பல்துறைசார் தமிழக அறிஞர்கள், திரைத்துறையினர் மற்றும் தமிழக் குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகளான நாங்கள் : 

பாலுமகேந்திரா (திரைப்பட இயக்குனர்)
பழ.நெடுமாறன் (தலைவர் உலகத்தமிழர் பேரவை)
எஸ்.என்.நாகராசன் (மார்க்சிய அறிஞர்)
பாரதிராஜா (திரைப்பட இயக்குனர்)
நா.மார்க்கண்டன் (முன்னாள் துணை வேந்தர் காந்தி கிராம் பல்கலைக்கழகம்)
எம்.ஜி.தேவசகாயம் ஐ.ஏ.எஸ் (ஆங்கில எழுத்தாளர்)
சீமான் (முதன்மை  ஒருங்கிணைப்பாளர்-நாம் தமிழர் கட்சி)
வனிதா மோகன் (நிறுவனர்- முதன்மை  அறங்காவலர்-சிறுதுளி கோவை)
பெ.மணியரசன் (பொதுச் செயலாளர்-தமிழ்த் தேசப் பொதுடைமை கட்சி)
தியாகு (பொதுச் செயலாளர்-தமிழ்த் தேச விடுதலை இயக்கம்)

கொளத்தூர் மணி (தலைவர்-பெரியார் திராவிடர் கழகம்)
புனிதபாண்டியன் (ஆசிரியர்-தலித் முரசு)
கிருட்டிணன் (தலைவர் கோவை தொழில் வர்த்தகசபை : மேலாண் இயக்குநர்-ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் (பி) லிமிடெட்)
நம்மாழ்வார் (இயற்கை வேளாண் விஞ்ஞானி)
இரா.அதியமான் (தலைவர் ஆதித் தமிழர் பேரவை)
பொன்னீலன் (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்)
சிற்பி பாலசுப்பிரமணியம் (கவிஞர்)
விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்-பெரியார் திராவிடர் கழகம்)
ச.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர்-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)
புவியரசு (கவிஞர்)

மு.சி.கந்தையா (தமிழ் மாநிலத் தலைவர்-தாயகம் திரும்பியோர் பேரவை)
சிவா  (பெப்சி திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்புச் செயலாளர்)
கலையரசன் (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்-புதுடெல்லி)
ஆர்.கே.செல்வமணி (திரைப்பட இயக்குனர்)
பாலா (திரைப்பட இயக்குனர்)
விக்ரமன் (திரைப்பட இயக்குனர்)
சேரன் (திரைப்பட இயக்குனர்)
மகேஷ் (தலைவர் அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்)
ஜே.ஜேம்ஸ் (தலைவர் தமிழ்நாடு ஊரகத்தொழில் மற்றும் குறுந்தொழில்
முனைவோர்கள் சங்கம்)

தங்கர்பச்சன் (திரைப்பட இயக்குனர் )
டி.பாலசுந்தரம் (முன்னாள் தலைவர் தொழில் வர்த்தகசபை கோவை)
டாக்டர். நல்லா ஜி.பழனிச்சாமி (தலைவர்-மேலாண் இயக்குநர் கோவை மெடிக்கல் சென்டர்-மருத்துவமனை)
பேரா.நா.மணி (பொதுச் செயலாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்)  
த.ஸ்டாலின் குணசேகரன் (தலைவர் மக்கள் சிந்தனைப்பேரவை)
பேரா.சரசுவதி (தலைவர்-நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம்)
நிலவன் (பொதுச்செயலாளர்  தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்)
தாமரை (கவிஞர்)
டி.கிருட்டிணமூர்த்தி (செயலாளர் கோயமுத்தூர் மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம்)
எஸ்.பி.ஐனநாதன் (திரைப்பட இயக்குனர்)

புலமைப்பித்தன் (கவிஞர்)
பேரா.அ.இராமசாமி (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
அறிவுமதி (கவிஞர்)
பா.செயப்பிரகாசம் (எழுத்தாளர்)
ஆர்.சுந்தரராஜன்  (திரைப்பட இயக்குனர்)
பெ.விசயகுமார் (முன்னாள் பொதுச் செயலாளர் மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்)
அமீர் (திரைப்பட இயக்குனர்)
கி.வெங்கட்ராமன் (இணை ஆசிரியர்-தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்)
மு.களஞ்சியம்  (திரைப்பட இயக்குனர்)
ப.பா.மோகன் (மூத்த வழக்கறிஞர்)

