரளவுக்கு பதட்டம் தணிந்தால்கூடப் போதும். நான் ஊருக்குப் போய்விடுவேன்”என்று கீற்று.காம் நேர்காணலில் நான் சொல்லியிருந்தது உண்மை. பதினொரு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்தபின் 2003ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச்சென்று 2006வரை அங்கேதான் வாழ்ந்திருந்தேன் என்பதை இதைப் படிப்பவர்களது தகவலுக்காகச் சொல்லிவைக்கிறேன். மீண்டும் தொடங்கிய போரினால் தமிழகத்திற்குத் தூக்கியெறிப்பட்டவள் நான். 

ஆதவன் எழுதுகிறார்:

“எனக்குத் தெரியும் இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்பமாட்டீர்கள் என்று. இலங்கை இராணுவத்தாலும் உங்கள் பிரியத்திற்குரிய போராளிகளாலும் சுடுகாட்டுச் சாம்பல் கொண்டு நிரவப்பட்டுவிட்ட அந்த மண்ணுக்குத் திரும்புகிற அளவுக்கானதல்ல உங்கள் தாய்நாட்டுப்பக்தி. ஏனென்றால், நீங்கள் நேசித்தது நாட்டையோ மக்களையோ அல்ல. புலிகளை…”

புலிகள் இல்லாத மண்ணுக்குப் போவதென்பது என்னளவில் அச்சமும் துயரும் பாதுகாப்பின்மையும் தரக்கூடியதே. நாடு திரும்பமுடியாத ஒருவரை நக்கலடிக்குமளவிற்கு, எள்ளிநகையாடுமளவிற்கு இருக்கிறது ஒரு மார்க்ஸிஸ்டின் மனிதாபிமானம். ‘முடிஞ்சா உங்க ஊருக்குப் போய்ப் பாரேன்…வெவ்வெவ்வே’என்கிற சிறுபிள்ளைத்தனத்தை அதில் பார்த்தேன். மேலும், ‘இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும் நீங்கள் நாடு திரும்ப மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்’என்பதன் பின்னுள்ள எள்ளலையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சில சுயவிளக்கங்களை ஆதவனுக்காக அல்லாது இதனை வாசிக்கும் எனது நண்பர்களுக்காகக் கூறத் தள்ளப்பட்டுள்ளேன். ‘ஐயோ! நான் கஷ்டப்படுகிறேனே…’என்ற அனுதாபம் வேண்டி இதை எழுதவில்லை. சுயபச்சாத்தாபம் என்னிடம் துளியளவும் இல்லை. 2003ஆம் ஆண்டு கனடாவிலிருந்து திரும்பி இலங்கை வந்தபோது கைவசமிருந்த நிலத்தில் கொட்டில் (குடிசை) கட்டி சில காலம் வாழ்ந்திருந்த பின்னால்தான் வீடு கட்டிக் குடிபோனோம். மனிதர்களைப் போல சர்வசாதாரணமாக பாம்புகள் திரிந்த இடம் அது. வெக்கை பிடுங்கித் தின்ற நிலம் அது. அங்கே ஏ.சி.இருக்கவில்லை தூசிதான் இருந்தது. அவ்விதமிருக்க எந்த அடிப்படையிலிருந்து இந்த ஏ.சி.க் கதையை இவர் எழுதுகிறார் என்று தெரியவில்லை. தவிர, ஒருவர் ஏ.சி.யில் வாழ்வதா? வெக்கையைக் குடிப்பதா என்பதெல்லாம் அவரவர் வசதியும் தெரிவும். கடவு கூட்டத்தில் ஆதவன் தீட்சண்யா பேசியதற்கு நான் எழுதிய எதிர்வினைக்கும் மேற்கண்ட தனிப்பட்ட கதைகளுக்கும் எந்தவிதத்தில் தொடர்பிருக்கிறது என்று அவர்தான் சொல்லவேண்டும்.

‘தாக்கப்படும்போது மனிதர்கள் சரிந்துவிடுகிறார்கள்’என்பதை இப்போது வேறொரு அர்த்தத்தில் பார்க்கவேண்டியிருக்கிறது.

“ஆதவன் என்னைத் தாக்க வந்தார்’ என்று பதிவில் தலைவிரிகோலமாக எழுதாமல் விட்ட உங்கள் பெருந்தன்மைக்கு எப்படியாவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்”

“ஆதவன் என்னை நாட்டைவிட்டுப் போகச்சொல்கிறான் என்று திரித்து அடுத்த பதிவில் எழுதி மூக்குச் சிந்தப் பதைக்காதீர்கள் தமிழ்நதி.”

என்ற வாசகங்களையும் அவரது கீற்று கடிதத்தில் பார்த்தேன். அந்த வாசகங்கள் வழியாக அவர் தனது ஆழ்மனதிலிருக்கும் கசடுகளை வெளியில் கொட்டிவிட்டார். ஏதோ சில படைப்புகளை அண்மைக்காலங்களில் எழுதியவள் என்பதிலும் பார்க்க நான் ஒரு பெண் என்பதுதான் அவருடைய ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. ஆக, பெண் என்பதை என்மீதான அனுதாப வாக்குச் சீட்டாக, பச்சாத்தாபத்தைத் தூண்டும் ஆயுதமாக நான் பயன்படுத்தக்கூடியவள் என்று அவர் நினைத்திருக்கிறார். ‘மூக்குச் சிந்துவது’, ‘தலைவிரிகோலமாக எழுதுவது’இந்த மலினமான உத்திகளெல்லாம் கைவரப்பெறாதவள் நான். அப்படி எழுதி கூட்டம் சேர்க்கவேண்டிய தேவை எனக்கு இருக்கிறதா என்ன? ‘எழுதுகிறேன் என்பதனால் எழுதுகிறேன்’ என்பதை விட்டுக் கீழிறங்கி கைதட்டல் தேடவேண்டிய தேவையொன்றும் எனக்கில்லை. ஒரு பொதுவெளிக்கு வரும்போது பெண் என்ற விடயத்தை மறந்து தன்னியல்பாக நடந்துகொள்ளவேண்டுமென்ற அறிவும் பிரக்ஞையும் எனக்கு எப்போதுமுண்டு. உண்மையில் காதல் வயப்பட்ட ஆணோடு மட்டுமே பெண்தன்மைகள் எனக் கருதப்படுபவைகள் அன்றேல் வளர்ப்பின் வழியாக கட்டமைக்கப்பட்டிருப்பவைகளை வெளிப்படுத்தக்கூடிய ஆள் நான். மற்றபடி பொதுவெளியில் பழகும்போதோ எழுதும்போதோ ஆண்கள் எனக்கு ஆண் என்ற வேறொரு பாலினமாகத் தோன்றுவதேயில்லை. நெளிவது, குழைவது, உதட்டைச் சுளித்துச் சிரிப்பது, எனக்காக நீ இதைச் செய்யக்கூடாதா என்று கிறங்குவது, சாகசங்கள் செய்வது இன்னபிற விடயங்களையெல்லாம் நான் கடந்துவந்து நாளாகிறது. பழகும்போது கொஞ்சம் தன்மையாகப் பழகுகிறேன் என்பதைவைத்து, ஆதவன் என்னைப் ‘பெண்ணிலும் பெண்ணாக’ச் சித்தரிக்க முயன்றிருக்கிறார். ஆணுக்குள்ள கம்பீரம் பெண்ணுக்கும் உண்டு. ‘அவன் மூக்கைச் சிந்துகிறான் என்றோ, தலைவிரிகோலமாக எழுதுகிறான்’என்றோ அவரால் எழுதிவிட முடியுமா? மேற்கண்ட வார்த்தைகள் ஊடாக அவர் ஒரு ‘ஆணாக’ப் வெளிப்பட்டிருக்கிறார், அவரையறியாமலே. அவரது வார்த்தைகள் அவரைக் கைவிட்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். 

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்: பேசிய விடயத்திற்குள் நின்று பேசுவதுதான் அறிவாளிக்கு அன்றேல் அறிவாளி என்று தம்மைக் கற்பிதம் செய்துகொண்டிருக்கிறவர்களுக்கு அழகு. ‘ஏண்டா என்னைத் தள்ளிவிட்டாய்?’என்றால், ‘எங்கம்மா கடைக்குப் போய்விட்டாள்’என்ற வகையிலான அபத்தங்களைக் கொண்டிருக்கிறது கீற்றுவில் வெளியாகியுள்ள அவரது கடிதம்.

தேவேந்திர பூபதியை வேறு தேவையில்லாமல் இதற்குள் இழுத்திருக்கிறார். எனக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சனையை (அப்படி ஒன்று இருந்தால்) நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம். ஆதவனைக் காட்டிலும் புரிதலுள்ளவர்தான் பூபதி. ‘ஐயகோ! என்னைக் காப்பாற்றுங்கள்’என்று அபலையாக ஆதவனிடம் வந்து தஞ்சமடைந்ததாக எனக்கு நினைவில்லை. இப்படிச் சிண்டு முடிந்துவிடுவதுதான் நான் கேட்ட கேள்விகளுக்கு ஆதவன் ஆற்றுகிற எதிர்வினையா?

இனியொருபோதிலும் இவ்விடயத்தைக் குறித்துப் பேசுவதில்லை என்று ஒவ்வொரு தடவையும் நினைக்கிறேன். ஆனால், மௌனமாயிருப்பது அதிகாரத்துக்குத் துணைபோவதற்கொப்பானது என்ற பழகிப் புளித்த வாசகம் என்னை இருக்கவிடுவதாயில்லை.

‘கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தெரியாமல் மாற்றுக்கருத்தாளர்கள் எல்லோரையும் சுட்டுக்கொன்றார்கள்’என்று புலிகள் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் ஆதவன் வகையறாக்கள், தம் உதடுகளிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்களா? தன் வாதங்களுக்கு வலுச்சேர்க்க தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கியிருக்கும் அவர் இதைக்குறித்துச் சிந்திக்கவேண்டும்.

உயிர்க்கொலைக்கு சற்றும் குறைந்ததன்று மனக்கொலை!

balachandran
2009-07-04 01:25:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஈழத்திமிழருக்கு விசா வழங்கும் அதிகாரியாக போன வாரம் அவருக்கு பதவி உயர்வு வந்திருப்பதாக நான் தீக்கதிரில் படித்தேன்.அவர் இதுவரை தொலைபேசிதுரையில் இருந்தார். தொலைபேசித்துரையில் வேலை பார்த்தாலே கொஞ்சம் பிரச்சனைதான் போல் உள்ள்து. அங்கே ஒரு ஜெயமோகன் எதை எதையோ உளரிக்கொண்டு லுஸ் போல் அலைகிறது. தமிழில் வரும் பத்திரிக்கை எல்லாம் வேஸ்டு ஆர்.எஸ்.எஸ் நடத்தும் வார்த்தை தான் பெஸ்டு என அது பினாத்துகிறாது. இப்போ இவர் கிழம்பிவிட்டார் அய்யா. ஆதவன் ஜெயமோகனுகும் சரி டி.கே. ரெங்கராஜனுக்கும் சரி என்றும் பதில் குறமாட்டார்ர். அட இது தானுங்கய்யா அதவானிக்கு இருக்கும் அதே நோய்

குணாளன்
2009-07-04 02:23:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

KUNALAN on July 2, 2009 6:17 pm 

யப்பா…. திரும்பவும் தமிழ்நதியா…?
ஏற்கனவே இவர் கீற்றில் கடந்த மாசியில் கொடுத்த வீரப்பிரதாபப் பேட்டியிலிருந்து இன்னமும் மீளவில்லையே நண்பர்களே. 

அந்தப் பேட்டியை ஒரு கவிதையோடு தொடங்கினார் பாருங்கள்… அதுதான் எல்லாவற்றிற்குமே ஹைலைட்! அந்தக் கவிதையே ஒரு தீர்க்கதரிசனம் என்பதைப் பின்புதான் புரிந்து கொண்டோம்.

//………எறிகணைகளுக்கும் விமானங்களுக்கும் தப்பி
எஞ்சிய வீடுகளையும் கோயில்களையும்
நாங்களே தரைமட்டமாக்கிவிடுகிறோம்.
கைவிடப்பட்ட கடவுளர் சிலைகளை
கடலின் ஆழத்துள் புதைத்துவிடுகிறோம்.
சுவர்களிலும் மரங்களிலும்
எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதறடிக்கப்படும்போதில்
வழியும் வெண் மூளைச்சாற்றின்
கனவில் இருப்பவர்களே!
சற்றே அவகாசம் கொடுங்கள்.

எங்கள் குழந்தைகளுக்கு
நாங்களே நஞ்சூட்டிக் கொன்றுவிடுகிறோம்.
மேலும் நீங்கள்
வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
எங்கள் பெண்கள்
இழிவின்முன் தற்கொலைசெய்துகொள்ள
சற்றே அவகாசம் கொடுங்கள்……//

இப்படி நீள்கின்றது இவரின் கவிதை. இவர் இதில் எழுதியபடியே புலிகள் செய்தார்கள். 

