கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்களில் 300 பேர் இறந்துள்ளதாக மக்களவையில் சமூக நீதி மற்றும் மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் சமூக நீதி மாநிலமான தமிழகத்தில் 140 பேர் மரணமடைந்துள்ளனர். அதேபோல் 59 பேர் கர்நாடகாவிலும், 52 பேர் உத்திரப் பிரதேசத்திலும், 12 பேர் டெல்லியிலும் மரணமடைந்துள்ளார்கள்.
உண்மையில் கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யக்கோரி பல போராட்டங்கள் 1980'ல் தொடங்கி பல வருடங்களாக நடந்து வந்தது. கும்பகர்ண உறக்கத்தில் இருந்த அரசு பல்வேறு சட்டப் போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பின் 2013'ல் தான் கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்து சட்டம் நிறைவேற்றி, அவர்களது மறுவாழ்வுக்காக நிதியும் ஒதுக்கியது. நான்கே ஆண்டுகளில் மீண்டும் மத்திய பட்ஜெட்டில் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நிதியை 95% ஆக குறைத்துள்ளது மோடி அரசு. இதன்படி 2014-15'ல் 448 கோடி ரூபாயாக இருந்த மறுவாழ்வு நிதி 2016-17'ல் 10 கோடியாகவும், 2017-18'ல் 5 கோடியாகவும் மாற்றப்பட்டுள்ளது.
2011 'ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 7,50,000 குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த 7,50,000 குடும்பங்களும் முழுமையாக வேறு தொழில்களுக்கு மாற்றப்பட்டு விட்டார்களா?
பின் ஏன் மறுவாழ்வு நிதியை முற்றாகக் குறைக்க வேண்டும் என கேள்வி எழுகிறதா ?
"I do not believe that they have been doing this job just to sustain their livelihood. Had this been so, they would not have continued with this type of job generation after generation… At some point of time, somebody must have got the enlightenment that it is their (Valmikis’) duty to work for the happiness of the entire society and the Gods." அதாவது வால்மீகி சாதியினர் மலத்தை கையால் அள்ளி சுத்தம்செய்வதை ஆன்ம பரிசோதனையாக செய்து வருகின்றனர் என்று திமிரோடு இந்தியப் பிரதமர் அன்றே இதற்கு பதில் சொல்லிவிட்டார். (ஆதாரம் : மோடி கருத்தியல் தொகுப்பு புத்தகம் "கர்ம யோகி" பக்கம் 48-49) வாழ்க ஆன்மீக அரசியல்.
அம்பேத்கர் வார்த்தைகளில் சொல்வது என்றால் "ஒருவன் அவன் செய்யும் தொழிலின் காரணமாக துப்புரவுத் தொழிலாளியாக மாறுவதில்லை. மாறாக அவன் சாதியின் காரணமாக இந்த இழிவில் திணிக்கப்படுகிறான்".
தான் உண்ட மிச்சத்தை எச்சில் என்று அருவறுக்கும் இந்த தேசத்தில் தான்.. பிறர் உண்டு கழித்த மலத்தை கையால் அள்ளும் மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதம் எங்கே...?
- சே.ச.அனீஃப் முஸ்லிமின்