செல்வபாரதி  (திரைப்பட இயக்குனர்)
கோவை ஈசுவரன் (மார்க்சிய எழுத்தாளர்)
சந்திரபோசு  (பொதுச் செயலாளர் தியாகி இமானுவேல் பேரவை)
அரங்க.குணசேகரன் (பொதுச் செயலாளர்  தமிழ்நாடு மனித உரிமைக்கழகம்)
அ.சிவசண்முக குமார் (தலைவர் கோயமுத்தூர் குறு மற்றும் சிறு வார்ப்படத் தொழில் உரிமையாளர்கள் சங்கம்)
வேலுச்சாமி (பொதுச் செயலாளர்  ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்)
தமிழழகன் (ஒருங்கிணைப்பாளர்  தமிழக மக்கள் விடுதலை முன்னணி)
சோகோ பாட்சா (மனித உரிமையாளர்)
கவிஞர் தமிழேந்தி  (தமிழ் மாநிலச் செயலர்-புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றம்)
அற்புதம் குயில்தாசன் (திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்)

வழக்கறிஞர் புகழேந்தி (ஒருங்கிணைப்பாளர் தமிழக மக்கள் உரிமைக் கழகம்)
சேலம் தமிழ்நாடன் (கவிஞர்)
கவிதாசரண் (பத்திரிக்கையாளர்)
சுப்பிரபாரதி மணியன் (எழுத்தாளர்)
அழகிய பெரியவன் (எழுத்தாளர்)
அமரந்தா (எழுத்தாளர்)
லதாராமகிருஷ்ணன் (எழுத்தாளர்)
நாராயணன் (ஆசிரியர்-பாடம்)
கே.இராஜீ (ஆசிரியர்-புதிய ஆசிரியன்)
திருநாவுக்கரசு (ஆசிரியர் - நிழல்)

க.விசயக்குமார் (ஆசிரியர் - உலகு)
மரபின் மைந்தன் முத்தையா (ஆசிரியர் - ரசனை)
வழக்கறிஞர் தமிழகன் (ஆசிரியர் - கலைக்காவிரி)
பாலா (கார்டூனிஸ்ட் - குமுதம்)
பொள்ளாச்சி நசன் (ஊடகவியலாளர்)
அழகப்பன் (ஊடகவியலாளர்)
ம.செந்தமிழன் (திரைப்பட இயக்குனர்)
லியாகத் அலிகான்  (திரைப்பட இயக்குனர்)
ஈ.ராம்தாஸ் (திரைப்பட இயக்குனர்)
செய்யாறு ரவி (திரைப்பட இயக்குனர்)

ஜெயபாஸ்கரன் (பொதுச் செயலாளர் - தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்)
சி.ரங்கநாதன் (திரைப்பட இயக்குனர்)
எஸ்.ரவிமரியா (திரைப்பட இயக்குனர்)
பாலி ஸ்ரீரங்கம் (திரைப்பட இயக்குனர்)
செந்தில்நாதன் (திரைப்பட இயக்குனர்)
டி.கே.சண்முகசுந்தரம் (திரைப்பட இயக்குனர்)
சித்ரா லட்சுமணன் (திரைப்பட இயக்குனர்)
சசிமோகன் (திரைப்பட இயக்குனர்)
திருமாவளவன் (திரைப்பட இயக்குனர்)
ஜி.ஏ.சிவசுந்தர் (ஒளிப்பதிவாளர்)

எஸ்.எழில் (திரைப்பட இயக்குனர்)
கோ.ஐந்துகோவிலான் (திரைப்பட இயக்குனர்)
வளர்மதி (எழுத்தாளர்)
சரவணன் சுப்பையா (திரைப்பட இயக்குனர்)
ஆர்.ராஜா கார்த்திக் (நடன கலைஞர் சங்கம்)
எஸ்.எஸ்.ஸ்டேன்லி (திரைப்பட இயக்குனர்)
சிபி (திரைப்பட இயக்குனர்)
ந.ஏகாம்பவாணன் (திரைப்பட இணை இயக்குனர்)
பாலமுரளிவர்மன் (உரையாடலாசிரியர்)
பாரதி தமிழன்  (இணைச் செயலாளர்-சென்னை பத்திரிக்கையாளர் மன்றம்)

டி.அருள்எழிலன் (ஊடகவியலாளர்)
குட்டி ரேவதி (எழுத்தாளர்)
மாலதி மைத்திரி (எழுத்தாளர்)
நிழல்வண்ணன் (மொழிபெயர்ப்பாளர்)
கோ. திருநாவுக்கரசு (தாளாண்மை வேளாளர் இயக்கம்)
இளம்பிறை (கவிஞர்)
பாமரன் (எழுத்தாளர்)
கழனியூரான் (எழுத்தாளர்)
யுவபாரதி (எழுத்தாளர்)
ச.பாலமுருகன்  (எழுத்தாளர்)