அந்தப் பேட்டியில் மேலும் சொல்கிறார் பாருங்கள்… 

//கேள்வி:புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையா?

அது எப்படி உண்மையாக இருக்கமுடியும்? அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் ‘அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் போர் நடக்கும் வன்னிப் பகுதிக்கு வந்து உண்மை நிலையை அறியவேண்டும்’ என்று திரு.நடேசனால் அழைப்பு விடுக்க முடியுமா? விடுதலைப் புலிகள் வேற்றுக் கிரகத்திலிருந்தோ வேறு நாட்டிலிருந்தோ வந்தவர்கள் அல்லர். அவர்கள் அங்கே செத்துக்கொண்டிருக்கும் மக்களின் பிள்ளைகள் சகோதரிகள் சகோதரர்கள். தங்கள் பிள்ளைகளை சகோதரர்களை ஆபத்துக் காலத்தில் விட்டுவிட்டுப் போகமுடியாமல் மக்கள்தான் அவர்களோடிருக்கிறார்கள். தங்களைக் காக்க ஆயுதம் ஏந்தியவர்களை மக்களால் பிரித்துப் பார்க்க முடியாது.
1995ஆம் ஆண்டிலே ‘ரிவிரச’ இராணுவ நடவடிக்கையின் மூலமாக யாழ்ப்பாணத்திலிருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் விரட்டியடிக்கப்பட்டபோது, அவர்கள் ஏன் விடுதலைப் புலிகள் இருந்த வன்னியை நோக்கிப் போனார்கள்? புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அண்மையில் இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது மக்களும் விடுதலைப் புலிகளோடு சேர்ந்து வெளியேறிச் சென்றது ஏன்? //தமிழ்நதி 

அக்கா தமிழ்நதி! யாழ்ப்பாணத்தை விட்டுப் புலிகள் வெளியேறும்போதும் கிளிநொச்சியை விட்டு புலிகள் ஓடும்போதும் மக்களைப் பலவந்தமாகத்தான் கொண்டு போனார்கள் என்பது அந்த மக்களின் வாயாலேயே இன்று வெளிவந்து விட்டன. (அது மட்டுமல்ல எனது குடும்பமும் இதில் அடக்கம்)செத்தது போக எஞ்சிய பாதிக் குடும்பம் இன்னமும் வவுனியாத் தடுப்பு முகாமில்த்தான்)

//கேள்வி: சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா?

…சில புலி எதிர்ப்பாளர்களாலும் இலங்கை அரசாங்கத்தாலும் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட பிரச்சாரங்களில் நீங்கள் கேட்டதும் ஒன்றுதானேயன்றி வேறில்லை. ஏதோவொரு மனக்கசப்பில் விடுதலைப் போராட்டத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், புலிகளால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப் பட்டவர்களை ‘புலியெதிர்ப்புக் காய்ச்சல்’ பீடித்திருக்கிறது. மிகுந்த முனைப்போடு, திட்டமிட்டு அவ்வாறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது காழ்ப்புணர்வு கலந்த பரப்புரை உலகநாடுகளில் மறைமுகமாக ஈழப்போராட்டத்திற்கெதிரான சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது. அது அரசியல் தளத்தில் உள்ளார்ந்து இயங்கி பாதகமான விளைவுகளுக்குக் காரணமாகிறது. இவ்வாறான பரப்புரைகளால் தமது சொந்த மக்களின் நலன்களுக்கே எதிரிகளாகிறார்கள்…//

இவரிவின் இந்தப் பேட்டியில் ஒருபேப்பர் சாத்திரியாரும் தன் பங்கிற்கு ஒத்துப்பாடி பல்லிழித்திருக்கிறார். (இதெல்லாவற்றிற்கும் பின்பு எழுதுகிறேன் பொறுத்திருங்கோ)

இது பற்றியெல்லாம் இப்போ இதில் எழுதிக்கொண்டிருக்க முடியாது. தவிரவும் இது ஆதவனுக்கும் இவருவுக்குமிடையில் நடக்கும் விவாதம்(?) பற்றிய பதிவு. எனவே இதுபற்றியே பேசுவோம். 

//”நாங்கள் ஈழத்தமிழர்களுக்காகப் பேசவேண்டுமென்று குரல்கொடுக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?”// என்று ஆதவன் கேட்டிருந்தால் அது எமக்கும் கொஞ்சம் வருத்தமாகவும் சங்கடமாகவும்தான் இருக்கிறது. அவரது பதில் கடிதத்தைப் படிக்கும்போது அவரை உசுப்பேற்றிய ஒரு சூழலில் அப்படிப் பேசித் தொலைத்ததாகக் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகின்றது. 

//இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள் கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்? இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா?

தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து 500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்? 

தமிழ்நாட்டில் வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டபோது ஈழத்திலிருந்து எந்த குரலும் ஒலிக்கவில்லை. திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமையை எதிர்த்தோ இதோ இப்போதும் உத்தபுரத்தில் மறித்து நிற்கிற சாதிச்சுவரை இடிக்க வேண்டுமென்றோ ஈழத்திலிருந்து எழுந்த தமிழினக்குரல் எதுவுமுண்டா?// 
என்று ஆதவன் கேட்கும் கேள்விகளில் நியாயங்கள் நிறையவே உண்டு. ஆனாலும் உங்களை எந்தக் கொம்பாதி கொம்பன் உசுப்பேற்றியிருந்தாலும் நீங்கள் அந்த வார்த்தையைப் பாவித்திருக்கக் கூடாதென்றே நினைக்கின்றேன் ஆதவன். 

ஏனென்றால் தாங்கள் அத்தகையதொரு கருத்தைக் கொண்டவரல்ல என்பது எம்மைப்போன்ற பலருக்கு நன்றே தெரியும். 

தமிழகத்து புலிரசிக எழுத்தாளர்களை வேறொரு வகையில் நாம் கேள்விகள் கேட்க நினைத்தோம். ஆனால் இன்று அவர்கள் உங்களை முன்னுக்குத் தள்ளிவிட்டு தாங்கள் ஒளிந்துகொள்ளப் போகிறார்கள் என்ற கவலை இப்போ எங்களுக்கு. இனிமேல் கொஞ்சக் காலத்திற்கு இந்தப் புலிரசிகர்கள் “ஆதவன்தான் தமிழீழத் துரோகி” என்று கை காட்டிவிட்டு தங்கள் சந்தர்ப்பவாதப் பிழைப்பை நடத்துவார்கள். 

3லட்சம் தமிழ் மக்களையும் தங்கள் பாதுகாப்பு அரணுக்கான மண்மூடைகளாகப் பயன்படுத்திய வேளையில் இந்தத் தொப்புள் கொடி எழுத்தாளர்களெல்லாம் என்ன சீலைப்பேன் குத்திக்கொண்டிருந்தார்களா…? 

ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர் 25வருடங்களுக்கும் மேலாக சிறப்பு முகாம் என்ற பெயரிலுள்ள நரகச் சிறைச்சாலைகளில் தமிழ் நாட்டில் அவதியுற்றுக்கொண்டு கிடக்கிறார்களே அது பற்றி இந்த எழுத்தாள உணர்வாளர்களுக்கு எழுதுவதற்கு ஒரு வரிகூடவா கிடைக்கவில்லை. இப்போதுமட்டும் ஏன் எகிறிப் பாய்கிறார்கள். பதில் மிகச் சுலபம் ஆதவன். அதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

அடுத்து தமிழ்நதி பற்றி நீங்கள் ஏதோ பெரியதொரு பிம்பத்தை வளர்த்து வருவதாகவே தெரிகிறது. இப்போதும் புலிப்புராணம் பாடும் இவர் தனது உறவுப் பிள்ளைகளை புலிகள் கட்டாய ராணுவத்திற்கு பிடித்துச் சென்று விடாமல் பாதுகாத்து மிகவும் பவுத்திரமாக தமிழ்நாட்டில் கொண்டுவந்து கல்வி பயில வைக்கின்றார். ஆனால் ஏழை பாளைகளின் பிள்ளைகள் மட்டும் நஞ்சைக் கழுத்திலும் குண்டை வயிற்றிலும் துவக்கைத் தோழிலும் சுமந்து கொலைக் களத்துக்குப் போக வேண்டும். தமிழ்நதி தனக்கிருக்கும் புலிப் பாசத்தைக் காட்ட வேண்டுமென்றால் முதலில் தான் தமிழ் நாட்டுக்குக் கடத்திவந்த தனது உறவுக்காரப் பிள்ளைகளில் ஒன்றையேனும் புலிகளுக்குக் கொடுத்திருக்கலாமே…? 

இவர்களெல்லாம் வாய்வீச்சு வீரர்கள். நடிப்பு சுதேசிகள். இவரைப் போன்றவர்கள் இப்படித்தான் என்பது எங்களுக்கு தெரியும் ஆதவன். ஆனால் பாவம் நீங்கள். மாய்மாலக் கண்ணீரில் நீங்களும் உருகி விட்டீர்கள் போல். 

இராமேஸ்வரம் மண்டபம் முகாம்களில் இலங்கை அகதிகள் இன்று நேற்றா அடைக்கப் பட்டுள்ளார்கள். கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாறு. ஆனால் பாருங்கள் இந்தியாவுக்கு வந்தபின், அதுவும் சில மாதங்களுக்கு முன்தான் தமிழ்நதி போன்றவர்களுக்குத் தெரியுமாம். என்ன பசப்பும் பாசாங்கும் இது.

கனடாவிலிருந்து இலங்கைக்கு வீடு கட்டவும் தொழில் தொடக்கவும் திரும்பிப் போனது அவரது சொந்தப் பிரச்சனை. ஆனால் அதையே இவர் நாட்டுப்பற்றுக் கணக்கில் சேர்த்து இணையங்களில் பரப்புவதுதான் சகிக்க முடியவில்லை.

புலிகள் பிடித்துச் சென்று விடாமல் தனது சகோதரியின் பிள்ளைகளை இந்தியாவுக்கு கொண்டோடி வந்தது அவரது சொந்தப் பிரச்சனை. ஆனால் நாடோடிப் பாட்டுப் பாடி பத்திரிகைக்குப் பேட்டி கொடுப்பது அருவருப்பாயிருக்கிறது.

இந்தியாவில் உங்கள் சொத்துக்களை முதலீடு செய்ய வேண்டுமானால் செய்து விட்டுப் போங்கோவனப்பா யார் வேணாம் என்றார்கள். ஆனால் உங்கள் தனிப்பட்ட இருப்புக்களையும் அதற்கான நடவடிக்கைகளையும் புத்திசாலித் தனமாக நாட்டுப்பற்றுக் கணக்கிலும், விடுதலைவேட்கை செலவிலும் படம்காட்டி மற்றவர்களை முட்டாளாக்கும் விளையாட்டுக்களை விட்டு விடுங்கள். 

அதென்ன அது… யாராவது தமிழ்நாட்டில் புலிகளை விமர்சித்தால் உடனேயே ஷோபா சக்திக்கு டப்பிங் கொடுக்கிறான், சுகனுக்கு பிற்பாட்டு பாடுகிறான் என்று உடனேயே சொல்லி விடுகிறார்கள். தம்மை விமர்சிக்கும் ஒருவனை தேசத்துரோகி என்று முத்திரை குத்தும் அதே புலிமொழிதான் இதுவும். 

கருத்துச் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கிறார்களாம் ஆனால் தம்மை யாராவது விமர்சித்துக் கருத்துச் சொன்னால் இவர்களால் சகிக்க முடியாதாம். உடனேயே இலங்கை அரசிடம் கோணி கோணியாய் பணம் வாங்கி விட்டான் துரோகி என்று புலி கற்றுக் கொடுத்த மந்திரத்தை ஒப்புவிப்பார்கள். புலிமூத்திரம் குடித்து வளர்ந்தவர்களுக்கு இப்படித்தான் புத்தி பேசும். 

திரும்பத் திரும்ப புலியின் மாயைத் தனத்துக்குள் முடங்கிக் கிடக்கும் வேலைகளையே புலிப்பக்த கோடிகள் செய்து கொண்டிருக்கின்றனர். அதை விடுத்து அந்த வெறும் மாயை பிம்பத்தை உடைத்து ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு இன்று முக்கியமாகப் பேசப்படவேண்டிய விடையங்கள் பல உண்டு.

வன்னியில் தடுப்பு முகாம்களுக்கள் அடைத்துவைக்கப்பட்டுத் துன்புறுத்தப் படும் 3இலட்சம் மக்களையும் தத்தமது இடங்களுக்கு சென்று குடியமரும் உரிமைகளை உடனே இலங்கை அரசு செய்ய வேண்டும்.

தமிழ் மக்களுக்கான சரியான தீர்வை இலங்கையரசு தாமதியாது வழங்க வேண்டும்.

