1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பு காலம் கடந்து வந்திருக் கிறது என்றாலும், தீர்ப்பின் சாராம்சம் மகிழ்ச்சி அளிப்பதாக இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் பலர் தெரி வித்துள்ளனர்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற இந்தத் தீர்ப் பில், யாகூப் அப்துல் ரஸ்ஸ்க் மெமனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயம், ஏற்கெனவே மரண தண்டனை பெற்ற 10 பேரின் தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள் ளது.

யூசுப் ரஸ்ஸ்க் மெமனின் மரண தண்டனையை வரவேற்ப தாகவும், 1993 குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட - பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிற டைகர் மெமன் மற்றும் தாவூத் இப்ராஹிம் ஆகியோருக்கு இந்த தீர்ப்பின் செய்தியை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் அரசு சிறப்பு வழக்கறிஞரான உஜ்வால் நிகாம்.

இந்த வழக்கில் குற்றம்சாட் டப்பட்டவர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞரான ஃபர் ஹானாஷா, “மரண தண்டனை பெற்ற எனது கட்சிக்காரர்கள் பலருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருப்பது நிவா ரணம் கிடைத்திருப்பதைப் போல் உள்ளது...” எனத் தெரி வித்திருக்கிறார்.

நடிகர் சஞ்சய் தத்திற்காக வாதாடிய பிரபல வழக்கறிஞ ரான மஜீத் மேமன், “மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆயுள் தண்டனை தீர்ப்பளிக் கப்பட்ட குற்றவாளிகள் அனை வரும் குண்டு வெடிப்பு நடந்த காலத்தில் 20 வயதுடையவர் களாக இருந்துள்ளனர். இவர் கள் வெறும் அம்புகளாக, ஏவல் ஆட்களாக இருந்தவர்கள்தான். இதற்கு மூளையாக செயல்பட்ட வர்களை தேடிப் பிடித்து தண்டிக்க வேண்டும்.

மேலும், ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே 18 - 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்ட னர்...” எனத் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமாக ஆயுதங் களை வைத்திருந்தார் என்று ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத் துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித் தது. தற்போது சஞ்சய் தத்திற்கு ஆறு ஆண்டு கால தண்டனை யிலிருந்து 5 ஆண்டுகால தண்டனையாக குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இதன் விளைவாக 3 வருடம் மற்றும் ஆறு மாதங்கள்வரை தான் சஞ்சய் தத் சிறைவாசம் அனுபவிக்க முடியும். ஏனெனில் அவர் ஏற்கெனவே 18 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தி ருக்கிறார். இந்நிலையில், சஞ்சய்தத்திற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என அவருக்கு ஆதரவான குரல்கள் எழுகின்றன.

அகில இந்திய மில்லி கவுன் சில், 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சஞ்சய் தத் நேரடியாக ஈடுபட வில்லை என்பதால் அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று மஹாராஷ்டிரா அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இன்னொருபுறம், அரசியல் அமைப்பு அதிகாரத்தைப் பயன் படுத்தி சஞ்சய்தத்திற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என பிரஸ் கவுன்சில் தலைவரான முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண் டேய கட்சு, மஹாராஷ்டிரா கவர்னர் சங்கர நாராயணனுக்கும், குடியரசுத் தலைவருக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

சஞ்சய் தத் பற்றி நீதிபதி மார்க்கண்டேய கட்சு கூறுவது முற்றிலும் உண்மையே என ஆமோதிக்கும் மில்லி கவுன் சிலின் பொதுச் செயலாளரான டாக்டர் மன்சூர் ஆலம், உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு குறித்து கூறுகையில்,

“இந்தத் தீர்ப்பு மிக மிகத் தாம தமாக வந்திருக்கிறது என்ற போதிலும், ஒருபுறம் இது குற்ற வாளிகளுக்கு தண்டனை கொடுத்திருக்கிறது. இன்னொரு புறம் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி யிருக்கிறது. ஆனால், 1992-93ல் மதக் கலவரத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்கள் இன்றுவரை சுதந்திரமாக உலா வருகின்றனர்.

இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நீதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் இந்த மும்பை கலவரத் திற்கான வழக்கு விசாரணை இதுவரை துவக்கப்படவேயில்லை. கலவரம் தொடர்பான ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அறிக்கை தூசு படிந்து கிடக்கிறது...” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த 27ம் தேதி, மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்படிருக்கும் ஜைபுன்னிசா காஜி என்கிற பெண்மணிக் காகவும் மன்னிப்பு வேண்டி மஹாராஷ்டிரா கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளார் நீதிபதி மார்க்கண்டேய கட்சு.

70 வயதாகும் ஜெபுன்னிசா காஜி சஞ்சய்தத்தைப் போலவே ஏ.கே. 56 ரைபிள், தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகளை (கிரானேட்ஸ்) வைத்திருந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