இரா. முருகவேள் (எழுத்தாளர்)
மு.வசந்தகுமார் (எழுத்தாளர்)
கஜேந்திரன் (ஊடகவியலாளர்)
பகத்சிங் (வழக்கறிஞர்)
இராமலிங்கம் (ஒருங்கிணைப்பாளர்-தமிழ்ச் சமூக நலச்சங்கம்)
எவிடென்ஸ் கதிர் (எழுத்தாளர்)
அறிவன் (கவிஞர்-திறனாய்வாளர்)
மோகனரங்கன் (கவிஞர்-திறனாய்வாளர்)
கணியன் பாலன் (எழுத்தாளர்)
பேரா.கோச்சடை (கல்வியாளர்)

எஸ்.பி.ரங்கராஜன் (தலைவர்-சிறுதொழில் முனைவோர்கள் சங்கம்)
வேலிறையன் (கல்வியாளர்)
மூர்த்தி (சமூக உரிமைகளுக்கான ஆசிரியர் இயக்கம்)
செந்தில் (சேவ் தமிழ் இயக்கம்)
சுடரொளி (குழந்தைகளைக் கொண்டாடுவோம் - கல்வி இயக்கம் )
பிரபாகரன் (எழுத்தாளர்)
செல்வம் (சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்)
வழக்கறிஞர் கி. சிதம்பரன் (மனித உரிமையாளர்)
இ.சி.இராமசந்திரன் (பார்வை பண்பாட்டு இயக்கம்)
டேவிட் அமலநாதன் (சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்)
வேனில் (பதிப்பாளர்)

ஆகிய நாங்கள், பின்வரும் எமது கூட்டறிக்கையினை தமிழ் சமூகத்தின் கூட்டுக் குரலாக தமிழக அரசியல் கட்சிகளின் முன்பாகப் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம். 

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசு, போராளிகள் என இரு தரப்பினரதும் மனித உரிமை மீறல்கள் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசு பாரிய மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருக்கின்றது என்பதனைத் திட்டவட்டமாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மக்கள் செறிந்த பாதுகாப்பு வலையங்களின் மீது பாரிய அழிவு ஆயுதங்களை இலங்கை அரசு பாவித்திருக்கிறது. சர்வதேசிய நியமங்களை மீறி மருத்துவமனைகள் மீது இலங்கை அரச படையினர் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரின் தாக்குதலில் 40,000 ஈழ வெகுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபை நிவுணர் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 70,000 க்கும் மேற்பட்டதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரபூர்வப் பேச்சாளர் கோல்டன் வைஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இச்சூழலில், மனித குலத்திற்கு எதிராகக் குற்றமிழைத்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காக இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்திய அரசு ஒரு ஆலோசனைக்குழுவை அமைத்திருப்பதாகவும் இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சே, இலங்கைப் படைத்துறை அமைச்சரும்-மகிந்தவின் சகோதரருமான கோதபாய ராஜபக்சே ஆகியோர் நேரடியாகவே இந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதனை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்தக் குற்றங்கள் விசாரணை செய்யப்படும் எனில் சர்வதேசியக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக ராஜபக்சே சகோதரர்கள் நிறுத்தப்படுவார்கள். வெகுமக்களைக் கொலை செய்யும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் இதுவொரு பாடமாக அமையும்.

தமது சொந்த மக்களையே கொல்லும் உலகின் சர்வாதிகாரிகளை நோக்கி, தமது தாய் தந்தையரின் நிலம் கொடுங்கோலர்களால் சூறையாடப்பட்டபோது, தமது இரத்த சொந்தங்களான வெகுமக்கள் படுகொலை செய்யப்பட்டபோது,  உலகின் மகத்தான மக்கள் கவிஞனான பாப்லோ நெருதா கோரியதனையே நாமும் கோருகிறோம் :

மரணமடைந்த எமது தோழமைகளின் சார்பாக
நான் தண்டனை கோருகிறேன்

யார் எமது தந்தையர் நாட்டை
எமது இரத்தத்தில் முக்குளித்துச் சிதற வைத்தார்களோ
அவர்களுக்கு எதிராக
நான் தண்டனை கோருகிறேன்

இந்த உலகின் மீது பாவக்கைகள் செலுத்தி
கொடுமைகள் நிகழக் காரணமாக இருந்தவர்க்கு எதிராக
நான் தண்டனை கோருகிறேன்

இந்தக் கொடுமைகளை விட்டுக்கொடுத்து
இதை மன்னிப்போராய் இருப்போர்க்கு மத்தியிலும்
நான் தண்டனை கோருகிறேன்