சரணடைந்த புலிகளை பொது மன்னிப்பு வழங்கி நிபந்தனையற்று விடுவிக்கப் பட வேண்டும்….

இப்படி நாம் இன்று பேச வேண்டியதும் செய்ய வேண்டியதும் நிறைய இருக்கிறது ஆதவன். அதை விட்டுவிட்டு இன்னமும் புலி வாலில் தொங்கி நாடகம் போட்டுக் கொண்டிருப்போருடன் ஏன் உங்கள் சக்திகளை விரையமாக்குகிறீர்கள். 

//”வன்முறை நமது சமூகத்தில் காட்டுச்செடி போல பரவிவிட்டது. வன்முறை என்பது வன்முறையாளர்களின் குற்றம் மட்டுமே என்று கூறிவிட முடியாது. தன்மீது அவிழ்த்துவிடப்படும் வன்முறையை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு” என்ற கனிமொழியின் வார்த்தைகளோடு நான் முழுமையாக உடன்படுகிறேன்// என்று தனது தளத்தில் எழுதும் தமிழ்நதி இதுவரை காலத்தில் ஒரு தடவையேனும் புலிகள் தமிழ் மக்கள்மீதும் ஏனைய இயக்கங்கள் மீதும் அறிவாளிகள் மீதும் அப்பாவி சிங்கள மக்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதும் புரிந்த வன்முறைகளை விமர்சித்து ஒரு வரி எழுதியிருப்பாரா…?

ஆதவன் உங்களுக்கு ஒரு விடையத்தை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கலாமென நினைக்கிறேன். “நானொரு மனு விரோதன்” என்று உங்கள் கதைக்குத் தலைப்பு வைத்ததுபோல் உங்களது அடுத்த கதைக்கு “நானொரு தமிழீழ விரோதன்” என்று துணிந்து தலைப்பிடுங்கள். தப்பேயில்லை. 

இன்று தமிழ் நாட்டில் அடித்துக்கொண்டிருக்கும் புலியலையானது இந்தப் புலிப் புண்ணாக்குகளுக்கு இவர்கள் எதிர்பார்க்கும் இலாபத்தைக் கொடுக்கப் போவதில்லை என்பதே நிஜம். விரைவில் பல்ட்டி அடிப்பார்கள் பாருங்கள்(தமிழ்நதி உட்பட) 

-குணாளன்- 

இந்த வேளையில் இதுவும் பொருத்தமாக இருப்பதாக நான் கருதுவதால் இதனை இங்கே இணைக்கின்றேன். 

23.05.2009 தேசம்நெற் செய்தி: 

தமிழகம்:117 முகாம்களில் 75இ738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தனர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் கடும் சண்டை நடந்தது. அப்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வந்தனர்.

இவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75இ738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். 

இதற்கான எனது பின்னூட்டம்: 

இந்த மக்களின் பரிதாபத்தையும் ஒடுங்கிய வாழ்வையும் பற்றிப் பேசவே இன்று நாதியில்லாமல் போயிற்று.

தமிழ்நாட்டில் கடைவாயால் நுரை தள்ளள தொப்புள்கொடி உறவு பற்றி வாய் கிழியப் பேசி ஓட்டுப் பொறுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளாயிருந்தாலென்ன அல்லது நெடுமாறன் வைக்கே திருமாவளவன் சீமான் போன்ற ஈழ ஆதரவு பேசுவோராய் இருந்தாலென்ன இந்த மக்கள் பற்றி எதுவுமே பேச மாட்டார்கள். 

சிறப்பு முகாம் என்ற பெயரால் அந்த மக்கள் கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக அடைபட்டுக் கிடப்பதும் அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் உழுத்தல் அரிசிக்காக ஏங்கிக் கிடப்பதும் கொடுமையிலும் கொடுமை.

தமிழ்நாடு அரசு இந்த அகதிகளுக்காக ஆண்டுக்கு ஆயிரம்கோடி ரூபாய்களை ஒதுக்குகிறது. ஆனால் அந்த மக்களுக்கு ஆயிரத்தில் ஒருசதவீதம்கூட போய்ச் சேருகிறதா என்றால் சந்தேகம்தான். 

பல ஆயிரக்கணக்கான வெவ்வேறு துறைகளில் சிறப்புள்ள தொழிலாளர்கள் இதற்குள் முடக்கப் பட்டுள்ளார்கள். இந்த ஆயிரம்கோடி ரூபாயில் ஒரு பகுதியை சிறுதொழிற் கூடங்கள் அமை�

purachi
2009-07-04 03:14:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் தீட்சன்யா போன்ற முரன்பாடுகளின் மூட்டைகள் தெரிந்தே தமது முரன்பாடுகளை பேணுகிறார்கள். ஒரு பக்கம் புரட்சிகர வாய்ச்சவடால்கள் மூலம் தமது சமூக அரிப்பை சொரிந்து விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் தமது நடுத்தர வர்க்க சுக வாழ்வை பேணும் வாய்ப்பளிக்கும் சிபிஎம் போன்ற கட்சிகளை விட்டு செருப்பால் அடித்தால் கூட வெளியேற மாட்டார்கள். அதற்குப் பதில், ஈழப் பிரச்சினை போன்ற விசயங்களில் தமது கட்சி சார்ந்த பித்தலாட்ட நிலைப்பாடுகளை தலித்திய இன்னபிற முகமூடிகள் கொண்டு புனிதப்படுத்தும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்குவர். 

கழுதைக்கு குட்டிச்சுவர் ஆதாரம், குட்டிசுவருக்கோ கழுதையே அங்கீகாரம்.

புரச்சி

punithan
2009-07-04 03:27:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

pls tamil writers are sportive discuss. ambadkar and gandhi.periyar and gandhi. rajaji and periyar. so many participating they ar mutualship. iam not more knowledge. but" periyari egalthalum ilame. sirari egalthal ataninum ilamae.".

abinanthan
2009-07-04 04:33:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மறைக்கப்படும் ஈழத்தின் கொடுமைகளை ஆதவன் வெளிச்சமிட்டுளர், அவர் கருத்தை ஆராயாமல், ஆதவனா இப்படி பேசுவது என்றும்...... ஆதவன் இத்தனை அசிங்கமானவரா? ஆதவன் தரம் தாழ்துவிட்டார் என்றும் கருத்து சொல்வது சரியல்ல!!! சாதியத்திற்கு எதிராக அவர் எழுதியபோதும் இதை போன்ற விமர்சனமே பெற்றார்...... இப்போது புலி ஆதரவு உணர்ச்சி கூட்டங்களும் அதையே செய்கிறது, இவர்கள் உண்மை அறிய மறுக்கிறார்கள் என்பது வாசகர் சிலரின் கருத்துக்களே சாட்சி. இன போராடத்தை சாதிய அரசியலால் கொச்சைபடுத்த பார்க்கிறார் ஆதவன் என்று குற்றஞ்சாட்டும் தமிழ்நதி , அருள் எழிலன் இருவரும் தன் ஈழ ஆதரவு கருத்தை நிலைநாட்ட தன் சமுக பின்பூலத்தை அடையாள படுத்துகிறார்கள்.(அருள் எழிலன் மொழியில் சொன்னால் " கொய்யால இது நல்ல பாலிடிக்ஸ் டா") தமிழகத்தில் வீக்கான பேஸ்மெண்ட்டில் கட்டப்பட்ட உணர்ச்சி பில்டிங்கில் வசிப்பவர்கள் இவர்கள்.

Kavin
2009-07-04 09:05:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//சிபிஎம் போன்ற கட்சிகளை விட்டு செருப்பால் அடித்தால் கூட வெளியேற மாட்டார்கள்//

'புரச்சி' என்பவர் சொல்லியிருக்கும் இந்த கருத்தையெல்லாம் கீற்று எப்படி வெளியிடுகிறது என்று புரியவில்லை.

thangarasu
2009-07-04 10:06:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சரியாகச் சொன்னீர்கள் கவின்!
கீற்று மாதிரியான இணையதளங்களுக்கு ஒரு இதழியல் தர்மமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்திருந்தால் தமிழ்நதி மீதான ஆதவனின் தனிநபர் காழ்ப்புணர்ச்சியை கட்டுரையாகப் போட்டு, அதற்கு வரும் பின்னூட்டங்கள் முழுவதையும் எந்தத் தணிக்கையுமில்லாமல் போட்டிருப்பார்களா? நிச்சயம் கண்டிக்கத்தக்கதுதான் கீற்றின் பணி!

Dr. V. Pandian
2009-07-04 10:08:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு தாம் தமிழகத் தமிழரைவிட உயர்ந்தவர் என்ற கர்வம் இருந்ததாக கேள்விப்பட்டதுண்டு. அவர்களின் கர்வத்திற்குறிய தகுதி இருப்பின் பெரிய தவறல்ல. எனவே, அந்தச் செய்தி எனக்கு ஈழத் தமிழர்பால் இருந்த இனப்பிணைப்பை தளர்த்தவில்லை. 

தவறுகள் அனைவரும் செய்கிறோம். பலர் திருத்தியும் கொள்கிறோம். கடந்தகாலத் தவறுகளுக்காக தற்காலத்தில் பழி வாங்குவது எத்தகைய அறிவீனம்?

ஆதவனின் படைப்புகளைப் படித்ததில்லை, சில கட்டுரைகளைத் தவிர. அவரைப்பற்றி சிலரின் நல்ல மதிப்பீடுகளைப் படித்திருக்கிறேன். ஆனால், சில நண்பர்கள் அவர் C.P.M ஆள் என்றதும் எனக்குள் நெருடல். அதெப்படி ஒரு நல்ல நபர் அந்தக் கட்சியில் இருக்கலாம் என்று!

தமிழ் நதியின் பதிவையும் படித்தேன். ஆதவனின் பதிலையும் படித்தேன். 

ஆதவன் அடி சறுக்கியுள்ளார். 

பிரபாகரன் தாழ்த்தப்பட்ட ஈழவர் குலத்தைச் சேர்ந்தவர். சிங்கள இன ஒடுக்கத்தால் புலம்பெயர்ந்தவர், பெரும்பாலும், மேல் சாதியினரே! அப்படி இருந்தும் புலம்பெயர் மக்களில் 90 சதவீதத்தினர் புலிகளின் பின்னால் தான். ஈழ எதார்த்தம் மாறியுள்ளதைத்தான் இது காட்டுகிறது. எதிரியின் தாக்குதலில் இவர்களின் வேற்றுமைகள் மறைகின்றன. 

ஈழத்தில் அவதிப்படும் மக்களில் பெரும்பாண்மையோர் தாழ்த்தப்பட்ட மக்களே!

இந்த எதார்த்தங்களெல்லாம் ஆதவனுக்குத் தெரியாதா? 

ஆதவன், நீங்கள் இருக்கும் இடம் சரியில்லை! உங்களிடம் நேர்மை இல்லை. 

நீங்கள் புலிகளைப் பற்றிச் சொல்லும் சொற்கள், மன்னிக்கவும், திண்ணியத்தைப்போல பார்ப்பானால் திணிக்கப்பட்ட விடயமாகவே உள்ளது. 

உங்களின் புலி விமர்சனம் நேர்மையானதல்ல!

thamarai
2009-07-04 12:24:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Shame on you Aadhavan theeshanya. Use the other parts of yr brain other than 'dalit ' one. All who write are need not be 'writers' , they could be 'clerks' too. You have shown your ugly side . when pepl die in lakhs, you chose to speak about 'dalitism' . What a perspective !

ramesh
2009-07-04 08:18:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

குணாளன், பாவம் உங்களை பார்த்தால் சிரிப்பாகத்ட்தான தெரிகிறது, நிங்கள் ஆதவனிடன் போடும் மனுக்கள் எதையும் அவர் ஒரு பார்வைகூட பார்க்க மாட்டர்.
இந்த சிபிஎம் வகையறாக்கள் தான் பொதுவாகவே ஈழ ஆதரவு குரலுடன் பேசும் அனைவரையும் அதாவது நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன், சீமான், ஜெயபிரகாசம் என பாகுபாடின்றி புலித் தலைமையிடம் பணம் பெற்று பேசுவது வழக்கம். அப்படியான ஒரு பிரச்சாரத்தை அவர்கள் மிக துள்ளியமாக தமிழக மக்களிடம் பரப்பி வருகிறார்கள். 
ஆனால் பாருங்கள் ஷோபா சக்தி பெரும் தொகை தருகிறார் என்றவுடன் ஆதவனுக்கு பொத்துக்கொண்டு வருகிறது.
அது சரி தனக்கு என்று வந்தால் தானே தெரியும்

udayamoorthy
2009-07-04 08:47:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆணாதிக்க கொஞ்சம் தூக்கலாய் இருக்கும் ஆதவனின் இந்த அருவருப்பான கட்டுரையை கீற்று வெளியிட்டது அவநம்பிக்கையாய் உள்ளது. ஆதவன் தமிழ்நதியிடம் இந்த கட்டுரையை வெளியிடும் படி கேட்டார் அவர் மறுத்தார். கீற்று ஏன் இதனை வெளியிட்டது. கீற்று நன்பர்கள் இதனை வாசித்து விட்டு தான் பிரசுரித்தார்களா?
கீற்று தங்களுக்கான ஆசிரியர் குழு வரையரைகளை உருவாக்காவிட்டால் இப்படியான அபத்த விவாதங்களில் உங்கள் ஆற்றல் விரையமாகும். ஏற்கனவே ஒரு நன்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் இலக்கிய கூட்டங்களுக்கு செல்வது ’விந்தை விரையமாகுவதற்கு சமம்’

Kannan
2009-07-04 08:52:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கூறவது போல் ஆதவன் மெல்ல மெல்ல ஒரு முழுமையான ‘கவர்மெண்டு பிராமணன்’ ஆக மாறிப்போனார்.