ஜைபுன்னிசாவின் மகளான ஷகுஃப்தா மீடியாக்களிடம் பேசும்போது, “எனது தாய் குற்றவாளியல்ல; அவர் ஒரு அப்பாவி. அவர் ஏ.கே. 56 ரைபிள், தோட்டக்கள் மற்றும் கையெறி குண்டுகள் அடங்கிய பையை வைத்திருந்தார் என்பதை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால், இது அபு சலீம் மற்றும் மன்சூர் அஹ்மத் ஆகியோர் மூலம் எனது தாயாரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பைக்குள் என்ன இருந்தது என்ற எந்த விபர மும் எனது தாயாருக்கு தெரியாது...” என்று தெரிவித்திருந்ததோடு “நானோ அல்லது எனது தயார் ஜைபுன்னிசாவோ பிரபலமா னவர்களாக இருந்திருந்தால் இன்று நடிகர் சஞ்சய் தத்திற்கு கிடைக்கின்ற அனைத்து வகை உதவிகளும், ஆதரவும் எங்களுக்கும் கிடைத்திருக்கும். மனிதாபிமான முறையில் மன்னிக்கப்பட வேண்டும் என்றால் அதென்ன சஞ்சய் தத்துக்கு மட்டும் அந்த சலுகை? ஏன் ஜைபுன்னிசாவிற்கு இல்லை...” என்றும் கேள்வியெழுப்பியிருந்தார் ஷகுஃப்தா.

இந்நிலையில்தான் ஜைபுன்னிசாவிற்கும் ஆதரவாக களமிறங்கியுள்ளார் நீதிபதி கட்சு.

“ஜைபுன்னிசா காஜி கூட மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட தகுதியானவர்தான். நான் ஏற்கெனவே இவரது வழக்கை பரிசீலித்திருக்கிறேன். அதன் பின்னர் அவரது தீர்ப்பின் கோப்பு களை வாசித்திருக்கிறேன். அதனால்தான் ஜைபுன்னிசா மன்னிக்கப்பட வேண்டியவர் என்று உறுதியான கருத்தை முன் வைக்கி றேன்...” என தனது வலைப்பக்கத்தில் எழுதியி ருக்கும் கட்சு. சஞ்சய் தத் மற்றும் ஜைபுன் னிசா இருவருக்கும் மன்னிப்பு அளிக்கும்படி, மஹாராஷ்டிரா கவர்னருக்கும், ஜனாதிபதிக் கும் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள் ளார்.

முன்னதாக, ஜைபுன்னிசாவின் மகள் ஷகுஃப்தா, தனது தாயாருக்காக மன்னிப்பு கோர வேண்டும் என கட்சுவிடம் இமெயில் மூலம் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.

ஜைபுன்னிசாவிற்காக மன்னிப்பு கோரி யுள்ள கட்சு, அதற்கான நியாயமான கார ணங்களையும் முன் வைத்திருக்கிறார். தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற ஒற்றை குற்றச்சாட்டின்படிதான் ஜைபுன்னிசாவிற்கு தண்டனை வழங்கப்பட் டிருக்கிறது .

அவரது வீட்டிலிருந்து எந்தவித ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. எனவே, ஜைபுன்னிசா விற்கு குறைந்தபட்சம் சந்தேகத்தின் சாதக மான பலன் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான கருத்தா கும்.

ஜைபுன்னிசா பல்வேறு வியாதிகளைக் கொண்ட ஒரு விதவைப் பெண்மணி. சில காலங்களுக்கு முன் அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. ஒவ் வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோ தனை செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பவர். நடப்பதற்கே சிரமப்படுபவர். அவர் நீண்ட காலம் ஜெயிலில் உயிரோடு இருப்பார் என்று நான் கருதவில்லை.

ஆகவே, தகுதி அடிப்படையிலும்கூட மன் னிப்பு பெற தகுதி படைத்தவர் ஜைபுன்னிசா என்பதே எனது எண்ணமாகும். என ஜைபுன்னிசாவின் மன்னிப்புக்கு காரணங்க ளைக் கூறியுள்ள கட்சு, சஞ்சய் தத்திற்காக மன்னிப்பு கோருவது குறித்து சிலர் விமர்சிக் கிறார்கள். வேறு பலரும் மன்னிப்பு கேட்டு முறையீடு செய்வார்கள் என சிலர் சொல்லியி ருக்கிறார்கள்.

அவர்களுக்கு எனது பதில், எனது கவனத் திற்கு கொண்டு வரப்படும் அனைத்து வழக்கு களையும் பரிசீலிக்க நான் தயாராகவே இருக் கிறேன். ஆனால் இந்த வழக்கு மன்னிப்பு அளிக்கப்பட தகுதியானது என்று அது சம் மந்தப்பட்ட வழக்கு விபரங்களை கவனமாக ஆராய்ந்த பின்பு, அதில் திருப்தி ஏற்பட்டால் தான் நான் மன்னிப்பு குறித்த கோரிக்கை வைப்பேன். அதில் பிரபலமானவர், பிரபல மல்லாதவர் என்று நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 125வது பத்தி யில், முக்கிய குற்றச்சாட்டான சதித் திட்டத் தில் ஜைபுன்னிசாவிற்கு பங்கில்லை என கூறப் பட்டுள்ளது...” என்றும் தெரிவித்துள்ளார் கட்சு.

கட்சுவின் முயற்சி பாராட்டுக்குரியது. மத, இன வேறுபாடுகளைக் கடந்து மனித நேயத்தை மட்டுமே முன் வைத்து, சமூகப் பிரச்சினைகளில் வலிமையாக தனது கருத்து களை பதிவு செய்து வருகிறார் கட்சு. சிறைவா சிகளின் பிரச்சினைகள், நீதிமன்ற வழக்குகள், காவல்துறை அத்துமீறல் என தனது பங்க ளிப்பை கட்சு செலுத்தி வருவது அவர் ஓய்வு பெற்ற பின்பும் மக்கள் அவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவே கருதிக் கொண்டி ருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவ தாய்தான் உள்ளது.

Pin It