இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களின் காரணமாக இனப்பிரச்சினைக் கான தீர்வுத் திட்டத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது இலங்கை அரசு.
இதுவரையில் தீர்வுத் திட்டப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இலங்கை அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பத்து சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ஆயினும் எவ்வித இணக்கமான தீர்வும் எட்டப்படவில்லை என்றாலும் பேச்சுவார்த்தை மேடைகளை புறக்கணிக்கும் நிலைக்கு ஏறக்குறைய ஆளாகி விட்டனர் கூட்டமைப்பி னர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருப்திகரமான அல்லது நம்பிக் கையூட்டும் விதத்திலான வாக்குறுதிகளோ, வார்த்தைகளோ அரசுத் தரப்பிலிருந்து வராத நிலையில் கூட்டமைப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதில் அதிருப்தியில் இருக்கிறது.
இதற்கிடையில், “இலங்கை யின் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ நடைமு றையில் உள்ள இலங்கை ஜனநாயக சோஷலிச குடி யரசின் அரசியல் அமைப் புச் சட்டமே போதுமானது...'' என பிரதமர் ராஜபக்ஷே வின் சகோதரரும், பாது காப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷே பேசியிருப்பது தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் ஹார்ட் பீட்டை உயரச் செய்து விட்டது.
இந்நிலையில், நாட்டின் சிறு பான்மையினருக்கு அரசியல் தீர்வை வழங்க பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும் என ராஜபக்ஷே அரசு அறிவித் துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானவு டன் பல்வேறு கட்சிகளும் இந்த பாராளுமன்ற தெரிவுக் குழு என்பது ஒரு ஏமாற்று வேலை என்கிற ரீதியிலேயே கருத்து சொல்லியுள்ளன.
அரசியல் தீர்வு திட்டத்திற் கான ஆலோசனைகளை முன் மொழிவதற்காக அரசாங்கத்தி னால் அமைக்கப்படவுள்ள பாரா ளுமன்றத் தெரிவுக்குழு முறை என்பது நாட்டை ஏமாற்றும் போலி வித்தை என மக்கள் விடு தலை முன்னணி தெரிவித்துள் ளது.
கோத்தபயவின் பேச்சைய டுத்து வெறுப்பிலிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்போ, பாரா ளுமன்றத் தெரிவுக் குழுவில் எவ்வித பிரதிபலனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. பேச்சுவார்த்தைகளின்போதே அரசாங்கம் எவ்வித சாதகமான சமிக்ஞைகளையும் தராதபோது தெரிவுக்குழு எந்த நம்பிக்கையை யூட்டிவிடும் என்று தங்களது எதிர்ப்பு நிலைப்பாட்டை அறி வித்து விட்டனர்.
இலங்கையின் பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியோ இனப்பிரச்சினைக்கு தனது தீர்வு எத்தகையது என் பதை முன் வைக்காமல் ஏனைய கட்சிகளிடமிருந்து ஆலோசனை களை கோருவது என்பது வேடிக் கையாக உள்ளது. சர்வ கட்சி குழு அமைத்து வீண் காலதாமதங்க ளும், இழுத்தடிப்புகளும் மாத்திரமே எஞ்சியிருப்பதைப் போன்றே நாடாளுமன்ற தெரி வுக்குழு விஷயத்திலும் அரசாங்கம் நடந்து கொள்ளக் கூடும்...'' என்கிறது.
இப்படி இலங்கையின் அரசி யல் கட்சிகள் ஒவ்வொன்றும் பாராளுமன்றத் தெரிவுக் குழு விஷயத்தில் ஒரு நிலைப்பாட்டில் இருக்க... முஸ்லிம் அரசியல் கட்சி களின் தலைமைகள் எந்த விதக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் மவுனம் காத்து வருகின்றன.
இலங்கையின் பிரதான எதிர் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத் தெரிவுக்குழு குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர ûஸப் பொறுத்தவரையில் அது பதவிகளுக்கான கட்சி யல்ல, மாறாக சமூக உரி மைகளை வென்றெடுப்ப தற்கான கட்சி என்று நீண்ட காலமாக மக்கள் மத்தியில் கூறி வந்திருக்கி றது.
ஆனால் கடந்த பாராளுமன் றத் தேர்தலுக்குப் பின் சமூக உரி மைகள் வென்றெடுப்பு என்கிற சிந்தனைகளை ஓரங்கட்டி விட்டு, விரும்பியோ விரும்பாமலோ, அர சாங்கத்தின் பங்காளியாக மாறி விட்டிருக்கிறது மு. காங்கிரஸ்.
அரசாங்கத்தின் பங்காளியா கவே மாறிப்போனதும் கூட முஸ் லிம்களின் உரிமைகளை வென் றெடுப்பதற்குத்தான் என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டா லும், இனப்பிரச்சினைக்கான ஓஸ்லோ பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்த முக்கியத்துவம் தற் போதைய பேச்சுவார்த்தைகளின் போது இல்லை என்றே நினைக் கத் தோன்றுகிறது.
பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பதை தமிழ் கட்சிகளும், எதிர்கட்சிகளும் முழு மனதாக ஏற்றுக் கொள்ளவில்லையென்றா லும் - பேச்சுவார்த்தை மேடைக ளில் முஸ்லிம் தரப்பு புறக்கணிக் கப்பட்டு வரும் சூழலில் - பாராளுமன்ற தெரிவுக்குழுவின் வாயிலாக முஸ்லிம் மக்களின் உரிமைகள் குறித்த கருத்தாக் கத்தை ஏற்படுத்த முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி செய்யலாம்.
சர்வதேச சமூகத்தின் அழுத்தத் தின் காரணமாக பேச்சுவார்த்தை க்கு இலங்கை அரசு முன் வரும் நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தீர்வு திட்ட விஷயத்திலாவது ஒத்த கருத்து டன் செயல்பட முன் வர வேண்டும்.
இலங்கை : அவசர நிலைச் சட்டம் வாபஸ் - ஆனாலும் டூ லேட்
புலிகளின் தாக்குதல் காரணமாக கடந்த முப்பது ஆண்டுக ளுக்கு முன் அவசர நிலைச் சட்டத்தைப் பிறப்பித்திருந் தது இலங்கை அரசு. அதை சமீபத்தில் விலக்கிக் கொண்டி ருக்கிறார் ராஜபக்ஷே.
இந்த அவசர நிலையை முப்பது ஆண்டுகளாக மாதந்தோறும் நீட்டித்து வந்தது சிங்கள அரசு. விடுதலைப் புலிகளுடனான யுத்தத் தின்போது புலிகளின் தாக்குதலை சமாளிக்க திணறிக் கொண்டிருந்த அரசு - பல்வேறு பயங்கர வித தடுப்புச் சட்டங்களை யும் இயற்றி பலனில்லா மல் போனதன் விளைவாக 1983ல் அவசர நிலைப் பிர கடனத்தை அறிவிப்பு செய்தது.
1971ல் முதன் முதலில் இடதுசாரிகளின் அச்சுறுத் தல் காரணமாக அவசர நிலை பிறப்பிக் கப்பட்டது. புலிகளின் நவீன ஆயுதத் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாத இலங்கை இராணுவம் ராஜபக்ஷே அதிபர் ஆனதும் ஓரளவிற்கு மூச்சு விடும் நிலையை எட்டி யது.
சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து நவீன ஆயு தங்களை வாங்க ஏற்பாடுகளைச் செய்த ராஜபக்ஷே இராணுவத்திற்கென பட்ஜெட் டில் பெரும் தொகையை ஒதுக்கினார். இலங்கை இராணுவம் அதி நவீனப்படுத் தப்பட்டு புலிகளுக்கு எதிரான வேட் டையை ஆரம்பித்த பின் கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்துடன் யுத்தம் முடி வுக்கு வந்தது.
புலிகள் இலங்கையிலிருந்து துடைத் தெறியப்பட்டு விட்டார்கள் என்று ராஜ பக்ஷே அறிவித்த போதும் அவசர நிலையை அவர் திரும்பப் பெறவில்லை. நிலைமை சீரடைந்ததும் விலக்கிக் கொள் ளப்படும் என்றே தொடர்ந்து சொல்லி வந்தார்.
இந்நிலையில், இலங்கை அரசு யுத்தத் தின் இறுதிக் கட்டத்தில் நடத்திய இனப் படுகொலைகள் போர்க் குற்றமாக சர்ச் சையைக் கிளப்பி இலங் கைக்கு சர்வதேச அரங்கில் அவப் பெயரை உருவாக்கிய தாலும், இலங்கைக்கு எதி ராக பல்வேறு நாடுகள் நிர்ப் பந்தத்தை ஏற்படுத்தி வருவ தாலும் அவசர நிலையை விலக்கிக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறார் ராஜபக்ஷே.
இதன் மூலம் மனித உரி மைகளை தங்கள் நாடு மதிக்கிறது என்பதை வெளி யுலகிற்கு காட்டிக் கொள்ளவே ராஜபக்ஷே இம்முடிவை எடுத்திருப்பதாக விமர்சனம் எழுந்தாலும், இலங்கையின் எதிர்க் கட்சிகள் ராஜபக்ஷேவின் முடிவை வர வேற்றுள்ளன.
அவசர கால நெருக்கடி நிலையை ராஜபக்ஷே அரசு விலக்கிக் கொண்டிருப் பதைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கே, “இந்த முடிவை வரவேற்கிறேன். ஆனால் கடநத் 2009 ஜூன் மாதத்தி லேயே ராஜபக்ஷே இதனை செய்திருக்க வேண்டும். இது டூ லேட்...'' எனத் தெரி வித்திருக்கிறார்.