Satya
2009-07-04 09:26:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

குணாளன். கொஞ்சம் யோசியுங்கள் ,
////இப்போதும் புலிப்புராணம் பாடும் இவர் தனது உறவுப் பிள்ளைகளை புலிகள் கட்டாய ராணுவத்திற்கு பிடித்துச் சென்று விடாமல் பாதுகாத்து மிகவும் பவுத்திரமாக தமிழ்நாட்டில் கொண்டுவந்து கல்வி பயில வைக்கின்றார். ஆனால் ஏழை பாளைகளின் பிள்ளைகள் மட்டும் நஞ்சைக் கழுத்திலும் குண்டை வயிற்றிலும் துவக்கைத் தோழிலும் சுமந்து கொலைக் களத்துக்குப் போக வேண்டும்.////
தமிழகத்தில் தலித்தியம் பேசுபவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை மலம் அள்ள விடுவதில்லை. கான்வெண்டு ஸ்கூலில் தான் படிக்கவைக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் யாரையும் அரசியல் போராட்டத்தில் சாலையில் களமிரங்குவதில்.. தமிழநதி மட்டும் குழந்தைகளின் ஸ்கூல் பையில் வெடிமருந்தை நிரப்ப வேண்டுமாம்.

Gikkan
2009-07-04 10:22:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தலித்தியம் பேசுபவர்கள் தங்கள் பிள்ளைகளை மலம் அள்ளச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமன்று. தலித்தியத்தின் நோக்கமே மலமள்ளுவதை ஒழிப்பதுதான். ஆனால் அதேநேரத்தில், குணாளன் மீதான சத்யாவின் எதிர்வினை மேலும் பல இடங்களில் பொருந்தும். தமிழ்நதி தனது உறவினர் பிள்ளைகளை ஈழத்திலிருந்து அழைத்து வந்து விட்டார் என்று கூறும் குணாளனுக்கு, ஆதவன் உள்ளிட்ட மார்க்சியவாதிகள் தங்களது குழந்தைகளை எங்கு படிக்க வைக்கிறார்கள் என்று தெரியுமா? அவர்கள் யாருமே மற்ற தலித் குழந்தைகளுடன், பாட்டாளி வர்க்கத்து குழந்தைகளுடன் அரசுப் பள்ளிகளில் படிப்பதில்லை. TVS School போன்ற பார்ப்பனர்கள் நடத்தும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்கள். படித்து முடிந்தவுடன் யாரும், மார்க்சியப் போராட்டங்களுக்கு வருவதில்லை. நிறைய பேர் முதலாளித்துவ அமெரிக்காவிலும், கொத்தடிமைத் தொழிலான சாப்ட்வேர் நிறுவனங்களிலும்தான் வேலை பார்க்கிறார்கள். 
ஆனால் இதே மார்க்சியவாதிகள்தான் இத்தகைய வேலைகளை எதிர்த்து மேடைகளிலும், இவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளிலும் முழங்குவார்கள். தலித்தியம் பேசும் எந்த மார்க்சியவாதியும் சேரியில் வாழ்வதில்லை; தங்களது குடும்பத்தினரையும் வாழ அனுமதிப்பதில்லை. இதையெல்லாம் தங்களது குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர நினைக்கும் தகப்பன்களின் உணர்வாகத்தான் நான் பார்க்கிறேன். நீங்கள் தமிழ்நதி மீது தனிநபர் தாக்குதலை முன்வைத்ததால்தான் நான் இதைப் பேசவேண்டியதாயிற்று. 
பணம் வாங்கும் புலி எதிர்ப்பாளர்களின் பெயர்களை சொல்லுங்கள் என்று உங்கள் குழு தொடை தட்டியதுபோல், இந்த மார்க்சிஸ்ட்களின் பெயர்களை நீங்கள் வெளியிடக் கேட்டால் நான் தயார். ஆனால் அதற்கு முன் உங்கள் நண்பர் ஆதவனிடம் அதற்குச் சம்மதமா என்று கேட்டுப்பாருங்கள். பிறகு தமிழ்நதியை நோக்கி சுட்டுவிரல் நீட்டுவதுபோல் உங்களது நண்பர்கள் நோக்கியும் நீட்டவேண்டி வரும். அதற்கு முன் இப்படி தத்துபித்து என்று ஆதவன் போல் தனிநபர் தாக்குதலில் இறங்காதீர்கள். கொள்கைகளை வைத்து ஆரோக்கியமான விவாதத்துக்கு வாருங்கள்.

Ravi Shankar
2009-07-05 12:15:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் தீட்சண்யா ஒரு 'காமெடி பீசு'

ஈழவன்
2009-07-05 09:47:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஐய ஆதவன் உங்கட நேர்மை நல்ல தெரியும் எமக்கு அதற்கு நீ ஆ வி இல் கொடுத்த பீட்டியும் , சுசீந்திரனிடம் கேட்ட கேள்விகளுமே சாட்சி ,

கணேஷ் எபி
2009-07-05 11:01:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் தீட்சன்யா போன்ற 'அதிமேதாவிகள்' இருக்கும் வரை தமிழ் ஈழம் வெறும் கனவாகவே போகும் என்றுதான் தோன்றுகிறது. உயிருக்கு போராடும் மக்களிடம் நீ எனக்கு என்ன செய்தாய் என்று கணக்கு பார்க்கும் இவர்களை எல்லாம் மார்க்சிஸ்ட்கள் என்று அழைக்க வேண்டியது அவசியம் இல்லை. சாக கிடக்கும் மனிதன் எந்த ஜாதியை இருந்தால் என்ன? அவனுக்காக வருந்த தெரியாத ஆதவனுக்கு தலித்தியம் பேசவும் தகுதி இல்லை. திருந்தாத ஜென்மங்கள்.

முருகுபாரதி
2009-07-05 11:34:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நானும் மதுரை கூட்டத்தில் இருந்தவன் தான், இலங்கையில் நடக்கும் பேரளிவுகளுக்கு ஏன் தமிழக எழுத்தாலர்கள் குரல் கொடுக்கவில்லை என தான் தமிழநதி கேட்டாரே தவிற புலிகளை ஆதரியுங்கள் என எதுவும் கூறவில்லை.
இந்த விவாதம் ஏதோ வேரு திசையில் ஆதவன நகர்த்தியது போல் தெரிகிறது. வேறு நோக்கங்கள் உல்லது போல் தெரொகிரது.
உத்தப்புரம், வெண்மனி, திண்ணியம் குறித்து ஏன் எழுத்வில்லை என ஆதவன் தமிழக எழுத்தாளர்களை பார்த்து இது வரை இப்படியான மொழீய்ல் கேட்டதூண்டாஅ

Chennai Boys
2009-07-05 11:39:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆனந்த விகடன் பேட்டியிலேயே உங்கள் குரூரம் வெளிப்பட்டது. சல்மாவும் கனிமொழியும் திமுக விற்கு எதிராக பேசவில்லையாம். அட அந்த பிள்ளைகள் பாவம் கட்சி பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவது அனைவரும் அறிவர். இதை ஆதவன் கண்டுபிடிச்சுட்டாராம். இதே ஆதவன் கனொழொளியிடம் பொய் கைகட்டி சென்னை சங்கமத்தில் நின்றார். அன்று கனிமொலி கரேக்டா நெரத்துக்கு காசு குடுத்திருந்தா.. அப்பாலே இப்படீ கலையிப்ப்பாரா ஆதவன். அதிகாரத்துடம் உரவாடுவதீல் யப்பா யப்பா புது புது பாருருமுலா.

Vijay
2009-07-05 08:23:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

I believe when Plato described about solar system, fellow Athenians denied him on behalf of religion. but insanity of ruthless priests conviction was clear. they executed him. i see my fellow human being adhavan as Plato.i'm not advocating for him nor his presence. we all have difference of opinions regardless of organisation, everyone who know about whether itt's CPI or CPIM they never agreed of caste or cruelty of such vandalism. but people like him changed the perspective of such parties. Change is the unchangeable thing of this universe. you can only experience the verse of a depressed only if you're oppressed by someone. we all understanding not experiencing. he experienced such cruelties in his life, that's why he'd be able to speak about them regardless of any Dias. people who don't want to breathe about casteism, they all speak about EZHAM. why you people are not able to understand, the ravages, vandalism, human atrocities all painful than death. I do not think adhavan has said in such way, those who know his writings will not accept it, he's a person who worry about human beings not about statements. i would like to request the people who are part of this, please write or speak with humanity not with enmity.i read such comments in this feedback column.i don't think he has written this article for his personal revenge, if you think it in such way, let it be, when you know yours is an illusionist perspective, you will be dissolved in your innocence. why you people are unable to understand the cuts and pains of Muslims and Dalits and other depressed. why you want to hide it. this shows your Religion and caste sickness. EZHAM is not based only on LTTE, i ask people who want to talk bout human beings, why you discriminate or biased in your statements. or you don't consider those people are not human beings, like your ancestors. the blood of nazi's are still in your veins. the flesh of Rama are still in your heart, the idea of Kings are in your brains. fellow humans talk about it regardless of facisim.

Shreeni
2009-07-05 08:35:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆதவன் எழுத்தில் கோபமும் காழ்ப்புமே தெரிகிறது. தன் பக்கம் நியாயம் இல்லை என்பதால் தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்.

ஞானம்
2009-07-05 09:01:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அந்த பெரு முழக்கம் ஜுனியை விகடனில் வந்த்து. அந்த விழாவுக்கு போய் வந்த பல படைப்பாளிகள் மனம் வருத்தப்பட்டார்கள். இப்படி இவ்வளவு பேசுபவர் அந்த சென்னை சங்கமத்துக்கு வந்திருக்கவே கூடாது. கனிமொழி பற்றி அவருக்கு இதற்கு முதலில் தெரியாதா. பிறகு ஏன் இப்படி குடி போதையில் எழுதியதில் போல் ஒரு உளற்ல். அப்படியெல்லாம் இல்லை ஆதவனுக்கு நன்கு தெரியம் யாரை பற்றி பேசினால் பாப்ப்புலாரிட்டி கிடைக்கும் என. அது போல் ஒரு வித்தை தான் இந்த தமிழ்நதி ப்ற்றீய அவாது உளறலும்.

பிரபாகரன்
2009-07-05 10:27:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நல்ல தீர்ப்பு... ஈழ தமிழனிடம் சாதிவெறி அதிகம் அவன் சாகுறது சரி தான்.
நீ என்ன பண்ற, தமிழ்நாட்டிலும் சாதிவெறி அதிகம் . அதனால ராஜபக்சே 
இங்க கூட்டிட்டு வந்து இங்க இருக்கிற தமிழன எல்லாரையும் கொன்று ..உன்ன தவிர நீ 
நீ தான் ரொம்ப நல்லவன் ஆச்சே..ஆதவன் கொஞ்சம் அமுக்கிட்டு இருங்க ..

பி. இரயாகரன்
2009-07-06 02:09:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியம் பேசியபடி மானுட விரோதியாக உள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கும், தமிழ் தேசியத்தின் பெயரில் புலியிசம் பேசும் தமிழ்நதிக்கும் இடையில், பல மானிடம் சார்ந்த விடையங்கள் கொச்சைப்படுத்தப் படுகின்றது. இவை இந்திய எழுத்தாளர் தளத்தில், இவை மலினப்படுகின்றது.

தங்கள் பிழைப்புவாத எழுத்துக்கு ஏற்ப, சமகால நிகழ்வுகள் பச்சோந்திகளாக வாழ்வதுதான், எழுத்தாளர்களின் தார்மீகமான நிலையென்று நிலைநிறுத்த முனைகின்றனர். 



இப்படிப்பட்டவர் தான் ஆதவன் தீட்சண்யா. இவர் மனு விரோதியல்ல, மானுட விரோதி. இவர் போர்த்தியுள்ள துண்டுக்கு ஏற்ப, "புதுவிசை" இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் இருப்பவர். இதற்கமைய அவரின் மானுடத்துக்கு எதிரான கோட்பாடு, நடுவீதிக்கு வந்துள்ளது.