சுற்றிலும் நடந்த குரூரங்களை மறந்துவிட்டு
அவர்களோடு கைகுலுக்க நான் விரும்பவில்லை

இரத்தக் கறைபடிந்த அவர் கைகளை
நான் தொட விரும்பவில்லை

மரணமடைந்த எமது தோழமைகளின் சார்பாக
நான் தண்டனை கோருகிறேன்

பாப்லோ நெருதாவின் குரல் இன்று தமிழ் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது. இன்றைய தேவை தமிழக மக்களின் ஒன்றுபட்ட குரல். அரசியல் கட்சிகளுக்கு இடையிலான கருத்து மாறுபாடுகளைத் தாண்டிய குரல். அமைப்புக்களுக்கு இடையிலான வித்தியாசங்களைத் தாண்டிய குரல் இன்றைய தருணத்தில் எமக்குத் தேவை.

இந்திய அரசியல் குறித்தும், தமிழக அரசியல் குறித்தும் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் தமக்குள் எத்தனைக் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், கையறுநிலையில் இருக்கும் எமது இரத்த சொந்தங்களான ஈழத்தமிழ் மக்களின் நலன் கருதி, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி, நாம் ஒன்றினைந்து போராட வேண்டிய நேரம் இது.

எமது ஒன்றுபட்ட குரல் மட்டுமே தமிழக அரசின் மீதான  அழுத்தத்தை அதிகரிக்கும். எமது ஒன்றுபட்ட குரல் மட்டுமே இந்திய அரசின் மீதான தமிழக மக்களின் அழுத்தத்தை அதிகரிக்கும். ஓன்றுபட்ட மக்கள்திரளின் குரல் மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் மீதான, சர்வதேசிய நாடுகளின் மீதான எமது செல்வாக்கினை நிலைநாட்டும்.

ஓன்றுபட்ட மக்கள்திரள் அரசியலின் சாதனைக்குச் சாட்சியமாக நமக்கு முன் அரபுப் புரட்சி இருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் வெகுமக்களும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு எதிரான தமது பிரக்ஞையைக் கொண்டிருக்கிறார்கள் எனவும், அம்மக்களுக்கு ஆதரவான தமது மனசாட்சியின் கடமையை அவாவுகிறார்கள் எனவும் நாம் நம்புகிறோம்.

இதுவே நாம் செயல்படவேண்டிய மிகப்பெரும் தருணம்.

இந்தப் பிரச்சினையில் தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதனை உலகெங்கும் வாழும் தமிழ் குடிமைச் சமூகத்தின் அங்கத்தினர்களாக நாங்கள் வலியுறுத்துகிறோம்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்படத்துறை சார்ந்தோர், தொழில்நுட்பவியலாளர்கள், தொழில்முனைவர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், மனித உரிமையாளர்கள் எனும் நாங்கள் இந்தக் கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகளின் முன்பாகவும், மனித உரிமை அமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள் முன்பாகவும் ஒரு வேண்டுதலாக முன்வைக்கிறோம். 

வித்தியாசங்களுக்கு அப்பால், மாறுபாடுகளுக்கு அப்பால், தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும், வெகுஜன அமைப்புக்களையும், வெகுமக்களையும் இப்பிரச்சினையில் ஒன்றிணைந்து செயல்படுமாறு  தாழ்மையுடன் நாங்கள் கோருகிறோம்.

எமது ஒன்றிணைந்த போராட்டங்களின் மூலம், எமது ஈழத்துச் சொந்தங்களைப் படுகொலை செய்த கொடுங்கோலர்களான ராஜபக்சே சகோதரர்களை சர்வதேசியக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த எம்மால் ஆன அனைத்தையும் நாம் செய்து முடிப்போம் என நாங்கள் அழைக்கிறோம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு எனும் மணிவாக்கியத்தை நாம் செயல்படுத்த வேண்டிய தருணம் இது. எமது இரத்த சொந்தங்களான ஈழத்தமிழ் மக்களுக்கான எமது வரலாற்றுக் கடமையை ஆற்றவருமாறு அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்.

ஒருங்கிணைப்புக் குழு

நாஞ்சில் நாடன் (எழுத்தாளர்)
எஸ்.எஸ்.ராஜகோபாலன் (கல்வியியலாளர்)
டிராட்ஸ்க்கி மருது (ஓவியர்)
கௌதமன்(திரைப்பட இயக்குனர்)
கீற்று நந்தன் (கணினி தொழில்நுட்பவியலாளர்)
வெப்துனியா அய்யநாதன் (ஊடகவியலாளர்)
விசுவநாதன் (தொழில்முனைவர்)
கண.குறிஞ்சி சண்முகசுந்தரம் (மனித உரிமையாளர்)

Pin It