இலங்கையில் மூன்று மாகாணங்களுக்கு கடந்த 8ம் தேதி நடைபெற்ற தேர்தலில் முக்கியக் கட்சிகள் போட்டியிட்டன. தமிழ் கட்சிகளும் களத்தில் நின்ற இந்தத் தேர்தல் முடிவு கள் மறுநாள் 9ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் ராஜ பக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

வட மத்திய மாகாணத்தில் 33 இடங்க ளுக்கு நடந்த தேர்தலில் 21 இடங்கள் ஐக்கிய சுதந்திரக் கூட்டணிக் கட்சிக்கு கிடைத்துள்ளது. ரணில் விக்கிரம சிங்கே வின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 இடங்க ளும், விமல் வீரவன்சயின் சிங்கள கட்சி யான ஜே.வி.பி.க்கு ஒரு இடமும் கிடைத் துள்ளது.

சபரகமுவ மாகாணத்தில் ஐ.ம.சு. கூட் டணிக்கு 2 போனஸ் இடங்கள் உள்பட 28 இடங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 14 இடங்களும், ஸ்ரீலங்கா தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும் கிடைத் துள்ளன.

கிழக்கு மாகாணத்தில் ராஜபக்சேவின் கட்சி 14 இடங்களிலும், தமிழர் தேசிய கூட் டணி 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள் ளன. இதே மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் 7 இடங்களை கைப்பற்றி யுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி ஒரு இடத்திலும், ஐக்கிய தேசிய கட்சி 4 இடங்க ளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த மூன்று மாகாணத் தேர்தல்களி லும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மத்தியில் வெகுவாக எதிர்பார்க்ககப்பட்ட கிழக்கு மாகாணத் தேர்தலில் ராஜபக்சே வின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட ணிக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன.

திரிகோணமலை, அம்பாறை, மட்டக் களப்பு ஆகிய மாவட்டங்களில் ராஜபக்சே வின் தேர்தல் சுற்றுப் பயணம் தீவிரமாக இருந்தது. இங்கு முஸ்லிம்களைக் கவரும் வகையில், பள்ளிவாசல்கள் மீது தாக்கு தல் நடத்தப்படுவதை அனுமதிக்க மாட் டோம்; இந்திய வீடமைப்பு திட்டத்தில் இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கும் வீடு களை ஒதுக்குவோம் என்பது போன்ற வாக்குறுதிகளை அளித்ததோடு, வடக்கி லிருந்து இடம் பெயர்ந்த அகதிகள் விஷ யத்தில் - யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இடம் பெயர்ந்த அகதிகள், அதற்கு முன் இடம் பெயர்ந்த அகதிகள் என்ற பாகுபாடு பாராமல் தமிழ், முஸ்லிம் அகதிகளுக்கு அரசின் அபிவிருத்தித் திட்டங்களும், சலு கைகளும் கிடைக்கும் என்றும் அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தின்போதே அதற்கான உத்தரவையும் வெளியிட்டார் ராஜ பக்சே.

அதே போன்று தமிழ் மக்களுக்கும் சலுகை வாக்குறுதிகளை அள்ளி வீசினார் ராஜபக்சே. இதனால்தான் அவரது கட்சி 14 இடங்களைப் பெற முடிந்தது என்கின்றன இலங்கை ஊடகங்கள்.

கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் எதிர் பார்க்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் மூன்று மாவட்டங்களிலும் 7 இடங்க ளைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசி யக் கட்சி 4 இடங்களையும், தேசிய சுதந் திர முன்னணி ஒரு இடத்தையும் கைப்பற் றியுள்ளது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவ ரையில் முஸ்லிம்களின் வாக்குகள் இரண்டு பிரிவாக விழுந்துள்ளன. அதா வது, ஆளுங்கட்சிக்கும், முஸ்லிம் காங்கி ரசுக்குமே முஸ்லிம்களின் வாக்குகள் விழுந்துள்ளன. இதனால் ஒரு புறம் முஸ்லிம் காங்கிரசுக்கு இழப்புதான். இதில் முஸ்லிம் சுயேட்சைகள் வேறு களமிறங் கியதால் மு.கா. கட்சிக்கு கிடைக்க வேண் டிய சில இடங்கள் பறி போயுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக் கள் சுதந்திரக் கூட்டணிக்கு 5 இடங்க ளும், முஸ்லிம் காங்கிரசுக்கு 4 இடங்க ளும் கிடைத்துள்ளன. இதில் அம்பாறை தொகுதியை ஐ.ம.சு கட்சி கைப்பற்றியுள் ளது.