இதற்கு தமிழ்நதி எழுப்பிய கேள்வி உதவியது. அவர் கேள்வி "சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன?" இந்தக் கேள்வியில் என்ன தவறு? மக்களை ஏமாற்றி பிழைக்கும் ஆதவன் தீட்சண்யா போன்ற மானுட விரோத கூத்தாடிகளுக்கு இதனால் கோபம் வருகின்றது. தங்கள் சொந்தமுகம் இப்படி அருவருப்பாக இருப்பது கண்டு, குமுறி எழுகின்றார். நெற்றிக்கண்ணை திறந்து, ஈழத்தமிழனை தமிழ்நதிக்கு ஊடாக புலியாக காட்டி காறி உமிழ்கின்றார்.



அந்த மானுட விரோதி அம்பலமாக, அவர்களின் தயவில் பெயரையும் புகழையும் இலக்கிய உலகில் மிதப்பாக்கி பதியும் சோபாசக்தி, அவரைக் காப்பாற்ற தமிழ்நதியை தன்பாணியில் இழிவாடுகின்றார். அத்துடன் பெண்கள் சந்திப்பு, தமிழ்நதி, தமிழச்சி என்று, இதற்குள் பழைய கறள்களையும் சேர்த்து தீர்க்க முனைகின்றார். என்ன அரசியல் கூட்டுகள்.



புலிகள் வேறு, தமிழ்மக்கள் வேறு என்பதைக் கூட காணமுடியாத, காணமறுக்கின்ற ஆதவன் தீட்சண்யாவின் அறிவு சார்ந்த புலமையும், மானிட விரோதமும் கூடிநிற்கின்து. தமிழ்நதி தமிழ் தேசியத்தை புலிக்கூடாக பார்த்தார், பார்க்கின்றார் என்றால், ஆதவன் தீட்சண்யா என்ன செய்கின்றார். அவரும் அதை அதனூடாகக் காட்டி, தமிழ்மக்கள் மேல் காறி உமிழ்கின்றார். இவர்கள் எல்லாம் தங்களை சர்வதேசவாதிகள் என்ற வேறு வேஷம். தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறையை, புலியூடாக நியாயப்படுத்துகின்றார்.



இங்கு இப்படி இதை புலிக்கு எதிராகவும் ஆதரவாகவும் நின்று நியாயப்படுத்தும் அரசியல் மூலம், தமிழ்மக்கள் மேல் ஏறி கூத்தாடுகின்றனர்.



தமிழ்நதி தமிழ்த்தேசியத்தை புலியிசத்தின் ஊடாக பார்ப்பவர் என்ற வகையில், வலதுசாரிய கண்ணோட்டம் கொண்டவர். இந்த வகையில் அவரின் சிந்தனைமுறை தனிமனித நலன் சார்ந்தது. இதில் இருந்து அவர் வெளிவர பட்டறிவும், வாழ்வின் அனுபவமும் தேவை. இந்த எல்லையில் வைத்துதான், அவரை அணுக வேண்டும். அவரின் கருத்தை விமர்சிக்க வேண்டும். அவரின் சமூகம் பற்றிய பார்வை குறுகியது. அதுவோ சின்ன வட்டம்.



அதில் உள்ள அறியாமையுடன் கூடிய நேர்மையும், ஓர்மமும் உண்டு. அவர் பெரிய மேதாவி எழுத்தாளராக பவுசு விட்டுத் திரியும் கூட்டத்தைப் பார்த்து, கேள்வி எழுப்புகின்றார். இதற்கு மானுட விரோதிகளால், பதில் சொல்ல முடிவதில்லை. இதுதானே இதில் உள்ள அடிப்படை உண்மை. அந்த மக்களுக்காக இந்த எழுத்தாளப் பொறுக்கிகள், குரல் கொடுத்தது கிடையாது. இதுதான் உண்மை. நீங்கள் கேட்கலாம் புதுவிசை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ன செய்தது என்று? சிலரை பிரபல்யமாக்க, தனக்குத்தானே அது முதுகு சொறிந்தது. புலியெதிர்ப்பு பேசும் ஏகாதிபத்திய தன்னார்வ சுசீந்திரனுக்கு பாய்விரித்தது. தாங்கள் என்ன செய்தோம் என்று இந்த மானுட விரோதி ஆதவன் தீட்சண்யா அழகாக கூறுகின்றார். "இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது மட்டுல்ல, பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது" இப்படி இலங்கை விடையத்தில் எதிர்ப்புரட்சியை கட்டவிழ்த்தவர்கள் இந்த முதுகுசொறியும் கும்பல். "சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக" உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டும் என்று, இலண்டனில் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பேசிய சோபாசக்தி, மண்ணில் நடந்த தொடர்ச்சியான மனித அவலம் மீதும் கள்ள மௌனத்தையே பதிலளித்தவர். அவரின் கூட்டாளிகள் எல்லாம் மனிதன் மேலான ஒடுக்குமுறையை ஆதரித்து நிற்கின்ற போது, மௌனம் மூலம் நட்பை தக்கவைக்கின்றார். இவர்கள் பிரபலமான சஞ்சிகை மூலம், திடீர் பேட்டி கொடுத்த சமாளிப்பதில் விண்ணாதி விண்ணர்கள். இப்படித்தான், இந்த பச்சோந்திகள் அரசியல் செய்கின்றனர். இவர்களின் கூட்டாளிதான், ஆதவன் தீட்சண்யா. இதனுடன் ஒப்பிடும் போது தமிழ்நதியின் புலியிசம் வலுக்குறைந்தது. 



உண்மையில் தமிழ்நதியின் வலதுசாரிய தனிமனித சமூகக் கண்ணோட்டம் ஊடாக விடையங்களை தவறாக பார்ப்பது என்பது, அந்தத் தத்துவத்தினால் ஏற்படுவதுதான். ஆனால் ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் மார்க்சியம் பேசுபவர்கள் என்றால், அவர்கள் சமூக கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதையும் சமூகம் ஊடாகவே பார்க்க வேண்டும். சர்வதேசியவாதியாக இருக்கவேண்டும். அப்படியா இருக்கின்றனர்? இல்லை. 



இங்கு தமிழ்நதியின் கேள்வி மூலமும், இவர்கள் போலி மார்க்சியம் பேசும் சமூக விரோதிகள் என்பதையே மீண்டும் அம்பலப்படுத்துகின்றது. சமூக கண்ணோட்டத்துக்கு பதில், சமூக விரோத கண்ணோட்டத்தை சமூகம் மீது திணிக்க முனைகின்றனர்.



இந்த இடத்தில் ஆதவன் தீட்சண்யா மானுட விரோதி, உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. புலிக்கூடாக தமிழ்மக்களை தீட்டித் தீர்க்கின்றார். ஈழத்து தலித்துகள், மலையகமக்கள், முஸ்லீம் மக்கள் மேல் புலியிசம் அக்கறை கொள்ளவில்லை அல்லது தாக்கியது என்பதால், தமிழ்த்தேசியம் தவறானதல்ல. இது புலியிசத்தின் தவறு. புலியிசம் வேறு, தமிழ்தேசியம் வேறு என்பதை மறுத்து, ஆதவன் தீட்சண்யா போன்றோர் தமிழ்மக்களுக்கு எதிராக குதறுகின்றனர். தமிழ்மக்களுக்காக, இதைப் பற்றி தமிழ் மக்களுடன் என்றும் பேசவில்லை. இப்படிப்பட்ட நீங்கள், இன்று புலியெதி;ர்ப்பு அரசியலுடன் இதைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கின்றது. புலிப்பாசிசம் பற்றி, சரியான தமிழ்தேசியம் பற்றியும், சர்வதேசிய கண்ணோட்டத்துடன் மக்களுக்காக தமிழ்நாட்டில் பேசப்பட்டு இருக்கின்றது. ஆனால் நீங்களல்ல. நீங்கள் பிடில் வாசித்துக்கொண்டு இருந்தீர்கள்.



மார்க்சிய அடிப்படையில் தமிழ்; மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக எங்கே குரல் கொடுத்தீர்கள். இதை முன்னெடுப்பவர்களின் அரசியல் தவறுகள் மேல், ஒரு சர்வதேசியத்தை கையாண்;டது கிடையாது. இவரின் எழுத்து, இவரின் செயலாளராக இருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இவரின் கட்சி, தமிழ்மக்களின் சுயநிர்ணயத்துக்காக லெனினிய வழியைக் கையாண்டது கிடையாது. இந்த வகையில் தமிழ்மக்களை ஒடுக்க துணை நின்றவர்கள். இதை இன்று புலியின் பெயரால் சொல்லி நியாயப்படுத்துகின்றனர்.



இலங்கை விவகாரத்தில் மட்டும் இவர்கள் இப்படியிருக்கவில்லை. தங்கள் சொந்த நாட்டில், சொந்தப் புரட்சியை குழிபறிக்கும் அரசியலைக் கொண்டவர்கள். இவர் இருக்கும் கட்சி, இந்திய ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் ஒரு பாசிசக் கட்சி. மேற்குவங்கம் முதல் இந்தியா முழுக்க, இந்தக் கட்சி மூலதனத்துக்கு சேவை செய்கின்றது. புலி வலதுசாரிய பாசிசத்தை, அதன் வலதுசாரி அரசியல் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்;. இந்தியாவில் இவர்கள் நடத்தும் மேற்குவங்க பாசிச ஆட்சி முதல் ஆட்சியில்லாத இடத்தில் ரவுடியிசத்தையே கட்சிக் கொள்கையாக கொண்டது இந்தக் கட்சி. ஆனால் இதை மார்க்சியத்தின் பெயரில் செய்கின்றனர். கட்சி வேட்பாளர்களின் சொத்துகளின் பெறுமதி முதல் கட்சியின் கோடிக்கணக்கான சொத்துக்கள், அதை பெருக்கும் வழி அனைத்தும் இதுவொரு மக்கள் விரோதக் கட்சியின் ஒரு கொள்கையாக, செயல்முறையாக இருப்பதைக் காணமுடியும். இந்த கட்சியில் உள்ள பார்ப்பனிய நடைமுறைகள், சாதியமும் ஊர் உலகம் சிரிக்கும் வண்ணம் அம்மணமாகவுள்ளது.



இப்படிப்பட்ட இவர்கள் சொந்த ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிக்கே குழிபறிக்கும் போது, ஈழத்து மக்களுக்காக குரல்கொடுப்பார்கள் என்று நம்புவது முட்டாள் தனம். ஈழத்து விடையத்தில் தங்கள் சொந்த மக்கள் விரோதத்தை மூடிமறைக்க, புலியைக் காட்டி புலுடா விடுகின்றனர். புலியிருக்கட்டும் நீ என்ன செய்தாய்? அந்த மக்களுக்காக உன் கட்சி என்ன செய்தது. பச்சை இனவாதம் கக்கும் ஜேவிபியுடன் கூடி, தமிழ் மக்களை ஒடுக்க துணை நின்றவர்கள் நீங்கள்.



தங்கள் மக்கள் விரோத நிலையையும், சர்வதேசியமல்லாத நிலையையும் தக்கவைக்க, புலியின் மனிதவிரோத செயலை புலியெதிர்ப்பு கும்பலிடம் இரவல் வாங்கி, அதை தமிழ் மக்களுக்கு எதிராக காட்ட முனைகின்றனர்.



இப்படி இதில் இரண்டு மக்கள் விரோத விடையங்களை கையாளுகின்றார்.



1. புலியெதிர்ப்பு நிலையில் நின்று தமிழ்மக்களை எதிர்க்கின்றார்.



2. புலியெதிர்ப்பு அல்லாத, புலியையும் புலியெதிர்ப்பையும் எதிர்க்கும் புரட்சிகர மக்கள் நிலையை மறுதலிக்கின்றார்.



ஒரு சர்வதேசியவாதியாக காட்டிக்கொள்ள மார்க்சியத்தைக் கையாளும் ஒரு மானுட விரோதியால் மட்டும்தான், இப்படி இதை அணுகமுடியும்;. அறிவற்ற பகட்டுத்தனத்துடன், ஒரு மானுட விரோதியாகவே புலம்புவதைப் பாருங்கள்.



"இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது மட்டுல்ல, பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது" என்று கூறும் ஆதவன் தீட்சண்யா, அந்த "ஒரு மனத்தடை" தான் என்ன? மானுட விரோதம் தான். மானுடத்தை குழிதோண்டிப் புதைக்க, மார்க்சியத்தை பயன்படுத்தும் வக்கிரமான சுரண்டும் வர்க்க நரிப் புத்திதான், தடையின் அடிப்படையாகும். இப்படி தங்கள் மானுட மறுப்பை தக்கவைக்க, புலியெதிர்ப்பு அடிப்படையில் அதை அள்ளி மானுடம் மீது வீசுகின்றார் பாருங்கள்.



"இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்?" "இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா?" "தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து 500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்?" "தமிழ்நாட்டில் வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டபோது ஈழத்திலிருந்து எந்த குரலும் ஒலிக்கவில்லை. திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமையை எதிர்த்தோ இதோ இப்போதும் உத்தபுரத்தில் மறித்து நிற்கிற சாதிச்சுவரை இடிக்க வேண்டுமென்றோ ஈழத்திலிருந்து எழுந்த தமிழினக்குரல் எதுவுமுண்டா?" "பிறந்தமண்ணை பிரிந்து ஏறத்தாழ 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களது குடியுரிமையைப் பறித்து சுமார் 10 லட்சம் பேரை நடுத்தெருவில் நிறுத்தியபோது ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேர் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்கள்?" 



இப்படி கேட்கும் நீங்கள், இவற்றை அடிப்படையாக கொண்டு சர்வதேசியவாதியாக எங்கே போராடியிருக்கின்றீர்கள். "ஒரு மனத்தடை" என்று கூறி, இதைச்செய்யாத நீங்கள், இன்று இதை அள்ளியெறிவதோ வெறும் புலியெதிர்ப்பு. புலத்து இலக்கியப் பன்னாடைகள் மக்களுக்காக அரசியலை வைத்தது கிடையாது. அதையே அள்ளி மீள எறியும் ஆதவன் தீட்சண்யா, அரசியலற்ற புலியெதிர்ப்பு ஊடாக தங்கள் மானுட விரோதத்தை மூடிமறைக்க முனைகின்றார்.



கடந்தகாலத்தில் ஒரு சர்வதேசியத்தை எங்கே எப்படி எந்த அரசியல் அடிப்படையில் கட்டியிருக்கின்றீர்கள். அப்படி ஈழத்தில் குரல் கொடுத்தவர்களுடன் எந்த சர்வதேசியத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். ஏகாதிபத்திய தன்னார்வ பணத்தை நக்கவே அரசியல் பேசும் சுசீந்திரனுடனும் கூடி அரசியல் லூட்டி.

(1. நம்பிக்கையூட்ட முடியாத சீரழிவுவாதி, புதுவிசை இதழில் புலம்பியது என்ன? 

2.புலியல்லாத புகலிடத் துரோகமும், புதுவிசையில் பொம்மலாட்டம் போடும் சுசீந்திரனும் )

பேரினவாதம் வென்று தன் பாசிச செருக்கை நிலைநாட்ட பாடிய சிங்கள தேசியகீதத்தை பாடும் நக்குண்ணி சுகனும், அவரின் கூட்டாளியாக கூடித் திரியும் எந்த மக்கள் கருத்துமற்ற சோபாசக்தி உங்கள் கோழையாக்கள். தலித்தியத்தின் பெயரில், இவர்களும் சேர்ந்து கூத்தாடும் பேரினவாதத்தை ஆதரிக்கும் தலித்துகள், உங்கள் தலித் அரசியல் கூட்டாளிகள். இப்படி சிங்கள அரசுடன் சேர்ந்து கும்மியடிக்கும் புலத்து தலித்துக்களையும் சார்ந்து, புலியெதிர்ப்பு லூட்டி அடிப்பதே ஆதவன் தீட்சண்யாவின் சர்வதேசியம்.



இப்படி புலத்தில் மாற்றுகள் என்று கூறிக்கொண்டு மகிந்தாவுக்கு குடை பிடிக்கும் பன்னாடைகள், தங்களைப் போர்த்திக் கொள்ள தலித்துகள் பெயரால் கடைவிரித்தனர். இதைத்தான் இந்தியாவிலும் தலித்தியத்தின் பெயரால் பலர் செய்தனர். இப்படி ஆதவன் தீட்சண்யா இலண்டனில் கலந்து கூத்தாட, தலித்தியம் உதவியது. இந்தியாவில் இவரும் இவரின் கட்சியும் தலித்துக்கு எதிரானது. தலித் பெயரால் பிழைத்த கூட்டமும், அதன் பெயரால் ஆதவன் தீட்சண்யா பிழைக்க, புலத்தில் அதன் பெயரில் பேரினவாதத்துக்கு நக்கும் கூட்டமும் ஒன்றாகக் கூடித்தான் சலசலத்தது, சலசலக்கின்றது.



ஆனால் மானிடத்துக்கு எதிராக புலிகள் மற்றும் அரசு இழைத்த கொடுமைகளுக்;கு எதிரான போராட்டம், இதற்கு வெளியில் நடந்தது. எத்தனை நூறு குரல்கள். 1980 களில் தொடங்கி பத்தாண்டுகளில் கொல்லப்பட்டவர்களில் கணிசமானவர்கள் இதற்காகத்தான் கொல்லப்பட்டனர். உள் இயக்க படுகொலை முதல் எத்தனை பல நூறு சம்பவங்கள். இதற்குப் பின்பும், இதற்கான போராட்டம் நடந்தது. இந்த மானுட விடையத்துக்காக, நாங்கள் நடத்திய போராட்டம் தனித்துவமானது. சர்வதேசியத் தன்மைகொண்டது. இதை மூடிமறைக்கும் மானுட விரோதியாக ஆதவன் தீட்சண்யா இருப்பதால் தான், இப்படி இதைப் பற்றிய எதுவும் நடக்காத மாதிரி கேட்க முடிகின்றது.



"இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்?" "இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்ற�

கீற்று ஆசிரியர் குழு
2009-07-06 04:31:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தோழர்களுக்கு,

ஆரோக்கியமான முறையில் விவாதத்தைத் தொடரவும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அள்ளித் தெளிப்பது, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மூன்றாம்தர விவாதத்திற்கே விட்டுச் செல்லும். இது நம் அனைவரது நேரத்தையும் வீண்டிப்பதாகும். 

என்றும் அன்புடன்,
கீற்று ஆசிரியர் குழு

Vijay Surya
2009-07-06 06:27:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

''இந்த தேவேந்திர பூபதியிடமிருந்து எப்படி என்னை தற்காத்துக் கொள்வது என்பதுதான் தமிழ்நாட்டில் எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் திகிலாகவும் இருக்கிறது...’ என்று 2009 ஜனவரியில் அஞ்சி நடுங்கிய தமிழ்நதி இப்போது ஏன் அதே தேவேந்திரபூபதி நடத்துகிற முகாமுக்கு வலிய வந்திருக்கிறார் என்பதுதான். ஒருவேளை பூபதியைக் கையாளும் தற்காப்புக்கலையை அவர் பயின்றிருக்கவேண்டும் அல்லது சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று அதன் பிடரியை உலுக்குவது என்று தீர்மானித்து புறநானூற்று மறத்தமிழச்சியாக மனதளவில் மாறியிருக்கக்கூடும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.’
அப்படி ஆதவனிடம் வந்து தமிழ்நதி தன்னை தற்காத்து தரும் படி முறையிட்டாரா.
இந்த வரிகளின் மூலம் தேவேந்திரபூபதி பற்றி சூழலில் நிலவி வந்த வேறு ஒரு வதந்தியை உன்மையாக நிருபனம் செய்திவிட்டார் ஆதவன். 
வாழ்த்துக்கள் ஆதவன்.

இதே தேவேந்திரபூபதியிடம் எப்படி பணம் பறிப்பது என்கிற வித்தையில் ஆதவனும் சிறந்து விழங்குகிறார். 

தேவேந்திர பூபதி தான் புதுவிசையை பினாமியாக நடத்துகிரார் என வால்பாரை முகாமில் அவரால் பெரிதும் மதிக்கப்படும் புரட்சிக் மாவோயிஸ்டு காமக் கவிஞையால் ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது. அந்த கவி பற்றி காமக் களியாட்டக் கவிதைகள் என பஞ்சாங்கம் ஒரு கட்டுரை வாசித்தார்.

ஆதாவனுக்கு இரு பக்கங்களிலும் லாபம்தான் ஷோபா மற்றும் தேவேந்திரபூபதி - ஆதவன் புறநானூற்று மறத்தமிழனாக திகழ்கிறார்.

பரவாயில்லை அவரிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர் எழுதாவிட்டாலும் அவர் பெயரில் இவர்களே கவிதை எழுதி பிரசுரித்தி அவருக்கு இத்தனை நம்பிக்கையாக நடந்து கொள்ளும் ஆதவன் அவரது அந்த்ரங்க விஷயத்தையும் இப்படி வெளிப்படையாக எழுதுகிறார் என்றால். இதிலும் ஆதவன் டமில் படைப்பாளிகள் மத்தியில் நிச்சயம் நவீனமானவர் தான். இதுக்கு பேர் தான் கட்டுடைப்போ.


Reader
2009-07-06 06:33:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

This foul debate was started just because of the foul language and personalised attacks that were initiated by Keetru. keetru should have avoided this personal atack article. Keetru editors could have read Tamilnathys article and compared with adavans article before e-publishing it.No where can u find any personal attacks by her. This total debate looks ugly.

Gokul Kanan
2009-07-06 06:41:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Left leaders are losing there vision. Let them stop their blabbering. Why is Adavan here talking about TamilnathyXDevendraboopathy relationship. Its just to damage her personally. Is Aadavan now ready to talk about DevendraBoopathy and all the other Tamil Young Poets who are in very private and closely personal with him. Aadavan knows all facts but it is his selective brain use here

கீற்று வாசகன்
2009-07-06 09:08:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//தோழர்களுக்கு,

ஆரோக்கியமான முறையில் விவாதத்தைத் தொடரவும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அள்ளித் தெளிப்பது, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மூன்றாம்தர விவாதத்திற்கே விட்டுச் செல்லும். இது நம் அனைவரது நேரத்தையும் வீண்டிப்பதாகும். 

என்றும் அன்புடன்,
கீற்று ஆசிரியர் குழு//


ஆரோக்கியமான கட்டுரைகள்தான் ஆரோக்கியமான விவாதங்களை வளர்த்தெடுக்கும். இதுபோன்ற கட்டுரைகள் அல்ல!

குணாளன்
2009-07-06 02:41:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

திருந்தவே மாட்டீங்கள் போங்கப்பா. 

ஒன்று மட்டும் உண்மை. ஒரு இனம் அயலில் அழிகிறதாக இதில் வந்து ஓலமிடுபவர்கள் அநேகம்பேர் சுத்தப் பம்மாத்து. கூட்டத்தோடு கூட்டமாய் நின்று ஒப்புக்குத் தலையாட்டும் சந்தர்ப்பவாதிகள். நான் இப்படி எழுதுவது இங்கு எல்லோருக்கும் கோபத்தை உண்டு பண்ணும் என்பது எனக்குத் தெரியும். அது பற்றி எனக்குக் கவலையில்லை. 

கீற்று ஆசிரியர்குழு அப்படியொரு வேண்டுதலை விட்டபின்னும் "விஜய்" போன்றவர்கள் மீண்டும் தமது குப்பைத் தனங்களுடன்தான் வருகிறார்கள் என்றால் என்ன செய்வது...? 

கீற்று ஆசிரியர்குழுத்தான் இனி வரும் பின்னூட்டங்களை மிகக் கறாராக நின்று தணிக்கை செய்து இந்த இணையத்தளத்தை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். அல்லது இந்தக் கொசிப்பு எழுதுவோர் கீற்றை நாசமாக்கி விடுவார்கள். தற்போதைக்கு இதை மட்டுமே அக்கறையோடு சொல்ல முடியும். 

"எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஈனச் செயலைக் கண்டிப்போம்! தடுத்து நிறுத்துவோம்!" என்ற பதிவு கீற்றின் கட்டுரைப்கபகுதியில் வெளியாகியிருக்கின்றது. 

http://www.keetru.com/literature/essays/ms_swaminathan.php

முடிந்தால் இப்போ உடனே நாம் விவாதிக்க வேண்டியதும் கருத்துப் பரிமாற வேண்டியதும் இதுவாகும். அந்த 3அலட்சம் மக்களையும் நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு காலனி அடிமை விலங்கிலிருந்து காப்பாற்றும் பொருட்டு ஒருமித்த குரலெழுப்பும் போராட்டங்களுக்கு ஏதுவானதுமான பணிகளை முன்னெடுக்கும் கருத்துக்களை அக்கறையோடு முன்வைப்போம். முடிந்தால் முன் வாருங்கள். 

-குணாளன்-

புதூர் சிபி
2009-07-07 06:22:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ஒரு பிரச்சனையைத் துவக்க "தண்ணி" போடவேண்டியதில்லை. புலிகள் பற்றி பேசினால் போதும் என்று நினைத்துக் கொண்டு தமிழகத்தில் கூட்டங்களில் பிதற்றுபவர்களின் பின்னூட்டங்களின் கொழுப்பு நிறைந்த வார்த்தைகளில் தொக்கி நிற்கும் சாதித்திமிர், ஆதவன் ஒரு தலித் என்பதை மீண்டும், மீண்டும் சொல்லாமல் சொல்கின்றன. அதற்காக அவரை ஒரு மார்க்சிஸ்டு என்றும், பார்ப்பனக்கட்சிக்காரன் என்றும் புருடாவிடுகிறார்கள்.
தமிழகத்தில் தலித் எழுத்தாளர்களின் படைப்பு குரல்களை தங்களின் மொன்னை அரிவாள்களால் அறுத்து கூறுபோடப்பார்க்கும் சாதிப்பித்துப்பிடித்த எழுத்தாளர்கள், ஏன் தலித்துகள் குறித்து எழுதவில்லை எனக்கேட்க ஆதவனுக்கு உரிமை உள்ளது. 
தமிழ்நதிக்கு,ஆதவன் பதில் எழுதியதற்காக, பொத்துக்கொண்டு கோபத்தோடு பின்னூட்டம் செய்தவர்களின் இணையமுகவரிகள் எத்தனை உண்மை என்பதை பதில் எழுத தொடர்பு கொண்டால் தெரியும் அவர்களின் லட்சணம்.
கடைசியாக. . . "அகதிகள் இங்கே" என்ற தலைப்பில் ப.கவிதா குமார் எழுதிய கவிதையைத் தான் இவர்களுக்குப் பதிலாகச் சொல்லவிரும்புகிறேன்.
மழை, வெள்ளத்தால்
வீடிழந்து
சத்துணவுக்கூடத்தில் அகதியாய் வசித்த
அனுபவம் வாய்த்ததுண்டா உங்களுக்கு?
சோற்றுப்பொட்டலம் வாங்க
வரிசையில் நின்று
கிடைக்காமல் ஏமாந்ததுண்டா?
வெள்ளத்தால்
அடித்துச்செல்லப்பட்ட
அனைத்துப்பொருட்களையும்
இழந்து கையறு நிலையில்
இருந்த போது
அரிசியும், மண்ணெண்ணெய்யும்
தருகிறோம்
ரேசன் அட்டை எங்கே
என்ற கேள்விக்குடைச்சலால்
பொங்கி வந்த
கோபத்தை மௌனமாய் தின்றதுண்டா?
சொந்த தேசத்து அகதிகளாய்
வீடுகளிழந்து
வீதிகளில் வசிப்பவர்களின்
காலை உணவு குறித்து
நீங்கள் கனவிலாவது நினைத்ததுண்டா?
பரந்தவெளியை கூரையாய் வேய்ந்த
எங்களின் வசிப்பிடங்கள்
கழிப்பறைகளை விட மோசமானது
என்பதையறிவீர்களா?
மார்ட்டின்மேட்டும்
குட்நைட் காயிலும்
இல்லாமல் உறங்க முடியாத
உங்களுக்கு ... ...
எப்படி புலரும் எங்கள் விடியல்
என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எப்போதும் போல மழையில் நனைகிறோம்
எப்போதும் போல வெயிலில் காய்கிறோம்
ஐந்தாண்டு திட்டங்கள் பல பார்த்தும்... .
இருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு
பெயர்சூட்டப்படும்
கல் பிள்ளையாருக்குக்கூட
வாய்த்த வாழ்க்கை
எங்களுக்கு வாய்க்கவில்லை.

நல்லு
2009-07-07 07:56:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


சத்தியராஜ் நடித்த ஒருபடத்தில் தான் விரும்பும் பெண்ணை வேலைக்கு வந்த டாக்டர் உசார்படுத்தி விடுவார் என நினைத்து, தனது குழுவினருடன் பேய்இருப்பது போன்ற நாடகத்தை சத்தியராஜ் நடத்துவார். அது போன்ற நாடகத்தை பின்னூட்டம் செய்யும் நண்பர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அரசு தர்பார் என்ற படத்தில் பெரிய அரிவாளோடு தெருவில் யாரையும் உள்ளே விடமறுக்கும் சூப்பர்குட் லட்சுமணன் கடைசியில் போதையில் சாக்கடையில் விழுவார். அது போல நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இலங்கைப் பிரச்சனை குறித்து சண்டமாருதம் செய்த புரட்சியாளர்கள், தேர்தலில் காங்கிரஸ்-திமுக வெற்றிக்குப் பின் காந்தியின் மூன்றாது குரங்கு பொம்மை போல வாயடைத்துப் போனார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரியும். இயக்குநர் சீமான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் பேசியது என்ன, அதன் பின் பேசியது என்பது !
ஆகவே, இலங்கைப்பிரச்சனை என்றவுடன் கள்குடித்த குரங்கு போல, முகம் தெரியாது என்ற தைரியத்தில் கருத்து என்ற பெயரில் பின்னூட்டங்களைத் தொடர்கின்றனர். இரு எழுத்தாளர்களிடையே எழுந்த கருத்து மோதலை தனிநபர் மோதலாக்கி, தங்களுடைய மனவக்கிரங்களைக் கொட்டித் தீர்க்கும்
பட்டாகத்தி பைரவன்களை கீற்று கொஞ்சம் பரிசீலிக்கலாமே?
ஜன்னலைத் திறந்து வைத்தால் காற்றோடு கொசுக்கள் வரலாம். ஆனால், கொள்ளைக்கூட்டம் வந்தால்?

venkat
2009-07-07 04:31:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Good article adavan, I pity the people who cannot tolerate the critical voices in srilankan issue...if they had listened to these voices before lots of tamil lifes could have been saved....we oppose the racist srilnakan government...LTTE emerged out of compulsion to fight against srilankan government..all agree..but LTTE has completely diverted from its mission and now its very clear LTTE can never be an alternative to help Tamils. It has made the life of Tamils more worse than 30 years...atleast now listen to all critical voices and save the remaining tamils there...please.....

-குணாளன்-
2009-07-08 02:09:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

http://www.keetru.com/literature/essays/ms_swaminathan.php

Yamuna Rajendran
2009-07-08 11:13:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சாதி எங்கே இருக்கிறது? இந்து மதம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சாதி இருக்கிறது. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், இங்கிலாந்தில், ஏன் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கிறது. அதனால்தான் ஈழத்தில் இந்தியத் தமிழர்களை வெள்ளாளத் தமிழர்கள் அவமானப்படுத்துகிறார்கள்; இங்கு இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்டு, பார்ப்பன மார்க்சிஸ்ட் தலைவர்கள் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். வெள்ளாளத் தமிழர்களுக்காக ஈழப்பிரச்சினையை ஒதுக்கும் ஆதவன், கிரீமி லேயர் கேட்கும் சிபிஐஎம் கட்சியை ஒதுக்காமல் அண்டியிருப்பது ஏனோ?

Yamuna
2009-07-08 11:18:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என்று கூறும் ஆதவன், சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறமுடியுமா? கட்சியின் அடுத்த விசாரணையை அவர் சந்திக்க வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநாடுகள், பொலிட்பீரோ கூட்டங்கள் நடத்திய பின்னர்தான், சாதியை ஒரு பிரச்சினையாக பார்க்கும் தெளிவு மார்க்சிஸ்ட்களுக்கு வருகிறதென்றால், அந்தத் தெளிவை உயிர் வாழ்வதற்கு உத்திரவாதம் இல்லாது, போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் ஆதவன் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்பதற்காகத்தான் கேட்கிறேன்.

அது சாதீய சமூகமாக இருந்தாலும் இனப்படுகொலையும் இன முரணுமே அங்கு பிரதானம். எப்படி ‘‘வர்க்கப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும்’’ என்று உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் சொல்கிறார்களோ அது போல ஈழத்திலே தமிழ் தேசியப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும் என்று நான் சொல்லவில்லை. அந்த முட்டாள்தனமும் எனக்கில்லை. ஆனால் அந்த தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் செயல்படாதன்மையை பயன்படுத்தி தலித்தியம் என்கிற அரசியலை உங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு இனியும் பயன்படுத்தாதீர்கள். அதிலிருந்து உங்களுக்கு ஆதாயமாக பொய் பிரச்சாரம் செய்யாதீர்கள். "ஆமாம் ஆதவன் ஒரு மநு விரோதி எப்படி மநுவின் நிழலில் அரசியல் செய்ய முடியும்?" அவரது கட்சி நிலைப்பாடே அவருக்கு எதிராக இருக்கும்போது ஏன் ஷோபா சக்தியின் ஸ்பீக்கரை இங்கே ஒலிக்க வேண்டும்? ஷோபாவே நேரடியாக இங்கே பேசலாம். அதற்குத் தடை ஒன்றும் இல்லை.

SUPERLINKS
2009-07-15 12:37:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//கார்ல் மர்க்ஸ்யும் அம்பேத்காரையும், பெரியாரையும் ஏற்று கொண்ட உங்களால் எவ்வாறு இப்படி எழுத முடிந்தது//



ஆனால் அவர் சி.பி.எம் கட்சியிலிருப்பதை மறந்துட்டிங்களா ?

SUPERLINKS
2009-07-15 12:42:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


//'புரச்சி' என்பவர் சொல்லியிருக்கும் இந்த கருத்தையெல்லாம் கீற்று எப்படி வெளியிடுகிறது என்று புரியவில்லை.//




ஆதவனுடைய கட்டுரையை வெளியிடும் போது இதை வெளியிடுவது ஒன்றும் தப்பில்லையே ?
உங்கள் பிரச்சனை அதுவல்ல இது போன்ற உண்மைகளை சொல்லும் போது உங்களுக்கு அவமானம் தாங்கமுடியவில்லை அதிலிருந்து தான் இப்படி கோபம் கொள்கிறீர்கள்.

கவின்
2009-07-19 08:44:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//உங்கள் பிரச்சனை அதுவல்ல இது போன்ற உண்மைகளை சொல்லும் போது உங்களுக்கு அவமானம் தாங்கமுடியவில்லை அதிலிருந்து தான் இப்படி கோபம் கொள்கிறீர்கள். //

நல்ல கண்டுபிடிப்பு! அடுத்த எடிசன் நீங்க தான். 
//ஆதவன் போன்றவர்களை செருப்பால் அடித்தாலும் சிபிஎம்மை விட்டு வெளியேற மாட்டார்கள்// 
இதுதான் அந்த 'புரச்சி' உதிர்த்த முத்துக்கள். 'செருப்பால் அடிப்பது' என்பது என்ன? அப்படி ஒரு மனிதனை சொல்வது சரிதானா? பொது புத்தியில் உறைந்து போயிருக்கும் இந்த செருப்பால் அடிக்கும் புத்தி ஏன் வந்தது? ஒருவரை செருப்பால் அடிப்பேன் என்று சொல்வது மூலம் அவர் 'புரச்சியோ' அல்லது 'கிரச்சியோ' அவர் குறிப்பிட்ட சில சாதிகளையும் குறிப்பிட்ட சில தொழில்களையும் கேவலமாக நினைக்கிறார் என்பதே உண்மை.'அட சண்டாளா! ' அல்லது 'அட சண்டாளி" என்றும் திட்டுவது எதனால்? அது ஒரு சாதியைக் குறிக்கும். ஒருவர் "செருப்பால் அடிக்க வேண்டும்" என்று திட்டுவதன் மூலம் ஒருவரை தரம் தாழ்ந்து திட்டுகிறார் அவர் என் றுதான் பொருள். நாம் இதையெல்லாம் தன்னிச்சை செயல் போல செய்கிறோம் சொல்கிறோம். இதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். இத்தனை விளக்கம் கொடுத்தால்தான் சில மண்டைகளுக்கு புரியும் போலிருக்கு. இனிமேல் ஆதவனை அல்ல நீங்கள் எவரையும் திட்டுமுன் அது எந்த தொழில் புரிபவரையோ அல்லது எந்த சாதியினரையோ இழிவுபடுத்துகிறதா என்று யோசித்தால் நல்லது.

ஐயா சாமிகளா! நான் இதைத்தான் சொல்ல வந்தேன்.

Yaalan
2009-07-23 07:56:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நீக்கப்படாத அவை குறிப்புகளும் ஆதவனின் குறைந்த ஒளியும்

மதுரையில் நடந்த கடவு கூட்டத்தில் தமிழ்நதிக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்கும் நடந்த உரையாடலை வாசித்து முடித்தபின் மிகவும் அயர்ச்சி அடைந்தேன். ஆதவனின் பேச்சும் அவரின் பதில் கடிதமும் அவரின் மதிப்பை (இதற்கு கூட ஆதவனால் பகடியாக ஏதாவது கூறமுடியும். எ.கா. உம் மதிப்பு ஒண்ணும் மசுர வளர்க்காது) வெகுவாக குறைக்கிறது என்றே சொல்லவேண்டும். உத்தபுர சுவர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த செயல்பாடுகளை எழுத்தில் வடித்து தமிழகத்தில் சாதி ஒழிக்க வந்த ஒரே இயக்கம் அதுதான் என்பதற்காக தலித் முரசு போன்ற இதழ்களையெல்லாம் கூட அவர் விடவில்லை என்பது மிக முக்கியம். தன் கட்சிக்கு இவ்வளவு விசேஷமாய் அவர் உண்மையாக இருந்தார். ஆனால் அவரின் கட்சி உத்தபுர சுவரை சுட்டுத்தள்ளுவேன் என்று சூளுரைத்த?! ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருகைகளையும் கட்டிக்கொண்டு மேடையில் சிலையாட்டம் நிற்க வைக்கப்பட்ட மோகன் குறித்தெல்லாம் அவரால் பகடி செய்யமுடியவில்லை. அந்த அம்மா வேறு எப்படியாவது ஈழத்தை வாங்கித்தந்து விடுவேன் ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கும்போதும் பேசாமல் பேன் பார்க்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.