இதே மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி 3 இடங்களையும், இலங்கை தமிழ ரசுக் கட்சி 2 இடங்களையும் கைப்பற்றியி ருப்பது குறிப்பிடத் தக்கது.

திரிகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 3 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐ.ம.சு. கூட்டணிக்கு 3 இடங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் 2 இடங்கûளையும் கைப்பற்றியுள் ளன. தேசிய சுதந்திர முன்னணியும், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசி யக் கட்சியும் இங்கே தலா ஒரு இடத்தைப் பிடித்துள்ளன.

மட்டக் களப்பு மாவட்டத்தைப் பொறுத் தவரை இலங்கை தமிழரசுக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு 6 இடங் களை அது கைப்பற்றியுள்ளது. ராஜபக்சே வின் ஐ.ம.சு. கூட்டணி 4 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத் தையும் பெற்றுள்ளன. ரணில் கட்சியின் ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு மாவட் டத்தில் முழுமையாக தோல்வியடைந் துள்ளது.

எது எப்படியிருப்பினும் தற்போதைய சூழலில் கிழக்கு மாகாணத்தில் ஆட் சியமைப்பதற்கு 19 இடங்கள் தேவைப்படுகின்றன என்கிற நிலையில் முஸ்லிம் காங்கி ரஸ் கட்சியின் 7 இடங்கள் முக்கியத்துவம் பெற்றுள் ளன. திரிகோண மலையில் தனித்துப் போட்டியிட்ட ஜே.வி.பி. கட்சியின் விமல் வீரவன்ச அங்கு வெற்றி பெற்றுள்ளதால் அவரது ஆதரவு ராஜபக்சேவின் ஐ.ம.சு கூட்டணி க்கு என்று வைத்துக் கொண்டாலும் அது ஐ.ம.சு. கூட்டணிக்கு மொத்தம் 15 இடங்க ளாகவே இருக்கும்.

அதே சமயம், தமிழ் தேசியக் கூட்ட மைப்புக்கு 11 இடங்கள் கிடைத்திருப்ப தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தால் 18 இடங்களுடன் ஆட்சியதிகாரம் பெற வாய்ப்பு உள்ளது.

ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்ட மைப்பும் இணைந்தால் 15 இடங்கள் கிடைக்கும். அப்போதும் ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு தேவைப்ப டும்.

இப்படி தனிப்பெரும்பான்மை எக்கட் சிக்கும் கிடைக்காமல் நடந்து முடிந்துள் ளது கிழக்கு மாகாணத் தேர்தல். இந்நி லையில், கிழக்கின் அதிகாரத்தை தீர்மா னிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப் பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் முதலாவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீ முக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

அதிபர் ராஜபக்சேவும் தனது கட்சி யின் எம்.பி.யான சஜின்வாஸ் குண வர்த்தன மூலம் ரஃவூப் ஹக்கீமிடம் பேசியிருக்கிறார். ஆயினும் யாருக்கு ஆதரவு என்பது குறித்து கடந்த 9ம் தேதி இரவுவரை ரவூஃப் ஹக்கீம் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.

எப்படியிருப்பினும் கிழக்கு மாகாண சபைக்கு எல்லாக் கட்சிகளிலிருந்தும் 15 முஸ்லிம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றனர் கிழக்கு மாகாண முஸ்லிம்கள்.

முஸ்லிம் முதலமைச்சர்

கிழக்கு மாகாணத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான சாவியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது'' எனத் தெரிவித்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க உரிமைகோரி கடிதம் ஒன்றை மாகாண ஆளுநர் மொஹான் விஜே விக்ரமவிற்கு அனுப்பியிருக்கிறார்.

தமிழ் பேசும் மக்களுக்கு நிம்மதியான வாழ்வே இன்றையத் தேவை எனக் கூறும் சம்பந்தன், “கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்கு தாராளமான விட்டுக் கொடுத்தல்களுடன் செயல்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு தயா ராக உள்ளது. தேவையானால் முஸ்லிம் முதலமைச்சரையும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ள முடியும்...'' என்று கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான பிரேமச் சந்திரனோ, “தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 11 இடங்கள் கிடைத்துள்ளன. ஐ.தே. கட்சியும் எங்களுக்கு ஆதரவ ளிப்பதாக உறுதி கூறியுள்ளது. அதனால் 15 இடங்கள் எங்களுக்கு உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம். கிழக்கில் சிறுபான்மை கட்சிகள் ஆட்சியமைக்கும் திட்டத்திற்காக முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம்...'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிழக்கிற்கு முஸ்லிம் முதலமைச்சர் கிடைப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் என்பது நமக்கு கடந்த 10ம் தேதி மாலை கிடைத்த கடைசி தகவல்.

Pin It