அவரைப்போல அதிரடியாக நையாண்டி பேச நமக்கு வராது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளாக விடுதலைக்காகப் போராடும் மக்களை இவ்வளவு இழிவுப் படுத்தவேண்டும் என்னும் எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்று தெரியவில்லை. வால்பாறைக் கூட்டத்தில் யவனிகாவின் தொகுப்பைப் பற்றி பேசிய மதிவண்ணன் சர்வதேச ஒடுக்குமுறை குறித்தெல்லாம் எழுதுபவர்கள் தங்களை சுற்றியிருக்கும் சாதி பிரச்சனைப் பற்றி எழுத வேண்டாமா என்று கேட்ட கேள்விக்கும் படுகொலைச் செய்யப்படும் தமிழரைக் காக்க பெரும் எழுத்தாளர்களாகிய நீங்கள் எல்லாம் எழுதக் கூடாதா என்று தமிழ்நதி கேட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். மதிவண்ணனின் கேள்விக்கு எதிர்கேள்வியாக நீங்கள் கங்காணிகளைப் பற்றி எழுதியிருக்கின்றீர்களா என்று மற்றவர்கள் கேட்டதையொத்துதான் பதில் அளித்து இருக்கின்றார் ஆதவன். தேசியத்திற்குள் ஒன்றுபட்டு இருக்கும் அவரின் மார்க்கிசியமே அவரை இப்படி பேசவைத்திருக்கின்றது என்ற உறுதியான நம்பிக்கையினை நாம் பரப்பலாம்.

தமிழ்நாட்டிலிருந்துப் போன தமிழர்களை அங்கிருந்த பூர்வீகத்தமிழர்கள் எப்படி நடத்தினார்கள்? திண்ணியத்திலே பீ தின்ன வைக்கப்பட்ட போது எங்கே போனீர்கள்? அதற்கு இப்போது பதிலைச் சொல்லுங்கள் இல்லையென்றால் ஒன்றுபட்ட இலங்கையில் வாழுங்கள் முடிந்தால் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து உங்களுக்கு இலங்கையில் மார்க்சிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தால் கடலை மிட்டாய் வாங்கித்தருகிறோம் என்பார். தன்னுடைய தலித் அரசியலையே தன் எழுத்தில் போல கட்சியில் பேச முடியாமல் தவிக்கும் ஆதவனுக்கு அடுத்த தேர்தலில் ஓசூரில் நிற்க அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லவா?

சில விளக்கங்களைப் பெற விழைவதில் தவறேதும் இருக்காது என்றே நினைக்கின்றேன். இந்திய விடுதலைப் போர் நடைபெற்றபோது சாதி அற்றுப் போயா இது இருந்தது. அப்போது பொதுவுடைவாதிகள் இங்கு இல்லையா? அவர்கள் அப்போது தலித்துகளுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு எவ்விதத்தில் உறுதுணையாக இருந்தார்கள். தலித்துகளைக் கொடுமைப்படுத்திய பார்ப்பன பனியாக்கள் கைகளிலும் இந்துத்துவ வாதிகளிடத்திலும் இந்திய சுதந்திரம் தரப்பட்டபோது இவர்களுடன் இருக்க முடியாது தலித்துகளுக்கு தனிநாடு கொடுங்கள் என்று கேட்ட அம்பேத்கருக்கு ஆதரவாக அன்றைய பொதுவுடைமைவாதிகள் இருந்தார்களா? இன்னும் தீர்க்கப்படாத கொடுங்கனவாக இருக்கின்ற சாதிப் பிரச்சனைகளை ஒழிக்க இப்போது மிகவும் வளர்ந்துள்ள ஆதவனின் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதை அவர் கூறாமல் ஈழப்போரில் தங்கள் வாழ்வைக் கொடுத்துப் போராடும் போராளிகளை குறை கூறாமல் இருக்கவேண்டும்.

இன்றைக்குப் புலிகள் அழிக்கப்பட்டார்கள். வதைமுகாம்களாக மாறிப் போயிருக்கும் இலங்கை அரச முகாம்களில் தத்தளிக்கும் தமிழினத்தின் மக்களை எப்படி மீட்பது என்று சிந்திப்பது யார்? அவர்களுக்கான அரசியல் சார்ந்த உரிமைகளைப் பேசுவது யார்? ராஜபக்சேவும் அவருடைய அரசும் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துக் கொண்டுதான் இருக்கின்றது. தலித் பார்வையில் ஈழப்பிரச்சினையை அணுகவேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. அதே பார்வையில் ஆதவன் குடியிருக்கும் கோயிலான அவருடைய கட்சியைப் பார்க்கவேண்டும் என்றுதான் நாம் கேட்கிறோம். அதுதான் அவருடைய வார்த்தைகளுக்கான நியாய்த்தைப் பெற்றுத்தரும்.

ஈழப்பிரச்சினையையும் இங்குள்ள சாதித்தமிழரின் போக்கையும் நாம் முடிச்சிப் போடமுடியுமா என்ன? இங்குள்ளவர்கள் ஈழப்பிரச்சினைய அரசியலின் பகடைக்காயாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பது ஆதவன் போன்ற அறிவுசாலிகளுக்கு தெரியாதா என்ன? 

ஈழத்தில் சாதி இல்லை என்று யாரும் சொல்லவில்லை. தலித் படைப்புகளைத் தந்த டேனியேலின் படைப்புகள் நமக்கு சொல்கின்றன எல்லாவற்றையும். ஆனால் அறுபது ஆண்டுகால பிரச்சனையினை அல்லது விடுதலைப் போரை எப்படி நம்மால் புறந்தள்ள முடியும். இந்திய விடுதலைக்கு தலித்துகள் பங்காற்றவில்லை என்று இப்போது இங்கே சிலபேர் கூப்பாடு போடுகிறார்களே அதுபோல் ஆகிவிடாதா? சரி புலிகள் அற்ற தமிழர்கள் இப்போது சிங்கள உழைக்கும் மக்களோடு இயைந்து வாழ்ந்திட இயலுமோ? அதற்கு ஆவணவற்றை ஆதவன் செய்வாரா? எங்கள் ஊர்ப்பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ ஞானசேகரனை தோற்கடித்து விடுவார் போலிருக்கின்றது ஆதவன்.

ஆதவன் மேலும் அவருடைய எழுத்துக்கள் மீதும் மாறாத பற்றும் நம்பிக்கையும் நாம் வைத்திருக்கின்றோம். அது தகர்ந்து போகும் அளவுக்கு சில நேரங்களில் அவருடைய செயல்கள் அமைந்துவிடுகின்றன. ஈழத்தமிழர் இப்படி கொல்லப்படுகின்றனரே என்று கேட்டால் அவர்களிடம் இருக்கும் சாதியைப் பற்றி ஏன் நீங்கள் கவலைப்படவில்லை என்கிறார். இது அவரின் பார்வை. அப்படி அவர் பேசியிருந்தால் நாம் எந்த விதமான கருத்தினையும் சொல்லல் ஆகாது. ஆனால் அவர் தலித் பார்வை என்று அதை கட்டமைக்கின்றபோது ஒட்டுமொத்த தலித்துகளின் நிலையா அது என்பது கேள்வியாக இருக்கின்றது. இத்தகைய கொடும் படுகொலையினைச் செய்த ராஜபக்சேவை அவர் ஒரு வார்த்தைகூட அவர் விமரிசிக்கவில்லை. அதற்குத் துணைபோன இந்தியாவின் சதியினை அவர் பேசவில்லை. பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து தன் ஆக்கங்களை வேண்டாம் ஒரு பேச்சாகக்கூட அவர் பிரசுரிக்கவில்லை. ஆனால் புலிகளைத் திட்டுவதும் அவர்களின் அரசியலை விமரிசிப்பதும் தன்னுடைய முழுமுதல் கடமையாகக் கொண்டிருக்கின்றார். ஈழத்தில் இருக்கும் சாதிய படிநிலையை வைத்துக் கொண்டுப் பார்த்தாலுமே யார் இப்போது ஈழத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்? இலங்கை அரசு நடத்தும் முகாம்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் யார்? யாரெல்லாம் தன்னுடைய மண்ணைவிட்டு வரமுடியாத சூழலில் இருக்கின்றார்களோ அல்லது அகதிகளாக உலகநாடுகளில் அலையாமல் தன் மண்ணிலேயே இருந்து கடைசிவரை பார்த்துவிடுவது என்று நினைக்கும் விளிம்பு நிலை மக்கள்தானே? அவர்களை கொத்தணி குண்டுகளையும் வேதி குண்டுகளையும் போட்டு கொன்ற கொடுமையைப் பேசமுடியவில்லை என்றால் தலித் விடுதலையினை மட்டும் எதை வைத்துப் பேசுவது என்பது நமக்கு சரியாக விளங்கவில்லை. 

சாதியையும் அதன் வேரான இந்து மத்த்தையும் எதிர்க்காமல் புரட்சிபேசும் அவருடைய கட்சி சாதி மலிந்துப் போய் கிடக்கும் இந்தியாவில்தான் நடக்கின்றது. பாட்டாளி வர்க்கபுரட்சியையும் உழைக்கும் மக்களின் ஆட்சியையும் கொண்டுவருவது ஆகாது. கட்சியின் முக்கிய வேலை திட்டமாகவே சாதி ஒழிப்பை நிகழ்த்திவிட்டு அப்புறம் வர்க்க புரட்சியை வைத்துக் கொள்ளலாம் என ஆதவன் அங்கு பேசமுடியுமோ என்றால் கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் சாதி ஒழிப்பு என்னும் ஒன்றும் வேலைதிட்டங்களில் ஒன்று. 

ஈழத்திலும் அதைவைத்து தானே பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில்கூட எத்தனையோ தலித்துகள் உயர் பதவிகளில் இருந்திருக்கின்றனர். அதை வழிநடத்தி இருக்கின்றனர். புலிகளின் அரசியல் தவறு என்றால் உலகத்திலிருக்கும் இத்தனை கோடி தமிழர்கள் அதை எப்படி ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தங்களில் அதை நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் அல்லது தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு விடுதலை இயக்கத்தையோ அல்லது அது போராடும் தேசிய விடுதலையினையோ சாதியின் பேரால் கொச்சைப் படுத்துதல் ஆகாது. அது தலித் பார்வை இல்லை. ஒடுக்கப்படுகின்ற மக்கள் யாராக இருந்தாலும் அவர்களின் விடுதலைக்காக பேசுவதே தலித்தியம். அது விடுதலைக்கான கருத்தியல்.

புரட்சியாளர் அம்பேதகர் கருதுவதைப் போல தலித் விடுதலை என்பது பிற்படுத்தப்பட்டவரின் ஒத்துழைப்பையும் சார்ந்த ஒன்றுதான். தலித் பிற்படுத்தப் பட்டவரின் ஒற்றுமையை அவர் விரும்பியதைப் போல ஈழத்தமிழர்களின் விடுதலையும் சாதி கடந்துதான் வரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. சாதியம் அது சார்ந்த பிரச்சினைகளயும்விட வாழ்தல் என்பதுவும் அதைவிட விடுதலை என்பதும் மிக முக்கியம்.


இன்றைய சூழலில் தமிழர்களின் நிலை என்ன? அங்கே நிலவும் சாதி இப்போது அதாவது புலிகள் அல்லாத தமிழீழத்தில் எப்படி சாத்தியமாகும். கோட்பாட்டளவிலே இங்கேயே இருந்துக்கொண்டு நாம் வாய்பேசுவதைவிட அல்லது நாட்டை விட்டு வெளியேறி சுகமாக அயல்நாடுகளில் வாழ்வோரைவிட ஈழத்திலே கிடந்து அழிந்துக் கொண்டிருக்கும் அவர்கள் தான் பேசவேண்டும். பின் இவர்கள் பேசி என்ன ஆகப்போகிறது?

Kotravan
2009-08-02 12:46:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

KUPPAI.Veru ondrum cholvadharkku illai

moses
2009-08-08 02:22:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

adhavan sollum thagavalai kondu yosikka vendum......

Pin It